Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 30 June 2016

மாணவர்கள் வாட்ஸ்-அப், பேஸ்புக் கணக்குகளை தொடங்க பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது: போலீஸ் அறிவுரை

மாணவ–மாணவிகள் வாட்ஸ்-அப், பேஸ்புக் கணக்குகளை தொடங்க பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது என்று சேலம் போலீஸ் கமி‌ஷனர் அறிவுருத்தியுள்ளார்.

கொண்டலாம்பட்டி:

சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித்சரண் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்தும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் தங்களது குழந்தைகளுக்கு தனியாக வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் கணக்குகளை தொடங்கி பயன்படுத்த அனுமதிப்பதால் முன்பின் தெரியாத நபர்கள் இணையதளம் மூலமாக தொடர்பு கொண்டு நமது குழந்தைகளிடம் நயவஞ்சகமான முறையில் நல்லவர்களை போல தகவல்கள் பரிமாற்றம் செய்து, ஆபாச படங்களை காட்டி, அதுபோல ஜாலியாக இருக்கலாம் என்பது போன ஆசையை காட்டி, திருமண ஆசையை ஏற்படுத்தி திருமணம் செய்து கொள்வதாக கூறி தனிமையில் சந்திக்கலாம் என்று அழைத்து அவர்களுக்கு தெரியாமல் அவர்களை ஆபாச படம் எடுத்து, அவற்றை காட்டி மிரட்டியும் இணைய தளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுவார்கள்.

அல்லது விபசாரத்தில் ஈடுபடுத்தி அவர்களது வாழ்க்கையை சீரழித்து விடுவர். எனவே தங்கள் குழந்தைகளுக்கு வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் கணக்குகளை துவக்காமல் இருப்பது நல்லது.

மேலும் பொதுமக்களும், முன்பின் தெரியாமல் வரும் நபர்களிடம் இருந்து வரும் பதிவுகளை விருப்பம் தெரிவிக்காமல் இருப்பது நல்லது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் தேவையில்லாத பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். குழந்தைகளுக்கு இணையதள வசதியை பயன்படுத்துகின்ற வகையில் உள்ள செல்போன்களை வாங்கிதர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை குறைவு

பெட்ரோல் லிட்டருக்கு 89 பைசாவும், டீசல் லிட்டருக்கு 49 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தை விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

இந்த விலை குறைவு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ALAGAPPA UNIVERSITY GENERAL INSTRUCTION FOR COUNSELLING (B.Ed.-DDE-ACADEMIC YEAR 2016-17)

ALAGAPPA UNIVERSITY GENERAL INSTRUCTION FOR COUNSELLING (B.Ed.-DDE-ACADEMIC YEAR 2016-17)

2015-16 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற CRC நாட்களின் ஈடுசெய் விடுப்பு காலாவதியாகும் நாளின் விவரம்.


DSE : HIGHER SECONDARY HEAD MASTER PANEL FOR THE YEAR 2016 - 2017

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அரசின் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை:சென்னையில் 10, 12-ம் வகுப்பு மற்றும் பட்டதாரிகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாத 2 மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித்தகுதிகளோடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள், பதிவினை தொடர்ந்து புதுப்பித்து வருபவராகவும் இருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவு வெளியீடு.

SSLC March - 2016 - Retotal Mark Changed Roll No Details click here ...

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மறுக்கூட்டல் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.மாணவர்கள் மறுகூட்டல் மதிப்பெண் பட்டியலை www.tndge.in என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"ஆரோக்கியத்துக்கு உதவும் வில்வம் இலை, காய், பழம்!"

நம் உணவில் பல சத்துக்கள் குறைவாக இருக்கின்றன. இந்தக் குறையை ஈடு செய்யக் கூடிய பழவகைகளை நாம் அடிக்கடி சேர்த்துக் கொள்ள முடிவதில்லை. காரணம், அவற்றின் விலை உயர்ந்திருப்பதுதான். ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்கள் தாம் உயர்ந்த சத்துள்ளவை என்று நினைக்கிறோம். இது உண்மையல்ல. உள்ளூரிலேயே எத்தனையோ பழங்களில் இந்த மாதிரி சத்துக்கள் நிரம்ப இருக்கின்றன. அந்தப் பழங்கள் சாதாரணமாக எங்கும் எப்பொழுதும் கிடைக்கக்கூடியவை. அவற்றில் ஒன்று வில்வப்பழம்.

ஹெல்மெட் அணியா விட்டால் பெட்ரோல் கிடைக்காது!

கேரளாவில் ஹெல்மெட்  அணியாவிட்டால், வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.முதல் கட்டமாக திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய 3 நகரங்களில், வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல்,ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது.

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு.

சென்னை:சென்னை பல்கலைக்கழகத்தில், இளங்கலை, முதுகலை மற்றும் தொழிற் படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த ஏப்ரல் மாதத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் தொழிற் படிப்பில் பல்வேறு பாடப்பிரிவுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிட்டுள்ளன.

7Pay HRA Table(Your Revised House Rent Allowance)

7th Pay Commission Fitment Table


மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி அளிக்கலாமா? என்பது குறித்து பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை இணையதளத்தில் மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது.

 முன்னாள் செயலர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான குழு அண்மையில் சமர்ப்பித்த அந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பிளஸ் 2-வில் ஆங்கில வழி; பி.இ.யிலோ தமிழ்..!

பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஆங்கில வழி பாடத் திட்டத்தில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சிலர், அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிப்பதற்காகவே தமிழ் வழி படிப்பை தேர்வு செய்திருக்கின்றனர்.பள்ளிப் படிப்பை தமிழ் வழியில் படித்து வரும் மாணவர்கள்பொறியியல் படிப்புகளில் சேரும்போது, ஆங்கில வழியில் பாடங்களைப் படிக்க முடியாமல் திணறினர்.

ஜூலை 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்: இந்திய ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு.

அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செய லாளரும், மத்திய அரசு ஊழியர் போராட்டக்குழு உறுப்பினருமான ஸ்ரீ.ஸ்ரீகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:

யுனைட்டட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பணி

யுனைட்டட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 2016 - 2017-ஆம் ஆண்டுக்கான 100 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு...யோகம் ! 7வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல்

நாடு முழுவதும் உள்ள, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதிய உயர்வுக்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இந்தாண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து, முன்தேதியிட்டு, இது அமலுக்கு வருகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியங்கள், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தி அமைக்கப்படுகிறது. முதல் ஊதியக் குழு, 1946ல் உருவாக்கப்பட்டது. கடைசியாக,கடந்த, 2006ல், 6வது ஊதியக் குழு அமைக்கப்பட்டு, 2008ல், நடைமுறைக்கு வந்தது.நீதிபதி, ஏ.கே.மாத்துார் தலைமையிலான, ஏழாவது ஊதியக் குழு,கடந்த, 2013ல் அமைக்கப்பட்டது. இந்தக் குழு, தன் பரிந்துரையை, கடந்த ஆண்டு நவம்பரில் தாக்கல் செய்தது. பல்வேறு துறைகளின் அரசு செயலர்கள் குழு, இதை பரிசீலித்து, தன் அறிக்கையை, சமீபத்தில் மத்திய அரசிடம் அளித்தது.

SSA - Primary CRC16.07.2016SABL Training*Upper Primary CRC30.07.2016ALM Training. SPD PROCEEDING

உத்தரகாண்ட் மாநிலத்தில் திருவள்ளு

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை திறந்துவைக்கப்பட்டது.

புதுடெல்லி :

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை திறந்துவைக்கப்பட்டது.

திருக்குறள் மற்றும் திருவள்ளுவரை பற்றி வட மாநில மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் நகரில் கங்கை நதிக்கரையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று டெல்லி மேல்-சபை பாரதீய ஜனதா எம்.பி. தருண் விஜய் அறிவித்து இருந்தார். அதன்படி, அங்கு சிலை அமைப்பதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வந்தார். 
இதற்காக, தமிழகத்தில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை உருவாக்கப்பட்டு ஹரித்துவாருக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் அரிக்கிபவுடி என்ற இடத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவ திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் அங்கு சிலை நிறுவ அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
இதனால் சங்கராச்சாரியார் சவுக் என்ற இடத்தில் சிலையை நிறுவ ஏற்பாடு செய்தனர். இதற்கான பணிகள் நேற்று முன்தினம் இரவு அங்கு நடைபெற்ற போது சாமியார்கள் சிலர் வந்து, அந்த இடத்தில் சிலை வைப்பதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர்களை சமாதானப்படுத்த அரசு அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது.

இதைத்தொடர்ந்து, ஹரித்துவாரில் உள்ள உத்தரபிரதேச அரசுக்கு சொந்தமான பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகை வளாகத்தில் நேற்று திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநில கவர்னர் ராம் நாயக் சிலையை திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மேகாலயா கவர்னர் சண்முகநாதன், டெல்லி மேல்-சபை காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன், தருண் விஜய், இலங்கை இணை மந்திரி செந்தில் தொண்டைமான் மற்றும் ஏராளமான தமிழர்கள் கலந்துகொண்டனர். 

பின்னர் தருண் விஜய் கூறுகையில், விரைவில் சிலை நிறுவும் இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு சிலை மாற்றம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

ஐ.டி.ஐ.,களில் சேரும் மாணவர்களுக்கு...சலுகை

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு அரசு பல்வேறு சலுகைகளை கூறி அழைப்பு விடுத்துள்ளது. பெரும்பாலான மாணவர்கள் பள்ளி இறுதி வகுப்பு முடித்தவுடன் பிளஸ் 2 வகுப்பில் சேர்ந்து மருத்துவம் அல்லது பொறியியல் பட்டதாரியாகவே விரும்புகின்றனர். ஒரு சில ஏழைக் குடும்பத்தில் உள்ள மாணவர்கள் தான் தொழிற்கல்வி படிக்கின்றனர்.

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பின்னடைவு ஏன் : பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கை பின்னணி

அண்ணா பல்கலையின் இன்ஜி., பொது கவுன்சிலிங் ஜூன், 27ல் துவங்கியது. இதில், விளையாட்டு பிரிவு, மாற்றுத் திறனாளிகள் பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவுக்கான அரசு இட ஒதுக்கீடு இடங்களை தவிர, பொதுப்பிரிவுக்கு, 1.83 லட்சம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான கவுன்சிலிங் நடந்த இரு நாட்களிலும், பெரும்பாலான மாணவர்கள், குறிப்பாக மாணவியர், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இ.சி.இ., எனப்படும், 'எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்ஸ்' துறையை தேர்வு செய்துள்ளனர்.
கவுன்சிலிங் துவங்கிய முதல் நாளிலேயே, சென்னை, அண்ணா பல்கலையின் கட்டுப்பாட்டிலுள்ள, கிண்டி இன்ஜி., கல்லூரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லூரி, அரசு உதவி பெறும் கோவை பி.எஸ்.ஜி., கல்லூரி, மதுரை தியாகராஜா கல்லூரி போன்றவற்றில் இந்த படிப்புகளுக்கான இடங்கள் நிரம்பி விட்டன. மற்ற முன்னணி கல்லூரிகளிலும், இ.சி.இ., மற்றும் கம்யூ., சயின்ஸ் இடங்கள் நிரம்பி விட்டன. அதேபோல், 'எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன்ஸ்' பிரிவிலும் மாணவர்கள் அதிக அளவில் சேர்கின்றனர். இ.சி.இ.,க்கு அடுத்தபடியாக, மெக்கானிக்கல் படிப்பில் மாணவர்கள் சேர்ந்தாலும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போல், மெக்கானிக்கல் பிரிவுக்கு தற்போது அதிக போட்டி இல்லாத நிலை உள்ளது. எலக்ட்ரிக்கல் மற்றும் எல்க்ட்ரானிக்ஸ் துறைக்கும் பெரிய அளவில் போட்டி இல்லை.
மெக்கானிக்கல் படிப்பு பின்னடைவை சந்தித்ததற்கு, வேலை வாய்ப்பின்மையும், குறைந்த சம்பளமுமே காரணம் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது: கம்யூட்டர் சயின்ஸ் அறிமுகமான பின், அதற்கான மவுசு அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த, 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இம்முறை மெக்கானிக்கல், சிவில் மற்றும் எலக்ட்ரிக்கலுக்கு அதிக போட்டி இல்லை. இந்த நிலைக்கு வேலைவாய்ப்பின்மையே காரணம். கடந்த கல்வியாண்டில், தரவரிசையில் முதலில் உள்ள, 50 கல்லுாரிகளில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் சார்ந்த தொழிற்சாலை நிறுவனங்கள், வெறும், 8 சதவீதம் மட்டுமே வேலை அளித்துள்ளன.
அடுத்த கட்டத்திலுள்ள கல்லுாரிகளில், 40 - 50 சதவீத மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர். அவர்களுக்கு மாதம், 8,000 ரூபாய் தான் சம்பளம் கிடைத்தது. முதல் தர கல்லூரிகளில், ஐ.டி., நிறுவன வேலைவாய்ப்பில், 25 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் கிடைத்துள்ளது. அவற்றில் ஐ.டி., நிறுவனங்களே அதிக வேலைவாய்ப்பை அளித்துள்ளன. அதனால் தான், மெக்கானிக்கல் பின்னுக்கு தள்ளப்பட்டு, கம்யூ., சயின்ஸ் மற்றும் அதை சார்ந்த படிப்புகள் முன்னிலைக்கு வந்துள்ளன, என்றார்.

'குரூப் - 2 தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 2 ஏ' பிரிவு தேர்வில் தேர்வானவர்களுக்கு, அடுத்த மாதம், 4ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது. தமிழக அரசு துறையில், குரூப் - 2 ஏ பிரிவில், நேர்முக தேர்வு அல்லாத பணிகளில், 1,676 காலியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.

7 வது ஊதியக் குழு பரிந்துரை பற்றிய செய்தி தொகுப்பு...

7 வது ஊதியக் குழு பரிந்துரையினை 29.06.2016 அன்று புதுடெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை அடிபிறழாமல் ஏற்பு செய்து ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிய முடிகிறது.குறைநதபட்ச ஊதியம் ரூ 18,000 என்றும் அதிகபட்ச ஊதியம் 2.5 லட்சம் ஆகும்.

Wednesday, 29 June 2016

பள்ளிகளில் 2 முதல் 8 வகுப்பு வரை வாசித்தல், எழுதுதல், எளிய கணக்குகளை செய்தல் BRTE/CRTE ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப SSA மாநில திட்ட இயக்குநர் அறிவுரை

புத்தகமில்லா பள்ளி நாளைக் கொண்டாடிய மாணவர்கள்

புத்தகப்பைகளைச் சுமக்காமல் வெறும் கைகளுடன் பள்ளிக்குவந்து புத்தகமில்லா நாளை உற்சாகத்துடன் மாணவ, மாணவிகள் இன்று கொண்டாடினர்.

புத்தகங்கள்தான் அறிவை விரிவடையச்செய்கிறது.  புத்தகங்களால் ஓய்வு நேரத்தையும் பயனுள்ளதாக்கிக் கொள்ள முடியும். எச்சந்தர்ப்பத்திலும் நம்மை விட்டுப் பிரியாத நண்பர்கள் புத்தகங்களே.  புத்தகங்கள் அலங்காரப்பொருளாக இல்லாமல் அறிவைப் பெருக்கும் பொருளாக மாற வேண்டும். மாணவர்களின் அறிவுத் தாகத்தை திணிப்பதும் புத்தகங்கள்தான். இவ்வாறு பல வழிகளில் புத்தகங்கள் நம்மால் உணரப்பட்டுள்ளன.இந்நிலையில், ஒரு நாள் முழுதும் புத்தகங்களே இல்லாமல் ஒரு நாளை பள்ளி மாணவர்கள் கொண்டாடியதை வித்தியாசமான நிகழ்வாகப் பார்க்க முடிந்தது.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் வெங்கடேஸ்வரா மேனிலைப்பள்ளியில் இன்று மாணவ, மாணவியர் பள்ளிக்கு பாட புத்தகங்கள் இல்லாமல் வருகை தந்து சக மாணவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். பள்ளிக்கு வருகை தந்த மாணவர்கள் எல்.கே.ஜி முதல் மேல்நிலை படிக்கும் மாணவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடிக் கொண்டனர்.புத்தகமில்லாத் தினத்தையொட்டி  களக்கமங்கலம் சக்திவேல்குழுவினரின் இசைப்பாடல்கள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாணவர்களும் ஆடிப்பாடி புத்தகமில்லா தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளுடன் மாணவர்கள் அமர்ந்து ஒருவருக்கொருவர் உரையாடிக்கொண்டும், கதை பேசிக் கொண்டும், விளையாடிக் கொண்டும், கவிதைகள் பாடல்கள் பரிமாறிக் கொண்டும் ஆனந்தமடைந்தனர்.

சென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.

சென்னைப் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (ஜூன் 30) வெளியிடப்பட உள்ளன.2016 ஏப்ரலில் நடத்தப்பட்ட இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான இந்தத் தேர்வு முடிவுகளை www.result.unom.ac.in, www.ideunom.ac.in, http:egovernance.unom.ac.in  ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

மறுமதிப்பீடு:

தேர்வு மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஜூலை 1-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை பல்கலைக்கழக இணையதளத்தில் ஆன்-லைனில் பதிவு செய்து, அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ரூ. 1,000-க்கான வங்கி வரைவோலையை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

மறுகூட்டல்:அதுபோல, மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களும், ஆன்-லைனில் பதிவு செய்த விண்ணப்பத்துடன் ரூ. 300-க்கான வங்கி வரைவோலையை இணைத்து ஜூலை 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஜூலை 23-இல் உடனடித் தேர்வு:இளநிலை பட்டப் படிப்பில் 5-ஆவது பருவத் தேர்வு வரை அனைத்துப் பாடங்களில் தேர்ச்சி பெற்று, 6-ஆவது பருவத் தேர்வில் ஒரே ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியுற்றவர்கள் உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.அதுபோல முதுநிலை பட்டப் படிப்பில் 3-ஆவது பருவத் தேர்வுவரை அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று, 4-ஆவது பருவத் தேர்வில் ஒரே ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியடைந்தவர்களும் உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தொழில் படிப்பு மாணவர்களும் உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களைச்சமர்பிக்கவும் ஜூலை 8 கடைசித் தேதியாகும்.இந்த உடனடித் தேர்வு சென்னையில் மூன்று மையங்களில் ஜூலை23-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான தேர்வறை அனுமதிச் சீட்டை ஜூலை 18-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ALAGAPPA UNIVERSITY DDE - B.ED. provisional selection list (AY 2016-17)

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"வாழைப்பூ-மருத்துவக் குணங்கள்"

வாழைப்பூ

இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூவூம் ஒவ்வொரு விதமான அழகையும் மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.
நம் முன்னோர்கள் வாழையை பெண் தெய்வமாக வழிபட்டனர். மணவிழா, மங்கள விழாக்களில் வாழை முக்கிய இடம்பெற்றிருக்கும். வாழையின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டுள்ளன.

இனி மாணவர்களின் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணுக்கு மதிப்பு இருக்குமா...!?

நீங்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1200க்கு 1180 மதிப்பெண் பெற்று இருக்கிறீர்களா...?  ஆனால், உங்களுக்கு இளங்கலை ஆங்கிலம் படிக்க தான் விருப்பமா...? நல்லது. ஆனால், அந்த மதிப்பெண்ணை தூர வையுங்கள். இன்னும் சில ஆண்டுகளில் அது உங்களுக்கு பயன்படாமல் போகலாம்.

ஆம். நீங்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிபெண்கள் பெற்றிருந்தாலும்,  நீங்கள் உயர் கல்வியில் சேர இன்னொரு தகுதிதேர்வு எழுத வேண்டும். அதில் வெற்றி பெற்றால் தான், நீங்கள் விரும்பிய படிப்பைபடிக்க முடியும்.என்ன... கலை படிப்பில் சேர தகுதி தேர்வா? மருத்துவத்திற்கே தகுதி தேர்வு கூடாது என போராடி வரும் சூழலில், கலை படிப்பிற்கு ஏன் தகுதி தேர்வு? உளறாதீர்கள் என்கிறீர்களா. இல்லை நான் உளறவில்லை. புதிய கல்வி கொள்கையை வடிவமைப்பதற்காக வழங்கப்படுள்ள சுப்பிரமணியன் குழு அறிக்கையில் அவ்வாறு தான் உள்ளது.அந்த அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டால், நிச்சயம் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பின், நீங்கள் என்ன படிப்பு படிக்க விரும்பினாலும், அதற்கான தனி தகுதி தேர்வு எழுத வேண்டி நிலை வரும்.

புதிய கல்விக் கொள்கை...:

அண்மையில் பீகார் கல்வி அமைச்சர், இந்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியிடம் சமூக ஊடகத்தில்  ‘டியர், புதிய கல்விக் கொள்கையை எப்போது வெளியிடப்போகிறீர்கள்..?’ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.ஆனால், துரதிருஷ்டமாக புதிய கல்விக் கொள்கை என்ற சொற்றொடர் கவனம் பெறாமல், டியர் என்ற சொல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பெரும் விவாதமாக மாறியது. சரி, நாமாவது புதிய கல்விக் கொள்கை மீது கொஞ்சம் கவனம் செலுத்துவோம்.

இந்தியாவின் அடுத்த தலைமுறையின் தலையெழுத்தை நிர்ணயக்க போவது இந்த புதிய கல்விக் கொள்கை தான். இந்தியாவின் கல்வி துறை எத்திசையில் பயணிக்க வேண்டும் என்பதை வழிக்காட்ட போவதும் இந்த புதிய கல்விக் கொள்கை தான்.இதற்காக மத்திய அரசு  முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து இருக்கிறது.இந்த குழுவின் பணி, நாடு முழுவதும் பயணித்து மக்களை, ஆசிரியர்களை, கல்வியலாளர்களை சந்தித்து, அவர்களின் கருத்தை கேட்டு அறிக்கையாக தயார் செய்து மத்திய அரசிடம் வழங்க வேண்டும்.அதன் அடிப்படையில் மத்திய அரசு  புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்கும். சுப்பிரமணியன் குழு அறிக்கையை சமர்பித்துபல மாதங்கள் ஆகியும் இன்னும் மத்திய அரசு அதை வெளியிடாமல் இருக்கிறது. ஆனால், அந்த 230 பக்க அறிக்கையை பொதுபள்ளிக்கான மாநில மேடை அமைப்பு எப்படியோ கைப்பற்றி, தங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

என்ன இருக்கிறது அந்த அறிக்கையில்...?

அந்த அறிக்கை குறித்து பொதுபள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசிய போது, “அந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் அனைத்தும், கல்வித் துறையில் மாநில அரசின் அதிகாரத்தை குறைப்பதாகவே இருக்கிறது.அதாவது, இந்த அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ள பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், மத்திய அரசு தான் கல்வி குறித்த முடிவுகளை எடுக்கும். அதை செயல்படுத்தும் அதிகாரம் மட்டும் தான் மாநில அரசிற்கு இருக்கும்.அதுமட்டுமல்லாமல், மாநில அரசின் அதிகாரம் நகைப்பிற்குரியதாகவும் மாறும். மாநில அரசால் வைக்கப்படும் தேர்வுகளுக்கு மதிப்பில்லாமல் போகும்.பன்னிரெண்டாம் வகுப்பில் மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தாலும், அதற்கு எந்த மதிப்பும் இருக்காது. எந்த படிப்பில் சேர வேண்டுமென்றாலும், அதற்கான தனி தகுதி தேர்வு இருக்கும். அதில் வெற்றிபெற்றால் தான், மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான படிப்பில் சேர முடியும்” என்றவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்,

சரி.. இந்த அறிக்கை எப்படி தயார் செய்யப்பட்டது?

இந்தியா முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், வட்ட அளவில்  கூட்டங்கள்நடத்தி, ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியலாளார்கள் ஆகியோரிடம் கருத்து கேட்டு, இந்த அறிக்கையை தயார் செய்ததாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அப்படி அவர்கள் யாரையும் சந்தித்து கருத்து கேட்டதாக தெரியவில்லை.கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில்ஏறத்தாழ 20,000 பேரை சந்தித்து, இந்த புதிய கல்வி கொள்கை குறித்து உரையாடினோம்.அவர்களிடம் புதிய கல்வி கொள்கை குறித்து உங்களிடம் ஏதேனும் கருத்து கேட்கப்பட்டதாஎன்று கேட்டோம். ஆனால், அவர்கள் யாருக்கும் புதிய கல்வி கொள்கையை இந்தியா வடிமைக்கிறது என்பதே தெரியவில்லை. அதாவது யாரிடமும் கருத்துக் கேட்கப் படவில்லை.

யாரிடமும் கருத்துக் கேட்கபடவில்லையா ?

மத்திய அரசிற்கு நெருக்கமானவர்களிடம் மட்டும் வேண்டுமானால் கருத்து கேட்கப்பட்டிருக்கலாம். அந்த குழு, மக்களின் கருத்தை கேட்க தான் வடிவமைக்கப்பட்டது. ஆனால், அவர்கள் மக்களைசந்தித்து கருத்து கேட்கவில்லை. மக்களின் கருத்தை பெறாமல் ஒரு புதிய கொள்கையை வடிவமைப்பது ஜனநாயக படுகொலை.

இந்த அறிக்கையில் வேறு என்ன பரிந்துரைகள் இருக்கிறது ?

அதிகாரத்தை பரவலாக்க வேண்டும் என்று அனைவரும் குரல் கொடுத்து வரும்பட்சத்தில், இந்த அறிக்கை அதிகாரம் முழுவதையும் மத்திய அரசின் கைகளில் திணிக்கிறது. மத்திய அரசின் விருப்பமும் அதுவாக தான் இருக்கிறது.

கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா...?

இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து, புதியகல்விக் கொள்கை வடிவமைக்கப்படும்பட்சத்தில்,  மத்திய அரசு  உருவாக்கும் பாடத்திட்டத்தை, மாநில அரசுபின்பற்றும் நிலை ஏற்படும். இந்தியா பல இனங்கள், பல கலாச்சாரங்களை கொண்ட நாடு. வடகிழக்கில் உள்ள கலாச்சாரம் வேறு, தமிழ் நாட்டின் கலாச்சாரம் வேறு.இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், மத்திய அரசு உருவாக்கும் பாடத்திட்டத்தை மாநிலங்கள் பின்பற்ற வேண்டுமென்று கட்டாயப்படுத்தினால், விளைவுகள் படுமோசமானதாக இருக்கும். இது இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கும், அரசியல் அமைப்பிற்கும் எதிரானது.கல்வி நிர்வாகப் பணிக்கு ‘இந்திய கல்வி பணித் தேர்வு (IES)’ என்ற பரிந்துரையையும்வழங்கப்பட்டு இருக்கிறது. அதாவது, இனி கல்வி துறையை நிர்வகிப்பதில் கல்வியாளர்களின் பங்களிப்பு என்பது குறைந்து, நிர்வாகிகளின் பங்களிப்பு அதிகமாகும்.புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க அமைக்கப்பட்டுள்ள சுப்பிரமணியன் குழுவே முழுக்க நிர்வாகிகளை கொண்ட குழுவாக தான் இருக்கிறது. அதில் உள்ள ராஜ்புட் ஒருவரை தவிர மற்ற யாரும் கல்வியாளர்கள் இல்லை.கல்வியாளர்கள் பெரும்பான்மையாக இல்லாத ஒரு குழு கல்வி குறித்த ஒரு கொள்கையை வடிவமைத்தால் இப்படி தான் இருக்கும்.

நம் கோரிக்கைகள் என்ன...?

மத்திய அரசு வெளிப்படையாக செயல்பட வேண்டும். உடனடியாக இந்த குழுவின் அறிக்கையை வெளியிட்டு, கல்வியலாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,  பெற்றோர்கள் ஆகியோருடன்  விவாதம் நடத்தி, அவர்களின் கருத்தினை இப்போதாவது பெற வேண்டும் என்பது தான் நமது பிரதான கோரிக்கை. அது மட்டுமல்ல, கல்வித் துறையில் மாநிலத்தின் அதிகாரங்கள் முழுவதுமாக பறிக்கப்படும் அபாயம் இருக்கிறது. அதனால் மாநில அரசும் இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

நன்றி-விகடன்
- மு. நியாஸ் அகமது

Flash News:7ஆவது ஊதியக்குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.இனி மத்திய அரசு ஊழியர்களின் ஆரம்ப ஊதியம் ரூ.18,000.

தில்லி:மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

7வது ஊதியக் குழு பரிந்துரைகள் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படுகிறது.ஊதியக் குழு அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பான அறிக்கையை மத்திய அமைச்சரவை செயலர் பி.கே. சின்ஹா தலைமையிலான செயலர் குழு இறுதி செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நிதி அமைச்சகம் அமைச்சரவைக் குறிப்பைத் தயார் செய்தது.

இதையடுத்து, ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு இன்று புது தில்லியில்நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.7-ஆவது ஊதியக் குழுவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதன் அடிப்படையில், அதன் பரிந்துரைகள் சென்ற ஜனவரி 1-ஆம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படும். இதனால், 50 லட்சம் மத்திய அரசு பணியாளர்களும், 58 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவர்.7வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவதால், மத்தியஅரசுக்கு ஆண்டுக்கு ரூ.1.02 லட்சம் கோடி கூடுதலாக செலவாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 0.7 சதவீதம்.7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 14.27 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணியில் சேரும் அறிமுக நிலை பணியாளருக்கான மாத ஊதியம் தற்போதைய ரூ.7,000-லிருந்து, ரூ.18,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும், அமைச்சரவை செயலரின் அதிகபட்ச மாத ஊதியம் தற்போதைய ரூ.90,000-லிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

2016-17- PRIMARY/MIDDLE/HIGH/HSS-MONTHLY WISE WORKING DAY LIST...

M.Phil Admission Notification - Bharathidasan University


Quality - Teachers Participation in Tools Preparation - விருப்பமுள்ள ஆசிரியர்களின் பெயர்களை சேகரிக்கிறது SSA


மாணவர்களுக்கு கல்விக்கடன்: வங்கிகள் இந்த ஆண்டுமுதல் புதிய அணுகுமுறை.

பொறியியல் கல்லூரிகளின் தரம், வளாக நேர்முகத்தேர்வு வேலைவாய்ப்புகள் ஆகிய வற்றின் அடிப்படையில் மட்டுமே மாணவர்களுக்கு கல்விக்கடன் அளிக்க வங்கிகள் முடிவுசெய்துள்ளன.

7th Pay:மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அமைச்சரவை இன்றுஒப்புதல் அளிக்கிறது?

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை அதிக அளவுஉயர்த்தும்படி அமைச்சரவை செயலர்கள் குழு தாக்கல் செய்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வில் இந்த ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கு மீண்டும் மதிப்பு கூடியுள்ளது.


எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசனுக்கு அடுத்து 2-வது இடத்தைபிடித்தது.
 அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வில் இந்த ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கு மீண்டும் மதிப்பு கூடியுள்ளது.

போட்டித் தேர்வு மூலம் 272 விரிவுரையாளர்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறு வனங்களில் 272 விரிவுரையாளர் கள் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவர வியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களில் விரிவுரையாளர் காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

பயிற்றுநர்களுக்கான பயிற்சி தொடக்கம்.

மத்திய கல்வி, ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி), தமிழக அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) ஆகியவை சார்பில் பயிற்றுநர்களுக்கான 5 நாள் பயிற்சி சென்னை டிபிஐ வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.இந்தப் பயிற்சியைத் தொடக்கிவைத்து என்சிஇஆர்டியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரஞ்ஜனா அரோரா பேசியதாவது:

மேலும் 220 பள்ளிகளில் "ஸ்டெம்' பயிற்சித் திட்டம்.

மாணவர்களுக்கான செய்முறைக் கற்பித்தல் பயிற்சியான"ஸ்டெம்' பயிற்சித் திட்டம், நிகழ் கல்வியாண்டில் மேலும் 220 பள்ளிகளில் தொடங்கப்படுகிறது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) சார்பில், கடினமான பாடங்களான அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், பொறியியல் ஆகியவற்றை, ஆசிரியர்கள் எளிதாக மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கான"ஸ்டெம்' திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

ஜூலையில் 11 நாள்கள் வங்கிகள் செயல்படாது...

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம், விடுமுறை நாள்கள் (2-ஆவது, 4-ஆவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை), ரமலான்பண்டிகை தின விடுமுறை (ஜூலை 6) ஆகியவை காரணமாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட தேசிய வங்கிகள் ஜூலை மாதம் 11நாள்கள் செயல்படாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

சித்தா, ஆயுர்வேதாவுக்கு 541 விண்ணப்பம்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, நாகர்கோவிலில் உள்ள, ஆறு அரசு கல்லூரிகளில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி,நேச்சுரோபதி - யோகா மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கு, 356 இடங்களும், 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்களும் உள்ளன.

சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் நாளை கடைசி நாள்.

மத்திய இடைநிலை பாடத்திட்ட வாரியமான சி.பி.எஸ்.இ.,யின் அங்கீகாரம் பெறுவதற்கு, பள்ளிகள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, நாளையுடன் முடிகிறது.தனியார் மெட்ரிக் பள்ளிகள், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றன.

மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து இன்று...முடிவு! பேச்சுக்கு அரசு அழைத்தால் வாபஸ் வாங்க சங்கங்கள் தீவிரம்

மத்திய அரசு ஊழியர்கள், 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை, 11 முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.'திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடக்கும்' எனக் கூறியுள்ளரயில்வே தொழிற்சங்கங்களும் ஆயத்த பணியில் இறங்கி உள்ளன.

மனித ஆற்றல் தரவரிசை: பின்லாந்து முதல் இடம், இந்தியாவுக்கு 105-வது இடம்

மனித ஆற்றலை உருவாக்கி, வளர்த்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது, இந்தியா பின்தங்கி, 105-வது இடத்தில் உள்ளது.

தியான்ஜின்:

மனித ஆற்றலை உருவாக்கி, வளர்த்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது, இந்தியா பின்தங்கி, 105-வது இடத்தில் உள்ளது. 

சீனாவின் தியான்ஜின் நகரத்தில் உலகப் பொருளாதார அமைப்பின் ஆண்டுக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் பொருளாதார வளர்ச்சிக்காக மனிதர்களின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ளுதல், ஒட்டுமொத்த வளர்ச்சி அடைய நாடுகளின் திறமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மனித ஆற்றல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

மொத்தம் 130 நாடுகளிடையே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், பொருளாதார வளர்ச்சிக்கு மனித வளத்தை அதிக அளவில் (85 சதவீதம்) பயன்படுத்திக் கொள்ளும் நாடுகளில் முதல் இடத்தை பின்லாந்து பிடித்துள்ளது. நார்வே இரண்டாம் இடத்தையும், அதற்கடுத்த இடங்களை ஸ்விட்சர்லாந்து, ஜப்பான், ஸ்வீடன், நியூஸிலாந்து, டென்மார்க், நெதர்லாந்து, கனடா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளும் பிடித்து, இப்பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ளன.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 100-ஆவது இடத்தைப் பிடித்த இந்தியா, இந்த ஆண்டு 105-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. இந்தியா 57 சதவீத அளவுக்கு மட்டுமே மனித ஆற்றலைப் பயன்படுத்தியுள்ளதாக உலகப் பொருளாதார அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் கூறப்பட்டது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!