எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!





Saturday, 26 December 2015
ஜன., 18 முதல் 2ம் பருவ தேர்வு
தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, ஜன., 18 முதல், இரண்டாம் பருவ தேர்வுகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.சமச்சீர் கல்வி பாட திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு மற்றும் இரண்டாம் பருவ தேர்வுகள், ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறைக்கு பின், ஜன., 2ல் பள்ளிகள் திறந்ததும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, ஜன., 11 முதல், 27 வரை, தேர்வுகள் நடக்க உள்ளன.இத்துடன், 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு, ஜன., 11 முதல், 27ம் தேதிக்குள் தேர்வை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு, இரண்டாம் பருவ தேர்வை, ஜன., 18 முதல், 27 வரை நடத்தலாம் என, பள்ளிக்கல்வி துறை அதிகாரி கள் அறிவுறுத்தியுள்ளனர்.மேலும், விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் போது, அனைத்து மாணவர்களுக்கும், மூன்றாம் பருவ புத்தகங்களை வழங்க வேண்டும் எனவும், அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளின் ஊர்திப்படி மாவட்ட அலுவலர்களுக்கு அதிகாரம்
தாமதத்தை தவிர்க்க மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு ஊர்திப்படி வழங்கும் அதிகாரத்தை துறைத்தலைவர்களிடம் இருந்து மாவட்ட அலுவலர்களுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.அரசு அலுவலகங்கள், பள்ளிகள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊர்திப்படி வழங்கப்படுகிறது.
'நெட்' தகுதி தேர்வு நாளை!
கல்லுாரி பேராசிரியர் பதவிக்கான, 'நெட்' தகுதி தேர்வு, நாடு முழுவதும், நாளை நடக்கிறது; தமிழகத்தில், 50 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர்.கல்லுாரி மற்றும் பல்கலைகளில் பேராசிரியராக சேர, 'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்; இல்லையெனில் பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு முடித்திருக்க வேண்டும்.
அரசு கல்லூரிகளில்மீண்டும் சிறப்பு வகுப்பு
அரசு கல்லுாரிகளில், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை, மீண்டும் நடத்த உயர் கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை மாணவர்கள், கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் பின் தங்கியிருப்பதை, பல்கலை மானிய குழுவான, யூ.ஜி.சி., கண்டறிந்தது.
விலை இல்லா பாடப்புத்தகங்கள் ஜனவரி 2–ந்தேதி வினியோகம்
1–வது முதல் 9–வது வரை பள்ளிக்கூடங்களில் படிக்கும் 90 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் ஜனவரி மாதம் 2–ந்தேதி வழங்கப்பட உள்ளன.விலை இல்லா பாடப்புத்தகங்கள்தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவவை வழங்கப்பட்டு வருகின்றன.
தேர்தல் பாதுகாப்பு பணியில்என்.சி.சி., மாணவர்கள்
வரும் 2016 பொதுத்தேர்தல் பாதுகாப்பு பணியில் என்.சி.சி., மாணவர்களை ஈடுபடுத்தும் திட்டம் உள்ளது. இதற்காக அவர்கள் குறித்த விபரங்களை தயார் செய்ய போலீசுக்கு தேர்தல் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பாதுகாப்பு, தேர்தல் பணியில் ஆசிரியர்,
.'ஆன்-லைனில்' துறைத்தேர்வு
அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வுகளை 'ஆன்லைன்' மூலம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.பதவி உயர்வு, திறன் மேம்பாடு போன்றவற்றிற்காக அரசு ஊழியர்களுக்கு துறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன
சென்னை ஐஐடியில் ரயில் ஆராய்ச்சி மையம்
நவீன ரயில் போக்குவரத்து ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக சென்னை ஐஐடி கல்வி நிலையத்தில் ரயில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ரயில்வேயுடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ரயில்வேயுடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த அவகாசம் வேண்டும்:தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் கோரிக்கை
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள், மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளன.
பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளி ஆசிரியர் நியமன கல்வித் தகுதி பட்டியலில் சிறப்பு பி.எட். படிப்பு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான கல்வித் தகுதியில் சிறப்பு பிஎட் படிப்பை சேர்க்க, 6 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாடு சிறப்பு கல்வியியல் பட்டதாரிகள் சங்கத் தலைவர் பி.வடிவேல்முருகன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழ்நாடு சிறப்பு கல்வியியல் பட்டதாரிகள் சங்கத் தலைவர் பி.வடிவேல்முருகன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
பள்ளிகள் தொழிற்சாலைகளை போல் செயல்படுகின்றன: மாதவன் நாயர்
தொழிற்சாலையில் பொருட்களை தயாரிப்பது போல இந்தியாவில் பள்ளிகள் செயல்பட்டு வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவருமான மாதவன் நாயர் கவலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்திற்கு 12 பி அந்தஸ்து; யூ.ஜி.சி.யின் நிதியுதவி கிடைக்க வாய்ப்பு
தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் இந்தியாவின் 10-வது திறந்தவெளி பல்கலைக்கழகமாக 2002-ம் ஆண்டு தமிழக அரசால் துவங்கப்பட்டதாகும். இப்பல்கலைக்கழகத்திற்கு தற்போது 12 பி சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Subscribe to:
Posts (Atom)