Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 31 March 2016

ஏப்ரல் மாதம்... தேவதைகளின் மாதம்..

ஏப்ரல் ஆங்கில நாட்காட்டியின்நான்காவது மாதமாகும். 30 நாள்களைக் கொண்ட நான்கு மாதங்களில் ஏப்ரலும் ஒன்றாகும்.

ஏப்ரல் மாதம் வடக்கு அரைக்கோளத்தில்இளவேனிற்காலத்திலும், தெற்கு அரைக்கோளப் பகுதிகளில்இலையுதிர்காலத்திலும் வருகிறது.

🎽பெயர்க் காரணம்

ரோமானிய நம்பிக்கைகளின் படி ஏப்ரல் மாதம் வீனசு தேவதையின் மாதமாகக் கருதப்படுகிறது. கிரேக்கர்கள் வீனசை 'அஃப்ரோடைட்' என்றே அழைக்கின்றனர். அதன்படி வீனசு தேவதையின் மாதம் எனப் பொருள் தரும் "அப்லோரிஸ்" என்ற சொல்லே ஏப்ரல் மாதத்திற்கு வழங்கப்பட்டது எனக் கூறுவர்.

🎽🎀சித்திரைப் புத்தாண்டு என அழைக்கப்படும் தமிழ்ப் புத்தாண்டுஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

🎽🍎🎽🍎🎽🍎🎽
ஏப்ரல் நிகழ்வுகள்

*முட்டாள்கள் நாள் – ஏப்ரல் 1

*விடுதலை நாள் (கினி) - 3 ஏப்ரல்

*விடுதலை நாள் (செனிகல்) - 4 ஏப்ரல்

*மர நாள் (கொரியா) – ஏப்ரல் 5

*பாஸ்கா - யூதத் திருநாள்
உலக சுகாதார நாள் – ஏப்ரல் 7

*புத்தரின் பிறந்தநாள் – பாரம்பரிய நாள் – ஏப்ரல் 8

*தாய்லாந்தின் புத்தாண்டு - ஏப்ரல் 13

*புத்தாணு - லாவோசு பர்மியப் புத்தாண்டு - ஏப்ரல் 13

*கம்போடியப் புத்தாண்டு, – ஏப்ரல் 13

*ஏப்ரல் 14 - தமிழ்ப் புத்தாண்டு

*நாட்டுப்பற்றாளர்களின் நாள் – 
ஏப்ரல் 21

*புவி நாள் – ஏப்ரல் 22

*அன்சாக் நாள், (ஆத்திரேலியா, நியூசிலாந்து) ஏப்ரல் 25

*குழந்தைகள் நாள் (மெக்சிக்கோ),ஏப்ரல் 30

*ஆசிரியர் நாள் (பரகுவை), ஏப்ரல் 30

🎽🍎🎽🍎🎽🍎🎽
முக்கிய தினங்கள்

01.   உத்கல் திவாஸ் (ஒடிசா தினம்)

02.   ஆடிசம் (அறிவுத்திறன் குறைபாடு) விழிப்புணர்வு தினம்

07.   உடல் நல தினம்

18.   பாரம்பரிய தினம்

22.   உலக நாள்

23.   நூல் மற்றும் காப்புரிமை தினம்

25.   மலேரியா நோய் விழிப்புணர்வு தினம்

28.   பாதுகாப்பு விழிப்புணர்வு தினம்

28.   உலகத் தொழிலாளர்கள் நினைவு தினம்

29.   உலக நடன தினம்

🎽🍎🎽🍎🎽🍎🎽
வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நாட்கள்

1-4-1912 - இந்தியாவின் தலைநகரமாக புது தில்லி அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னர் கல்கத்தா இந்தியாவின் தலைநகராக செயல்பட்டு வந்தது.

1-4-1936 - ஒரிசா மாநிலம் -ஆங்கிலேயர் ஆட்சியில் (பிஹாரிலிருந்து பிரிக்கப்பட்டு) உருவாக்கப்பட்டது. 1935-ம் ஆண்டு இதற்கான சட்டம் பார்லிமெண்டில் நிறைவேறியது. (ஒத்ர விஷயா என்ற சமஸ்கிருத சொற்களைக் கொண்ட ஒரிசா என்ற பெயர் உருவாக்கப்பட்டது. தற்போது ஒடிசா என்று மாற்றப்பட்டுள்ளது)

1-4-1956 - இந்தியக் கம்பெனிகள் சட்டம் அமலாக்கப்பட்டது. மத்திய அரசுக்கு கம்பெனிகளை நிறுவுதல், பண உதவி செய்தல், நடத்துதல் மற்றும் அவசியமானால் தொழில் நிறுவனங்களை மூடுவதற்கான அதிகாரமும் வழங்கப்பட்டது.

2-4-1970 - மேகாலயா மாநிலம் - அஸ்ஸôம் மாநிலத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டது.

6-4-1930 - ஆங்கிலேயர்களின் உப்பு சட்டத்தை எதிர்த்து மகாத்மா காந்தியடிகள் தண்டி யாத்திரை மேற்கொண்டார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிகவும் முக்கியமான கட்டங்களில் ஒன்று தண்டி யாத்திரை.

6-4-1942 - ஜப்பான் விமானப் படை இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது இந்தியாவின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.

12-4-1978 - இந்தியாவின் முதல் டபுள் டெக்கர் ரெயில் பம்பாயிலுள்ள விக்டோரியா டெர்மினஸ் - புனே இடையில் தனது முதல் பயணத்தைத் துவக்கியது. இந்த ரெயிலின் பெயர் ஜனதா எக்ஸ்பிரஸ்.

13-4-1919 - ஜாலியன் வாலா பாக் படுகொலை. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகவும் துக்ககரமான சம்பவம். அமிர்தசரஸ் நகரிலுள்ள ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் கூடியிருந்த மக்களின் மீது ஆங்கிலேய அதிகாரி டயர் என்பவர் 50 காவலர்களோடு நடத்திய துப்பாக்கிசூட்டில் 389 பேர் கொல்லப்பட்டனர். 1,516 பேர் காயமுற்றனர்.

13-4-1948 - ஒரிசா மாநிலத்தின் தலைநகராக புவனேஷ்வர் அறிவிக்கப்பட்டது. 12-ம் நூற்றாண்டிலிருந்து ஒரிசாவின் தலைநகராக கட்டாக் இருந்தது.

15-4-1952 - இமாசலப் பிரதேசம் (இந்திய யூனியன் பிரதேசம்) உருவாக்கப்பட்ட நாள். 30 சிறிய பிரதேசங்களை ஒன்றிணைத்து இமாசலப் பிரதேசம் உருவாக்கப்பட்டது.

17-4-1952 - இந்தியாவின் முதல் மக்களவை (லோக் சபா) அமையப்பெற்றது. அனந்தசயனம் அய்யங்கார் முதல் துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

18-4-1991 - இந்தியாவிலேயே முழுவதும் கல்வியறிவு பெற்ற மக்களைக் கொண்ட மாநிலமாக கேரளா அறிவிக்கப்பட்டது. கணக்கெடுக்கின்படி கேரளாவின் கல்வியறிவு விகிதம் 93.91 சதவீதம். மிசோரம் மாநிலம் இரண்டாவதாக உள்ளது. அதன் கல்வியறிவு விகிதம் 91.58 சதவீதம்.

19-4-1975 - இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆர்யபட்டா விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. (ரஷியாவின் உதவியோடு இது விண்ணில் ஏவப்பட்டது)

25-4-1982 - தூர்தர்ஷன் முதல்முதலாக வண்ணத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது. (15-9-1959-ல் அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் புது தில்லியில் அரை மணி நேர (வாரத்தில் மூன்று நாட்கள்) ஒளிபரப்பாக இந்திய தொலைக்காட்சியைத் தொடங்கி வைத்தார்)

30-4-1998 - சமூக சேவகரான அன்னா ஹசாரேவுக்கு கேர் (இஅதஉ) அமைப்பின் சார்பாக அகில உலக மக்கள் நல விருது வழங்கப்பட்டது.

🎽🍎🎽🍎🎽🍎🎽
ஏப்ரல் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்

1. அஜீத் வடேகர் (இந்திய கிரிக்கெட் வீரர்) 1941.

3. ஹரிஹரன் (பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர்) 1955.

3. பிரபுதேவா (நடிகர், நடன ஆசிரியர்) 1973.

6. திலீப் வெங்சர்க்கார் (இந்திய கிரிக்கெட் வீரர்) 1956.

10. ஜி.டி.பிர்லா (தொழிலதிபர்) 1894.

11. கஸ்தூரிபாய் காந்தி (தேசப் பிதாவின் துணைவி) 1869.

14. பி.ஆர்.அம்பேத்கர் 1891.

17. விக்ரம் (நடிகர்) 1966.

18. ராம்நாத் கோயங்கா (இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் நிறுவனர், தலைவர்) 1904.

19. முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் நிறுவனம்) 1957.

19. அஞ்சு பாபி ஜார்ஜ் (தடகள வீராங்கனை) 1977.

20. என்.சந்திரபாபு நாயுடு (ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர்) 1950.

23. எஸ்.ஜானகி (பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி) 1938.

24. சச்சின் டெண்டுல்கர் (கிரிக்கெட் வீரர்) 1973.

24. இல.கணேசன் (அரசியல்வாதி) 1934.

29. ராஜா ரவி வர்மா (புகழ்பெற்ற ஓவியர்) 1848.

30. ரோஹித் சர்மா (கிரிக்கெட் வீரர்) 1987.
🎽🍎🎽🍎🎽🍎🎽
நினைவு தினங்கள்

5. லீலா மஜும்தார் (வங்காள எழுத்தாளர்) 2007.

5. பூர்ணசந்திர தேஜஸ்வி (கன்னட எழுத்தாளர்) 2007.

8. மங்கள் பாண்டே (இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்) 1857.

8. பங்கிம் சந்திர சட்டோபாத்யாய (வங்காள எழுத்தாளர்) 1894.

10. மொரார்ஜி தேசாய் (முன்னாள் பாரதப் பிரதமர்) 1995.

12. ராஜ்குமார் ( கன்னட நடிகர்) 2006.

14. எம். விஸ்வேஸ்வரய்யா (பிரபல பொறியாளர்) 1962.

15. எஸ். பாலசந்தர் (வீணை வித்வான் மற்றும் நடிகர்) 1990.

17. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (முன்னாள் பாரத குடியரசுத் தலைவர்) 1975.

23. சத்யஜித் ரே (பிரபல வங்காளத் திரைப்பட இயக்குநர்) 1992.

26. ஸ்ரீநிவாச ராமானுஜன் (கணிதமேதை) 1920.

125-வது பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் உருவம் பொறித்த 10 ரூபாய் நாணயங்கள்: மத்திய அரசு தகவல்

பி.ஆர்.அம்பேத்கரின் 125-வது பிறந்த நாள் ஆண்டை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்படவுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 125-வது பிறந்த நாள் ஆண்டினை குறிக்கும் வண்ணம், அவரது உருவம் பொறித்த 10 ரூபாய் நாணயங்களை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. அந்த நாணயத்தின் வெளிவட்டம் அலுமினியம் மற்றும் வெண்கல உலோக கலவையால் செய்யப்பட்டுள்ளது. நாணயத்தின் மையப்பகுதி கப்ரோ நிக்கலால் உருவாக்கப்பட்டுள்ளது.

நாணயத்தின் ஒருபுறம் அசோக ஸ்தூபியும், மறுபுறம் அம்பேத்கரின் உருவமும் இடம்பெற்றிருக்கும். அம்பேத்கரின் உருவம் பொறிக்கப்பட்ட பகுதிகளில் ‘125th BIRTH ANNIVERSARY OF Dr.B.R.AMBEDKAR’ என்று எழுதப்பட்டிருக்கும். இந்தியிலும் அதே வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

125 அடி உயர அம்பேத்கர் சிலை: சந்திரபாபு அறிவிப்பு

ஆந்திர மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, “அம்பேத்கர் பிறந்தநாளை முன் னிட்டு, புதிய தலைநகரான அமரா வதியில் 125 அடி உயர அம்பேத்கர் சிலை நிறுவப்படும். மேலும் பழங்குடியினர், தலித் இனத்தவருக்கான துணை திட்டம் அமல்படுத்தப்படும். அன்றைய தினம் 6 லட்சம் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்படும். அம்பேத்கர் கண்ட கனவை நினைவாக்க மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்” என்றார்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு எவ்வளவு? ஐகோர்ட்டில் விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மற்றும் சரஸ்வதி நர்சரி பள்ளிகளில் கடந்த 2004–ம் ஆண்டு ஜூலை 16–ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில், குழந்தைகள் உட்பட 93 பேர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர். 16 குழந்தைகள் தீ காயங்களுடன் உயிர் தப்பினார்கள். 

இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கும், படுகாயமடைந்த குழந்தைகளுக்கும் தகுந்த இழப்பீட்டை நிர்ணயம் செய்யக் கோரி குழந்தைகளின் பெற்றோர் சார்பில் கே.இன்பராஜ் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன், இழப்பீட்டை நிர்ணயம் செய்ய ஓய்வுப் பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து கடந்த 2014–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை, நீதிபதி என்.பால்வசந்தகுமார் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையிலான விசாரணை ஆணையம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் விசாரணை நடத்தி வந்தது. இந்த ஆணையத்திடம் இழப்பீடு கேட்டு, தீ விபத்தில் பலியானவர்களின் பெற்றோர் 93 பேரும், தீ காயம் பட்டவர்கள் 14 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இவர்கள் அனைவரிடமும் நீதிபதி கே.வெங்கட்ராமன் விசாரணை நடத்தினார். இதன்பின்னர் தீ விபத்தில் பலியான குழந்தைகள், படுகாயமடைந்த குழந்தைகள் ஆகியோரது பெற்றோருக்கு எவ்வளவு தொகை இழப்பீடாக வழங்கலாம் என்ற பரிந்துரையை நீதிபதி வெங்கட்ராமன் அறிக்கையாக தயாரித்தார். சீலிடப்பட்ட அந்த அறிக்கையை, சென்னை ஐகோர்ட்டில் இன்று பிற்பகல் தாக்கல் செய்தார்.

அகில இந்திய தேசிய திறனறிவு போட்டியில் தேர்ச்சி பெற்ற காரைக்கால் அரசுப் பள்ளி மாணவர்கள் !!!

அகில இந்திய தேசிய திறனறிவு போட்டியில் தேர்ச்சி பெற்ற காரைக்கால் அரசுப் பள்ளி மாணவர்களை கலெக்டர் கரிகாலன் பாராட்டினார்.

             அகில இந்திய தேசிய திறனறிவு தேர்வில், காரைக்கால் வடமறைக்காடு அரசு தொடக்கப்பள்ளியை சேர்ந்த 16 மாணவர்கள் கலந்து கொண்டனர். 
இத்தேர்வுகள் நான்கு பாடப்பிரிவுகளில் நடந்தது.

கணிதம், ஆங்கிலம், அறிவியல், கணிப்பொறி அறிவியல் ஆகிய பிரிவுகளில், வடமறைக்காடு பள்ளி மாணவர்ரகள் 12 பேர் தேர்வாகினர்.அதையொட்டி, இப் பள்ளிக்கு, 'கோல்டன் ஸ்கூல் அவார்டு' வழங்கப் பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜன், ஆசிரியர்கள் நிர்மலா, வசந்தி, விக்னேஸ்வரி ஆகியோருக்கு ஊக்கப்பரிசு வழக்கப்பட்டது.விருது பெற்ற மாணவர்கள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களை கலெக்டர் கரிகாலன் பாராட்டினர்.இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அதிகாரி வெற்றிவேல், கல்வித்துறை துணை வட்ட ஆய்வாளர் மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தேர்தல் பணிக்கென அறிமுக கூட்டம்-கிருஷ்ணகிரி மாவட்டம் -02.04.2016


தேர்தல் பணி ஆசிரியர்களுக்கு வசதிகள்: தேர்தல் ஆணையம் உறுதி


Election Class Training Time schedule


இணையத்தில் தடை செய்த 344 மருந்து பட்டியல் வெளியீடு.

புதுச்சேரி: மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள 344 மருந்துகளின் பெயர்ப்பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வாழ்வுச் சான்று அனுப்பாவிட்டால் ஓய்வூதியம் நிறுத்தப்படும்

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் 'கடும் வெயிலுக்கு கம்பங்கூழ்'

நாம் கொளுத்தும் வெயிலில் நாம் குளிர்பானங்களை தேடிச் செல்வதுண்டு.
பல வகையான வேதிப்பொருட்களும், சாயப்பொருட்களும் நிறைந்த செயற்கை குளிர்பானங்களை குடிப்பதால் பல் எனாமல் தேய்ந்து, பற்கூச்சம் ஏற்படுவதுடன், கண்டு பிடிக்க இயலாத பலவிதமான வயிற்று உபாதைகளும் உண்டாகின்றன. உடனடியாக கிடைத்தல், அவசரம், நிற ஈர்ப்பு போன்ற காரணங்களால் செயற்கை குளிர்பானங்களை நாடி அதற்கு அடிமையாகி விடுகின்றனர்.

தினம் ஒரு புத்தகம் 'ஏன்? எப்படி?"


Bharathidasan University M.Phil Part Time May 2016 Exam Timetable


பிளஸ்-2 தேர்வு நாளையுடன் முடிவடைகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி நடை பெற்று வருகிறது. 8 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வில் கலந்துகொண்டுள்ளனர்.இதுவரை நடந்த தேர்வுகளில் வேதியியல் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறியுள் ளனர்.

மத்திய அரசின் சுகாதார துறைகளில் சிறப்பு அதிகாரி பணி: யுபிஎஸ்சி அறிவிப்பு.

மத்திய அரசின் சுகாதார துறைகளில் காலியாக உள்ள கிரேடு-III பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. சம்மந்தப்பட்ட துறைகளில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்தல் நாளில் 30 நிமிட உணவு இடைவேளை தேவை: ஆசிரியர்கள் வலியுறுத்தல்.

தேர்தல் நடைபெறும் நாளில் தமிழகம் முழுவதும் 30 நிமிடம் உணவு இடைவேளை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியர்கள் சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம்மனு அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரனிடம் அளிக்கப்பட்டுள்ள மனு:தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கையாக பள்ளி மாணவர்களிடம் தேர்தல் உறுதிமொழி படிவம் வழங்கி பெற்றோரிடம் கையெழுத்து பெற்று வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் ஆங்கிலத் திறனை வளர்க்கும் 200 எளிய ஆங்கில வார்த்தைச் சொற்கள்

தொடக்க மற்றும் நடுநிலை மாணவர்களின் ஆங்கிலத் திறனை வளர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 200 எளிய ஆங்கில வார்த்தைச் சொற்கள் கலைக்கப்பட்டு அதனை சரியான முறையில் எழுதும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 200 வார்த்தைகளுக்கான சரியான தமிழ் அர்த்தமும் அதன் எதிரே விடைக்குறிப்பாக கொடுக்கப் பட்டுள்ளது
Thanks Raghupathi


10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தாமதமாகும்?

பள்ளி ஆசிரியர்களுக்கு, சட்டசபை தேர்தல் பயிற்சி வகுப்பு துவங்க உள்ள நிலையிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கவில்லை. எனவே, தேர்வு முடிவுகள் வெளியாவது தாமதமாகலாம் என, தெரிகிறது.பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளையுடன் பொதுத் தேர்வுகள் முடிகின்றன. மொழி பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது; முக்கிய பாடங்களுக்கு, ஏப்., 6 முதல் விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது.

மின் வாரிய தேர்வு திடீர் தள்ளிவைப்பு

தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வை, தமிழ்நாடு மின் வாரியம் திடீரென தள்ளிவைத்துள்ளது.தமிழ்நாடு மின் வாரியம், 525 தொழில்நுட்ப உதவியாளர்; 50 உதவி வரைவாளர்; 900 கள உதவியாளர் என, 1,475 காலி பணியிடங்களை நிரப்ப, சென்னை,அண்ணா பல்கலை மூலம், ஏப்., 3ல், எழுத்து தேர்வு நடத்த இருந்தது.

துறை தேர்வுகள் கடைசி தேதி நீடிப்பு.

அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், உயர் பதவிகளுக்கான தேர்வு டிசம்பர் மற்றும் மே மாதம் நடைபெறும். மே மாதம் நடைபெற இருக்கும் துறைக்கு விண்ணப்பிக்க தேதி மார்ச் 31 ல் இருந்து ஏப்ரல் 11 எனநீடிப்பு செய்யப்பட்டுள்ளது'மே' மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்கள் இணையதளம் , (www.tnpsc.gov.in ) மூலமாக மட்டும் விண்ணபிக்க முடியும்.

From the Director of Treasuries and Accounts on mustering of pensioners and family pensioners

யுனெஸ்கோ பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் அகஸ்தியர்மலை!

உலகெங்கிலும் அரிய வனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் யுனெஸ்கோ இணைத்து வருகிறது

அதனடிப்படையில், தமிழகக்ததில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் மலையை உலகின் http://tn/பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் யுனெஸ்கோ இந்த மாதம் 19-ஆம் தேதி முதல் இணைத்துக் கொண்டது. இந்தப் பட்டியலில் அகஸ்தியர் மலை இணைந்ததின் மூலம் உலகளவில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தமிழக வனத் துறையினர் தெரிவித்தனர்.

 கடந்த ஆண்டு யுனெஸ்கோ பட்டியலில் கனடா நாட்டின் பீவர் மலைப் பகுதியும், இந்தோனேசியாவின் பாம்பங்கன் வனப் பகுதியும் இணைந்தன.
 தமிழகத்தில் ஏற்கெனவே நீலகிரி மலைப் பகுதி 2000 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் இணைக்கப்பட்டது. அதேபோல, 2001 ஆம் ஆண்டு மன்னார் வளைகுடாப் பகுதியும் யுனெஸ்கோவின் பட்டியலில் இடம் பெற்றது. இந்தியாவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 10 பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில், தமிழகம் மூன்று வனப் பகுதிகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
 அகஸ்தியர்மலை: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர்மலை தமிழக- கேரள மாநில எல்லைகளையொட்டி 3500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. அகஸ்தியர் மலை வனப் பகுதியில் 2,250 தாவர வகைகளும், 337 பறவை இனங்களும், 79 பாலூட்டிகளும், 88 வகையான ஊர்வனங்களும், 46 வகை மீன்களும், 45 நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய சிறிய உயிரினங்களும் உள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
 அகஸ்தியர் மலையின் பாதுகாப்பட்ட வனத்தில் யானை, புலி, சிறுத்தை, காட்டு நாய், சாம்பார் (மான்), நான்கு கொம்பு மான்கள், காட்டெருமை, வரையாடு, காட்டுப் பன்றி ஆகியவை அதிகளவில் காணப்படுகின்றன. மேலும், இந்தக் காடுகளில்தான் அதிகளவில் இந்திய பெரிய அணில்கள் ஏராளமாக உள்ளன. அகஸ்தியர் மலைப் பகுதிக்கு உள்பட்ட களக்காடு- முண்டன்துறை புலிகள் சரணாலயமும், கன்னியாகுமரி விலங்குகள் சரணலாயமும் இந்தப் பகுதிகளில் உள்ளன.

 மிகப் பழைமையானது: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் இமயமலையைவிடப் மிகப் பழைமையானவை எனக் கண்டறியப்பட்டு, அவற்றை உலகின் பாரம்பரியமிக்க இடமாக யுனெஸ்கோ 2012-இல் அறிவித்தது. 8 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியப் பகுதிகளில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளால் உருவான புவியியல் அமைப்பே மேற்குத் தொடர்ச்சி மலைகள் என்பது புவியியல் வல்லுநர்களின் ஆய்வு முடிவாகும்.
 உயிர்ப்பன்மை பாதுகாப்பு: தமிழக அரசு அகஸ்தியர் மலை நிலப்பரப்பில் உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் ஊரக வாழ்வாதார மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. அகஸ்தியர் மலை நிலப்பரப்பில் ஊரக வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் மலைக் கிராம மக்களின் பங்கேற்புடன் வனம் பாதுகாக்கப்படும். வனத்தைச் சார்ந்து வாழ்பவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புக்கு கடனுதவி அளிக்கப்படும். இது மக்களையும், வனங்களையும் பிரிக்காதவாறு செயல்படுத்தக் கூடிய திட்டமாகும்.

குழந்தைகள் காணாமல் போவது அதிகரிப்பு: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

தமிழகத்தில் குழந்தைகள் காணாமல் போவது அதிகரித்துள்ள நிலையில், இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் குழந்தைகள் காணாமல் போவது அதிகரித்து வருவதாக கடந்த சில தினங்களுக்கு முன் ஊடகங்களில் செய்தி வெளியானது. 2014ம் ஆண்டு 441 குழந்தைகள் காணாமல் போனதாகவும், 2015ல் இந்த எண்ணிக்கை 656 ஆக அதிகரித்திருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

சென்னையில் 2014ம் ஆண்டு 114 குழந்தைகள் காணமல் போனதாகவும், கடந்த ஆண்டு 71 பெண் குழந்தைகள் உள்பட 149 குழந்தைகள் காணாமல் போனதாகவும், இந்த ஆண்டு இதுவரை 58 குழந்தைகள் மாயமாகியிருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தகவல் தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்கு சென்றதும், ஆணையம் தானாக முன்வந்து இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபற்றி விளக்கம் கேட்டு தமிழக தலைமைச் செயலாளர், காவல்துறை ஐ.ஜி. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி கேட்டுள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

குழந்தைகள் காணாமல் போகும் விஷயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பல்வேறு பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டி நெறிமுறைகளை மனித உரிமை ஆணையம் வெளியிட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

Wednesday, 30 March 2016

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் 'தினமும் எந்தெந்த நேரத்தில் எல்லாம் மறக்காமல் தண்ணீர் குடிக்க வேண்டுமென்று தெரியுமா?"

தண்ணீர் இல்லாமல் மனிதன் உயிர் வாழவே முடியாது. ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தினமும் தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் அவசியமானது. ஆனால் அத்தகைய தண்ணீரை ஒருசில செயல்களுக்கு முன்னர் குடிப்பது என்பது முக்கியம். ஏனெனில் அந்நேரங்களில் தண்ணீர் குடிப்பதால், பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
அதே சமயம் தண்ணீரை அளவுக்கு அதிகமாகவும் குடிக்கக்கூடாது.

தினம் ஒரு புத்தகம் 'சுற்றுச்சூழல் கல்வி '


கடன்கள் மற்றும் முன்பணம் - அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அரசின் மூலம் பெறப்படும் வீட்டுக்கடனில் கூடுதலாக இனி சூரிய ஒளி மின் தகடுகள் வீட்டின் கூரை மீது பொருத்தப்படுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது - ஆணை வெளியீடு...


1987 வரை 10 வகுப்பு கல்வித் தகுதியுடன் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்து, ஏதேனும் ஒருசில பாடங்களில் தோல்வி அடைந்து, 1987 க்கு பிறகு பயிற்சியை முடித்தவர்களைப் பொருத்தவரை அவர்களும் +2 முடித்ததாகக் கருதி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெறும் வகையில் ஏற்கெனவே வெளியிட்ட அரசாணைக்கு (எண். 165 கல்வி. 15.10.14) திருத்தம் அளித்து புது அரசாணை (எண். 68.கல்வி். 25.03.15) பெறப்பட்டுள்ளது.


தேசிய கீதம் பாடுவது கட்டாயம்: உ.பி பள்ளிகளுக்கு உத்தரவு

உத்தரப் பிரதேச மாநில பள்ளி களில் தினசரி தேசிய கீதம் பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 22 செயற்கைக்கோள்கள் செலுத்த திட்டம்: புதிய வரலாறு படைக்கிறது ‘இஸ்ரோ’

வரும் மே மாதம் ஒரே திட்டம் மூலம் 22 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுத இந்தியாவின் ‘இஸ்ரோ’ முடிவு செய்துள்ளது.

பள்ளிகளில் அரசியல் தலைவர்களின் படங்கள், கட்சி சின்னங்கள், விளம்பரங்கள் இருக்கக் கூடாது: கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், கட்சி சின்னங்கள் மற்றும் கட்சி விளம்பரங்கள் பள்ளிகளில் இருக்கக் கூடாது என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்ஜினியரிங், மருத்துவ கல்லுாரி மாணவர் சேர்க்கை, இனி ஆன்லைன் வழியாக, விண்ணப்பிக்கும் நவீன நடைமுறை செயல்பாட்டுக்கு வருகிறது.

இன்ஜினியரிங், மருத்துவ கல்லுாரி மாணவர் சேர்க்கையில், காகித வழியில் விண்ணப்பிக்கும் நடைமுறைமுடிவுக்கு வருகிறது. இனி, 'ஆன்லைன்' வழியாக, விண்ணப்பிக்கும் நவீன நடைமுறை செயல்பாட்டுக்கு வருகிறது.தமிழகத்தில், இன்ஜினியரிங், மருத்துவ கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, காகித வழி விண்ணப்ப நடைமுறை தான் அமலில் இருந்து வருகிறது. 

மே 2ல் பிளஸ் 2 'ரிசல்ட்'?-DINAMALAR

பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கணிதம் மற்றும் அறிவியல் பிரிவுக்கு, ஏப்., 1ல் இயற்பியல் தேர்வும்; கணித பதிவியல் மாணவர்களுக்கு பொருளியல் தேர்வும் நடக்கிறது. 

இன்ஜினியரிங் ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி?

* ஏப்., 14ல், இன்ஜினியரிங் படிப்பு மாண வர் சேர்க்கைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். 
* ஏப்., 15 முதல், அண்ணா பல்கலைஇணையதளத்தில், விண்ணப்பங்களை, ஆன்லைனில்பதிவு செய்யலாம். 

TENTATIVE DATES உத்தேச தேர்தல் பயிற்சி நாட்கள்..

முதல் கட்டம் 24/4/2016
இரண்டாம் கட்டம் 7/5/2016
மூன்றாம் கட்டம் 12/5/2016
ஆணை 15/5/2016

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய நாளை கடைசி தினமாக உள்ள நிலையில், தாக்கல் செய்யாதவர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.கடந்த 2013-14-ம் நிதியாண்டு மற்றும் 2014-15 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை இம்மாதம் 31-ம் தேதிக்குள் (நாளை) தாக்கல் செய்ய வேண்டும்.

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவோரை பாதுகாக்க வழிகாட்டு நெறிமுறை: உச்ச நீதிமன்றம் அனுமதி.

புது தில்லி :சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவோர்களை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு ஏற்படுத்திய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.சாலை விபத்தில் சிக்கியர்வளுக்கு உதவும் நபர்கள், காவல்துறையினராலோ அல்லது பிற துறை அதிகாரிகளாலோ துன்புறுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வில் கை நழுவும் ‘சென்டம்’

கடந்தாண்டு போல் இல்லாமல்,இம்முறை பொதுத்தேர்வில் சில பாடங்கள் கடினமாக இருந்ததால்,தேர்வு எழுதிய மாணவ,மாணவியர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்;சென்டம்குறைய வாய்ப்புள்ளது.கடந்தாண்டு நடந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2பொதுத்தேர்வுகளில்,திருப்பூர் மட்டுமின்றி,தமிழகம் முழுவதுமே மாணவ,மாணவியர் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தனர். 

நிலக்கரி நிறுவனத்தில் 400 பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு.

மத்திய சுரங்கத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கிழக்கு நிலக்கரி சுரங்கங்கள் நிறுவனத்தில் (EASTERN COALFIELDS LIMITED)  காலியாக உள்ள 400 மைனிங் சர்தார், சர்வேயர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குதகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வீடு தேடி வரும் வாக்காளர் அட்டை: இன்று முதல் அமல்

வண்ண வாக்காளர் அடையாள அட்டை, வீடு தேடி வரும் திட்டம், இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக தேர்தல் கமிஷன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளது.

அருகமைப் பள்ளி முறை ஏன் வேண்டும்?

இன்று நடைமுறையில் உள்ள கல்வி உரிமைச் சட்டம் அருகமைப் பள்ளியில் மட்டுமே ஒவ்வொரு வட்டாரத்தில் உள்ள அனைத்துப் பிரிவினர் குழந்தைகளும் சேர்க்கப்படவேண்டும் என்பதைப் பற்றிய தெளிவான விதி எதையும் வலியுறுத்தவில்லை. இதன் விளைவாக இன்றைக்கு பெரும்பாலான தனியார் பள்ளிகள் 50 கி.மீ தூரத்தில் இருந்து கூட குழந்தைகளை பள்ளி வாகனங்களில் அன்றாடம் அழைத்து வருகின்றனர்.

கல்வி கட்டண கமிட்டி மூடப்படும் அபாயம்!!!-

தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணய கமிட்டியில், மூன்று மாதமாக, நீதிபதி இல்லை. எனவே, புகார் அளிக்க முடியாமல் பெற்றோர் தவிக்கின்றனர். தற்போது பணியில் உள்ள சட்ட அதிகாரியும், நாளை ஓய்வு பெற உள்ளார். எனவே, கல்வி கட்டண கமிட்டி மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

புதிய பென்ஷன் திட்டத்தில்முன்பணம் பெறுவதில் சிக்கல்:4.23 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சி

தமிழக அரசு பணம் செலுத்தாததால் புதிய பென்ஷன் திட்டத்தில் 25 சதவீத முன் பணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 4.23 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மேற்குவங்கம், திரிபுரா தவிர மற்ற மாநில அரசு ஊழியர்கள்,மத்திய அரசு ஊழியர்களுக்கு 2003 ஏப்., 1 முதல் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Department test-க்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 11.04.2016 வரை நீ ட் டி க் கப் பட்டுள்ளது.

Department  test-க்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 11.04.2016 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது
விண்ணப்பிக்க தவறியவா்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்

Tamil Nadu Public Service Commission (TNPSC) Online Registration for Departmental Examinations May 2016

Tamil Nadu Public Service Commission (TNPSC) 
Online Registration for
Departmental Examinations May 2016 
STOPPED TEMPORARILY FOR MAINTENANCE 
Service will be resumed at 10 AM on Wednesday, the 30th March 2016.
(Last date for registration is now extended till 11th April 2016)

அதிசயவைக்கும் கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பாலையூர் அரசுப்பள்ளி

Tuesday, 29 March 2016

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம்: ஏப்ரல் 15 முதல் பதிவுசெய்யலாம்

இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. எனவே, விண்ணப்ப படிவங்கள் எங்கேயும் விற்பனை செய்யப்படாது. ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 15 முதல் பதிவு செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு ஏப்ரல் 14-ம் தேதி அன்று வெளியிடப்படும். இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு ஆன்லைன் விண்ணப்ப முறை நடைமுறையில் இருந்தாலும் ஆன்லைனில் விண்ணப்பிப்பது மாணவர்களின் விருப்பமாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஏப்ரல் 15-ம் தேதி முதல் பதிவுசெய்து கொள்ளலாம். இதற்கு கடைசி நாள் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகி 7 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு பதிவாளர் கணேசன் கூறினார்.

புதுச்சேரியில் அடுத்த கல்வி ஆண்டு (2016-17) முதல் அரசு பள்ளிகளின் இயங்கும் நேரம் மாற்றம். கல்வி துறை இயக்குனர் அறிவிப்பு.

பள்ளிக்கல்வி கடிதம் மற்றும் தொடக்கக்கல்வி செயல்முறைகள்-தேர்தல் - அரசியல் தலைவர்கள்,கட்சி சின்னங்கள் , விளம்பரங்கள் ஆகியவைகள் அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து நீக்கவது சார்பான உத்தரவு-

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் தீ தடுப்பான் அமைத்தல் சார்பான இயக்குனரின் அறிவுரைகள்

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் 'மூல நோய் முற்றிலும் குணமாக"

பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. மூல நோய் என்றால் என்ன? அதில் எத்தனை வகைகள் உள்ளன? அது எந்தெந்த காரணங்களால் வருகிறது? இதைச் சரி செய்ய என்னென்ன மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை இக்கட்டுரையின் மூலம் காண்போம்.

தினம் ஒரு புத்தகம் 'களவு போகும் கல்வி '


SBI RECRUITMENT 2016

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 152 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு . கடைசி தேதி : 31.3.2016.

மெட்ரோ ரயில்வேயில் பொறியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

பெங்களூர் மெட்ரோ ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 65 இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு: ஆங்கிலம் 2-ம் தாளில் விடைத்தாள் மாற்றி அளித்ததால் மாணவர்கள் குழப்பம்

அரக்கோணம்: பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் விடைத்தாள்களில் ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு தேவைப்பட்ட வெள்ளைதாள்களை வைக்காமல் அனைத்தையும் கோடிட்ட தாள்களாக வைத்திருந்ததால் 5 மதிப்பெண் கேள்விக்கு விடை எழுத முடியாமல் மாணவ மாணவிகள் திணறினர்.

அரசு ஊழியர் விடுப்புகள் பற்றிய சில விவரங்கள்அகஇ - வீடு கட்ட நிலம் வாங்கியதற்கு, துறை முன்னனுமதி வாங்கியிருந்தால் தான், IT -யில் Housing loan காட்ட முடியும் -மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்


Annamalai University December 2015 results published.

பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோக தேதிவெளியீடு

சென்னை: 2016-ம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் ஏப்ரல் 15-ம் தேதி முதல் தொடங்கும் என உயர்கல்வித்துறை செயலாளர் ஆபூர்வா கூறியுள்ளார்.60 மையங்களில் வழங்கப்படும் விண்ணப்பங்களைப் பெற்று மாணவர்கள் சமர்ப்பிக்கலாம்

CPS கணக்கில் தங்கள் NOMINEE பெயர் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என்பதை எவ்வாறு அறியலாம்

*.CLICK HERE TO KNOW YOUR CPS NOMINEE CONFORMATION LETTER, CPS STATEMENT & MISSING CREDITS

நண்பர்களே :
இணையதள முகவரிக்கு சென்று தங்கள் cps no மற்றும் date of birth பதிவு செய்து login செய்யவும்.

பின் இடதுபுறம் Allotment letter என்ற options click செய்தால் ஒரு pdf file பதிவிறக்கம் ஆகும்.அதில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட cps no மற்றும் nominee பெயர் போன்றவை  இருக்கும்.

வாட்ஸ் அப்பில் இருந்து டெலிபோன்களுக்கு பேசும் வசதி விரைவில் அறிமுகம்.

தகவல் தொடர்பு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்துவருகிறது. உலகம் உள்ளங்கையில் சுருங்கி விட்டது. உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் செல்போன், இணையதளம், வாட்ஸ் அப், சாட்டிங், வீடியோ அழைப்பு போன்றவற்றால் ஒரு நொடியில் தொடர்பு கொண்டு பேசும் வசதி உள்ளது.ஆரம்பத்தில் கம்ப்யூட்டர், லேப்–டாப் போன்றவற்றின் மூலம் பேசுபவர்களின் உருவத்தை பார்த்து கொண்டே பேசும் வசதி இருந்தது.

மதுரை காமராஜர் பல்கலை.யில் ஆன்லைன் தேர்வு முறை ரத்து.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த 2014 -ல் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.மதுரை காமராஜர் பல்கலைக்கழக 2016 ஆம் ஆண்டுக்கான கல்விப் பேரவைக் கூட்டம் (academic council) பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் முதல் மாதம் சம்பளமின்றி ஏமாற்றம்.

கல்வித்துறையில் புதிதாக பணியில் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு முதல் மாதமே சம்பளம் வழங்காததால், ஏமாற்றம் அடைந்தனர்.புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்கம் சார்பில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட 393 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும், 186 பாலசேவிகா பதவியில் நிரந்தரம் செய்யப்பட்ட முன்மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கும் கடந்த பிப்ரவரி 3ம் தேதி, பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

கிராம சுகாதார நர்ஸ் பணி பட்டியல் உயர்நீதிமன்றம் உத்தரவு

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி தனம் தாக்கல் செய்த மனு:

'பயாலஜி'யில் 'சென்டம்' கடினமே :மாணவர்கள் கருத்து.

பிளஸ் 2 'பயாலஜி' தேர்வு நேற்று நடந்தது. இதில் 200 மார்க் கிடைப்பது சற்று கடினம் என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.மாணவர்கள் கருத்து:

விலங்கியலில் புதிய வினாக்கள் 'சென்டம்' குறைய வாய்ப்பு.

பிளஸ் 2 பொதுத் தேர்வில், நேற்று நடந்த உயிரியல் தேர்வில், விலங்கியல் பிரிவு வினாத்தாளில், புதிய வினாக்கள் இடம் பெற்றதால், மாணவர்கள் பதில் எழுத திணறினர்; தாவரவியல் தேர்வு எளிமையாக இருந்தது. பிளஸ் 2 பொதுத் தேர்வில், நேற்று உயிரியல் தேர்வு நடந்தது. தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்கு தலா, 75 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் அமைக்கப்பட்டிருந்தது.

அமலுக்கு வந்தது 'ஆதார்' சட்டம்

புதுடில்லி:'ஆதார்' சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.சமையல், 'காஸ்' மானியம், ஆதார் எண்கள் மூலம் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது.

உத்தரகாண்டில் உள்ள ராணுவ குடியிருப்பில் ஆசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு.

உத்தரகாண்டில் உள்ள ராணுவ குடியிருப்பு அலுவலகத்தில் காலியாக பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏப்ரல் மாத உத்தேச கால அட்டவணை

APRIL DIARY- Tentative

*.1-fri -  April fool day,  
*.2- sat-Grievance day,
*.8- fri-Telugu new year holiday,
*.14- thurs- Tamil new year,
*.Dr.Ambedkar birthday holiday,
*.19- tue- Mahaaveer Jayanthi - holiday,
*.21- thurs- R.L- Chitra Pournami,

III TERM EXAM TIME TABLE(1 to 5th std)

*.22- fri-  Tamil,  World Earth Day,
*.25- mon - English,
*.26- tue- Maths,
*.27- wed- Science,
*.28- thurs- Social Science,
*.29- fri- Physical Education,
*.30- Last working day for this academic year.

பள்ளித் தேர்வுகளை இனி பிப்ரவரியிலேயே நடத்தலாமே?

மார்ச் தொடக்கமே வெளுத்து வாங்கும் வெயில் காலமாக மாறிவிட்டதால்,அடுத்த கல்வியாண்டிலிருந்து பள்ளித் தேர்வுகளை ஒரு மாதத்துக்கு முன்பாக பிப்ரவரி மாதத்திலேயே நடத்தினால் என்ன என்ற கேள்வி கல்வியாளர்களால் முன்வைக்கப்படுகிறது.பருவநிலை மாற்றம் என்றழைக்கப்படும் மாறுபட்ட காலநிலைச் சூழலில் மழைக் காலம் சுருங்கிப் போய், பரவலாக- சராசரியாக ஆண்டுக்கு 50 நாள்கள்தான் மழை பெய்கிறது. ஆனால், பல நாள்கள்பெய்ய வேண்டிய மழையின் அளவு, ஓரிரு நாள்களில் கொட்டித் தீர்க்கத் தொடங்கிவிட்டது.

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு தாமதம்!

தேர்தலையொட்டி, பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகளும் தாமதமாக நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது; இம்மாத இறுதியில் வர வேண்டிய சுற்றறிக்கை இதுவரை வராததால் ஆசிரியர் பயிற்றுனர்கள் குழப்பமடைந்துள்ளனர்.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஒவ்வொரு கல்வியாண்டிலும், ஏப்., மற்றும் மே மாதத்தில் பள்ளி  செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு நடக்கிறது.

ஏப். 1ம் தேதி முதல் அமல் 18 சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.

மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதம், கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.   தமிழகத்தில் 44 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில், 29 சுங்கச் சாவடிகளில் தனியாரும், 12 சுங்கச் சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் கட்டணம் வசூலிக்கின்றன.

100,101,108 இனி கிடையாது : அவசர உதவிக்கு 112 விரைவில் அமலாகிறது.

நாடு முழுவதும் அனைத்து அவசர அழைப்புகளுக்கும் எண் 112ஐ அறிமுகம் செய்யலாம் என தொலை தொடர்பு  ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரையை தொலைத்தொடர்பு கமிஷன் ஏற்றுள்ளது. இது. ஒருசில மாதங்களில் நடைமுறைக்கு வர உள்ளது. இந்தியாவில் தற்போது காவல்துறை உதவிக்கு 100, மருத்துவ உதவிக்கு 108, மேலும் 101, 102 என  பல்வேறு எண்கள் அவசர கால அழைப்புகளுக்காக செயல்பட்டு வருகிறது.

கர்நாடக எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது: 8.49 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.

கர்நாடக எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 30-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் மொத்தம் 8.49 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.இது குறித்து பெங்களூருவில் திங்கள்கிழமை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சத்தியமூர்த்தி, செய்தியாளர்களிடம் கூறியது: 2016-17-ஆம் கல்வியாண்டுக்கான கர்நாடக எஸ்எஸ்எல். பொதுத்தேர்வு மார்ச் 30-ஆம் தேதி தொடங்கி, ஏப்.13-ஆம் தேதி வரை நடக்கிறது.

பிளஸ் 2 தேர்வில் முறைகேடு

பிளஸ் 2 தேர்வில் முறைகேடு செய்ததாக, 39 பேர் சிக்கி உள்ளனர்.பிளஸ் 2 பொதுத் தேர்வில், நேற்று தமிழகம் முழுவதும், 39 பேர் முறைகேடு மற்றும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக சிக்கினர்.

Monday, 28 March 2016

மயில்சாமி அண்ணாதுரை உட்பட 56 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்தார் பிரணாப் முகர்ஜி

 புது தில்லி : மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானி, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உட்பட 56 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற வண்ணமயமான விழாவில், திருபாய் அம்பானியின் மனைவி கோகிலாபென் அம்பானி, தனது கணவரின் சார்பில் இவ்விருதை பெற்றுக் கொண்டார்.

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் 'வாழை இலையின் பயன்கள்'

1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.
3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

தினம் ஒரு புத்தகம் 'கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி '


4 வரிகளில் 32 மாவட்டங்கள் நினைவில் கொள்ள ஓர் எளிய முறை "


SSA திட்ட நிதி செலவு செய்யப்படாமல் உள்ள தொகையை திரும்ப ஒப்படைத்தல் - SSA முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்

மாவட்ட நீதிமன்றங்களில் பணி

திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களது அதிகாரத்திற்கு உட்பட்டுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில்உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் - கிரேடு-III (தற்கால பணி), அலுவலக உதவியாளர் பணி, இரவு காவலர் மற்றும் மசால்ஜி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளையாட்டு வீரர்களுக்கு வனத்துறை பணிகளில் 10 சதவீத இடஒதுக்கீடு: பணி விதிமுறையில் திருத்தம் செய்து அரசு உத்தரவு.

விளையாட்டு வீரர்களுக்கு வனத்துறை பணிகளில் 10 சதவீத சிறப்பு இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டு 14 ஆண்டுகளுக்குப் பிறகு பணிவிதிமுறையில் திருத்தம் செய்து அரசு உத்தரவு பிறப் பித்துள்ளது.தமிழக அரசின் வனத்துறை யில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், தலைமை வனப் பாதுகாவலர், வனப்பாதுகாவலர் என பல்வேறு நிலைகளில் அதிகாரிகளும், வனவர்கள், வனக் காப் பாளர்கள், வனக்காவலர்கள் உள் ளிட்ட சார்நிலைப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

தேசிய வீட்டு வசதி வங்கியில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

பொதுத்துறை நிறுவனமான 'National Housing Bank'-ல் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு நிறுவனங்களில் விரிவுரையாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு.

மத்திய அரசின் கீழ் செயல்படும் பல்வேறு நிறுவனங்களில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதியுங்கள்: மத்திய அரசு

பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதியுங்கள் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.பிரதமர் மோடியின் சுகாதார திட்டத்தை வெற்றி பெற செய்ய, மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் தீவிர நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள், சிறுநீர் கழிப்பவர்களக்கு அபராதம் விதிக்கும்படி மாநில அரசுகளை ஊரக மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் இருந்துஅனுப்பப்படும் அனைத்து தபால்களிலும் இன்று முதல் வாக்காளர் விழிப்புணர்வு முத்திரை.

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் இருந்துஅனுப்பப்படும் அனைத்து தபால்களிலும் இன்று முதல் வாக்காளர் விழிப்புணர்வு முத்திரை பதிக்கப் படுகிறது.சட்டப்பேரவை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நட வடிக்கைகளை எடுத்து வருகிறது.

ரயில் டிக்கெட் முன்பதிவை தொலைபேசி மூலம் ரத்து செய்யலாம்:புதிய வசதி அடுத்தமாதம் அறிமுகம்.

ரயில் டிக்கெட் முன்பதிவை தொலைபேசி அழைப்பு மூலம் ரத்து செய்யும் புதிய வசதி அடுத்த மாதம் (ஏப்ரல்) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.ரயில் பயணத்துக்காக இணையதளம் மூலம் விண்ணப்பிப்போர், அந்த இணையதளத்தின் மூலமே டிக்கெட்டை ரத்து செய்து விடலாம். ரயில் நிலையத்துக்குச் சென்று டிக்கெட்டை முன்பதிவு செய்வோர், அதை ரயில் நிலையத்தில் சென்றே ரத்து செய்ய முடியும். குறிப்பாக, ரயில் நிலையம் சென்றுடிக்கெட்டை ரத்து செய்வோர், அங்கு இருக்கும் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

அரை டிக்கெட் நடைமுறையில் ரயில்வே துறை அதிரடி மாற்றம்

'ரயில்களில், முழு டிக்கெட்டுக்கான கட்டணம் செலுத்தினால் மட்டுமே, குழந்தைகளுக்கு தனி இருக்கை அல்லது படுக்கை வசதி வழங்கப்படும்' என, ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது:

Sunday, 27 March 2016

அமெரிக்க பள்ளிகளில் வணக்கம் சொல்வதற்கு தடை

அமெரிக்க பள்ளிகளில் இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.       பெற்றோர்களின் எதிர்ப்பால் யோகா கற்றுத் தருவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், யோகா கிறிஸ்துவ மத கலாச்சாரத்திற்கு எதிராக உள்ளதாகவும், வணக்கம் சொல்லும் முறை மத உணர்வுகளை பாதிப்பதாக உள்ளதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது அமெரிக்க பள்ளிகளில் வணக்கம் சொல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியக்குழு உயர்வு எப்போது!

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியக்குழு உயர்வு எப்போது!
மிக அருகில் வந்துவிட்டது, அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஏழாவது ஊதியக்குழு.
'நடப்பு நிதியாண்டிலேயே (2016-17) ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமலாக்கம் செய்திட 1.02 லட்சம் கோடி தேவை என கணக்கிடப்பட்டு, ரூ.70,000-யை கோடி பொது பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துவிட்டார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்' என்ற அறிவித்துவிட்டார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!