Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 29 February 2016

தினம் ஒரு புத்தகம் "விண்மீன்கள்"


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "உடல் வனப்பைக் கூட்டும் வெந்தயம்"

உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.

ஆண்டுக்கு ரூ5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளோருக்கு ரூ3,000 வரிசலுகை

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 3வது பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.பட்ஜெட் தாக்கலின் போது பெரும்பாலானோர்களால் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரிச்சலுகை அறிவிக்கப்பட்டது.

வீட்டுக்கடன்களுக்கு சிறப்புச் சலுகைகள்: அருண் ஜேட்லி அறிவிப்பு

வீட்டுக்கடன்களுக்கு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.நாடாளுமன்ற மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2016 - 17ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அதில்,

ஓய்வூதிய திட்டம்: புதிய மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை அறிவிப்பு

மத்திய அரசின் புதிய ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்திற்கான பங்களிப்பில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், மத்திய அரசின் புதிய ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய 8.33% பங்களிப்பை அரசே அளிக்கும் என்று கூறினார்.ஊதியக் குழு பரிந்துரையை செயல்படுத்த இடைக்கால நிதி ஒதுக்கீடு

தேசிய தொழில்நுட்ப ஆசிரியருக்கான விருது: தேனாடு ஊராட்சி பள்ளி ஆசிரியர் தேர்வு

தேசிய அளவில் சிறந்த தொழில்நுட்ப ஆசிரியராக, கோத்தகிரி தேனாடு ஊராட்சிபள்ளி ஆசிரியர்தர்மராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு நிறுவனம் (ஐ.சி.டி.ஏ.சி.டி.,), தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, எல்காட் நிறுவனம் ஆகியவை சார்பில் ஆண்டுதோறும் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஆசிரியர், கல்லூரிபேராசிரியர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கோரிக்கை ஏற்கப்பட்டதால் ஆசிரியர் போராட்டம் 'வாபஸ்'

கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.தமிழக தொடக்க பள்ளிகளில், 2009 ஜூன், 1க்கு பின், இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்களுக்கு, அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் முரண்பாடு ஏற்பட்டது. இதை சரிசெய்ய கோரி, ஆசிரியர்கள் பல முறை மனு அளித்தும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை.

இந்த நிலையில், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்கத்தினர், எட்டு நாட்களாக, சென்னையில், கல்வித்துறைதலைமை அலுவலகம் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 25 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதையடுத்து, சங்கத்தினருடன், தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் பேச்சு நடத்தினார். பின், கல்வித்துறை செயலர் சபிதாவுக்கு அறிக்கை அனுப்பினார். அதில் ஆசிரியர்களின் சம்பளத்தில் தவறு நிகழ்ந்துள்ளதை அரசுசெயலரும் கண்டுபிடித்தார்.

இதை தொடர்ந்து, போராடிய ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் போது, சரி செய்வதாக கல்வித்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதற்கான எழுத்துப்பூர்வ உத்தரவும் தருவதாக அதிகாரிகள் கூறியதால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

வல்லுநர் குழுவில் அரசு ஊழியரை சேர்க்க வலியுறுத்தல்

அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு ஊழியர்களின் போராட்டத்தில் வலியுறுத்தப் பட்ட 20 அம்ச கோரிக்கைகளில் 11 கோரிக் கைகளை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ள தமிழக முதல்வருக்குநன்றி. அதில், 8 கோரிக்கைகளை செயல்படுத்துவதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

TNPSC :டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு தமிழக அரசில் பணி

தமிழக அரசில் காலியாக உள்ள Tester பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய பட்ஜெட் 2016-17 : முக்கிய அம்சங்கள்

வேளாண் துறைக்கு ரூ.35,984 கோடி ஒதுக்கீடுபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014 மே 26-ம் தேதி பதவியேற்றது. மத்திய அரசில் நிதியமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஜேட்லி 3-வது முறையாகதனது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.மத்திய பொது பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:
* மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்.

மத்திய பொது பட்ஜெட் :கல்வித் துறை முக்கிய அம்சங்கள்

1. 10 அரசு கல்வி நிறுவனங்களும், 10 தனியார் கல்வி நிறுவனங்கள் உலகத்தரத்துக்கு மேம்படுத்தப்படும்.
2. பள்ளிச் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புச் சான்றிதழ்கள் டிஜிட்டல் ஆவணங்களாகவும் வழங்கப்படும்.
3. அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக 62 நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும்.

மத்திய பட்ஜெட் 2016-17:வருமான வரி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை.

* வருமான வரி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை.
*வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் புதிதாக இணையும் ஊழியர்களுக்கான 8.33% பங்களிப்பை முதல் மூன்று ஆண்டுகளுக்கு அரசே ஏற்கும்.
* வாடகை வீட்டில் வசிக்கும் வருமான வரிதாரருக்கு ரூ60,000 வரை வரிச்சலுகை. வாடகை வீட்டில் வசிப்போருக்கு இதுவரை சலுகை ரூ.24,000 ஆக இருந்தது.

Tamil Nadu Government Scholarships Orders issued.

Tamil Nadu Government Scholarships Orders issued.G.O Ms.No. 208 Dt: February 23, 2016 Scholarships - Tamil Nadu Government Scholarships to cadets of Tamil Nadu studying in Rashtriya Indian Military College (RIMC), Dehradun - Enhancement of Scholarship amount from Rs. 12,000/- to Rs. 40,000/- per annum - Orders issued.

தேசிய திறனறி தேர்வு ரிசல்ட் வெளியீடு

பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை பெற வேண்டுமெனில், மத்திய அரசு சார்பில் நடத்தப்படும், தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டுக்கான திறனறித் தேர்வில், மாநில அளவிலான முதல் கட்ட தேர்வு, நவம்பரில் நடந்தது.

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்ட பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை துவங்குகின்றன.பிளஸ் 2 தேர்வு, நாளை துவங்கி, ஏப்., 22 வரை நடக்கிறது. 10ம் வகுப்பு தேர்வு நாளை துவங்கி, மார்ச், 28ல் முடிகிறது. நாடு முழுவதும், 16 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த, 25.67 லட்சம் பேர் இத்தேர்வுகளை எழுத உள்ளனர்.

ஐ.ஏ.எஸ்., தேர்வு 'இன்டர்வியூ' இனி அழைப்பு கடிதம் வராது

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, இனிமேல்,நேர்முகத்தேர்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட மாட்டாது என்றும், மாறாக, தேர்வாணையத்தின் இணைய தளத்தில், 'இ - சம்மனை' டவுண்லோடு செய்து கொள்ளலாம் என்றும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான தேர்வை, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆண்டுதோறும் நடத்துகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம்: முதல்–அமைச்சர் ஜெயலலிதாதலையிட்டு தீர்வு காணவேண்டும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–தமிழகத்தில் கடந்த 10–ந் தேதி முதல் 19–ந் தேதி வரை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது சுமுகமான சூழல் ஏற்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு எழுத்து தேர்வு 813 பணியிடங்களுக்கு 7 லட்சத்து 70 ஆயிரம் பேர் எழுதினர்.

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. 813 காலிப்பணியிடங்களுக்கு 7 லட்சத்து 70 ஆயிரத்து 750 பேர் எழுதினார்கள். அதாவது ஒரு பணிக்கு 948 பேர் போட்டி போட்டு எழுதி உள்ளனர்.கிராம நிர்வாக அலுவலர்கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்கள் 813–ஐ நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை மேற்கொண்டது.

பிளஸ் 2 தேர்வு முறைகேடுகள் நடந்தால் புகார் அளிக்க பெட்டி

பிளஸ் 2 தேர்வில், முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடந்தால், அதுகுறித்து புகார் அளிக்க, அனைத்து தேர்வு மையங்களிலும் புகார் பெட்டி வைக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதில், பெற்றோர் மற்றும் தனித்தேர்வர்களும் புகார் மனுக்களை போடலாம்.பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 4ல் துவங்கி, ஏப்ரல், 1ல் முடிகிறது.

பள்ளி மாணவர்களுக்கு பங்கு சந்தை தேர்வு

பள்ளிகளில், 8ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை, பங்குச்சந்தை பாடம் குறித்து தனியாக தேர்வு நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளி களில், முதன் முறையாக, 2010ல், பங்கு சந்தை குறித்த பாடம், 8ம் வகுப்பு, ௯ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, விருப்ப பாடமாக அறிமுகம் செய்யப்பட்டது.

பரத நாட்டிய கலைஞர் ருக்மினி தேவியின் 112-வது பிறந்த தினம் இன்று: கூகுள் சிறப்பு மரியாதை

புகழ்பெற்ற நடன கலைஞர் ருக்மிணி தேவி அருண்டேலின் பிறந்தநாள் இன்று. கூகுள் நிறுவனம் ருக்மினி தேவிக்கு மரியாதை செலுத்தும் விதமான இன்று அவரது படத்தினை பதிவு செய்துள்ளது.

1904-ம் வருடம் மதுரையில் பிறந்த இவர் ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞராக திகழ்ந்தார். கலாசேத்திரா என்ற நடனப் பள்ளியினை நிறுவினார். சமூகத்தில் ஒரு சாரார் மட்டும் பயின்ற சதிர் என்ற நடனத்திற்கு, பரதநாட்டியம் என்ற பெயரிட்டு பலரும் பரவலாக பயில முனைப்புடன் செயல்பட்டவர். 

ருக்மிணியின் நடனம் அழகியல் மற்றும் ஆன்மீகத் தன்மை நிறைந்ததாக இருந்தது. 

ருக்மிணி, விலங்குகள் மீது தீவிர அன்பினைக் கொண்டிருந்தார். இந்திய பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்த போது, விலங்கு வதை சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றினார்.

1937ஆம் ஆண்டில் இந்திய அரசின் உதவியோடு, நலிவடைந்திருந்த நெசவுத் தொழிலினை, ஊக்குவிக்கும் பொருட்டு, சில நெசவு ஆலைகளை நிறுவினார். பல்வேறு வகைகளிலும், கண்கவர் வண்ணங்களிலும், அழகான வேலைப்பாடுகளுடைய கைத்தறி ஆடைகளை இந்த ஆலை தயாரித்தது. 

1977ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், ருக்மிணியை குடியரசுத் தலைவர் பதவியினை வகிக்குமாறு அழைப்பு விடுத்தார். கலை மற்றும் கலைசார்ந்தவற்றிற்காக பணிபுரிவதே தன் விருப்பம் என்று கூறி அப்பதவியினை ஏற்க மறுத்தார்.

1986ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 24ஆம் தேதி, ருக்மிணி இறந்தார். அதன் பிறகு, அவர் துவக்கிவைத்த கலாக்ஷேத்ரா தேசிய சிறப்பு வாய்ந்த நிறுவனமாக பாராளுமன்றத்தினால் அறிவிக்கப்பட்டது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தினமும் தேசியகொடி ஏற்ற வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேச விரோத கோஷம் எழுப்பப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் தினந்தோறும் தேசியகொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தேசியகொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த பள்ளிகளில் தினமும் தேசியகொடி ஏற்றுமாறு கேந்திரிய வித்யாலயா சங்கேதனின் கூடுதல் கமிஷனர் யு.என்.கவரே, பள்ளி முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மாணவர்கள் மரியாதை செலுத்துவதற்கு ஏதுவாக, பள்ளியின் முக்கியமான பகுதியில் தேசியகொடியை காலையில் ஏற்ற வேண்டும் எனக்கூறியுள்ள அவர், மாலையில் சூரியன் மறைவுக்கு முன் கொடியை இறக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்திய தேசியகொடி சட்டம் 2002 மற்றும் தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்பு சட்டம் 1971 போன்றவற்றை பள்ளிகள் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள கேந்திரிய வித்யாலயா சார்பில் நாடு முழுவதும் 1100-க்கும் அதிகமான பள்ளிகள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

TNTET : ஆசிரியர் தகுதித்;தேர்வில் (2013 ) தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் பணிநியமணம் வேண்டி மார்ச் 01 முதல் தொடர் உண்ணாவிரதம்

கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வி;ல் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2014ம் ஆண்டு பணிநியமணத்துக்கான சான்றிதழ்; சரிபார்ப்பும் முடிந்த நிலையில் வெய்ட்டேஜ் என்னும் முறையால் வாழ்வுரிமை இழந்தனர்.... பின்னர் 2014ம் கல்வியாண்டுக்கான காலி ஆசிரியர் பணியிடமும் 2015ம் கல்வியாண்டுக்கான ஆசிரியர் காலி;ப்பணியிடமும் அரசு இன்று வரை தெரிக்கவில்லை..

இருப்பினும் அரசு நம்மை வைத்தே இனிவரும் ஆசிரியர் பணியிடங்ளை நிரப்பும் என்று நம்பிக்கை வைத்தனர்...
அனைத்தும் கானல் நீராகவே இருந்தது... அதனால் டி.இ.டி தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்களும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மன உளைச்சலுக்கு ஆளாயினோம்... ஆகவே அரசு டி.இ.டி 2013ல் தேர்வில் தேர்ச்சிப்பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நமக்கு பணிநியமனம் வழங்க வேண்டியும்... வெய்ட்டேஜை திரும்ப பெறுமாறும்... இனிவரும் காலங்களில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்களாகிய எங்களை வைத்தே காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டியும் மார்ச் 01 முதல் தொடர் போராட்டம் நடைபெற முடிவெடுத்துள்ளோம் நண்பர்களே...

இத்தனை நாள் ஏதோ எனக்கென்ன என்று இருந்து விட்டாய் இனியும் நீ அவ்வாறு இருந்தால் .. டி.இ.டி 2013 என்ற அத்தியாயம் முடிந்து விடும்... துணிந்து வா.. தோல்விகள் நமக்கில்லை...
போராட்டம் ஒன்றும் நமக்கு புதிதல்ல... புதிரல்ல...
நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு துளிக்காற்றும் கூட தேசப்பிதா காந்தி திருப்பூர் குமரன் வ.உ.சி போன்ற எண்ணற்றோர் போராடி தான் நமக்கு விடுதலை சுவாசத்தை அள்ளித்தந்தார்கள்... போராட்டக்குணம் நம் இரத்தத்தில் ஊறிப்போனது தான்... உரிமைக்காக போராடுவனே சிறந்த மனிதன்...
உன்னிடம் எதிர்பார்ப்பது உன் வருகையை மட்டும் தான்... உன் பிள்ளைகள்.. உன் குடும்பத்தார்.. உன் தந்தை தாய் ...உறவினர்கள் என அனைவரோடும் கலந்து கொள்.... ஏனெனில் இது நம் இறுதிகட்ட முயற்சி.... நம் பணிநியமனம் இழந்து தவிக்கும் உன் உறவினர்கள் மற்றும் குடும்பத்தார்கள் என அனைவரும் திரட்டு.. அரசுக்கு பணிவாய் நமது கோரிக்கையை எடுத்துரைப்போம்...

அன்று சுதந்திர போராட்ட வீரர்கள் 'முழு சுதந்திரத்தை தவிர வேறு எதனாலும் திருப்தி அடையமாட்டோம்' என முழுங்கினார்கள்...

இன்று... நாம் ' பணிநியமணம் அல்லது பணிநிமணம் சார்ந்த எழுத்துப்பூர்வ அறிக்கையினால் மட்டுமே தவிர வேறு எதனாலும் நமது போராட்டதிலிருந்து பின்வாங்க போவதில்லை'

ஆகவே தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு வருகை தந்து உங்கள் உரிமையை நிலைநாட்ட வாரிர்...
நாள் : மார்ச் 01 முதல்... இடம் : டி.பி.ஐ வளாகம் ... சென்னை

தொடர்புக்கு:
பி.இராஜலிங்கம் 9600208188
கபிலன் 9092019692
செல்லத்துரை 9843633012
சிவா 8807148088
கோவிந்தன்

மாவட்ட வரியாக ஒருங்கிணைப்பாளர்கள்:
திண்டுக்கல் புவனேஸ்வரி - 9688414105
தருமபுரி பிரகாசம் -  978737442
விழுப்புரம் நடராசன் - 9443517563
சிவகங்கை சமையமுத்து – 9843519554
வேலூர் நந்தகுமார் - 9965855880
மதுரை 7598360223

விரைவில் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தொடர்பு எண்கள் வெளியிடப்படும்

பாராளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகிறது

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 23-ந் தேதி தொடங்கியது.

25-ந் தேதி ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) 2016-17-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் (வரவு- செலவு திட்டம்) மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது.

நிதி மந்திரி அருண்ஜெட்லி, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 3-வது பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அப்போது புதிய வரிகள், வரிச்சலுகைகள் பற்றிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில், வரும் நிதி ஆண்டில் 7 முதல் 7.75 சதவீத வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அருண் ஜெட்லி கூறி இருந்தார். எனவே உற்பத்தி துறைக்கு ஊக்கம் அளித்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் பல நாடுகளின் பொருளாதாரம் நலிந்தும், சரிந்தும் காணப்படும் நிலையில், மத்திய அரசின் இந்த பட்ஜெட் அரசுக்கு பெரும் சவாலாகவே இருக்கும் என கருதப்படுகிறது.

Sunday, 28 February 2016

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "உலர்ந்த திராட்சை பழங்களின் பயன்கள்!"

இதில் வைட்டமின் ‘பி’ மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

`கிஸ்மிஸ் பழம்’ என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

தினம் ஒரு புத்தகம் "மூச்சு ரகசியங்களும் பயிற்சிகளும்"


6th CPC DA TABLE FROM JUNE 2006 TO DECEMBER 2015


பிப்ரவரி 28 அன்று ஏன் அறிவியல் தினம் கொண்டாடப் படுகிறது?

FEBRUARY 28
தேசிய  அறிவியல் தினம்.

ஒவ்வொரு ஆண்டும்

பிப்ரவரி 28-ஆம் நாளன்று

தேசிய அறிவியல் தினம்

கொண்டாடப்பட்டு வருகிறது.

பிப்ரவரி 28 அன்று ஏன் அறிவியல் தினம் கொண்டாடப் படுகிறது?

"இராமன் விளைவு' கண்டுபிடிக்கப்பட்ட தினம்தான் அது.

"ஒளி ஒரு பொருளின் வழியே செல்லும்போது சிதறும் ஒளி அலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றமே' இராமன் விளைவு ஆகும்.

இக் கண்டுபிடிப்புபெட்ரோலிய வேதித் தொழில், மருந்தாக்கத் தொழில் போன்ற துறைகளில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இந்தக் கண்டுபிடிப்புக்காக 1930-ஆம் ஆண்டு சர்.சி.வி.இராமனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இராமன், 1888-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம் தேதி, தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில்

சந்திரசேகர ஐயருக்கும் பார்வதி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார்.

இவர் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் 1904-ஆம் ஆண்டு கலை இளநிலைப் பட்டம் பெற்றார்.

1907-இல் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

முதன்முதலில் இந்திய அரசு நிதித் துறையில் துறை கணக்காயராக பணியில் சேர்ந்தார்.

பணியில் இருக்கும்போதே கொல்கத்தா அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் ஒளிச்சிதறல் பற்றிய ஆராய்ச்சியையும் மேற்கொண்டு வந்தார்.

1917-ஆம் ஆண்டு கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக சேர்ந்து பணியாற்றினார்.

பின்னர், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் சேர்ந்து நமது நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.

பின்னர் இராமன் ஆய்வுக்கழகத்தை நிறுவியதுடன் அதன் இயக்குநராகவும் பணியாற்றினார்.

1926-ஆம் ஆண்டு இந்திய இயற்பியல் ஆய்விதழ், அறிவியல் இதழ் போன்றவற்றைத் தொடங்கி சேவை செய்தார்.

இவருக்கு ஆங்கிலேய அரசு, 1929-ஆம் ஆண்டு சர் பட்டம் வழங்கியது.

மேலும் 1930-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நோபல் பரிசு,

1954-இல் வழங்கப்பட்ட பாரதரத்னா விருது,

1957-இல் வழங்கப்பட்ட லெனின் அமைதிப் பரிசு போன்றவை

சர்.சி.வி.இராமனைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன.

இது அவருக்கு மட்டுமல்ல, நம்மைப் போன்ற இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்க்கும்.

படிக்கும் மாணவர்கள் தெளிவான அறிவியல் சிந்தனையோடு புதிய புதியகண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்க சரவல்.சி.வி.இராமனின் உழைப்பை நினைவில் கொள்ள வேண்டும்

ரூ.251-க்கு ஸ்மார்ட்போன்: வாங்கிய முன் பணத்தை திருப்பித்தர நிறுவனம் முடிவு

நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ‘ரிங்கிங்பெல்ஸ்’ நிறுவனம், உலகிலேயே மிக குறைந்த விலைக்கு அதாவது ரூ.251-க்கு ஸ்மார்ட்போன் வழங்குவதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது. இதற்காக இணையதளம் மூலம் பதிவு செய்யவும் அழைப்பு விடுத்திருந்தது.

இதைத்தொடர்ந்து ‘ப்ரீடம் 251’ என்று பெயரிடப்பட்ட அந்த திட்டத்தின் கீழ் ஸ்மார்ட்போன் வாங்க நாடு முழுவதும் மக்களிடையே பேரார்வம் ஏற்பட்டது. அந்த நிறுவனம் அறிவித்திருந்த இணையதள முகவரியில் போனுக்காக பதிவு செய்ய ஏராளமானோர் முயன்றனர். இதனால் இணையதளமே முடங்கியது. பின்னர் ஒரு நாள் இடைவெளிக்குப்பின் அந்த நிறுவனத்தின் இணையதளம் சீரானது.

உடனே லட்சக்கணக்கானவர்கள் ஸ்மார்ட் போனுக்காக பதிவு செய்தனர். அவர்களுக்கு பணம் செலுத்துவதற்கான விவரம் அடங்கிய ‘லிங்க்’ 48 மணி நேரத்தில், அவர்கள் வழங்கியிருந்த ஈ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் இது தொடர்பாக யாருக்கும் இதுவரை தகவல் வரவில்லை.

இந்த நிலையில் ஸ்மார்ட்போன் வாங்க பதிவு செய்திருந்தவர்கள், முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டாம் எனவும், போன் கையில் கிடைக்கும் போது பணம் செலுத்தினால் போதும் (கேஷ் ஆன் டெலிவரி) எனவும் ரிங்கிங்பெல்ஸ் நிறுவன தலைவர் அசோக் சத்தா ஒரு செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அந்த நிறுவனத்தின் இணையதளம் முடங்குவதற்குள் சுமார் 30 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியிருந்தனர். அவர்களது பணம் திருப்பி வழங்கப்படும் எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

23.08.2010 முன்பே சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 23.08.2010 பின்பு பணிநியமனம் பெற்ற ஆசிரியர்கள் Tet எழததேவையில்லை TRB விளக்கம்

பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளை பயம் இன்றி எழுதுங்கள் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் வேண்டுகோள்.

பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி.தேர்வுகளை பயம் இன்றி சிறப்பாக எழுதுங்கள் என்று மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தேர்வு தொடங்குகிறதுதமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும் விரைவில் தொடங்க இருப்பதால், அதை சந்திக்க மாணவ–மாணவிகள் மும்முரமாக தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில், பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்துமாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்தகடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–

பரீட்சைக்கு தயார்தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வுகள் மார்ச் 4–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 1–ந் தேதி வரை நடக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 15–ந் தேதி தொடங்கிஏப்ரல் 13–ந் தேதி வரை நடைபெற உள்ளது.பிளஸ்–2 தேர்வுகள் நெருங்கி விட்டதால் மாணவ–மாணவிகள் பாடங்களை படித்து பரீட்சைக்கு தயாராகிஇருப்பீர்கள். இப்போது கடைசி கட்டமாக, படித்த பாடங்களை நினைவு படுத்தி பார்க்கும் திருப்புதல் வேலையில் மும்முரமாக செயல்படுவீர்கள்.பதற்றம் வேண்டாம்மாணவர்களே நீங்கள், எல்லா பாடங்களையும் நன்றாக படித்து இருந்தாலும், அவற்றை நினைவில் கொண்டு வந்து, கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய முறையில் தெளிவாக பதில் எழுதுங்கள்.நீங்கள் எழுதும் அந்த பதில் தான் பதில்கள் தான் உங்களுடைய எதிர்கால வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்க போகிறது.சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ–மாணவிகளுக்கு தேர்வு பயம் நீக்க கலந்தாய்வு கொடுக்கப்பட்டுள்ளது..
* பரீட்சையை நினைத்து பதற்றமோ, பயமோ கொள்ளாதீர்கள்.
* பரீட்சை எழுதும் முன், தேர்வு எழுதும் அறைக்கு செல்லும் முன் அதாவது வீட்டிலேயே படித்த பாடங்களை ஒருமுறை திருப்பிப் பாருங்கள்.
* குறிப்பிட்ட நேரம் படித்து விட்டு, இரவில் நன்றாக தூங்குங்கள்.நம்பிக்கை
* உடலுக்கும், மூளைக்கும் போதிய ஓய்வு கொடுத்தால் தான் மறுநாள் பொழுது உற்சாகமாக இருக்கும்.
* நம்மால் நன்றாக விடை எழுத முடியும் என்ற நம்பிக்கையுடன் தேர்வுக்கூடத்துக்கு செல்லுங்கள்.
* கேள்வித்தாளை படித்துப் பார்க்க 10 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே கேள்வித்தாளை வாங்கியதும் நிதானமாக படித்துப் பாருங்கள்.
* 10 நிமிடம் கழித்து விடைத்தாள்கள் வழங்கப்படும்.
* தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை எழுதுங்கள். தெரியாத கேள்விகளுக்கு பின்னர் சிந்தித்து விடை எழுதுங்கள்.* பெரிய விடைகள் எழுதும் போது போதிய விவரங்கள் தெரியவில்லை என்றால் பக்கத்தை நிரப்புவதற்காக சுற்றிவளைத்து கதை அளக்காதீர்கள். அது உங்கள் மனநிலையை விடைத்தாள் திருத்தும் ஆசிரியருக்கு காட்டிக் கொடுப்பதோடு, அவரை எரிச்சல் கொள்ளச் செய்யவும் வாய்ப்பு உள்ளது.காப்பி அடிக்கக்கூடாது* எந்த காரணத்தைக்கொண்டும் தேர்வில் ‘காப்பி’ அடிக்காதீர்கள். அருகில் இருக்கும் மாணவர்கள் உங்கள் விடைகளை பார்த்து ‘காப்பி’ அடிக்கவும் அனுமதிக்காதீர்கள். காப்பி அடிக்கும் போது பிடிபட்டால் உங்கள் எதிர்காலமே கேள்விக்குறி ஆகிவிடும். 2 வருடத்திற்கு தண்டனை உண்டு. தொடர்ந்து பல முறை தேர்வு எழுத முடியாமல் போய்விடும்.எனவே மாணவ–மாணவிகள் சிறப்பாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெறுங்கள்.இவ்வாறு ச.கண்ணப்பன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பிளஸ்–2 தேர்வு குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை வருமாறு:–மாணவிகள் அதிகம்பிளஸ்–2 தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6,550 பள்ளிகளில் இருந்து 8,39,697 மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள். இந்த வருடமும் மாணவிகள்தான் அதிகம் பேர் எழுதுகிறார்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பிளஸ்–2 தேர்வுக்கு 2,421 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.சிறைவாசிகள் 97 பேர் பிளஸ்–2 தேர்வு எழுதுகிறார்கள். இவர்கள் புழல் சிறையில் எழுத இருக்கிறார்கள். இந்த வருடம் 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 பேர் தமிழில் எழுதுகிறார்கள்.தேர்வை சிறப்பாக நடத்த அனைத்து மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் மாவட்ட தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.

செல்போனுக்கு தடை

இந்த ஆண்டு தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போனை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவுரையை மீறி மாணவர்களோ, ஆசிரியர்களோ செல்போன்அல்லது இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தேர்வு நேரங்களில் துண்டு தாள் வைத்திருத்தல், பார்த்து எழுதுதல், ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். அதிகபட்சமாக 2 வருடம் வழங்கப்படும்.அங்கீகாரம் ரத்துஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது அவர்களைஊக்குவிக்கவோ பள்ளிக்கூட நிர்வாகம் முயற்சி செய்தால்அந்த பள்ளிக்கூட தேர்வு மையத்தை ரத்து செய்தும் அந்த பள்ளியில் அங்கீகாரத்தை பள்ளிக்கல்வி இயக்குனர் அல்லது மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் ரத்து செய்வார்கள்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பிளஸ் 2 தேர்வில் முறைகேடா?15 வகை தண்டனை அறிவிப்பு

இந்த ஆண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 4ம் தேதியும்; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ம் தேதியும் துவங்குகிறது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கானதண்டனைகளை, தேர்வுத்துறை பட்டியலிட்டுள்ளது. அதன் விவரம்:

1.துண்டுத்தாள், புத்தகம், விடைக்குறிப்புகள் வைத்திருந்து, அதை கண்காணிப்பாளர் கவனிக்கும் முன், மாணவர் தானாகவே முன் வந்து, கண்காணிப்பாளரிடம் கொடுத்தால், மாணவரைஎச்சரிக்கை செய்து தேர்வு எழுத அனுமதிக்கலாம். அதன் பின் குறிப்புகள் வைத்திருந்தால், விளக்கம் எழுதி வாங்கி விட்டு, தேர்வை எழுத தடை செய்து வெளியேற்றப்படுவர்.
2. துண்டுத்தாள், விடைக்குறிப்பு வைத்திருப்பதை கண்காணிப்பாளர் கண்டுபிடித்தால், உடனடியாக மாணவரை வெளியேற்ற வேண்டும். துண்டுத்தாளை, மாணவர் பெயர் விவரத்துடன் மண்டல துணை இயக்குனரிடம் ஒப்படைக்க வேண்டும். மாணவர் விடைக்குறிப்பை பயன்படுத்தாவிட்டால், மறு நாள் தேர்வு எழுதலாம். துண்டுத்தாளை பயன்படுத்தியிருந்தால், அன்றைய தேர்வுக்கான விடைத்தாள் நிறுத்தம்செய்யப்படும்; ஓர் ஆண்டு அல்லது அடுத்து வரும், இரண்டுபருவ தேர்வுகளுக்கு தடை விதிக்கப்படும்.
3. ஒரு மாணவரை பார்த்து மற்றொரு மாணவர் எழுதினால், உடனேவெளியேற்றப்படுவார். பார்த்து எழுதியதற்கு சாட்சி இருந்தால், அந்த மாணவர் அடுத்து வரும், இரண்டு பருவ தேர்வுகள் அல்லது, ஓர் ஆண்டுக்கு, குறிப்பிட்ட பாடத்தைஎழுத முடியாது.
4.மாணவர் முழுவதுமாக காப்பியடித்தது தெரிந்து,தவறு நிரூபிக்கப்பட்டால், அனைத்து தேர்வுகளையும் எழுத முடியாது. அடுத்து வரும், இரண்டு பருவ தேர்வுகள் ரத்துசெய்யப்படும்.
5. அறை கண்காணிப்பாளரின் உதவியுடன் மாணவர் காப்பியடித்து, அது சாட்சியுடன் நிரூபிக்கப்பட்டால், அடுத்து வரும் தேர்வுகளை எழுத முடியாது.
6.விடைத்தாளை எடுத்து சென்றாலோ, கிழித்து விட்டாலோ,அந்த தேர்வு முழுவதையும் எழுத முடியாது.
7.ஆள்மாறாட்டம் செய்து நிரூபிக்கப்பட்டால்,நிரந்தரமாக தேர்வு எழுத முடியாது.
8.தன்னை தேர்ச்சி பெற செய்யும்படி, தேர்வு தாளிலோ, கடிதம் மூலமோ தேர்வுத்துறை அலுவலகத்துக்கோ, அல்லது தேர்வுத்துறை அதிகாரிகளுக்கோ கடிதம் எழுதினால், அந்த மாணவரின் தேர்வு ரத்து செய்யப்படும்.
9. தேர்வுத்துறை அதிகாரிகள், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் மாணவரை காப்பியடிக்க விடாமல் தடுத்து, அவர்களை தேர்வு மையத்துக்கு வெளியே அனுப்பிய பின், தேர்வு மையத்திற்கு வெளியே, அதிகாரிகள், ஆசிரியர்களை மாணவர் மிரட்டி,திட்டினால், அந்த மாணவரின் தேர்வு ரத்து செய்யப்படும்.
10.மாணவர் வினாத்தாளை வெளியே, 'லீக்' செய்தால், மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.
11. முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு, விளக்கம் தர மறுத்தால், அந்த பருவத்தின் தேர்வு முழுவதும் ரத்து செய்யப்படும்.
12.விடைத்தாள் திருத்தத்தில், காப்பியடித்தது தெரிய வந்தால், அந்த மாணவர் இரண்டு பருவ தேர்வுகளை எழுத முடியாது.
13.விடைத்தாளை மாற்றினால், ஐந்து ஆண்டுகள்தேர்வு எழுததடை.
14.விடைத்தாளில் பெயர், 'இனிஷியல்', அல்லது ரகசிய குறியீடு இட்டால், தேர்வு முடிவுகள் ரத்தாகும்.
15.வினாத்தாளில் விடை குறிப்பிட்டு பிற மாணவருக்கு கொடுத்தால், கொடுத்த மாணவரின் அன்றைய தேர்வு ரத்து செய்யப்படும்.

பறக்கும் படைக்கு ஆள் பற்றாக்குறை

பொதுத் தேர்வின் போது, கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை அமைக்க, ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. அதனால், பல மாவட்டங்களில், பணியில் சேர்ந்து, ஓர் ஆண்டு கூடஅனுபவம் இல்லாத ஆசிரியர்களை, பறக்கும் படையில் நியமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 2,420 தேர்வு மையங்களுக்கும், நிலையான கண்காணிப்பு படை மற்றும் பறக்கும் படை என, இரண்டு வகை கண்காணிப்பு படைகள் அமைக்கப்படுகின்றன.நிலையான படையினர், தேர்வு மையத்தில், ஒவ்வொரு தேர்வு அறைக்கும் திடீரென சென்று சோதனையிடுவர்; பறக்கும் படையினர் பல தேர்வு மையங்களுக்கு, திடீரென சென்றுசோதனையிடுவர்.நிலையான படைக்கும், பறக்கும் படைக்கும், ஏற்கனவே தேர்வுப்பணி அனுபவம் பெற்ற ஆசிரியர்களே நியமிக்கப்படுவர். 'ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாக ஆசிரியர் பணி அனுபவம் இல்லாதவர்களை தேர்வு பணிக்கு அமர்த்தக்கூடாது' என, தேர்வு விதிமுறைகள் உள்ளன.ஆனால், பிளஸ் 2 பொதுத்தேர்வில் பறக்கும் படை அமைக்க ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, நிலைமையை சமாளிக்க, பணியில் சேர்ந்து, ஓர் ஆண்டு கூட ஆகாத ஆசிரியர்களையும் பறக்கும் படை மற்றும் தேர்வுகண்காணிப்பு பணிகளில் அமர்த்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அனுபவமிக்க ஆசிரியர் பலர் தேர்வு பணிக்கு முழுக்கு போட்டு விட்டனர்; சில ஆசிரியர்களுக்கு, வேண்டும் என்றே அதிகாரிகள் சிலர், தேர்வு பணி கொடுக்க வில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.பணி அனுபவம் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் தனியார் ஆசிரியர்கள் பறக்கும் படையில் இடம் பெறும் போது, அவர்களால் சரியாக, கண்காணிப்பு பணியை மேற்கொள்ள முடியாது. மாணவர்களின் கவனம் சிதறும் வகையில் சோதனையில் ஈடுபட்டால், அது பிற மாணவர்களை பாதிக்கும். ஏதாவது, ஒரு அறையில், பறக்கும் படையிடம், காப்பியடித்த மாணவர் பிடிபட்டால், அந்த அறையில் உள்ள கண்காணிப்பாளரிடம் விளக்கம் கேட்க வேண்டும். ஆனால், கண்காணிப்பாளராக உள்ள சீனியர் ஆசிரியரிடம், அனுபவமில்லாத பறக்கும் படை ஆசிரியர் விளக்கம் கேட்க முடியாத நிலை ஏற்படும். மொத்தத்தில் தேர்வுத்துறையின் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை.

ஆசிரியர்கள்அத்தாட்சி சான்றிதழ் பெற உத்தரவு

பிளஸ் 2 தேர்வில் முறைகேடுகளை தடுக்க, வினாத்தாள் கட்டுகளை மாணவர்கள் முன்னிலையில் பிரிப்பதுடன், அதற்கான அத்தாட்சி சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த ஆண்டுகளில், ஒரு சில தனியார் பள்ளி தேர்வு மையங்களில், தேர்வுக்கு முன்னதாகவே, வினாத்தாள் கட்டுகளை பிரித்து, மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதாக, குற்றச்சாட்டு இருந்து வந்தது.இதை தடுக்க,நடப்பு கல்வியாண்டில், வினாத்தாள் கட்டுகளை, அனைத்து மாணவர் முன்னிலையில், தேர்வு துவங்கும் முன் தான் பிரிக்க வேண்டும் என,உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வினாத்தாள் கட்டு பிரிக்கப்படாமல் இருந்ததற்கான அத்தாட்சி சான்றிதழ்களை, மாணவர்களிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், தேர்வறை கண்காணிப்பாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேர்வு நாளன்று காலை, 9:45 மணிக்கு, மாணவர், தன் ஹால்டிக்கெட்டை காண்பித்து, தேர்வறைக்குள் செல்ல வேண்டும். 9:50 மணிக்கு, சிறப்பு அறிவிப்புகளை கண்காணிப்பாளர் அறிவிக்க வேண்டும். 9:55 மணிக்கு, வினாத்தாள் கட்டு பிரிக்கப்படாமல் இருப்பதை காண்பித்து, இருவரிடம் அத்தாட்சி சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின், வினாத்தாள்கட்டினை பிரிக்க வேண்டும். காலை, 10:00 மணிக்கு, மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும். 10:10 மணிக்கு விடைத்தாள் வழங்கப்பட்டு, முகப்பு சீட்டில் உள்ள விவரங்கள்சரிபார்க்கப்படும். 10:15 மணி முதல், மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கலாம்.ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும், ஒரு மணி அடித்த பின் மதியம், 1:10 மணிக்கு எச்சரிக்கை மணி அடிக்க வேண்டும். 1.15 மணிக்கு, விடைத்தாள்களை பெற்றுக்கொண்டு, மாணவர்களை அமைதியாக வெளியேற அனுமதிக்க வேண்டும். இவ்வாறு தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!