Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 14 December 2015

இவர்கள் வெறும் 'ஜாலி' வாத்தியார்கள் அல்ல! - அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

நான் அரங்குக்குள் நுழைந்தபோது 3 மணி இருக்கும். நுழைவு படிக்கட்டுகள் அருகே ஒருவர் அப்போதுதான் மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அநேகமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருக்கலாம். அரங்கினுள்ளே பெருந்திரளான ஆசிரியப் பெருமக்கள் ஒரு நீள் அரை வட்டத்தில் அமர்ந்திருந்தனர். குழந்தை நேயப் பள்ளிகள் பற்றிய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி அது.

இன்று முதல் கல்விசிறகுகள் இணையதளத்தில் BBC தமிழ் செய்திகளையும் கேட்டு மகிழலாம்..


மோசமடைந்து வரும் கல்வித்தரம்: குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கவலை

நாட்டில் கல்வித்தரம் மோசமடைந்து வருகிறது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கவலை தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் ராஜ்பவனில் தேவரஞ்சன் முகர்ஜி நினைவு சொற்பொழிவு ஆற்றுகையில், 'ஆராய்ச்சி குறித்த அக்கறையின்மை கவலையளிக்கிறது" என்றார்.

பணியில் இருந்து கொண்டே ஒரே நேரத்தில் இரு படிப்பை முடித்த ஆசிரியைக்கு பதவி உயர்வு கிடையாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

பணியில் தொடர்ந்தவாறு ஒரே நேரத்தில் பி.எட். மற்றும் முதுநிலை ஆங்கில இலக்கிய பட்டப்படிப்பை முடித்த ஆசிரியைக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க மறுத்தது சரிதான் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாலிசிதாரர்களுக்கு பிரீமியம் தாமதமாக செலுத்துவதில் சலுகை: எல்ஐசி நிறுவனம்அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்கள் பிரீமியம் தாமதமாக செலுத்தும்பட்சத்தில் அபராதக் கட்டணத்தில் இருந்து விலக்கு உள்ளிட்ட சில சலுகைகளை எல்ஐசி வழங்கியுள்ளது.எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு, புதுச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர்.

ஆதி திராவிடர் பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் பணி

மீதமுள்ள பணியிடங்களுக்கு வழக்கின் தீர்ப்பாணை பெற்ற பிறகே செயல்படுத்த இயலும்-CM Cell
கோரிக்கை நிலவரம்
பெயர் S.SARAVANAN
கோரிக்கை எண் 2015/854545/S
*கோரிக்கைத் தேதி 2*/11/2015
முகவரி CUDDALORE - 606001.TAMILNADU .
கோரிக்கை
ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு 669 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமன அறிவிப்பாணை 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. ஆனால் இடஒதுக்கீடுதொடர்பாக ராமர் என்பவர் தொடர்ந்த வழக்கில் 28.10.2014 அன்று பணிநியமனத்திற்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. 16.04.2015 அன்று 70 சதவீத பணியிடங்களை மட்டும் நிரப்பிட அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் மீதி 30 சதவீத காலிப்பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. பணிநியமன அறிவிப்பாணை வெளியிட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது.ஆனால் வழக்கு முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள காரணத்தால் பணிநியமன அறிவிப்பாணையின்படி காலிப்பணியிடங்கள் இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, வழக்கினை முடித்து மீதி 30 சதவீத காலிப்பணியிடங்களை உடனடியாக ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைபணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
கோரிக்கை வகை: EMPLOYMENT - REGULAREMPLOYMENT

கோரிக்கை நிலவரம்: Rejected
தொடர்புடைய அலுவலர்: SCHOOL EDUCATION -SECY,TEACH.REC., BOARD

பதில்: நிராகரிக்கப்படுகிறது.
ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சிக்கான தகுதி பெறும் மதிப்பெண்கள் 60 மதிப்பெண் அதற்கு மேல் பெற்றுள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். மீதமுள்ள பணியிடங்களுக்குரிய தெரிவு உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் மீதான தீர்ப்பாணை பெற்ற பிறகே அதன்படி செயல்படுத்த இயலும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.Vide trb rc.no.264/B4/2015 dated: 09.12..2015

தகவலேற்றல் மற்றும் பராமரிப்பு முதலமைச்சரின் தனிப் பிரிவுவடிவமைப்பு மற்றும் ஆக்கம் தேசிய தகவலியல் மையம், சென்னை

G.O Ms : 117 - கனமழை - முதலமைச்சர் நிவாரண் நிதிக்கு அரசு ஊழியர்களின் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்ய உத்தரவு
வகுப்பு நேரம் அதிகரிப்பு: சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும்

பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா மேலும் கூறியதாவது:–10–ம் மற்றும் 12–ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.விடுமுறை காலம் அதிகமானதால் அதனை ஈடுசெய்யும் வகையில் பாடங்களை முடிக்க சிறப்பு வகுப்புகள் நடத்திக்கொள்ளலாம். தேவைப்பட்டால் வகுப்பு நேரத்தை பள்ளிகள் தங்கள் தேவைக்கு ஏற்ப

வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன: புதிய சீருடை, புத்தகம் வழங்கப்பட்டது

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த நவம்பர் மாதம் 12–ந்தேதி முதல் தொடர் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.இடையில் நவம்பர் 19, 20, 21, 23 ஆகிய 4 நாட்கள் மட்டும் பள்ளிகள் இயங்கின.தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1–ந்தேதி பெய்த 100 ஆண்டு வரலாற்று சாதனை மழையால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களும் வெள்ளத்தில்

10–ம் வகுப்பு, பிளஸ்–2 மாணவர்கள் எளிதில் தேர்ச்சி பெற அரசு புதிய ஏற்பாடு

மழை வெள்ளம் காரணமாக நீண்ட விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.முதல் நாளான இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ–மாணவிகளுக்கு மருத்துவ முகாம் நடந்தது.எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலை பள்ளியில் மருத்துவ முகாம் இன்று நடந்தது. இதனை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கோபி, வீரமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.இதில் பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி,

நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வை நடத்தக்கூடாது: தலைமை நீதிபதியிடம், வக்கீல் மனு

சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி, புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோர் நேற்று காலையில் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார்கள். அப்போது, மாற்றுத்திறனாளி வக்கீல் முகமது நசரூல்லா ஆஜராகி ஒரு மனுவை நீதிபதிகளிடம் கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:–
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இந்த கனமழையினால், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குடிநீர், உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை மக்கள் இழந்து கடுமையாக அவதிப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் ஒரு மாதங்களுக்கு மேலாக விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் புத்தகங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டது. பலரது புத்தகங்கள் மழையில் நனைந்து, சிதைந்துள்ளது.
எனவே, இதுபோன்ற மாணவர்கள் இயல்பு நிலைக்கு இன்னும் திரும்பாமல் உள்ளனர். இந்த சூழ்நிலையில், அரையாண்டு தேர்வை தமிழக அரசு நடத்தினால், அந்த மாணவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். எனவே, இந்த கல்வியாண்டில் பள்ளிக்கூட மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வை நடத்தக்கூடாது என்றும் நேரடியாக இறுதியாண்டு தேர்வை நடத்தவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
பின்னர், வக்கீல் முகமது நசரூல்லா, இந்த மனுவில் அடிப்படையில் இந்த ஐகோர்ட்டு தாமாக முன்வந்து பொதுநல வழக்கை பதிவு செய்து, அரசுக்கு தகுந்த உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என்று கூறினார்.
இந்த மனுவை படித்து பார்த்த நீதிபதிகள், இந்த மனுவை வழக்காக பதிவு செய்வது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறினார்கள்.

7–வது சம்பள கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவது 6 மாதம் தாமதமாகும்?: குறைபாடுகளை நீக்க தீவிர ஆலோசனை

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை சம்பள விகிதம் சீரமைக்கப்படும்.இதற்காக மத்திய அரசு ‘‘சம்பள கமிஷன்’’ ஏற்படுத்தி ஆய்வு செய்து, அதனிடம் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்கும்.மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சீரமைக்க 7–வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் மாநில அரசுகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கத்திடம் ஆலோசனை நடத்தி அறிக்கை தயார் செய்து மத்திய அரசிடம் கொடுத்தது.அந்த அறிக்கையின் அடிப்படையில் 2016–ம் ஆண்டு 7–வது சம்பள கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் சம்பள விகிதத்தில் மிகப் பெரும் வித்தியாசம் இருப்பதாக அதிருப்தி எழுந்துள்ளது.இது தவிர சம்பள உயர்வால் தங்களுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படும் என்று பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் போக்குவரத்து அலவன்சு உயர்த்தப்படாததற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்தகையை குறைகளை, முரண்பாடுகளை சரி செய்ய மத்திய அமைச்சக செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மாநில அரசுகள் மற்றும் முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.அதில் ஒருமித்த கருத்து உருவானதும் 7–வது சம்பள கமிஷன் அறிக்கை பரிந்துரைகள் அமலுக்கு வரும். இதனால் மத்திய அரசு ஊழியர்கள் புதிய சம்பள உயர்வை பெறுவது 6 மாதம் முதல் ஓராண்டு வரை தள்ளிப் போகலாம் என்று கூறப்படுகிறது.

10, 12ம்வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி புத்தகம்

பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி நேரத்திலேயே சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.
அவர்கள் தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சி புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாரத்திற்குள் அது மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விடும் என்று பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா கூறியுள்ளார்.

கணிதம் கற்க சிறந்த 10 தளங்கள்


1 . HOME SCHOOL MATHS.NET .
      தரம் 1 தொடக்கம் 8 வரையான மாணவரகள் கணித படத்தினை கற்று
 கொள்ள உதவுகிறது இந்த தளம். இந்த தளத்தில் கணித செயல்முறைகள்,வீடியோ என பலவற்றை உள்ளடக்கியுள்ளது;
 2. MATHWAY.COM
    கணித பாடம் தொடர்பான வினாக்களுக்கு முழுமையான செயல்முறை
 விளக்கத்துடன் தருகிறது இந்த தளம்.
 3. WEB MATH.COM  கணித பாடம் தொடர்பான வினாக்கள் , பிரச்சனைகளுக்கு செயல் முறை
 விளக்கங்களுடன் பதில் பெற உதவுகிறது.
 4. WOLFRAMALPHA.COM   கணித பாடம் மட்டுமல்லாது அறிவியல் பொது அறிவு வினாக்களுக்கும்
 விடை பெறலாம் இந்த தளத்தில்.
 5 . PEDAGONET.COM
 கணித தந்திரோபாயங்களை கற்றுகொள்ள உதவுகிறது இந்த தளம்.
 6.FUN MATH
  மாணவர்களுக்கு விளையாட்டுக்கள் மற்றும் புதிர்கள் மூலம் கணித  பாடத்தினை கற்க உதவுகிறது இந்த தளம்.
 7. COOL MATH
  மாணவர்களுக்கு விளையாட்டுக்கள் மற்றும் புதிர்கள் மூலம் கணித பாடத்தினை கற்க உதவுகிறது இந்த தளம்.
 8. FREE MATH HELP
  கணித பாட விளக்கங்கள் மற்றும் செயல் முறை பயிற்சிகளை உள்ளடக்கியது.
 9 . MATH .COM   கணித பாட அலகுகள் ரீதியாக விளக்கங்கள் , செயல்முறைகள், பயிற்சிகளை உள்ளடக்கியுள்ளது.
 10 . KHAN ACADEMY.ORG   கணிதம் மற்றும் அறிவியல் விளங்கங்களை வீடியோ மூலம் இந்த தளத்தில் கற்றுகொள்ள முடியும்சிவில் சர்வீஸ் தேர்வுக்கு 'இ - அட்மிட் கார்டு'


'சிவில் சர்வீஸ் பிரதான தேர்வு களில் பங்கேற்போர், 'இ - அட்மிட் கார்டு' எனப்படும், இணையவழி அனுமதி அட்டைகளை, பிரின்ட் செய்து, தேர்வின் போது எடுத்து வர வேண்டும்' என, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான, சிவில் சர்வீஸ் தேர்வுகள், யு.பி.எஸ்.சி.,யால் நடத்தப்படுகின்றன.

இத்தேர்வுகள், முதல்நிலை, பிரதானம், நேர்முகம் என, மூன்று பிரிவுகளாக நடத்தப்படும். நாடு முழுவதும், இந்தாண்டு, 4.63 லட்சம் பேர், ஆக., 23ல் முதல்நிலை தேர்வு எழுதினர். இவர்களில், 15 ஆயிரம் பேர் வெற்றி பெற்றதாக, அக்., 12ல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்வர்கள், பிரதானத் தேர்வுகளில் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்து, யு.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பு விவரம்: பிரதானத் தேர்வுகள், நாடு முழுவதும், 23 மையங்களில், டிச., 18ல் துவங்கி, 23ம் தேதி வரை நடக்கும். இத்தேர்வுகளில் பங்கேற்போருக்கு, காகிதத்திலான அனுமதி அட்டை வழங்கப்படாது.

அனைவரின் அனுமதி அட்டைகளும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வில் பங்கேற்போர், தங்களுக்கான அனுமதி அட்டையை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பிரின்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அனுமதி அட்டையை, தேர்வின்போது காண்பிக்க வேண்டும். பதிவிறக்கம் செய்யப்படும் அனுமதி அட்டையில் புகைப்படம் தெளிவாக இல்லாவிடில், தகுந்த அடையாள அட்டையும், புகைப்படமும், உடன் எடுத்து செல்ல வேண்டும். இவ்வாறு யு.பி.எஸ்.சி., அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் வரலாறு


தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள்

1.அரியலூர் மாவட்டம் 2001 ஜனவரியில் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட அரியலூர், 2002-ல் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது. பின்னர் மறுபடியும் நவம்பர் 23, 2007-ல் தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் உதயமானது. இம்மாவட்டத்தின் 3 முக்கிய நகரங்களாக அரியலூர், உடையார்பாளையம் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய நகரங்கள் அறியப்படுகின்றன. இவற்றில் நெய்வேலிக்கு அடுத்தபடியாக ஜெயங்கொண்டம் பகுதியில் அதிகளவில் நிலக்கரி படிமங்களாக கிடைக்கிறது.

2.இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலத்துக்காக புகழ்பெற்ற இராமேஸ்வரம் நகரம் இராமநாதபுரம் மாவட்டத்தில்தான் அமைந்திருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்துக்கு வடக்கே சிவகங்கை மாவட்டமும், மேற்கே மதுரை மாவட்டமும் அமைந்துள்ளன. இம்மாவட்டத்தின் முக்கிய நகரங்களாக இராமநாதபுரம், பரமக்குடி, இராமேஸ்வரம் ஆகிய நகரங்கள் அறியப்படுகின்றன.  

3.ஈரோடு மாவட்டம் பிச்சைக்காரன் ஓடை, பெரும்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் ஈரோடை எனப்பெயர்பெற்று பின்னர் அதுவே ஈரோடு ஆனது. ஈரோடு மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி, 1979-ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவானது.

4.கடலூர் மாவட்டம் உப்பனாறு, பரவனாறு போன்ற நதிகள் இங்கு கடலோடு கூடுவதால் கூடலூர் என்று பெயர்பெற்று அதுவே பின்னர் 'கடலின் நகரம்' என்ற பொருளில் கடலூர் என்று அழைக்கப்படலாயிற்று. புகழ்பெற்ற சிதம்பரம் நடராசர் கோயில், பிச்சாவரம் காடுகள் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் கடலூர் மாவட்டத்தில் தான் அமைந்திருக்கின்றன.

5.கரூர் மாவட்டம் 1995-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு கரூர் மாவட்டம் உதயமானது. இம்மாவட்டத்தின் முக்கிய நகரங்களாக கரூர் மற்றும் குளித்தலை நகரங்கள் அறியப்படுகின்றன.

6.கன்னியாகுமரி மாவட்டம் குமரித் தந்தை என்று அன்போடு அழைக்கப்படும் மார்சல் நேசமணியின் தலைமையில் நடந்த விடுதலை போராட்டத்தின் வெற்றியாக நவம்பர், 1956-ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரித்து கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாறியது. நாகர்கோவில், குளச்சல் உள்ளிட்ட 4 நகராட்சிகளை கொண்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் ஆகும்.  

7.காஞ்சிபுரம் மாவட்டம் அறிஞர் அண்ணா பிறந்த இடம், பல்லவ சாம்ராஜ்யத்தின் தலைநகர், பட்டுப்புடவை என்று பற்பல விஷயங்களுக்காக காஞ்சிபுரம் மாவட்டம் புகழோடு அறியப்படுகிறது. இந்த மாவட்டத்தில் காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட ஆலயங்கள் உள்ளன.

8.கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாட்டின் 30-வது மாவட்டமாக 2004-ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக கிருஷ்ணகிரி அறிவிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாக ஓசூர் நகரம் அறியப்படுகிறது.

9.கோயம்புத்தூர் மாவட்டம் பொருளாதாரத்திலும், தொழிற்துறையிலும் முன்னேற்றமடைந்த தமிழக மாவட்டங்களில் கோயம்புத்தூர் மாவட்டம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த மாவட்டத்தில் ஆழியாறு, சிறுவாணி ஆறு, பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் பாய்கின்றன. இவற்றில் சிறுவாணி ஆற்றின் நீர் உலகிலேயே 2-வது சுவையான நீராக கருதப்படுகிறது.

10.சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, திருப்புவனம், மானாமதுரை, திருப்பத்தூர், இளையான்குடி ஆகிய 7 வட்டங்களை உள்ளடக்கியது. இவற்றில் காரைக்குடி நகரம் மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாக கருதப்படுகிறது.

11.சென்னை மாவட்டம் தமிழகத்தின் தலைநகரம் சென்னையை மையமாக கொண்டு அமையப்பெற்ற சென்னை மாவட்டத்துக்கு என்று தனியாக தலைநகரம் எதுவும் கிடையாது. சென்னை மாவட்டம் மெரினா கடற்கரை, பார்த்தசாரதி கோயில், வடபழனி முருகன் கோயில் போன்றவருக்காக புகழ்பெற்றது.

12.சேலம் மாவட்டம் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் சேலத்திலிருந்து பிரிக்கப்படுவதற்கு முன் தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமாக சேலம் மாவட்டமே அறியப்பட்டு வந்தது. தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு நீராதாரமாக விளங்கிவரும் மேட்டூர் அணை, புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஏற்காடு ஆகியவை சேலம் மாவட்டத்தில்தான் அமைந்திருக்கின்றன.

13.தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாட்டின் அரிசிக்கின்னம் என்று அறியப்படும் தஞ்சாவூர் மாவட்டம் சோழர்களின் வரலாற்றைக் கூறும் சரித்திரப் புகழ் வாய்ந்த மாவட்டம். உலகப்புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் ஓவியம் ஆகியவற்றுக்காக தஞ்சை மாவட்டம் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக திகழ்ந்து வருகிறது.

14.தர்மபுரி மாவட்டம் கர்நாடக மாநில எல்லைக்கு அருகில் அமைந்திருக்கும் தர்மபுரி மாவட்டம் கோயில்களுக்காகவும், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்காகவும் புகழ்பெற்று விளங்குகிறது. இவற்றில் சென்றாய பெருமாள் கோயில், ஒகேனக்கல் அருவி ஆகியவை மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களாகும்.

15.திண்டுக்கல் மாவட்டம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு 1985-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக கொடைக்கானல் திகழ்ந்து வருகிறது. இதுதவிர முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள்  

16.திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சி மாவட்டம் வடக்கில் சேலம் மாவட்டத்தையும், கிழக்கில் தஞ்சாவூர் மாவட்டத்தையும், தெற்கில் மதுரை மாவட்டத்தையும், மேற்கில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. உலகின் மிகவும் பழமையான அணையாக கருதப்படும் கல்லணை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்தான் அமைந்திருக்கிறது. 

17.திருநெல்வேலி மாவட்டம் 1790-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ல் திருநெல்வேலி மாவட்டம் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியால் உருவாக்கப்பட்டது. தாமிரபரணி ஆறு பாயும் இம்மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் ஆலயம், அகஸ்தியர் அருவி ஆகியவை புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக திகழ்ந்து வருகின்றன. 
18.திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டம். 2008-ஆம் ஆண்டு வரை கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. அதன் பிறகு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டம் தமிழகத்தில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாவட்டமாகும்.

19.திருவண்ணாமலை மாவட்டம் 1989-ஆண்டு வட ஆற்காடு மாவட்டம், திருவண்ணாமலை சம்புவரயர் மாவட்டம் மற்றும் வ. டஆற்காடு அம்பேத்கர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. பின்னர் 1996-ஆம் ஆண்டின் மாவட்டப் பெயர் மாற்றங்களுக்கு பின் திருவண்ணாமலை மாவட்டமானது

20.திருவள்ளூர் மாவட்டம் 1997-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தை இரண்டாக பிரித்தபோது திருவள்ளூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

21.திருவாரூர் மாவட்டம் திருவாரூர் மாவட்டம் சோழர்களால் 1-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தியாகராஜஸ்வாமி திருக்கோயிலுக்காக மிகவும் புகழ்பெற்றது. 
22.தூத்துக்குடி மாவட்டம் துறைமுக நகரம் என்றும், முத்துக்களின் நகரம் என்றும் சிறப்பித்து கூறப்படும் தூத்துக்குடி நகரத்தை தலைநகரமாக கொண்டு தூத்துக்குடி மாவட்டம் செயல்பட்டு வருகிறது.

23.தேனி மாவட்டம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஜூலை 25, 1996-ஆம் ஆண்டு தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது. தேனி மாவட்டத்தின் பிரபலமான சுற்றுலாத் தலங்களாக மேகமலை, சுருளி நீர்வீழ்ச்சி, போடி மெட்டு ஆகியவை அறியப்படுகின்றன.

24.நாகப்பட்டினம் மாவட்டம் 1991-ஆம் ஆண்டு, அக்டோபர் 18-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டம் தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்கம் மிகுந்த மாவட்டம் என்று அறியப்படுகிறது

25.நாமக்கல் மாவட்டம் 1997-ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களாக திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவில், கொல்லிமலை ஆகியவை அறியப்படுகின்றன.

26.நீலகிரி மாவட்டம் மலைகளின் ராணி ஊட்டியை தலைநகரமாக கொண்டு நீலகிரி மாவட்டம் செயல்பட்டு வருகிறது. ஊட்டியை தவிர குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகள் நீலகிரி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக திகழ்ந்து வருகின்றன.

27.புதுக்கோட்டை மாவட்டம் ஜனவரி 14, 1974-ல் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களிலிருந்து சில பகுதிகளை பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் முதன்மை சுற்றுலாத் தலங்களாக சித்தன்னவாசல், விராலிமலை ஆகிய பகுதிகள் அறியப்படுகின்றன.

28.பெரம்பலூர் மாவட்டம் 1995-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு பெரம்பலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

29.மதுரை மாவட்டம் திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் முன்பு மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தன. மதுரை மாவட்டம் மீனாட்சியம்மன் கோயில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, திருப்பரங்குன்றம், திருமலை நாயக்கர் மஹால், பழமுதிர்ச்சோலை ஆகியவற்றுக்காக சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலம்.

30.விருதுநகர் மாவட்டம் தென்மேற்கில் திருநெல்வேலி மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலமும், வடமேற்கில் தேனி மாவட்டமும் விருதுநகர் மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய நகரங்களாக சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகியவை அறியப்படுகின்றன.

31.விழுப்புரம் மாவட்டம் 1993-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி, அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து விழுப்புரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. வரலாற்று புகழ்பெற்ற செஞ்சிக் கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில்தான் அமைந்திருக்கிறது.

32.வேலூர் மாவட்டம் 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட வட ஆற்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே வேலூர் இருந்தது. பின்னர் 1989-ல் வட ஆற்காடு மாவட்டம் திருவண்ணாமலை சம்புவரையர் மாவட்டம் (இன்றைய திருவண்ணாமலை), வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் ஆகிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் 1996-ல் வேலூர் மாவட்டம் எனப் பெயரிடப்பட்டது.

டிசம்பர் 14  இந்திய எரிசக்தி சேமிப்பு தினம் 


எரி பொருளை சிக்கனமாக தேவைக்கு மட்டும் பயன்படுத்துவதை வலியுறுத்தும் விதமாக ஆண்டு தோறும் டிசம்பர் 14 ஆம் தேதி இந்திய எரிசக்தி சேமிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

எரி பொருள் பயன்படாத துறையே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முக்கியமாக பெட்ரோலியம் மற்றும் நிலக்கரியின் பயன்பாடு மிக அதிகமாக இருக்க்றது. இவை நமக்கு தொடர்ந்து போதிய அளவுக்கு கிடைக்குமா என்றால் மிகப் பெரிய கேள்விக் குறிதான்.

இன்னும் கொஞ்ச நாட்களில் இந்த எரி பொருட்கள் இந்தப் பூமியில் தீர்ந்து போய் நமக்கு கிடைக்காமல் போகும் அபாயம் இருக்கிறது. இப்போதே கிடைக்கும் அளவு குறைந்து வருகிறது. அதனால், விலை கண்டபடி உயர்ந்து வருகிறது. அந்த வகையில், நிலமையை சமாளிக்க மாற்று எரி பொருட்களுக்கான வழியை கண்டு பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

காய்கனி கழிவுகள், சூரிய ஒளி போன்றவற்றின் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும். அவற்றுக்கான செலவு மிகவும் அதிகமாக இருக்கிறது. எப்போதும் எரி பொருள் தொடர்ந்து கிடைக்க முக்கிய வழி ஒன்று இருக்கிறது. அது எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தி சேமிக்கிறதுதான்.

நமக்கும் நாட்டுக்கும் நன்மை தரும் எரிபொருளை சேமித்து பயன்பெறுவோம்..

NMMS login page

வகுப்பறையில் பூச்சி தொல்லை ஆசிரியர்கள் சோதிக்க உத்தரவு

வகுப்பறையில் பூச்சிகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பிறகே, மாணவர்களை அனுமதிக்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், கல்வித்துறை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

ரயில்களில் அரை டிக்கெட்டுக்கு தனி 'பெர்த்' இனி இல்லை

ரயில்களில் படுக்கை, இரண்டடுக்கு,மூன்றடுக்கு ஏசி மற்றும் முதல் வகுப்பு ஏசி பெட்டிகளில் ௫-11 வயது குழந்தைகளுக்கு அரை டிக்கெட் எடுத்தால் தற்போது தனி 'பெர்த்' வழங்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு

4 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. சிறப்புச் சலுகை

தேர்வுகளை ஜனவரிக்கு ஒத்திவைக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தைத் தொடர்ந்து, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் உள்ள 148 பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்புச் சலுகையை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

3 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் மருத்துவப் பரிசோதனை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு தொற்றுநோய்கள் குறித்த பரிசோதனை திங்கள்கிழமை முதல் மேற்கொள்ளப்பட உள்ளது. அனைவருக்கும் நிறைவடையும் வரை பரிசோதனை தொடரும்.

இன்று பள்ளிகள் திறப்பு: பள்ளிகளை திறக்க வேண்டியது தலைமை ஆசிரியர்களின் பொறுப்பு'


'எந்த நிலையில் இருந்தாலும், பள்ளிகளை இன்று திறந்து இயல்பு நிலையை காட்ட வேண்டும்' என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால், சுத்தம் செய்யப்படாத பள்ளிகளில், மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுமோ என, பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர். நான்கு மாவட்டங்களை புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கைதொடர்ந்து, பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட தொடர் விடுமுறை, நேற்றுடன் முடிவுக்கு வந்தது .

எச்சரிக்கை:
'பள்ளிகளை திறந்தால் தான், இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக அர்த்தம். எனவே, பள்ளி விடுமுறையை நீட்டித்தால், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும். என்னநிலையில் இருந்தாலும், பள்ளிகளை திறக்க வேண்டியது அந்தந்த தலைமை ஆசிரியர்களின் பொறுப்பு' என, அதிகாரிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:'பள்ளியை திறக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்' என்று கூறிவிட்டு, வேலைக்கான ஆட்களையே வழங்கவில்லை. உள்ளூர் காரர்கள், நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் எவ்வளவு தான் வேலை பார்க்க முடியும். சில குறிப்பிட்ட மின் சாதன பராமரிப்பு, கீழ்நிலை தொட்டி மற்றும் மேல்நிலை தண்ணீர் தொட்டி சுத்தம் செய்தல், கல்லுாரி வளாகத்தை பராமரித்தல், கழிப்பறையை சுத்தம் செய்தல், கரையான் பிடித்த தளவாட பொருட்களை அகற்றுதல் என, முக்கிய பணிகளுக்கு கூட ஆட்கள் இல்லை; பொருளுதவியும் இல்லை.

பகுதிவாசிகள்:

பிற மாவட்ட ஊழியர்களை வரவழைத்து பணிகளை முடிக்க, உதவி இருக்க வேண்டும். அதைவிடுத்து, அவ்வப்போது அதிகாரிகள் வந்து, 'விசிட்' அடித்துவிட்டு, 'இன்னும் ரெடியாகலையா?' என கேட்டு, நெருக்கடி தருகின்றனர். பல பள்ளிகளில் அடைக்கலமாகி உள்ள பகுதிவாசிகளை, கட்டாயப்படுத்தி வெளியேற்றுகின்றனர். இயல்புநிலை வந்துள்ளதாக செயற்கையாக காட்ட, கல்வித்துறை இந்த முயற்சி மேற்கொண்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

முழுமையாக சுத்தம் செய்யப்படாத பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறையில், ஈரமாக இருக்கும் சுவர்கள் மற்றும் குவிக்கப்பட்ட குப்பையால், நோய் பரவும் வாய்ப்புள்ளதாக, பெற்றோர்கள்  கவலையடைந்து உள்ளனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!