Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 31 May 2016

எம்.பில், பிஎச்.டி. படிப்புகள்: புதிய வழிமுறை அறிவித்தது மனிதவள அமைச்சகம்...!!

எம்.பில், பிஎச்.டி. படிப்புகள் பயில புதிய வழிமுறைகளை மத்திய மனித வள அமைச்சகம் உருவாக்கி அறிவிப்பு செய்துள்ளது.
இதில் பெண்களுக்கு பல விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மத்திய 
உயர்கல்வித்துறை செயலர் வி.எஸ். ஓபராய் கூறியதாவது:
எம்.பில், பிஎச்.டி. படிப்புகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை மத்திய மனித வள அமைச்சகம் உருவாக்குத் தந்துள்ளது.
இதில் பெண்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்தப் படிப்புகளைப் படிக்கும் பெண்கள் 240 நாள் பேறுகால விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம். பேறுகால விடுமுறை முடிந்ததும் அவர்கள் தங்களது படிப்புகளைத் தொடரலாம்.

டாக்டரேட் படிப்பு படிக்கும் பெண்களுக்காக பல்வேறு விதிமுறைகளை அரசு தளர்த்தியுள்ளது.
மேலும் நிர்வாகம், படிப்பு காலம், தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்"கடுகு சிறுத்தாலும் காரியம் பெரிது!"

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதுபோல ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது கடுகு. திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்களில், முதல் இடம் கடுகிற்கு உண்டு. அதனால் தான் எல்லா குழம்புகளிலும் கடுகை தாளித்து சேர்க்கிறார்கள்.

தினம் ஒரு புத்தகம்'பழமொழிக் கதைகள்"


தமிழகத்தில் 16,883 பள்ளி வாகனங்கள் ஆய்வு: போக்குவரத்து ஆணையர் தகவல்

தமிழகத்தில் 16 ஆயிரத்து 883 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையர் சத்தியப் பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அரசு நிதியுதவி

சென்னை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 10 பேருக்கு தலைசிறந்த தனியார் பள்ளிகளில் படிக்க அரசு நிதியுதவி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் அறிவித்துள்ளார்.

குழந்தை குடித்த குளிர்பானத்தில் அட்டை புழு: பெற்றோர் அதிர்ச்சி..

குழந்தை குடித்த குளிர்பானத்தில், அட்டை புழு இருந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை புதுவண்ணாரப்பேட்டை, சிவன் நகரைச் சேர்ந்த பிரேம்குமார் - அபிராமி தம்பதியின், 2 வயது மகள் உபஸ்ரீ. நேற்று காலை, வீட்டருக்கே உள்ள மளிகை கடையில், அபிராமி, தன் 
மகளுக்கு, பிரபல நிறுவனத்தின் குளிர்பானத்தை வாங்கிக் கொடுத்தார். உபஸ்ரீ குளிர்பானத்தை குடிக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில், மயங்கி விழுந்தாள். இதையடுத்து, குழந்தை குடித்த குளிர்பானத்தை, பிரேம்குமார் சோதனை செய்ததில், அதில், அட்டை புழு இருந்தது தெரியவந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த பிரேம்குமார், இதுகுறித்து கடைக்காரரிடம் கேட்டுள்ளார். ஆனால், கடைக்காரர் சரியான பதில் சொல்லாததால், தகராறில் ஈடுபட்டார். பின், புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். குழந்தை உபஸ்ரீ, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.

உயர்கல்விக்கு வழி இல்லை தவிக்கும் ஆட்டோ டிரைவர் மகள்:பிளஸ் 2வில் 1122 மதிப்பெண்.

பிளஸ் 2வில் 1,122 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் ஆட்டோ டிரைவர்மகள் புவனேஸ்வரி, உயர்கல்விக்கு வழியின்றி பரிதவிக்கிறார்.திண்டுக்கல் ஜி.டி.என்.சாலை திருநகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நடராஜன் மகள் புவனேஸ்வரி.புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்௨ படித்து 1,122 மதிப்பெண் பெற்று உள்ளார். 

தேர்வு நிலை பெறுவதற்கான விண்ணப்பபடிவம்!!!

வருகிறது புதிய கல்விக் கொள்கை: மத்திய மனித வள அமைச்சகத்திடம் பரிந்துரை...!!

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தனது பரிந்துரைகளை மத்திய மனித வள அமைச்சகத்திடம் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் குழு அளித்துள்ளது.

ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது : பள்ளி கல்வித்துறை உத்தரவு...

ஆசிரியர்கள் செல்போன்பயன்படுத்தக்கூடாது  பள்ளி கல்வித்துறை உத்தரவுகோடை விடுமுறைக்கு பின் ஜூன் முதல் தேதி அரசு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதற்கான ஆயத்த பணிகள் குறித்து, பள்ளி கல்வித்துறை, மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

பள்ளிக் கல்வித் துறையில் 01.01.06 முதல் 31.05.09 வரை மேல்நிலை பள்ளி த.ஆ களுக்கு கீழ் நிலைபணியையும் சேர்த்து தேர்வு நிலை வழங்கியது தொடர்பாக தெளிவுரை கடிதம் !

அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் ‘ரேஷன் கடைக்கு ஆதார் அட்டை நகலை கொண்டு வரவேண்டும்’நாளை முதல் அமலுக்கு வருகிறது.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் ரேஷன் கடைக்கு ஆதார் அட்டை நகலை கொண்டு வரவேண்டும். இது நாளை முதல் அமலுக்கு வருகிறது என்று அதிகாரிகள் கூறினர்.
முறைகேடுகளை தடுக்க

10-ஆம் வகுப்பு சிறப்பு துணை பொதுத் தேர்வு: நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் சிறப்பு துணைப் பொதுத் தேர்வுக்கு புதன்கிழமை (ஜூன் 1) முதல் சனிக்கிழமை (ஜூன் 4) வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
ஜூன் 29-ஆம் தேதி முதல் தேர்வு:

சென்னையில் நாளை முதல் புத்தகக் கண்காட்சி

சென்னையில் 39-ஆவது புத்தகக் கண்காட்சி தீவுத்திடலில் புதன்கிழமை (ஜூன் 1) தொடங்க உள்ளது.தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள்- பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் நடைபெறவுள்ள இந்தப் புத்தகக் கண்காட்சியில் சுமார் 700 அரங்குகள் இடம்பெறவுள்ளன. ஜூன் 1-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரைபுத்தகக் கண்காட்சி நடைபெறும்.

கட்டாயக் கல்விச் சட்டத்தில் விண்ணப்பிக்க இன்று இறுதி நாள்

கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி அரசு நிர்ணயித்துள்ள பொருளாதாரத் தகுதி உடையவர்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகாமையில் உள்ள தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

அதன்படி மதுரை மாவட்டத்தில் 154 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ் 2459 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுவரை 1950 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்கீழ் விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (மே 31) இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கலை, அறிவியல் படிப்புகளுக்கு...அதிகரிக்கும் மவுசு! வேலைவாய்ப்பால் மாணவர்கள் ஈர்ப்பு

வழக்கமாக, இன்ஜினியரிங், மருத்துவ படிப்புகளில் சேர மாணவர்கள் படையெடுக்கும் நிலையில், இந்தாண்டு கலை அறிவியல் பட்டப் படிப்பு களுக்கு மவுசு கூடியுள்ளது.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், கல்லுாரியில் சேர பொறியியல்பாடத்துக்கு முக்கியத்துவம் அளிப்பர். இன்னும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு முதலிடம் அளிப்பர்.

கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கலை அறிவியல் பாடங்களுக்குமுக்கியத்துவம் அளிப்பதில்லை. சிலர் வேளாண் படிப்புகளில் சேருகின்றனர்.தொழில்முறை படிப்புகளுக்கு இடம் கிடைக்காவிட்டால், கலைஅறிவியல் படிப்புகளை தேடிச் செல்லும் நிலை உள்ளது. ஆனால், இந்தாண்டு, வழக்கத்தை விட அதிகமாக, கலை அறிவியல் படிப்புக்கு மவுசு கூடியுள்ளது.

இது குறித்து கல்வியாளர்கள் கூறுகையில், 'மத்திய, மாநில அரசு பணி, ஆசிரியர் பணி, வங்கி, தனியார் நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என, அதிக வேலைவாய்ப்பு கருதி, இந்த ஆண்டு மாணவர்கள், கணிசமான அளவு கலை அறிவியல் பட்டப்படிப்புகளை தேர்வு செய்துள்ளனர்.'குறிப்பாக, பி.காம்., டிகிரியில், சி.ஏ., பி.ஏ., பி.ஐ., என பல பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டு, 10 பிரிவுகள் உள்ளன.மேலும், பி.எஸ்.சி., பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, பி.எஸ்சி., இயற்பியல், கணிதம், விஸ்காம் என பல பிரிவுகளில் சேர்ந்துள்ளனர். பி.எஸ்சி.,க்கு (விவசாயம்),அதிக அளவில் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.'கலை அறிவியல் கல்லுாரிகளில் கடந்த ஆண்டை விட,20 சதவீதம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். வேலைவாய்ப்புக்கு பல்வேறு போட்டி தேர்வுகள் எழுத கலை அறிவியல் படிப்புகள் உதவியாக இருக்கும் என்பதாலும், இப்படிப்புக்கு மவுசு அதிகரித்துள்ளது' என்றனர்.

பல்கலையில் வரலாறு துறை துவக்கம்

பாரதியார் பல்கலையில் இக்கல்வியாண்டு முதல் முதுகலை படிப்புக்கு வரலாறு மற்றும் சுற்றுலாவியல் துறை புதிதாக துவங்கப்பட்டுள்ளது. இப்படிப்பில் சேர்க்கை புரிய மாணவர்கள், www.bu.ac.in என்ற பல்கலை இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து,அல்லது பல்கலையில் நேரடியாக பெற்றும் விண்ணப்பிக்கலாம்.

பூர்த்திசெய்த விண்ணப்பங்களை, ஜூன், 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும். பல்கலையில் அண்ணா ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் மற்றும் பல்கலை இணைந்து ஆட்சிப்பணி தேர்வுக்கு பயிற்சி அளித்து வரும் நிலையில், இத்துறை மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் சேர முக்கியத்துவம் வழங்கப்படும் என, துணைவேந்தர் கணபதி தெரிவித்துள்ளார். சேர்க்கை விபரங்களுக்கு, 98420 98696 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அரசு பள்ளிகள் நாளை திறப்பு

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நாளை திட்டமிட்டபடி திறக்கப்படுகின்றன.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து, ஏப்., 22ம் தேதி, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு தொடக்க பள்ளிகளுக்கு, மே 1 முதல் விடுமுறை விடப்பட்டது.

விடுமுறை முடிந்து, நாளை பள்ளிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.கோடை வெயில் வறுத்தெடுத்ததால், பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என, கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர் அமைப்பினர் வலியுறுத்தினர். இதனால், பள்ளி திறப்பு தள்ளிப்போகும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பள்ளிக்கல்வி துறை மறுத்து விட்டது.இதனால், திட்டமிட்டபடி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள்,நாளை திறக்கப்படுகின்றன. அன்றைய தினமே, இலவச பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பல மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஜூன் 6; சி.பி.எஸ்.இ., பள்ளிகள், ஜூன் 8ம் தேதியும் திறக்கப்பட உள்ளன.

தள்ளிவைக்க கோரிக்கை:

இதற்கிடையில், தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில், முதல்வர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

சங்க பொதுச் செயலர் சேகர் தலைமையில், நிர்வாகிகள் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:தமிழகத்தில், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மாணவர்கள், ஜூன் 1ல் பள்ளிக்கு வருவது சிரமமாக இருக்கும். எனவே, ஜூன், 10ம் தேதி வரை, பள்ளி திறப்பை தள்ளிவைக்க வேண்டும்.அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும், நேரடியாக, ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, பாடம் நடத்த நியமிக்கப்பட்ட, பட்டதாரி ஆசிரியர்கள், எம்.பில்., பட்டம் பெற்றிருந்தால், ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அதை வழங்க, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

பி.இ., 'ஆன்லைன்' பதிவு: இன்றே கடைசி நாள்

பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, இதுவரை, 1.76 லட்சம் பேர், அண்ணா பல்கலைக்கு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்களை, 'ஆன்லைனில்' பதிவு செய்ய, இன்று கடைசி நாள்.சென்னை, அண்ணா பல்கலையின் இணைப்புக்கு உட்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., போன்ற படிப்புகளில் சேர, தமிழக அரசு சார்பில்,அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

இதற்கான விண்ணப்பங்கள், ஏப்., 15 முதல், ஆன்லைனில் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன.அண்ணா பல்கலை இணையதளத்தில், 2.45 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில், 1.76 லட்சம் பேர் மட்டுமே முறையாக விவரங்களை பூர்த்தி செய்து, விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்ய, இன்று கடைசி நாள்.அதேநேரம், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதற்கான விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நகல் எடுத்து, உரிய ஆவணங்களுடன், ஜூலை, 4க்குள், அண்ணா பல்கலைக்கு கிடைக்குமாறு தபால் வழியாகவோ, நேரிலோ ஒப்படைக்க வேண்டும்.

எம்.பி.பி.எஸ்., படிப்பு 17,000 விண்ணப்பம்

ஐந்து நாட்களில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 17 ஆயிரம் பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். தமிழகத்தில், அரசு, சுயநிதி கல்லுாரிகள்,இ.எஸ்.ஐ., கல்லுாரியையும் சேர்த்து, மாநில ஒதுக்கீட்டிற்கு, 2,788 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 1,055 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. இதற்கு, மே, 26 முதல், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

விடுமுறை நாளான ஞாயிறு அன்றும், விண்ணப்பங்கள் தரப்பட்டன. இந்த படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருவதால், ஐந்து நாட்களில், 17,090 விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். விண்ணப்பங்கள், ஜூன், 6ம் தேதி வரை வழங்கப்பட உள்ளன. இது தவிர, விண்ணப்பங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பிக்க, ஜூன், 7 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

15 ஆயிரம் பள்ளிகளின் வாகனங்களுக்கு அனுமதி

பள்ளி வாகன ஆய்வில், 15,235 வாகனங்கள் இயக்குவதற்கு தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு அம்ச குறைபாடுள்ள, 1,648 வாகனங்கள் திருப்பிஅனுப்பப்பட்டன.தமிழகத்தில், 24,472 பள்ளி வாகனங்கள் உள்ளன.

ஆண்டுதோறும், இந்த வாகனங்களில், பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வு மேற்கொண்ட பின்தான், இயக்கத்திற்கு அனுமதிப்பது வழக்கம்.இந்தாண்டு, சட்டசபை தேர்தல் நடந்ததால், கடந்த ஒரு வாரமாக தான் ஆய்வு பணி நடக்கிறது. நாளை முதல் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், வாகன ஆய்வை விரைவுபடுத்துமாறு, போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த 28ம் தேதி வரை, 16,883 பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன. இதில், 15,235 வாகனங்களுக்கு மட்டும் தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு அம்ச குறைபாடுகள் இருந்த, 1,648 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இவற்றில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டவுடன், தகுதி சான்றிதழ் வழங்கப்படும். அடுத்த சில நாட்களுக்குள், அனைத்து வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டு விடும்.இவ்வாறு அவர் கூறினார்.

நேரடி மாணவர் சேர்க்கை சர்ச்சை: உயர்கல்வி செயலர் விசாரணை

மதுரை காமராஜ் பல்கலை, தொலைநிலைக் கல்வியில், 2014 - 15ம் ஆண்டில், 1,916 மாணவர்கள் நேரடி சேர்க்கை மூலம் தேர்வு எழுதினர். இதில் பெரும்பாலான மாணவர்கள், போலி சான்றிதழ் சமர்ப்பித்துள்ள தாக சர்ச்சை எழுந்தது இதனால், இத்தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

பல்கலையின் இம்முடிவால், உண்மை சான்றிதழ்கள் சமர்ப்பித்து, தேர்வு எழுதிய நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்-பட்டு உள்-ள-னர். அவர்களின் வேலைவாய்ப்பு, மேற்படிப்பு தடைப்பட்-டு உள்-ள-து.இதுகுறித்து, நமது நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதையடுத்து, பல்கலை அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட, செயலர் அபூர்வா விசாரித்து, விரைவில் முடிவுகள் வெளியிட உத்தரவிட்டார்.

இதுகுறித்து, பல்கலை அதி-காரி ஒரு-வர் கூறுகையில், 'விரைவில் முடிவுகளை அறிவிக்க, செயலர் உத்தரவிட்டு உள்ளார். சான்றிதழின் உண்மைத்தன்மை குறித்து,பல்கலை கமிட்டி உறுப்பினர்கள் விரைவில் விசாரிக்க உள்-ள-னர். உண்மை சான்றிதழ் சமர்ப்பித்த, 200 பேரின் தேர்வு முடிவுகளை, ஜூன் 5ல் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது' என்றார்.

எம்.பார்ம்., - எம்.பி.டி., படிக்க ஆள் இல்லை

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,போன்ற மருத்துவப் படிப்புகள் படிக்க முடியாதோர், பி.பார்ம்., என்ற இளநிலை மருந்தாளுனர்; பி.பி.டி., எனப்படும், இளநிலை பிசியோதெரபி படிப்புகளில் சேர்கின்றனர். இந்த படிப்பை முடித்தோர், முதுநிலை படிப்புகளான, எம்.பார்ம்., மற்றும் எம்.பி.டி., படிப்புகளில் சேர்ந்து படிக்க முடியும்.

இதற்கு, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பார்ம்., படிப்புக்கு, 58 இடங்களும், சுயநிதி கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ், 616 இடங்களும் உள்ளன. இதற்கான கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில், 588 எம்.பார்ம்., இடங்கள், 98 எம்.பி.டி., இடங்கள் என, 686 இடங்கள் காலியாக உள்ளன.

இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:பி.பார்ம்., படித்ததும் வேலை கிடைத்து விடுகிறது; சுய தொழில் வாய்ப்பும் அதிகம் உள்ளதால், எம்.பார்ம்., படிக்க விரும்புவதில்லை. எம்.பி.டி., படிப்புகளுக்கும், சில ஆண்டுகளாக இதே நிலை தான் உள்ளது. இந்த பிரிவுகள் படிப்போருக்கு, அரசு வேலைவாய்ப்பு பெரிதாக இல்லாததும், ஒரு காரணம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

வாக்காளர் பட்டியல் குறை நீக்கும் பணி:விரைவில் துவக்க தேர்தல் கமிஷன் முடிவு

வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் பணி, விரைவில்துவக்கப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல்அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.இணையதளம் மூலம்...இதுகுறித்து லக்கானி நேற்று கூறியதாவது:

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, இணையதளம்மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆர்.டி.ஓ., மற்றும் மாநகராட்சிமண்டல அலுவலகங்களில் நேரில் விண்ணப்பம்அளிக்கலாம்.வாக்காளர் பட்டியலில், ஒருவருடைய பெயர், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளதாக, தொடர்ந்து புகார் எழுகிறது. எனவே, வாக்காளர் பெயர், அவரது தந்தை பெயர், வயதுஆகியவை ஒன்றாக இருக்கும் பட்டியலை தயார் செய்து, ஒரே நபராக இருந்தால், அவரது பெயர், ஒரு இடம் தவிர மற்ற இடங்களில் இருந்து அகற்றப்படும்.

தேர்தல் தொடர்பாக, வழக்கு தொடர விரும்புவோர், ஓட்டு எண்ணிக்கை முடிந்து, 45 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். அதுவரை, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்அப்படியே வைக்கப்பட்டுஇருக்கும். தேவைப்பட்டால்...அதன்பின், வழக்கு உள்ள தொகுதி தவிர, பிற தொகுதிகளில் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வேறு மாநிலங்களுக்கு தேவைப்பட்டால்அனுப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

விளையாட்டு விடுதி: நாளை கவுன்சிலிங்

மாநில அளவிலான விளையாட்டு விடுதிகளுக்கான கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ௨௮ விளையாட்டு விடுதிகளை நடத்திவருகிறது. சத்தான உணவுடன், உலக தரத்திற்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

சர்வதேச விளையாட்டு வீரர்கள், நிபுணர்கள் அடங்கிய குழு,தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து, வலைகோல் பந்து, கபாடி, வாலிபால், கால்பந்து ஆகிய விளையாட்டுகளில் திறனுள்ள, ௪௭௭ மாணவர்கள், ௧௫௫ மாணவியரை தேர்வு செய்தது. இம்மாணவ, மாணவியருக்கான, விளையாட்டு விடுதிகள் ஒதுக்கீடு குறித்த மாநில கவுன்சிலிங், சென்னை, நேரு ஸ்டேடியத்தில்நாளை துவங்குகிறது.

மூன்று தொகுதிகளுக்கு ஒரே நாளில் தேர்தல். வாய்ப்பு! தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி தகவல்.

தமிழகத்தில் காலியாக உள்ள தஞ்சை, அவரக்குறிச்சி மற்றும்திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது.இத்தகவலை தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

சட்டசபை தேர்தல் மே 16ல் நடந்தது. தஞ்சாவூர் மற்றும் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா அதிக அளவில் நடந்ததாக புகார் எழுந்ததால் அந்த தொகுதிகளுக்கான தேர்தல் மே, 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.அதன்பின் ஜூன் 13க்கு தள்ளிவைக்கப்பட்டது. அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., சார்பில் இன்றைக்குள் தேர்தலை நடத்தும்படி தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையேற்க மறுத்த தேர்தல் கமிஷன் இரு தொகுதிகளின் தேர்தலையும் ரத்து செய்தது. தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, தெரிவித்துள்ளது.இதற்கிடையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சீனிவேல் உடல்நலக் குறைவால் இறந்தார். இத்தொகுதியில் ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல்நடத்தியாக வேண்டும்.எனவே தேர்தல்ரத்து செய்யப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல் திருப்பரங்குன்றம்இடைத்தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி வருகிறது.

ரிசர்வ் போலீசார்

தமிழகத்தை பொறுத்தவரை இடைத்தேர்தல் என்றால் அனைத்து அமைச்சர்களும் அங்கு முகாமிடுவர்.பொதுத்தேர்தலை விட இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா அதிகம் இருக்கும்.இம்முறை தி.மு.க., 89 எம்.எல்.ஏ.,க்களுடன் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. எனவே அக்கட்சியும் மூன்று தொகுதிகளிலும் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் தேர்தல் பணிக்கு அனுப்ப வாய்ப்புள்ளது. எனவே அதை எப்படி தடுக்கலாம் என தேர்தல் கமிஷன் தீவிரமாக யோசித்து வருகிறது.மூன்று தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் தற்போதைய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் யாரும் அந்த தொகுதிக்குள் செல்ல தடை விதிப்பது; தமிழக அரசு ஊழியர்களுக்கு பதிலாக வெளி மாநில ஊழியர்களை அழைத்து வந்து தேர்தலை நடத்துவது; தேர்தல் பாதுகாப்பு பணியில் உள்ளூர் போலீசாரை ஈடுபடுத்தாமல் மத்திய ரிசர்வ் போலீசாரை பயன்படுத்துவது குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது.

ஒரே நேரத்தி்ல் தேர்தல்

இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிகூறியதாவது:
மூன்று தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் என்பதை தலைமை தேர்தல் கமிஷன் தான் முடிவு செய்யும். தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பார். மூன்று தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.திருப்பரங்குன்றம் தொகுதிக்கு ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். மற்ற தொகுதிகளை பொறுத்தவரை அந்த கட்டாயம் இல்லை. எனவே மூன்று தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதா; தனித்தனியே நடத்துவதா என்பதையும் தேர்தல் கமிஷனே முடிவு செய்யும்.இவ்வாறு லக்கானி தெரிவித்தார்.

வேட்பாளர்கள் தகுதி நீக்கம்?

தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதியில் சில வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் வழங்கியது தகுந்த ஆதாரங்களுடன் தேர்தல் கமிஷனுக்கு தெரிய வந்துள்ளது. பணம் கொடுத்த வேட்பாளர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.அதை ஏற்று பணம் கொடுத்த வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்து அவர்கள் மீண்டும் போட்டியிட தடை விதிப்பது குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்த பிறகே முடிவு எடுக்கப்படும் என தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Monday, 30 May 2016

வாட்டர் பாட்டிலை எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்?

ஒரு வாட்டர் பாட்டிலை எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்? பிளாஸ்டிக்கில் நிறைய வகைகள் இருக்கின்றன. ‘பெட் பாட்டில்’களைத்தான் தண்ணீர் குடிக்கப் பயன்படுத்துகிறோம். நெகிழும் தன்மை கொண்ட பாட்டில்கள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் தன்மை கொண்டவை. தொடர்ந்து பயன்படுத்துவது நல்லதல்ல.
அதில் தண்ணீரை ஊற்றி, பாட்டிலை வெயிலில் வைத்தால் பிளாஸ்டிக் கொஞ்சம் கொஞ்சமாக உருகி, நீங்கள் குடிக்கும் தண்ணீரில் கலந்துவிடும்.
இது உடல் ரீதியாக நிறைய பிரச்னைகளை ஏற்படுத்தும். இவற்றை சரியான வெப்பநிலையில் வைத்திருப்பது நல்லது. பெட் பாட்டில்களை வருடக்கணக்கில் பயன்படுத்தக்கூடாது.
தண்ணீரில் பிளாஸ்டிக் வாசனை வந்தால் உடனடியாக பாட்டிலை மாற்ற வேண்டும். குழந்தைகள் வாய் வைத்துதான் குடிப்பார்கள். அதனால் கிருமிகள் உள்ளே நுழைந்து நிரந்தரமாகத் தங்கிவிடும். வாய்ப்பகுதி குறுகியதாக இருப்பதால் அடிக்கடி பிரஷ்ஷால் சுத்தம் செய்ய முடியாது. சோப் போட்டு கழுவுவதும் ஆபத்து. குறைந்தது 4 மாதங்களுக்கு ஒரு முறையாவது மாற்றிவிடுவது நல்லது.
பாட்டிலின் அடிப்பகுதியில் முக்கோணமிட்டு, அதில் நம்பர் குறிக்கப்பட்டிருந்தால்தான் நல்ல பிளாஸ்டிக். அதிலும் 2, 5 என குறிப்பிட்டிருக்கும் வகை தரமானவை. மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைத் தேர்ந்தெடுக்கும்போது அடர் வண்ணங்களை தவிர்த்து விடவும்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!