Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 30 April 2016

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் 'மஞ்சள் காமாலை தடுக்க வழிகள்!'

மஞ்சள் காமாலை ஆபத்தான நோய். சரியான நேரத்தில் கண்டு பிடித்து முறையான சிகிச்சை செய்து கொள்ளாவிட்டால் ஆளையே கொன்று விடும். கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்றால் இந்நோய் ஏற்படுகிறது. ரத்தம் மற்றும் உடலுறவு மூலம் இந்த வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார் டாக்டர் சசிக்குமார். அவர் கூறியதாவது: நம் நாட்டில் பெரும்பாலும் ‘கல்லீரல் அழற்சி வைரஸ் ஏ’ என்ற வைரசின் தாக்கம்தான் அதிகம் உள்ளது. இந்த வைரஸ் கல்லீரலை தாக்கி மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது. இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களை எளிதில் தாக்கும். சுகாதாரமற்ற குடிநீர், உணவின் வழியாக இந்த வைரஸ் உடலுக்குள் நுழைகிறது. ரத்தம் செலுத்தும் போது அல்லது உடலுறவின் போதுகூட இது பரவ வாய்ப்புள்ளது.

தினம் ஒரு புத்தகம் 'How Children Think '


ஒசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கை விண்ணப்பம் அளிக்கப்பட்டு வருகிறது.


746 பள்ளிகளுக்கு அங்கீகாரம் பறிபோகும் அபாயம்: 8 லட்சம் மாணவர்கள் குழப்பம்


பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் .

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பில் வெளியிடப்பட்ட 11.4.2016 தேதியிட்ட சுற்றறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பொறியியல் ஆன்லைன் பதிவு 1.4 லட்சத்தை நெருங்குகிறது.

பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, இதுவரையில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 260 பேர் ஆன்லைனில் பதிவுசெய்திருக்கிறார்கள். அவர்களில் 75 ஆயிரத்து 607 பேர் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தியி ருப்பதாக அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளர் எஸ்.கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை இந்துமதி ஆகியோர் தெரிவித்தனர்.

தமிழாசிரியர்களுக்கு 10 மாத பயிற்சி விருப்பப்பட்டியல் சேகரிப்பு.

மத்திய அரசு சார்பில், மைசூரில் நடக்கும், பத்து மாத மொழிக்கல்வி பயிற்சியில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்களிடம் விருப்பப்பட்டியல் சேகரிக்கப்படுகிறது.மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், மொழிக்கல்வியை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கு, பத்து மாதம் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எல் நினோக்கு அடுத்து லா நினா விஞ்ஞானிகள் எச்சரிக்கை !

எல் நினோ' வெப்ப சலனத்தை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் 'லா நினா' எனும் குளிர் சலனம் துவங்கும் எனவும், இது 'எல் நினோ'வை காட்டிலும் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை வாபஸ் பெற வேண்டும்!

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக அரசின் பள்ளிக் கல்வி
இயக்ககத்தின் சார்பில் வெளியிடப்பட்ட 11.4.2016 தேதியிட்ட சுற்றறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக பல மாநிலங்களின் கோரிக்கையை நிராகரித்தது...உச்ச நீதி மன்றம்!

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
புது தில்லி: மருத்துவ பொது நுழைவுத்தேர்வு திட்டமிட்டப்படி நடத்தப்படும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மே 1-ம் தேதி நடைபெறவிருந்த மருத்துவ
நுழைவுத்தேர்வைதள்ளிவைக்க கோரி மத்திய அரசு சார்பில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. ஆனால், இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளது.

நிறுவனங்களுக்கு 'ஆதார்'; மத்திய அரசு பரிசீலனை !

மக்களுக்கு, 'ஆதார்' அடையாள எண் போல், நிறுவனங்களுக்கும் தனி அடையாள எண் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.


தற்போது, கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழில் உரிமத்திற்கு, தனி எண் வழங்கப்படுகிறது. இந்நிறுவனங்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாவுக்கும், தனித் தனி எண்கள் உள்ளன.

சீனாவால் இந்தியாவில் வேலைவாய்ப்பு உயரும் 

சீனாவில், ஊதிய விகிதம் உயர்ந்து வரு­வதன் எதி­ரொ­லி­யாக, இந்­திய ஆயத்த ஆடைகள் துறையில், லட்­சக்­க­ணக்கில் வேலை­வாய்ப்­புகள் உரு­வாகும்’ என, உலக வங்­கியின் ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அதன் விவரம்:சீனாவில், ஊதிய விகிதம் அதி­க­ரித்து வரு­வதால், ஆயத்த
ஆடைகள் தயா­ரிப்பு செலவு உயர்ந்­துள்­ளது.

விஐடி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு படிக்க போகலாமா....!!

நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் முன்னணியில் உள்ள வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (விஐடி) எல்எல்பி படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
5 ஆண்டு ஒருங்கிணைந்த இந்த பி.ஏ. எல்எல்பி படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதைப் போலவே பிபிஏ எல்எல்பி படிப்புகளையும் விஐடி வழங்குகிறது.

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான பதிவு ஆன்-லைனில் தொடக்கம்....!!

சிபிஎஸ்இ நடத்தும் கூட்டு அட்வான்ஸ்டு பொது நுழைவுத் தேர்வுக்கான (ஜேஇஇ அட்வான்ஸ்டு) பிவு ஆன்-லைனில் தொடங்கியுள்ளது.
ஜேஇஇ நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.

ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு !

ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் கோரி போராட்டம் நடத்தி வரும் முன்னாள் ராணுவத்தினருக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வாதிடப் போவதாக மத்திய முன்னாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான ராம் ஜேத்மலானி அறிவித்தார்.

நூலகர் பணி சான்றிதழ் சரிபார்க்க 9–ந்தேதி அழைப்பு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

நூலகர் மற்றும் உதவி நூலகர் பணிக்கு 29 காலி இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு தேர்வாணையம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 1 மற்றும் 2–ந்தேதிகளில் எழுத்து தேர்வை நடத்தியது.

வேளாண் படிப்பில் சேர மே 12 முதல் விண்ணப்பிக்கலாம்!

பல்கலை துணைவேந்தர்ராமசாமி,
நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு வேளாண் பல்கலையால் நடத்தப்படும், 13 இளமறிவியல் படிப்புக்கு மே, 4ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும். மொத்தம், 2,600 இடங்களுக்கு அரசு விதித்த விகிதாச்சாரப்படி, 65 சதவீதம் அரசுக்கும், 35 சதவீதம் தனியார் கல்லூரிகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மே, 12ம் தேதி முதல் ஜூன், 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தரவரிசை பட்டியல், ஜூன், 20ல் வெளியிடப்படும்.

கலெக்டர்கள், எஸ்பிக்கள் இடமாற்றம்!! SSA -SPD -பூஜா குல்கர்னி-மாற்றம்

தமிழக சட்டசபை தேர்தலுக்கானவாக்குப்
பதிவுமே 16ம்தேதிநடைபெறஉள்ளது இதனைமுன்னிட்டு டிஜிபி, மாவட்டஆட்சியர்கள், எஸ்பிக்களைஇடமாற்றம் செய்துதேர்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஒசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கை விண்ணப்பம் அளிக்கப்பட்டு வருகிறது

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்: உச்ச நீதிமன்றம்

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நாளை (மே-1) திட்டமிட்டபடி நடக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு இரண்டுகட்டங்களாக பொது நுழைவுத் தேர்வு நடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதன்படி மே 1-ம் தேதி (இன்று) மற்றும் ஜூலை 24-ம் தேதிகளில் தேர்வு நடத்தப்படவுள்ளது.

தமிழகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

கரூர், திருவண்ணாமலை, திருவாரூர், நெல்லை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் .

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பில் வெளியிடப்பட்ட 11.4.2016 தேதியிட்ட சுற்றறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Friday, 29 April 2016

இறுதி வாக்காளர் பட்டியலில் 5.82 கோடி வாக்காளர்கள்: ஆண்களை விட பெண்களே அதிகம்

தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 5.82 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டார். இந்த பட்டியலின்படி தமிழகத்தில் தற்போது மொத்தம் 5.82. கோடி வாக்காளர்கள் உள்ளனர். 

பி.எப். வட்டி விகிதத்தை 8.7 சதவீதத்தில் இருந்து 8.8 சதவீதமாக உயர்த்தியது மத்திய அரசு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.8. சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது.
புதுடெல்லி:
2015-16-ஆம் நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு (இ.பி.எப்) 8.8 சதவீத வட்டி வழங்க வேண்டும் என்று, மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தலைமையிலான மத்திய வாரியக் குழு (சிபிடி), கடந்த பிப்ரவரியில் பரிந்துரை செய்திருந்தது. 

VIT University Entrance Result Published

விஐடி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு விஐடி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 

 

            இதில், முதல் மூன்று இடங்களை ஆந்திரா, குஜராத், புது தில்லி மாநில மாணவர்கள் பெற்றனர். விஐடி பல்கலைக்கழக வேலூர், சென்னை வளாகங்களில் நிகழாண்டு (2016) பி.டெக். பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் வியாழக்கிழமை வெளியிட்டார். இதுதொடர்பாக, ஜி.விசுவநாதன் கூறியதாவது: நிகழாண்டு பி.டெக். பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு கடந்த 6 முதல் 17-ஆம் தேதி வரை இந்தியாவிலுள்ள 118 நகரங்களிலும், வெளிநாட்டில் துபை, குவைத், மஸ்கட் ஆகிய இடங்களிலும் கணினி முறையில் நடைபெற்றன. இதில் 2,12,238 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதற்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இதில், ஆந்திர மாநிலம், ஸ்ரீ சைதன்யா ஜுனியர் கல்லூரி மாணவர் சேவாகுல வம்சி முதலிடத்தையும், குஜராத் மாநிலம் செயின்ட் ஆன்ஸ் பள்ளி மாணவர் மோஹில் பட்டேல் இரண்டாமிடத்தையும், புது தில்லி டிஏவி பப்ளிக் பள்ளி மாணவர் சத்யஜித் கோஷ் மூன்றாமிடத்தையும் பெற்றனர். நுழைவுத்தேர்வில் ரேங்க் அடிப்படையில் தகுதி பெற்ற மாணவ, மாணவியர் விஐடியில் சேருவதற்கான கலந்தாய்வு மே மாதம் 9-ஆம் தேதி முதல் விஐடி வேலூர், சென்னை வளாகங்களில் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. இதன்படி, 1 முதல் 8 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு மே 9-ஆம் தேதியும், 8,001 முதல் 12 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு மே 10-ஆம் தேதியும், 12,001 முதல் 16,000 வரை ரேங்க் பெற்றவர்களுக்கு மே 11-ஆம் தேதியும், 16,001 முதல் 20,000 வரை ரேங்க் பெற்றவர்களுக்கு மே 12-ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறுகிறது. விஐடியின் ஜி.வி. பள்ளி வளர்ச்சி திட்டத்தின் கீழ் மத்திய, மாநில கல்வி வாரியத் தேர்வுகளில் முதலிடம் பெற்று விஐடியில் சேரும் மாணவ, மாணவியருக்கு பி.டெக். பட்டப்படிப்பின் 4 ஆண்டு காலமும் 100 சதவீத படிப்பு கட்டணச் சலுகையும், விஐடி நுழைவுத்தேர்வில் 10 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு படிப்புக் கட்டணத்தில் ரூ. 50 ஆயிரம் கட்டணச் சலுகையும், 10,001 முதல் 20,000 வரை ரேங்க் பெற்றவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் கட்டணச் சலுகையும் வழங்கப்படுகிறது. விஐடி நுழைவுத் தேர்வு முடிவுகளை www.vit.ac.in, www.careers360.com, www.entrance corner.com, www.shiksha.com, www.minglebox.com ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என்றார் வேந்தர் ஜி.விசுவநாதன்.

திட்டமிட்டப்படி மே 1ல் நுழைவுத்தேர்வு நடத்தப்படும்:

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
புது தில்லி: மருத்துவ பொது நுழைவுத்தேர்வு திட்டமிட்டப்படி நடத்தப்படும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மே 1-ம் தேதி நடைபெறவிருந்த மருத்துவ நுழைவுத்தேர்வை தள்ளிவைக்க கோரி மத்திய அரசு சார்பில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. ஆனால், இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளது. முதற்கட்ட நுழைவுத்தேர்வு திட்டமிட்டபடி மே 1-ம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், மருத்துவ பொதுநுழைத்தேர்வு தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் மே 3-ம் தேதி மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளது. கர்நாடகம், உத்தரப் பிரதேசம் போன்ற மாவட்டங்கள் வைத்த கோரிக்கைகளும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் 'வாழைத் தண்டு'

வாழையின் உள் தண்டை சிறுசிறு துண்டுகளாக்கி வேறினை நீக்கி சமைத்து உண்ண சிறுநீர் பாதைகளில் ஏற்படும் கல் அடைப்பு நீங்கும். உடல் சூடு தணியும். சீதபேதி தாகம் தணியும்.

தினம் ஒரு புத்தகம் 'Practical English Usage"


புதிதாக விண்ணப்பித்தவர்களையும் சேர்த்து துணை வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் ராஜேஷ் லக்கானி பேட்டி

புதிதாக விண்ணப்பித்தவர்களை சேர்த்து துணை வாக்காளர் பட்டியல் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–வேட்புமனு நிராகரிக்கப்படும்

RTE:25 சதவீத ஒதுக்கீடு சேர்க்கை; வரும் 3 முதல் விண்ணப்பம்.

தனியார் பள்ளிகளில், 25சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம்,மே, 3முதல் வழங்கப்படுகிறது.இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில்,அரசு பள்ளிகள் இல்லாத பகுதிகளில்,தனியார் பள்ளிகளில், 25சதவீத இட ஒதுக்கீட்டில்,துவக்க வகுப்புகளில் குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர்.

உயர்நீதிமன்றங்களுக்கு ஒரு மாதம் கோடை விடுமுறை.

சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளைக்கு மே 1 முதல் 31-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் டி.ரவீந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கட்டாய நுழைவுத் தேர்வால்தமிழக மாணவர்களுக்கு சிக்கல்.

'மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கட்டாயம்' என, சுப்ரீம் கோர்ட் அறிவித்து ள்ளதால், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை, நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், மருத்துவப் படிப்புகளுக்கு, பொது நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு, 2007 முதல், பிளஸ் 2 மதிப்பெண்ணை வைத்து, 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கிறது.

மருத்துவ படிப்புக்கு பொது நுழைவு தேர்வு நடத்த..எதிர்ப்புகளை நிராகரித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.

'நாடு முழுவதும் உள்ள, 400க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், இளங்கலை மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை, தேசிய நுழைவுத் தேர்வு மூலமே நிரப்ப வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக கூறியுள்ளது.நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான கால அட்டவணையையும் சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.

வேலையில்லா திண்டாட்டம்இந்தியாவில் அதிகரிக்கும்'

'தற்போது நாட்டில், வேலை பார்க்கும் வயதில் உள்ளவர்களில், 50 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே வேலை கிடைக்கிறது; அடுத்த, 35 ஆண்டுகளில், இது மேலும் குறைந்து, வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.யு.என்.டி.பி., எனப்படும் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் வெளியிட்டுள்ள, ஆசிய பசிபிக் மனிதவள மேம்பாட்டுஅறிக்கையில்கூறப்பட்டுள்ளதாவது:

சாஸ்த்ராவில் பயிற்சி பெற்ற 30 மாணவர்கள் ஜே.இ.இ. தேர்வில் தேர்ச்சி

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் இரண்டாண்டு இலவச பயிற்சி வகுப்பில் படித்த 30 மாணவர்கள் இணை நுழைவுத் தேர்வில் (ஜே.இ.இ.) தேர்ச்சி பெற்றனர்.

இதுகுறித்து சாஸ்த்ரா பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் இணை நுழைவுத் தேர்வுக்குரிய இரண்டாண்டு இலவசப் பயிற்சி வகுப்பு "சூப்பர் 30' என்ற பெயரில் நடத்தப்படுகிறது. தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டத்தில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சாஸ்த்ரா பல்கலை. நடத்திய தொடக்க நிலை நுழைவுத்தேர்வின் மூலம் முதல் 30 மாணவர்கள் இரண்டாண்டு இலவசப் பயிற்சி வகுப்புக்குத் தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள் இலவச இணை நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். 2014-ல் சுமார் 800 மாணவர்கள் சாஸ்த்ரா நடத்திய முதல் நிலை நுழைவுத்தேர்வை எழுதினர். இதில், சூப்பர் 30 மாணவர்கள்

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரு ஆண்டுகள் தொடர்ந்து பயிற்சி கொடுக்கப்பட்டது. மேலும், இலவச உணவு, தங்கும் வசதி சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது.

இவர்களில் இணை நுழைவுத் தேர்வில் 19 மாணவர்கள் உயர்நிலை எழுதத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் திருச்சி மான்ட்போர்டு பள்ளியைச் சேர்ந்த எஸ். ஹரீஷ் 192 மதிப்பெண்களும், பெனிடிக்ட் ப்ளாரன்ஸ் 171 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். தவிர, 11 மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற போதிலும் 2016-க்கான உயர்நிலைத் தேர்வை எழுதும் தகுதியைப் பெறவில்லை.

இணை நுழைவுத் தேர்வு இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.), தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்.ஐ.டி.), பொறியியல் கல்லூரிகள் மற்றும் சாஸ்த்ரா பல்கலை போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்வதற்கு இது வழிவகுக்கிறது. இணை நுழைவுத் தேர்வு பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தவே சாஸ்த்ரா பல்கலை ஆண்டுதோறும் ரூ. 45 லட்சம் செலவிடுகிறது. கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து இத்தகைய கல்விப்பணியை சாஸ்த்ரா பல்கலை. செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களிடையே திருக்குறளைப் போதிக்கத் திட்டம்

பெங்களூரில் மாணவர்களிடையே திருக்குறளை போதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சட்டக் கல்லூரி முதல்வர் டாக்டர்சி.ராமமூர்த்தி தெரிவித்தார்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் 2016-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு பிரியாவிடை மற்றும் திருவள்ளுவர் தினவிழா பெங்களூரு, சேஷாத்ரிபுரத்தில் உள்ள டீவ் டிராப்ஸ் ஹோட்டலில் மே 1-ஆம் தேதி காலை 9 மணி அளவில் நடக்கவிருக்கிறது.

திருக்குறளின் போதனைகளை இந்தியா மட்டுமன்றி உலக அளவில் கொண்டு செல்லும் நற்செயலை செய்துவரும் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண்விஜய் விழாவில் கெளரவிக்கப்படவிருக்கிறார்.

வட இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்தி மொழியில் திருக்குறளை பரப்பிவருவதோடு, இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் திருவள்ளுவர் நாளை கொண்டாட மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுத்தவர் தருண்விஜய்.

மேலும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் திருக்குறளை கட்டாயமாகப் போதிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார். வட இந்தியாவில் கங்கை திக்கரையில் திருவள்ளுவரின் சிலையை அமைக்கவும் முயற்சி எடுத்து வருகிறார்.

திருக்குறளை கற்றுத் தேர்ந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்தில் விழா நடத்தி கெளரவித்தார். செல்லும் இடங்களில் எல்லாம் திருக்குறளின் போதனைகளை பரப்பி வருகிறார்.

தருண்விஜயை பாராட்டுவதன் மூலம் தமிழ்ச் சமூகத்தின் அறிவுக்கடலாக விளங்கும் திருக்குறளை பரப்ப மேலும் ஊக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதேபோல, பெங்களூரில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே திருக்குறள் போதனைகளில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளோம்.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த பெங்களூரு தமிழ்ச் சங்கம், திருவள்ளுவர் சங்கத்தின் உதவியை நாடுவோம். திருவள்ளுவர் தின விழாவில் தமிழன்பர்கள் திரளாக கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

பேட்டியின் போது சிறகுகள் அமைப்பு நிர்வாகி தாஸ், பெங்களூரு தமிழ்ச்சங்க செயற்குழு உறுப்பினர் சுந்தர்வேலு உடனிருந்தனர்.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி செயற்கைக்கோள்

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1ஜி செயற்கைக் கோள் பி.எஸ்.எல்.வி. சி.33 மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. | படம்: எல்.சீனிவாசன்
கடல்சார் ஆராய்ச்சிக்கான ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (வியாழக்கிழமை) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் கடல் சார்ந்த ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டதில் 6 செயற்கைக் கோள்கள் ஏற்கெனவே விண்ணில் செலுத்தப்பட்டன.

இந்நிலையில் 7-வது செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட் டவுன் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 9.20 மணியளவில் தொடங்கியது. 1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஜி செயற்கைக்கோள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது.

இதன்மூலம் இந்தியா ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்றுள்ளது. மேலும், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளை அடுத்து இந்த தொழில்நுட்பத்தை சொந்தமாக பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் இந்தியா இடம்பெற்றுள்ளது.

கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்திருந்தது. இதன்படி ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ என பெயரிடப்பட்ட முதல் செயற்கைக்கோள் 2013-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இதையடுத்து ஐஆர்என் எஸ்எஸ்-1பி, 1சி, 1டி,1இ, 1எஃப் ஆகிய 5 செயற்கைக்கோள்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த திட்டத்தின் இறுதி செயற்கைக்கோள் (7-வது செயற்கைக்கோள்) ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி, இன்று மதியம் 12.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

கடல் பகுதிகளின் பாதுகாப்பு, இயற்கை சீற்றம், இயற்கை பேரிடர் மேலாண்மை, திசை அறிதல் உள்ளிட்ட கடல்சார் ஆராய்ச்சிப் பணிகளை இந்த செயற்கைக்கோள் மேற்கொள்ளும். முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் ஆகும்.

TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு ஒத்திவைப்பு.

ITEM NO.90 REGISTRAR COURT. 2 SECTION XII
S U P R E M E C O U R T O F I N D I A
RECORD OF PROCEEDINGS
BEFORE THE REGISTRAR MR. M V RAMESH
Petition(s) for Special Leave to Appeal (C) No(s).
26256-26257/2015
STATE OF TAMIL NADU, REP. BY ITS SECRETARY TO GOVT., SCHOOL
EDUCATION (TRB) DEPARTMENT AND ORS.
Petitioner(s)
VERSUS
S. VINCENT AND ORS Respondent(s)
(with office report)
WITH

SLP(C) No. 26461-26463/2015
SLP(C) No. 26464/2015
(With Office Report)
Date : 27/04/2016 These petitions were called on for hearing today.
For Petitioner(s)
Mr. M. Yogesh Kanna,Adv.
Mr. L. K. Pandey,Adv.
For Respondent(s)
Mr.Anis Mohd.,Adv.
Mr.
G.Sivabalamurugan,Adv.
UPON hearing the counsel the Court made the following
O R D E R
SLP(C) No.26256/2015
The office report is that the matter has already been directed
to be listed before the Hon'ble Court. Hence, no further order is
required to be passed in it.
SLP(C) No.26257/2015
Ld.counsel for the petitioner has failed to file the affidavit
in proof of dasti service of notice issued to the respondent No.2,
..........2
ITEM NO.90 -2- SC26256-26257/2015
despite opportunities given. Therefore, the matter shall be
processed for listing before the Hon'ble Judge in Chambers for
further directions. Await orders and list thereafter.
SLP(C) No. 26461-26463/2015 & SLP(C)No. 26464/2015
Ld.counsel for the petitioners has failed to file the
affidavit in proof of dasti service of notice issued to all the
respondents, despite opportunities given. Therefore, the matter
shall be processed for listing before the Hon'ble Judge in Chambers
for further directions. Await orders and list thereafter.

Thursday, 28 April 2016

பிஎப்புக்கு 8.7% வட்டி தரக்கூட நிதியே இல்லை: நிதியமைச்சகம் திடீர் விளக்கம்

பிஎப்புக்கு 8.7 சதவீத வட்டி வழங்கக்கூட நிதியில்லை என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்களுக்கு 2015-16 நிதியாண்டுக்கான வட்டியாக 8.8 சதவீதம் அளிக்க வேண்டும் மத்திய அறக்கட்டளை வாரியம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் நிதியமைச்சகம் 8.7 சதவீதம் வழங்க ஒப்புதல் அளித்தது.பிஎப் நிறுவனம் கடந்த 2013-14 மற்றும் 2014-15 நிதியாண்டுகளுக்கான வட்டியாக 8.75 சதவீதம் வழங்கியது.

இது 2012-13 நிதியாண்டில் 8.5 சதவீதமாகவும், 2011-12 நிதியாண்டில் 8.25 சதவீதமாகவும் இருந்தது. இதற்கு முன்பு கால் சதவீதம் அளவுக்கு வட்டி உயர்த்தப்பட்டது. அதோடு கடந்த பிப்ரவரி 16ம் தேதி 2015-16க்கான இடைக்கால பிஎப் வட்டி விகிதமாக 8.8 சதவீதமாக முடிவு செய்யப்பட்டது. இந்த இடைக்கால வட்டியை கூட தர மறுத்துள்ளது நிதியமைச்சகம்.

இந்த முடிவுக்கு தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன.அதோடு, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளன. இதற்கிடையில், வட்டி குறைத்ததற்கு நிதி பற்றாக்குறையே காரணம் என நிதியமைச்சகம் கூறியுள்ளது. இதுகுறித்து நிதியமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த 2014-15நிதியாண்டில் பிஎப் நிதி முதலீடு மூலம் கிடைத்த வருவாய் ரூ.1,604.05 கோடி உபரி இருந்தது. தற்போது 8.8 சதவீத வட்டி அளித்தால் இந்த உபரித்தொகை ரூ.673.85 கோடியாக குறைந்து விடும்.

இதே நிலை நீடித்தால் அடுத்த ஆண்டு இந்த அளவுக்கு கூட நிலையான வட்டி கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும். 8.7 சதவீதம் கொடுத்தால் இந்த உபரி ரூ.1,000 கோடியாக இருக்கும்.ஆனால் இதை தரக்கூட போதுமான நிதியில்லை. அதுமட்டுமின்றி, செயல்படாத 9 கோடி பிஎப் கணக்குகளில்உள்ள ரூ.35,000 கோடிக்கு மேற்பட்ட மூலனத தொகையில் கிடைத்த வட்டி வருவாய் மத்திய அறக்கட்டளை குழு முடிவின்படி தற்போது செயல்பாட்டில் உள்ள கணக்குகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

155 பள்ளி செல்லாத குழந்தைகள்!

முதல்கட்ட கணக்கெடுப்பில், 70 மாற்றுத்திறனாளிகள் உட்பட, 155 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டனர்.
எஸ்.எஸ்.ஏ., சார்பில், ஆண்டுதோறும் ஏப்., மே மாதங்களில், பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு 
நடத்தப்படும். இதில் கண்டறியப்படும் குழந்தைகள், உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் சிறப்பு பள்ளிகளில் சேர்க்கப்படுவர். பின், ரெகுலர் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.

திருப்பூரில், எஸ்.எஸ்.ஏ., ஆசிரியர் பயிற்றுனர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு மைய ஊழியர்களை கொண்ட குழுக்கள், பகுதி வாரியாக தினமும் வீடு வீடாகச் சென்று, பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து, கணக்கெடுத்தனர். ஆறு முதல், 14 வயதுக்கு உட்பட்டவர்கள், பிறந்த குழந்தை முதல், 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் விசாரிக்கப்படுகின்றனர்.

வரும், 30 வரை முதல்கட்டமாகவும்; மே, 17 முதல், 24 வரை இரண்டாம் கட்டமாகவும், கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதுவரை, 70 மாற்றுத்திறனாளிகள் உட்பட, 155 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளதாக, எஸ்.எஸ்.ஏ., அலுவலர்கள் தெரிவித்தனர்

ஆங்கில கல்வியில் அசத்தும் அரசு பள்ளி!

ராசிபுரம் அருகே, தமிழ் மற்றும் ஆங்கில கல்வியில் தனியார் பள்ளிக்கு இணையாக அசத்தும் கிராமப்புற பள்ளி, தற்போது இட நெருக்கடியால் அவதிப்பட்டு வருகிறது.

ராசிபுரம் அடுத்த, குட்டலாடம்பட்டி பஞ்சாயத்து, மலையம்பாளையம் கிராம சுற்றுப்பகுதியில், 300 குடும்பங்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு துவக்கப்பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு நிகராக வாகன வசதி, இசை, நடனம், கராத்தே, யோகா, அடையாள அட்டை என செயல்பட்டு வருவதால், இப்பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இதுகுறித்து, இப்பள்ளியில், 14 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆசிரியர் செந்தில் கூறியதாவது:

இக்கிராமத்தில் கூலித்தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். அதனால், குடும்ப வறுமை காரணமாக வயல் வேலைக்கு செல்வது, கால்நடை மேய்க்க செல்வது, செங்கல் சூளைகளுக்கு செல்வது போன்றவை மாணவர்களிடம் இருந்தது. இந்நிலை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் வேலைக்கு செல்வது படிப்படியாக குறைக்கப்பட்டது.

இப்பள்ளி, 2000ம் ஆண்டுக்கு பின், ஈராசிரியர் பள்ளியாக தரம் உயர்த்தி மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், ஒன்றாம் வகுப்பு முதல், மூன்றாம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது, 114 மாணவர், 106 மாணவியர் உட்பட, 220 பேர் படிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக துவக்கக்கல்வி துறையின் சிறந்த பள்ளிக்கான விருதும், நாமக்கல் மாவட்டத்தின் முன் மாதிரி பள்ளிக்கான விருதும் பெற்றுள்ள இப்பள்ளி, தற்போது இட நெருக்கடியால் திணறி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, எட்டு பிரிவுகளாக நடக்கும் பள்ளி மரத்தடியிலும், அருகில் உள்ள கோவிலிலும் நடந்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.

விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி: அதிவேக சேவையின் மூலம் அசத்துகிறது பாஸ்போர்ட் துறை

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி செய்யும் அளவுக்கு பாஸ்போர்ட் துறையின் சேவை பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள கீழத் திருப்பாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கவின். இவனது பெற்றோருக்கு ஏற் கெனவே பாஸ்போர்ட் உள்ளது. மகனுக்கும் பாஸ்போர்ட் எடுக்க முடிவு செய்தனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். விண்ணப்பத் துடன் சிறுவனின் பிறப்புச் சான்றி தழ், பெற்றோரின் பாஸ்போர்ட் நகல் போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்தனர்.

தஞ்சாவூரில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நேர்காணலுக்காக நேரம் கிடைத்தது. சிறுவனும், பெற்றோரும் 15-ம் தேதி காலை 10 மணிக்கு பாஸ்போர்ட் சேவை மையத்துக்குள் நுழைந்தனர். அசல் ஆவணங்கள் சரிபார்த்தல், சிறுவனின் கைரேகை பதிவு, புகைப்படம் எடுத்தல், அதிகாரிக ளுடன் நேர்காணல் என அடுத்தடுத்த 4 கவுன்ட்டர்களுக்குச் சென்றனர். எல்லா நடைமுறைகளும் 30 நிமிடங்களிலேயே முடிந்துவிட்டன.

காலை 10.30 மணிக்கு சேவை மையத்தை விட்டு வெளியே வந்தனர். ‘பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு வருகை தந்தமைக் காக நன்றி’ என்ற குறுந்தகவல் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டி ருந்த பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு காலை 10.31 மணிக்கு வந்தது. ‘காவல் துறை விசாரணை தேவையில்லை என்ற அடிப்படை யில் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது’ என்ற குறுந் தகவல் காலை 10.35 மணிக்கு வந்தது.

‘பாஸ்போர்ட் அச்சிடுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன’ என்ற மற்றொரு குறுந்தகவல் காலை 11.02 மணிக்கு வந்தது. ‘பாஸ்போர்ட் அச்சிடும் பணி முடிந்துவிட்டது’ என்ற குறுந்தகவல் மதியம் 1.30 மணிக்கு கிடைத்தது. அதாவது பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு சென்று விண்ணப்பித்துவிட்டு, வீடு வந்து சேருவதற்குள் பாஸ்போர்ட் அச்சிடப்பட்டுவிட்டது.

‘அடுத்து விரைவு தபால் சேவை மூலம் உங்கள் பாஸ்போர்ட் அனுப்பப்பட்டு விட்டது’ என்ற குறுந்தகவல் மாலை 6.30 மணிக்கு கிடைத்தது. மறுநாள் காலை சுமார் 11 மணிக்கு வீட்டில் பாஸ்போர்ட் டெலிவரி செய்யப்பட்டுவிட்டது.

விண்ணப்பித்த 24 மணி நேரத் தில் வீட்டிலேயே பாஸ்போர்ட் டெலிவரி செய்யப்பட்ட இந்த நிகழ்வானது சிறுவன் கவின் குடும்பத்தாரை மட்டுமின்றி, இதனை அறிந்த அந்த கிராமத்தினர் அனைவரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து மாதக்கணக்கில் காத்திருந்த காலம் மாறி, 24 மணி நேரத்தில் வீட்டுக்கே பாஸ்போர்ட் கிடைக்கும் அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றமே அவர்களது வியப்புக்கு காரணம்.

இந்த முன்னேற்றம் எவ்வாறு சாத்தியமானது என்பது குறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.லிங்கசாமி கூறியதாவது:

கணினிமயம்

பாஸ்போர்ட் அலுவலக செயல் பாடுகள் அனைத்தும் 100 சதவீதம் கணினிமயமாக்கப்பட்டதுதான் விரைவான சேவைக்கான முதல் காரணம். இதன் காரணமாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுவிட்டன. இதனால் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, காவல் துறை விசாரணை அறிக்கையும் கிடைக்கப் பெற்றால் உடனே பாஸ்போர்ட் விநியோகம் செய்ய முடியும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

பிறப்புச் சான்று, முகவரிச் சான்று போன்ற அசல் ஆவணங்கள் எவ்வித வில்லங்கமும் இன்றி மிகச் சரியாக இருந்தால், பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு அழைக்கப்படும் அதே தினத்தில் அவர்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். காவல் துறை விசாரணை தேவையில்லாத விண்ணப்பங்களுக்கு அன்றைய தினமே பாஸ்போர்ட் அச்சிடப்பட்டு, அடுத்த நாளோ அல்லது அதற்கு மறுநாளோ விண்ணப்பதாரருக்கு பாஸ்போர்ட் கிடைத்துவிடும். காவல் துறை விசாரணை தேவை எனில், பாஸ்போர்ட் விண்ணப்பம் ஏற்கப்படும் அதே வினாடியில் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு விண்ணப்பதாரர் பற்றிய தகவல்கள் ஆன்லைன் மூலம் சென்றுவிடும். அங்கிருந்து காவல் நிலையத்துக்கு தகவல்கள் அனுப்பப்பட்டு, காவல் துறையினர் விண்ணப்பதாரரின் இருப்பிடத்துக்கு சென்று விசாரணை செய்து, அறிக்கை அனுப்புவார்கள்.

21 நாட்கள்

காவல் துறையினரின் இந்த நடைமுறைகள் முடிய அதிக பட்சம் 21 நாட்கள் ஆகும். காவல் துறை அறிக்கை எங்களுக்கு கிடைத் தவுடன், அடுத்த ஓரிரு நாட்களில் பாஸ்போர்ட் அச்சிடப்பட்டு, விண்ணப்பதாரருக்கு கிடைத்து விடும்.

ஆக, பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு செல்லும்போது தேவையான அனைத்து அசல் ஆவணங்களையும் மிகச் சரியாக விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்தால், எங்களால் மிக விரைவில் பாஸ்போர்ட் விநியோகம் செய்ய முடியும். திருச்சி மண்டலத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 19 ஆயிரத்து 832 பேர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தனர். அவர் களில் 18 ஆயிரத்து 256 பேருக்கு பாஸ்போர்ட் விநியோகம் செய்யப்பட்டுவிட்டது.

சாதாரண முறையிலேயே பாஸ் போர்ட் மிக விரைவாக கிடைத்து விடுவதால், தத்கால் திட்டத்தில் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!