Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 10 December 2015

இலவச வாகன பழுது பார்ப்பு முகாம்கள்: இடங்களை அறிவித்தது தமிழக அரசு


தமிழக அரசு அறிவித்துள்ள வாகன பழுது பார்ப்பு இலவச முகாம்கள் நடைபெறும் இடங்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த முகாம் நாளை முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்தப் பட்டியலில் மோட்டார் வாகன நிறுவனங்களின் முகவர்களாக உள்ளவர்களின் கடையின் பெயர், முகவரி, எந்த நகரத்தில் உள்ளது, முகவரின் செல்லிடப்பேசி, லேண்ட்லைன் எண் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளது.வாகனங்களை பழுது பார்ப்புக்கு எடுத்துச் செல்வதற்கு முன்னால், பட்டியலில் உள்ள எண்களை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட முகவரிடம் பேசாலம். பழுது பார்க்கும் கடையில் கூட்டம் அதிகமாக இருக்கிறதா, எத்தனை மணிக்கு வரலாம் போன்ற தகவல்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். இதனால், வீண் அலைச்சல் தவிர்க்கப்படும்.இந்தப் பட்டியல் தமிழக அரசின் இணையதளத்தில் (http://www.tn.gov.in/sta/service_centres_2wheeler.pdf) வெளியாகியுள்ளது.

ஹரியானாவில்படிப்பறிவு இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதி இல்லை உச்சநிதிமன்றம் தீர்ப்பு

மாநில அரசு ஒன்றின் உத்தரவில் தவறு ஏதும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட குறைந்த பட்ச கல்வி தகுதியை நிச்சயித்து ஹரியானா அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதை எதிர்த்து பெண்கள் கூட்டாக தாக்கல்செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது. அதேபோன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு போட்டியிடுபவர்களின் வீடுகளில் கழிவறை வசதி கட்டாயம் இருக்கவேண்டும் என்ற உத்தரவும் செல்லும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

ஊராட்சி அமைப்புகளுக்கு போட்டியிடும் ஆண்கள் 10ம் வகுப்பும், பெண்கள் 8ம் வகுப்பும் படித்திருக்க வேண்டும் என்பது ஹரியானா அரசின் உத்தரவாகும். தலித்துகள் 5ம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது. அரசின் இந்த உத்தரவால் ஹரியானாவின் கிராமபுற பெண்களில் 83% பேரும், நகர் புற பெண்களில் 67% பேரும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்து விடுவார்கள் என்ற வாதத்தை ஏற்றுகொள்ள மறுத்த நீதிமன்றம், மக்கள் பிரதிநிதிகள் ஆக இருப்பவர்களுக்கு குறைந்த பட்சம் கல்வி தகுதி அத்யாவசியமானது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

மாத சம்பளம் பெறுபவர்களுக்கு 3 மாத சம்பளம் உடனடி கடன் வழங்குகிறது கனரா வங்கி!


இது தொடர்பாக கனரா வங்கியின் தலைமை பொது மேலாளர் எஸ்.கிருஷ்ணகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னையில் தேவையான இடங்களில் நடமாடும் ஏ.டி.எம். வசதி கடந்த 4-ம் தேதி முதல் செயல்படுகிறது.எங்கள் வங்கி மற்றும் மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பணம் எடுத்துக் கொள்ள வசதியாக 40 பி.ஓ.எஸ். மொபைல் எந்திரங்கள் உள்ளன. சென்னை புறநகர் பகுதிகளில் கையேந்தி சாதனங்கள் மூலம் பணம் வழங்கப்படுகிறது.

மாத சம்பளம் பெறும் நபர்களுக்கு 3 மாத சம்பளம் உடனடி கடனாக வழங்கப்படும்.வீடு, கார் பழுது செய்ய அதன் மதிப்பில் 10 சதவீதம் தொகை கடனாக எந்த பரிசீலனை கட்டணமும் இல்லாமல் வழங்கப்படும்.

நவம்பர், டிசம்பர் மாத தவணை தாமதமாக கட்டுபவர்களுக்கு அபராத வட்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.சேதமடைந்த, தொலைந்த ஏ.டி.எம். அட்டைதாரர்களுக்கு புதியகார்டுகள் இலவசமாக வழங்கப்படும். நுகர்வு கடன்கள் ரூ.10 ஆயிரம் வரை எந்த பிணையங்களும் இல்லாமல் வழங்கப்படும். அப்பல்லோ முனீச் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இயங்கி வரும் சுகாதார காப்பீட்டுத் தீர்வுகளை துரிதமாக பெற உதவப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

சென்னையில் பள்ளிகளை திறப்பது எப்போது?- அரசிடம் நீடிக்கிறது குழப்பம்


சீரமைப்பு மற்றும் சுத்தப்படுத்தும் பணிகள் தொடர்வதால் சென்னையில் வரும் 13-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளும் மூடியிருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். ஆனால், 13-ம் தேதிக்கு பிறகும்கூட பள்ளிக்கூடம் திறப்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என்கிறது பள்ளிக் கல்வித்துறை.இது குறித்து பள்ளிக்கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தாவது:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் பள்ளிகளில்தான் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மறு குடியமர்த்தப்பட வேண்டும். அதன் பின்னர், பள்ளிகள் சுத்தப்படுத்தப்பட்டு, பாதுகாப்பாக இருக்கிறதா என்பது உறுதி செய்யப்பட வேண்டும். பள்ளிக்கூடங்களின் பாதுகாப்பும், சுகாதாரமும் உறுதிபடுத்தப்பட்ட பின்னரே பள்ளிகள் திறக்கப்படும்.

பள்ளிக்கூடங்களை சுத்தப்படுத்துமாறு சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இரண்டு நாட்களில் அப்பணி தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.அதுமட்டுமல்லாது, மழை வெள்ளத்தில் பள்ளிச் சான்றிதழ்களை இழந்தவர்கள் அவற்றைத் திரும்பப் பெறுவதற்காக டிசம்பர் 14-ம் தேதி தொடங்கி அடுத்த இரண்டு வாரங்களுக்கு பள்ளிக்கூடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.அந்த முகாம்களில் சான்றிதழ்களை தொலைத்தவர்கள் மாற்றுச் சான்றிதழுக்கு விண்ணப்பித்து பயணடையலாம்.சுத்தப்படுத்தும் பணி துவங்காததாலும், பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருப்பதாலும் 13-ம் தேதிக்கு பிறகும்கூட பள்ளிக்கூடம் திறப்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என்கிறது பள்ளிக் கல்வித்துறை.

அரசு உத்தரவை மீறி மழை விடுமுறையில் தனியார் பள்ளிகள் இயங்கினால் கடும் நடவடிக்கை: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் எச்சரிக்கை


அரசு உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் மழை விடுமுறை நாட் களில் இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்கு நர் ஆர்.பிச்சை எச்சரிக்கை விடுத் துள்ளார்.

கனமழை மற்றும் வானிலை முன்னெச்சரிக்கையை கருத்தில் கொண்டு பள்ளிகள் மற்றும் கல் லூரிகளுக்கு விடுமுறை விடப்படு வது வழக்கம். அந்த வகையில், தமிழகத்தில் கனமழையின் கார ணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை விடப் பட்டு வருகிறது.

கனமழையில் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படா மல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.அரசின் விடுமுறை உத்தரவை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நடைமுறைப்படுத்தி விடுகின்றன. ஆனால், ஒருசில தனியார் பள்ளிகள் அரசு உத்த ரவை மீறி, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதும், ஆசிரியர்களை பணிக்கு வரச்சொல் வதும் அங்கொன்றும் இங்கொன்று மாக நிகழாமல் இல்லை. கனமழை யின் காரணமாக, இந்த மாதம் தொடங்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்துவிட்டார். அதோடு இந்த உத்தரவு தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி களுக்கு கனமழை காரணமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் ஒருசில தனியார் பள்ளி கள் அந்த விடுமுறை நாட்களில் வகுப்பு வைத்ததுடன் மட்டுமின்றி சில பள்ளிகளில் மாதிரி அரை யாண்டுத்தேர்வுகளும் நடத்தப்பட்ட தாக பெற்றோர் சிலர் புகார் தெரி வித்தனர்.இதுகுறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை யிடம் கேட்டபோதுஅவர் கூறிய தாவது:-

கனமழையை கருத்தில் கொண்டு அரசு விடுமுறை அறிவிக் கும் பட்சத்தில் அது அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும். அரசின் உத்தரவை நடைமுறைப் படுத்தும் வகையில் அனைத்துப் பள்ளிகளும் விடுமுறை விட வேண்டும். அரசின் உத்தரவை மதிக்காமல் விடுமுறை தினங்களில் தனியார் பள்ளிகள் இயங்கினால் அது விதிமுறையை மீறிய செயல் ஆகும்.அரசு விடுமுறை அறிவிக்கப் படும்போது தனியார் பள்ளிகளும் விடுமுறை விடுவதை உறுதி செய்யுமாறு அனைத்து மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்களுக்கும் (ஐ.எம்.எஸ்.) ஏற்கனவே அறி வுரை வழங்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் இயங்குவது குறித்து தெரிய வந்தால் அந்த பள்ளிகளிடம் விளக்கம் கேட்டு அடுத்த கட்டமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு பிச்சை கூறினார்.

அரசின் உத்தரவை மதிக்காமல் விடுமுறை தினங்களில் தனியார் பள்ளிகள் இயங்கினால் அது விதிமுறையை மீறிய செயல் ஆகும்.

கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாற்று சான்றிதழ்கள் வழங்க டிச.14 முதல் சிறப்பு முகாம்கள்: பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு


கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு மாற்று கல்விச்சான்றிதழ்கள் வழங்க டிசம்பர் 14 முதல் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மழை வெள்ளத்தின் காரணமாக கல்விச்சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை இழந்த மாணவர்களுக்கு அவற்றின் நகல்களை உடனடியாக வழங்குமாறும் இதற்காக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் டிசம்பர் 14 முதல் இரண்டு வாரங்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்றும் முதல்வர் ஆணையிட்டுள்ளார். அவரது ஆணைக்கிணங்க, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் கல்விச் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு நகல் சான்றிதழ் வழங்குவதற்காக அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்த அரசு ஆணையிட்டுள்ளது.அதன்படி, 8, 10 மற்றும் பிளஸ் 2 உட்பட அரசு தேர்வுத்துறையால் நடத்தப்படும் தேர்வுகளின் மதிப்பெண் சான்றிதழ்கள், பட்டயச் சான்றிதழ்களை மாணவர்களுக்கு இலவசமாக மாற்று சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். சிறப்பு முகாம்களில் பெறப்படும்

விண்ணப்பங்கள் அரசு தேர்வுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு மாற்று கல்விச்சான்றிதழ்கள் உரிய முகாம்களில் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்வழங்கப்பட வேண்டும். இப்பணியில் அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.10-ம் வகுப்புக்கு கீழ் உள்ள வகுப்புகளுக்கு விண்ணப்பங்களை பெற்று அதனைபள்ளிகளில் உள்ள ஆவணங்களுடன் சரிபார்த்து எவ்வித கட்டணமும் இல்லாமல் வழங்கதலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TNPSC: ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான கணினி எழுத்துத் தேர்வு 27 ஆம்தேதிக்கு ஒத்திவைப்பு


நகர மற்றும் ஊரமைப்புத் துறையில் உள்ள ஆராய்ச்சி உதவியாளர் பதவி நியமனத்திற்காக,தேர்வாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்று அதற்கான எழுத்துத் தேர்வு வருகிற13 ஆம் தேதி கணினி வழியாக சென்னை மையத்தில் மட்டும் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது.

ஆனால், சென்னையில் பெய்த தொடர் கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரணசூழல் காரணமாக, 13 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும், இத்தேர்வு வரும் 27 ஆம் தேதி காலையிலும் மாலையிலும் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

தனித்தேர்வர்களுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு டிச.11 முதல் விண்ணப்பிக்கலாம்


தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிக்கையில் கூறியிருப்பதாவது: வருகின்ற 2016 மார்ச் மற்றும் ஏப்ரலில் நடக்க உள்ள 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் டிச.11 முதல் டிச.24 வரை விண்ணப்பிக்கலாம். கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

நேரடி தனித்தேர்வர்கள் அனைவரும் பகுதி 1ல் மொழிப்பாடத்தில் தமிழ்மொழி பாடத்தை மட்டுமே முதற்பாடமாக எடுத்து தேர்வெழுதுதல் வேண்டும். எஸ்எஸ்எல்சி பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள், தோல்வியடைந்த பாடத்தை மட்டும் தற்போதுள்ள பாடத்திட்டத்தில் தேர்வெழுதலாம். சேவை மைய விபரங்கள் மற்றும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை www.tndge.inஎன்ற இணையதளம், மாவட்ட சிஇஓ அலுவலகம், அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகங்களில் அறிந்து கொள்ளலாம்.

தேர்வு கட்டணம் ரூ.125 மற்றும் கூடுதலாக ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த பின் வழங்கப்படும் ஒப்புகை சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதால்இச்சீட்டை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் மாவட்டத்திலேயே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரையாண்டு தேர்வு ரத்தாகுமா: ஆசிரியர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு


வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், 1 முதல், 9ம் வகுப்பு வரை, அரையாண்டு மற்றும், 2ம் பருவத் தேர்வை, ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், வரலாறு காணாத வெள்ளத்தால், மக்கள் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில், 14ம் தேதி முதல், பள்ளி, கல்லுாரிகள் செயல்பட உள்ளன. பள்ளிகள் திறந்ததும், ஒன்பது வேலை நாட்கள் மட்டுமே உள்ளன. பின், மிலாடி நபி, 25ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி, 1ம் தேதி வரை பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, 2ம் தேதி திறக்கப்படுவது வழக்கம். தற்போதைய நிலையில், 14ம் தேதி பள்ளி திறந்த பின் மீண்டும், 24ம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டு, 2ம் தேதி பள்ளிகள் திறக்க வேண்டும்.இந்நிலையில், ஜனவரி முதல் வாரத்தில், அரையாண்டுத் தேர்வு நடத்தப்படும் என, அரசு அறிவித்துள்ளது. சமச்சீர் பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, அரையாண்டுத் தேர்வும்; 1 முதல், 9ம் வகுப்பு வரை, இரண்டாம் பருவத் தேர்வும் நடத்தப்படுகின்றன.இந்த இரண்டு தேர்வுகளையும் ரத்து செய்ய கோரிக்கை எழுந்து உள்ளது.

இதுகுறித்து, ஆசிரியர்களும், பெற்றோரும் கூறியதாவது:வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், காலாண்டுத் தேர்வு முடிந்து, 10 நாட்களே பள்ளிகள் திறக்கப்பட்டு, நான்கில் ஒரு பங்கு பாடங்கள் தான் நடத்தப்பட்டுள்ளன. 10 முதல், பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் பாடங்கள் முடிக்கப்பட்டு உள்ளன. மற்ற வகுப்புகளுக்கு பாடம் நடத்தாமல், அரையாண்டுத் தேர்வு என்பதுவெறும் சம்பிரதாயமாகவே இருக்கும். இக்கட்டான இந்நேரத்தில், மாணவர்களை சோதிப்பது சரியான முடிவாக இருக்காது. நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட, வெள்ளப் பாதிப்பு மற்றும் குடும்ப சூழலால், நல்ல மதிப்பெண் பெற முடியாமல் போகலாம்.இதையும் மீறி தேர்வு நடத்தினால், மதிப்பெண் குறைந்து விட்டதே என, மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு, இறுதித் தேர்வில் கவனம் செலுத்தமுடியாத அபாயம் ஏற்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக தலைவர் எத்திராஜ் கூறியதாவது:கல்வி உரிமை சட்டப்படி, 9ம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்'தான் வழங்கப்படுகிறது. எனவே, இரண்டாம் பருவத் தேர்வு ரத்தானால், நேரடியாக மூன்றாம் பருவத் தேர்வை சந்திக்க எளிதாக இருக்கும். இல்லையென்றால், மூன்றாம் பருவத்துக்கும் நாட்கள் பற்றாக்குறை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கான சிறப்பு முகாம்களுக்கு தனி அலுவலர்கள்: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு


மழை, வெள்ளத்தில் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு முகாம்களுக்கு தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:-

வெள்ளத்தால் கல்விச் சான்றிதழ்கள் இழந்தவர்களுக்கு டிசம்பர் 14முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. கட்டணம் ஏதுமின்றி விண்ணப்பங்களைப் பெற்று, அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்பவேண்டும். சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்க வேண்டும்.இதற்காக பள்ளிகளில் தனி அலுவலர்கள் நியமனம் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் பெறப்படும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேர்வு வாரியாகத் தொகுத்து, பட்டியலிட்டு, உரிய மாவட்டக் கல்வி அலுவலர்களின் கையெழுத்துடன் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும்.அரசுத் தேர்வுகள் இயக்ககத்தைச் சேர்ந்த அலுவலர்கள் விண்ணப்பங்களைஆய்வு செய்து, மாற்றுச் சான்றிதழ்களை உரிய முகாம்களில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலமாக குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்குவர்.இந்தப் பணிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர்கள் ஒருங்கிணைந்து தனி கவனம் செலுத்தி தொய்வின்றி செயல்படுத்த வேண்டும்.

பத்தாம் வகுப்புக்கு கீழ் உள்ள வகுப்புகளில் மாற்றுச் சான்றிதழ்,இதர சான்றிதழ்களுக்கு விண்ணப்பங்களைப் பெற்று, அதனை பள்ளிகளில் உள்ள ஆவணங்களுடன் சரிபார்த்து எந்தவிதக் கட்டணமும் இன்றி வழங்க அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான மாதிரி விண்ணப்பப் படிவங்களும் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அச்சு துறை பணி ஜன., 9ல் தேர்வு


அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில், இயந்திரம் இயக்குபவர், இளநிலை புத்தகம் கட்டுனர், எலக்ட்ரீஷியன், உதவி வெப் ஆப்செட் டெக்னிஷியன் உட்பட பல்வேறு பதவிகளுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இப்பதவிகளுக்கு விண்ணப்பித்தோருக்கு, 2016 ஜன., 9ல், சென்னையில், பொது அறிவுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.காலை, 10:00 மணி முதல், நண்பகல், 1:00 மணி வரை தேர்வு நடைபெறும். வினாக்கள், 10ம் வகுப்பு அளவில் இருக்கும்.தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தபாலில் அனுப்பப்படும். விவரங்களை,http://www.stationaryprinting.tn.gov.inஇணையதள முகவரியில் அறியலாம்.

மருத்துவ நுழைவுத்தேர்வுசி.பி.எஸ்.இ., அறிவிப்பு


எய்ம்ஸ்' உட்பட, மத்திய மருத்துவ கல்லுாரிகளில் சேர்வதற்கான மருத்துவ நுழைவுத்தேர்வு, அடுத்த ஆண்டு, மே 1ம் தேதி நடக்கும் என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துஉள்ளது.இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

'ஏ.ஐ.பி.எம்.டி., எனப்படும், மருத்துவ கல்லுாரிகளில் சேர்வதற்கானபொது நுழைவுத்தேர்வு, வரும் 2016, மே 1ம் தேதி நடக்கும். அதற்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, மூன்றாம் வாரத்தில் வெளியாகும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை பல்கலைபுதிய தேர்வு தேதி


சென்னை பல்கலையின் தொலை நிலைக் கல்வி பிரிவில், தள்ளிவைக்கப்பட்டதேர்வுகளுக்கு, புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.வரும், 12ல்துவங்குவதாக இருந்த, டிசம்பர் மாத தேர்வு, மழையால் தள்ளி வைக்கப்பட்டது. அந்த தேர்வுகள், 19ல் துவங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்


புதுச்சேரி: பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என முதல்வர் ரங்கசாமி பேசினார்.புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை சார்பில் நவம்பர் 14-ம் தேதி நடைபெறுவதாக இருந்த குழந்தைகள் தின விழா தொடர் மழையால் ஒத்தி வைக்கப்பட்டு கம்பன் கலையரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது.கல்வித்துறை இயக்குனர் குமார் வரவேற்றார். அமைச்சர் தியாகராஜன் தலைமை தாங்கினார். கல்வித்துறை செயலாளர் ராகேஷ் சந்திரா முன்னிலை வகித்தார்.குழந்தைகள் தினப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:

பள்ளிகளுக்கு பிள்ளைகளை கட்டாயம் அனுப்ப வேண்டும் என்ற திட்டத்தை கடந்த 2001-ம் ஆண்டு அரசு அறிமுகம் செய்தது. இதனால் இடைநிற்றல் குறைந்துள்ளது.பள்ளிகளில் மாணவர்கள் தவறு செய்யும் போது, ஆசிரியர்கள் கண்டித்தால், பெற்றோர்களும் ஒத்துழைக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் அதிக நன்கொடை தந்து படிக்க வைக்கிறார்கள். ஆனால் மக்கள் வரிப்பணத்தில் அரசு இலவசமாக கல்வி தருகிறது.குழந்தைகள் எப்படி படிக்கின்றனர் என ஆசிரியர்களை அணுகி பெற்றோர் கேட்க வேண்டும்.அண்மையில் துவக்க கல்வி ஆசிரியர் பணியிடங்களில் 425 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 80 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்களே தேர்வு செய்யப்பட்டனர். விரைவில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இன்றைய மாணவர்கள் அறிவுத்திறனில் படுசுட்டியாக உள்ளனர். ஆனால் திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் போன்றவற்றை படித்தால், சிறந்த மனிதர்களாக உருவாகலாம்.கல்வியோடு நுால்கள் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். பெண் சிசுக் கொலை புதுச்சேரியில் இல்லை. இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் 1000-க்கு 42 என்ற விகிதத்தில்உள்ளது. புதுச்சேரியில் 1000-க்கு 17 மட்டுமே உள்ளது.அங்கன்வாடிகள் மூலம் குழந்தைகள் ஆரோக்கியத்துக்காக சத்தான உணவுகள் தரப்படுகின்றன. காரைக்கால் மாவட்டத்தில் ஜிப்மர் கிளை மருத்துவக்கல்லுாரி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக 78 ஏக்கர் நிலம் தரப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு மாணவ, மாணவியருக்கு பிற்பட்டோர் நலத்துறை மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி முடித்தவர்கள் அண்மையில் முடிந்த மேல்நிலை எழுத்தர் பணியிடங்களுக்கு அதிகம் தேர்ச்சி பெற்றனர். இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில் 2014--15-ம் கல்வி ஆண்டில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவர் களுக்கு முறையே 50 ஆயிரம்,30 ஆயிரம் , 20 ஆயிரம் ரூபாய் என 77 மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டது.மாநில சிறந்த படைப்பாளிக் குழந்தைகள் விருதும் 16 பேருக்கு தரப்பட்டது. குழந்தைகள் தின போட்டியில் வென்ற 153 பேருக்கும் பரிசளிக்கப்பட்டது.அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்குநர் கிருஷ்ணராஜ், கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர். இணை இயக்குநர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!