Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 30 September 2016

மெட்ரோ ரெயில்வேயில் 3,428 பணியிடங்கள்

டெல்லி மெட்ரோ ரெயில்வேயில் 3 ஆயிரத்து 428 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-

  டெல்லி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் மெட்ரோ ரெயில்வே பணிகள் நடந்து வருகின்றன. சில திட்டங்கள் செயல்பாட்டிற்கும் வந்துள்ளன. இந்த துறையில் டெல்லி மெட்ரோ ரெயில்வேயில் 3ஆயிரத்து 428 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

பிரிவு வாரியாக மெயின்டனர் பணிக்கு 1393 பணியிடங்களும், ஸ்டேசன் கண்ட்ரோல்/ டிரெயின் ஆபரேட்டர் பணிக்கு 662 பணியிடங்களும், கஸ்டமர் ரிலேசன்ஷிப் அசிஸ்டன்ட் பணிக்கு 1100 பணியிடங்களும், ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு 205 இடங்களும் உள்ளன. அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு 44 இடங்களும், அக்கவுண்ட் அசிஸ்டன்ட் பணிக்கு 24 இடங்களும் உள்ளன. பி.இ., பி.டெக் படித்தவர்கள், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., எம்.பி.ஏ. படித்தவர் களுக்கு அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். என்ஜினீயரிங் பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ படித்தவர்களுக்கு ஜூனியர் என்ஜினீயர் மற்றும் டிரெயின்ஆபரேட்டர் போன்ற பணிகளில் வாய்ப்பு உள்ளது. 3 ஆண்டு, 4 ஆண்டு கால பட்டப்படிப்பை முடித்தவர்கள் கஸ்டமர் ரிலேசன் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ. படித்தவர்கள் மெயின்டெய்னர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள் 1-7-2016 தேதியில் 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-7-1988 மற்றும் 1-7-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். 

எழுத்து தேர்வு, குழு கலந்துரையாடல், நேர்காணல், உளவியல் தேர்வு, மருத்துவ பரிசோதனை போன்ற தேர்வுமுறைகளில் பணிக்கு அவசியமான தேர்வுகள் பின்பற்றப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 15-10-2016-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.delhimetrorail.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

புதிய கல்விக் கொள்கை: மக்களின் கருத்தை பதிவு செய்ய கால நீட்டிப்பு அவசியம்'

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கான முன்மொழிவுகளை இணையதளத்தில் வெளியிட்டு, பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்வதற்காக கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித் தார்.புதிய கல்விக் கொள்கையில் உள்ள குறைபாடுகளை விளக்கி, மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்துவரும் அவர் திருவாரூரில் அண்மையில், அளித்த பேட்டி:
புதிய கல்விக் கொள்கை முன்வடிவுகள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ம் தேதியுடன் (இன்றுடன்) முடிவடைகிறது. இந்த அவகாசம் போதாது.ஆண்டுதோறும் மத்திய அரசு தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கை தயாரிப்புக்கு முன்னதாக தொழில் துறையினரிடம் கருத்து கேட்கும் மத்திய அரசு, ஒரு தலைமுறையையே உருவாக்குகின்ற கல்வித் திட்டத்தை உருவாக்கும் போது ஆசிரியர்கள், மாணவர்கள் அமைப்பைக் கூட்டி கருத்துகளைப் பெற ஏன் மறுக்கிறது?தமிழக அரசு தனது கருத்தை இந்திய அரசுக்குப் பதிவு செய்யும் முன்னர் தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அமைப்புகளை அழைத்துப் பேச வேண்டும் என்ற கோரிக்கைக்கு எந்த பதிலும் இல்லை.

எனவே, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோரிடம் ஆலோசிக்காமல்கொள்கை முடிவுகளை இறுதிப்படுத்துவதை ஏற்க முடியாது.மேலும், கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதிதான் இந்த முன்மொழிவுகள் 11 இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.இந்த நிலையில் பிராந்திய மொழி மட்டுமே தெரிந்த மக்களால், அதைப் படித்து புரிந்துகொள்ள சாத்தியமில்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்ட மீதமுள்ள 11மொழிகளில் அதனை மொழிபெயர்த்து வெளியிடவில்லை. எனவே, கால அவகாசத்தை கட்டாயம் நீட்டிக்க வேண்டும்.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை மற்றும் பல்வேறு அமைப்புகள் சேர்ந்து பிரச்சாரத்தை மேற்கொண்டதன் விளைவாக புதிய கல்விக்கொள்கையில் உள்ள பாதகமான அம்சங்களை எதிர்ப்பதற்காக கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு என்ற அமைப்பை, 40 அமைப்புகள் ஒருங்கிணைந்து உருவாகியுள்ளன. தற்போது புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக இவர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். 10 லட்சம் கையெழுத்துகளைப் பெற்று மத்திய அரசிடம் வழங்கவுள்ளனர்.அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் மாற்றுக் கல்விக்கான மாநாடு நடத்தி அதில் மாற்றுக் கல்விக் கொள்கையை இக்கூட்டமைப்பினர் வெளியிட உள்ளனர். 

அரசு தொழில் நுட்ப தேர்வு முடிவுகள் வெளியீடு !

துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

இடைநிலை ஆசிரியர்கள்

1. 004 - Deputy Inspectors Test-First Paper

(Relating to Secondary and Special Schools) (without

books)

2. 017 - Deputy Inspector’s Test--Second Paper

(Relating to Elementary Schools) (Without Books)

3. 119 - Deputy Inspector’s Test

Educational Statistics (With Books).

4 . 176 - Account Test for Subordinate Officers - Part I .

(or)

114 The Account Test for Executive Officers (With Books).

5 . 208 - The Tamil Nadu Government Office Manual Test

(Previously the District Office Manual--Two Parts) (With

Books).

பட்டதாரி ஆசிரியர்கள்

1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .

(or)

114 The Account Test for Executive Officers (With Books).

2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test

(Previously the District Office Manual--Two Parts) (With

Books).

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்

1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .

(or)

114 The Account Test for Executive Officers (With Books).

2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test

(Previously the District Office Manual--Two Parts) (With

Books).

மாவட்டக்கல்வி அலுவலர்

பிளஸ் 2 பாடபுத்தக அளவு மாற்றம்!!!

பிளஸ் 2 பாட புத்தகத்தின் அளவில், மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சரி பார்ப்பு பணி நேற்று துவங்கியது.

பிளஸ் 2 பாட புத்தகம், ஏ5 அளவில் (5.83x8.27) உள்ளது. இதனால் மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டது. கற்றலில் பின்னடைவு மற்றும் கற்கும் திறன் தாமதமாவதாகவும் ஒரு கருத்து எழுந்தது. இதை தொடர்ந்து புத்தக அளவை மாற்றம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி ஏ4 அளவில் (8.27x11.69) புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது.

பழைய புத்தகத்தில் இருந்த வரிகள், அளவு மாற்றி அச்சிடப்பட்ட புத்தகத்தில் மாறாமல் வந்துள்ளதா? அல்லது மாற்றம் உள்ளதா? என்பது குறித்த ஆய்வு, ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது. ஈரோட்டில் கணக்குப்பதிவியல், வணிகவியல், உயிரி-வேதியியல், ஆங்கில பாட புத்தகங்களை சரிபார்க்கும் பணி நடக்கிறது. ஒரு பாட பிரிவுக்கு மூன்று குழு வீதம், பாட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு குழுவில் அரசு, மெட்ரிக்., பள்ளி என இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். ஈரோடு மட்டுமின்றி திருச்சி, சென்னையிலும் நடக்கும் இந்தப் பணி, அக்.,1ம் தேதி வரை நீடிக்கும் என்று, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

 3 ஆம் வகுப்பு தொடக்க நிலை மாணவர்களுக்கான 2-ஆம் பருவம் தமிழ்,ஆங்கிலம்,அறிவியல் வாசித்தல் ,எழுதுதல் பயிற்சித்தாள் மற்றும் புதிய வார்த்தைகள்..

நன்றி:ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி
               
               காஞ்சிபுரம்.

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

1.    ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளை கொண்ட உயிரி - மண்புழு
2.    இந்திய வரலாற்றில் கெளடில்யரின் பெயர் இடம் பெறக்காரணம் - அவர் புகழ்பெற்ற அர்த்த சாஸ்திரம் என்ற நூலை எழுதினார்.
3.   தாவரங்களின் சுவாச உறுப்பு - இலை
4.   1995-இல் எட்டாவது சார்க் மாநாடு நடந்த இடம் - தில்லி

5.   தீனே - இலாஹியுடன் தொடர்புடையவர் - அக்பர்
6.   அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் - ஜார்ஜ் வாஷிங்டன்
7.   அக்டோபர் புரட்சியுடன் தொடர்புடையவர் - லெனின்
8.   மெகஸ்தினிஸ் எழுதிய புத்தகம் - இண்டிகா
9.   குன்னார் மீர்தால் எழுதிய நூல் - ஆசிய நாடகம்
10.   வெள்ளையனே வெளியேறு கோஷம் துவங்கி ஆண்டு - 1942
11.   1919- இல் ஜாலியன் வாலாபாக் நிகழ்ச்சியுடன் தொடர்புடையவர் - டையர்
12.   இந்தியாவை ஐரோப்பாவுடன் இணைப்பது - சூயஸ் கால்வாய்
13. அறிவியல் தினமாக கொண்டாடப்படும் பிறந்தநாள் யாருடையது - சி.வி.ராமன்
14.   Nightingale என்பது - பாடும் பறவை
15.   இயற்கைகள் இல்லாத பறவை - கிவி
16.   உலகின் மிகப்பெரிய குளிர்பாலைவனம் - அண்டார்டிகா
17.   மிக நீளமான பாலைவனம் - சிஹாரா
18.   மைக்கா கிடைக்கும் மாநிலம் - மேற்கு வங்காளம்
19.   ராஜதரங்கிணியை எழுதியது - கல்ஹனா
20.   காப்பி அதிகம் உற்பத்தியாகும் மாநிலம் - கர்நாடகா
21.   ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் அமைந்துள்ள இடம் - ஊட்டி
22.   திட்டக்குழு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1950
23.   உலகின் சர்க்கரைக் கிண்ணம் - கியூபா
24.   உலகிலேயே தொழிற்சாலை அதிகமுள்ள நகரம் - டோக்கியோ
25.   சையாம் நாட்டின் புதுப்பெயர் - தாய்லாந்து
26.   மாண்டிரியல் எந்த நதிக்கரையில் உள்ளது - ஒட்டாவா
27.   அமெரிக்க சட்டப்பேரவையின் பெயர் - காங்கிரஸ்
28.   மான்செஸ்டர் எதற்கு பெயர்பெற்றது - பருத்தித்துணி
29.   சூயஸ்கால்வாய் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு - 1956
30.   இரண்டாவது பாணிபட்போர் நடந்த ஆண்டு - 1556
31.   அஸ்ஸாமின் தலைநகரம் - டிஸ்பூர்
32.   ஐக்கிய நாடுகளின் தினம் - அக்டோபர் 24
33.   உலக சுகாதார நிறுவனம் அமைந்துள்ள இடம் - ஜெனிவா
34.   நாடுகளின் சங்கம் துவங்கப்பட்ட ஆண்டு - 1919
35.   ஏனாம் - புதுச்சேரியின் ஒரு பகுதி
36.   லிரா நாட்டின் பணத்தின் பெயர் - இத்தாலி
37.   கியூபா நாட்டின் சுதந்திர வீரர் - பிடல் காஸ்ட்ரோ
38.   சர்வதேச குடும்ப தினம் - மே 15
39. இந்தியாவில் உள்ள செய்தித்தாள்களில் மிகவும் பழமையானது - பம்பாய் சமாச்சார்
40.   பார்க்கர் எந்தப் பொருளின் வியாபாரப் பெயர் - பேனா
41.   இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்டவர் - வல்லபபாய் படேல்
42.   ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் - சுவிட்ஸர்ஸாந்து
43.  1996-இல் சிறந்த அரசு சேவைக்காக ராமன் மாக்சேசே விருது பெற்றவர் - டி.என். சேஷன்
44.   இந்திய தேசிய காங்கிரஸ் துவங்கப்பட்ட ஆண்டு - 1885
45.   "மெயின் காம்ப்" நூலை எழுதியவர் - ஹிட்லர்
46.   கொலம்போ திட்டம் எந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது - 1951
47.   முதல் கிழக்கிந்திய கம்பெனியின் ஆங்கில கவர்னர் - வாரன் ஹேஸ்டிங்
48.  மும்பைக்கும் தானாவிற்கும் இடையே போடப்பட்ட முதல் ரயில் பாதையின் நீளம் - 32 கி.மீ
49. மாக்னா கார்ட்டா எனும் சுதந்திர சாசனம் இரண்டாம் ஜானினால் கையெழுத்திடப்பட்ட ஆண்டு - 1215
50.   "லார்ட்ஸ்" கிரிகெட் மைதானம் எங்குள்ளது - லண்டன்
51.  யுரேகா! யுரேகா! என்று கூறியவர் - ஆர்கிமிடிஸ்
52.  தேசிய பாதுகாப்புக்கழகம் உள்ள இடம் - கடக்வாஸ்லா
53.  கண்ட்லா துறைமுகம் எந்த மாநிலத்தில் உள்ளது - குஜராத்
54.  இந்தியாவின் முதல் பொழுதுபோக்கு வண்ணப்படம் - இன்சானியத்
55.  ராணுவ இசைப்பள்ளி உள்ள இடம் - பஞ்சுருத்தி
56.  தாஷ்கண்ட் ஒப்பந்தத்துடன் தொடர்புடையவர் - லால்பகதூர் சாஸ்திரி
57. நான் ஏராளமான மருத்துவர்களின் உதவியுடன் இறந்து கொண்ருக்கிறேன் என்றவர் - அலெக்சாண்டர்
58.  லோக் சபாவின் ஆயுட்காலம் - 5 ஆண்டுகாலம்
59.   டிக்பாயில் கிடைப்பது - பெட்ரோல்
60.   உலகின் மிக நீளமான ஆறு - நைல்
61.   பொகாரோ எஃகு ஆலை எந்த நாட்டு உதவி பெற்றது - ரஷ்யா
62.   ஜலஹல்லி எதனுடன் தொடர்புடையது - இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ்
63.   1992-இல் ஒலிம்பிக் நடைபெற்ற இடம் - பார்சிலோனா
64.   மறைமுக வரி என்பது எது - எக்ஸைஸ் வரி
65.   டாக்டர் வாட்சன் கதாபாத்திரத்தில் வந்தது - ஷெர்லாக் ஹோம்ஸ்
66.   இராணி கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது -  கிரிக்கெட்
67.   இந்தியாவில் வானொலி கொண்டுவரப்பட்ட ஆண்டு - 1927
68.   சூயஸ் கால்வாயின் நீளம் - 165 கி.மீ
69.   மைடியர் குட்டிச்சாத்தான் முதல் படம் - முப்பரிமாணம் (3D)
70.   வைகை எக்ஸ்பிரஸ் எந்த  இரு நகரங்களுக்கிடையே ஒடுகிறது - சென்னை - மதுரை

BSNL பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 2510 JTO பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 2510  Junior Telecom Officer (JTO)  பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.12-2/2016-Rectt

பதவி: Junior Telecom Officer

தகுதி: பொறியியல் துறையில் Tele Commmunication, Electronics, Radio, Computer, Electrical, Electronics, IT, Instrumentation போன்ற பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் அல்லது எலக்ட்ராணிக்ஸ், கணினி அறிவியலில் எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ேட்-2017 தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கேட்-2017 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.10.2016

கேட்-2017 தேர்வு நடைபெறும் தேதி: 04.02.2017 முதல் 12.02.2017 வரை

JTO பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.01.2017 முதல் 31.01.2017 வரை

JTO பணி தொடர்பான கூடுதல் விவரம் டிசம்பர் 1-ஆம் தேதிக்கு பிறகு பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வ www.externalexam.bsnl.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

1.    ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளை கொண்ட உயிரி - மண்புழு
2.    இந்திய வரலாற்றில் கெளடில்யரின் பெயர் இடம் பெறக்காரணம் - அவர் புகழ்பெற்ற அர்த்த சாஸ்திரம் என்ற நூலை எழுதினார்.
3.   தாவரங்களின் சுவாச உறுப்பு - இலை
4.   1995-இல் எட்டாவது சார்க் மாநாடு நடந்த இடம் - தில்லி

5.   தீனே - இலாஹியுடன் தொடர்புடையவர் - அக்பர்
6.   அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் - ஜார்ஜ் வாஷிங்டன்
7.   அக்டோபர் புரட்சியுடன் தொடர்புடையவர் - லெனின்
8.   மெகஸ்தினிஸ் எழுதிய புத்தகம் - இண்டிகா
9.   குன்னார் மீர்தால் எழுதிய நூல் - ஆசிய நாடகம்
10.   வெள்ளையனே வெளியேறு கோஷம் துவங்கி ஆண்டு - 1942
11.   1919- இல் ஜாலியன் வாலாபாக் நிகழ்ச்சியுடன் தொடர்புடையவர் - டையர்
12.   இந்தியாவை ஐரோப்பாவுடன் இணைப்பது - சூயஸ் கால்வாய்
13. அறிவியல் தினமாக கொண்டாடப்படும் பிறந்தநாள் யாருடையது - சி.வி.ராமன்
14.   Nightingale என்பது - பாடும் பறவை
15.   இயற்கைகள் இல்லாத பறவை - கிவி
16.   உலகின் மிகப்பெரிய குளிர்பாலைவனம் - அண்டார்டிகா
17.   மிக நீளமான பாலைவனம் - சிஹாரா
18.   மைக்கா கிடைக்கும் மாநிலம் - மேற்கு வங்காளம்
19.   ராஜதரங்கிணியை எழுதியது - கல்ஹனா
20.   காப்பி அதிகம் உற்பத்தியாகும் மாநிலம் - கர்நாடகா
21.   ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் அமைந்துள்ள இடம் - ஊட்டி
22.   திட்டக்குழு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1950
23.   உலகின் சர்க்கரைக் கிண்ணம் - கியூபா
24.   உலகிலேயே தொழிற்சாலை அதிகமுள்ள நகரம் - டோக்கியோ
25.   சையாம் நாட்டின் புதுப்பெயர் - தாய்லாந்து
26.   மாண்டிரியல் எந்த நதிக்கரையில் உள்ளது - ஒட்டாவா
27.   அமெரிக்க சட்டப்பேரவையின் பெயர் - காங்கிரஸ்
28.   மான்செஸ்டர் எதற்கு பெயர்பெற்றது - பருத்தித்துணி
29.   சூயஸ்கால்வாய் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு - 1956
30.   இரண்டாவது பாணிபட்போர் நடந்த ஆண்டு - 1556
31.   அஸ்ஸாமின் தலைநகரம் - டிஸ்பூர்
32.   ஐக்கிய நாடுகளின் தினம் - அக்டோபர் 24
33.   உலக சுகாதார நிறுவனம் அமைந்துள்ள இடம் - ஜெனிவா
34.   நாடுகளின் சங்கம் துவங்கப்பட்ட ஆண்டு - 1919
35.   ஏனாம் - புதுச்சேரியின் ஒரு பகுதி
36.   லிரா நாட்டின் பணத்தின் பெயர் - இத்தாலி
37.   கியூபா நாட்டின் சுதந்திர வீரர் - பிடல் காஸ்ட்ரோ
38.   சர்வதேச குடும்ப தினம் - மே 15
39. இந்தியாவில் உள்ள செய்தித்தாள்களில் மிகவும் பழமையானது - பம்பாய் சமாச்சார்
40.   பார்க்கர் எந்தப் பொருளின் வியாபாரப் பெயர் - பேனா
41.   இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்டவர் - வல்லபபாய் படேல்
42.   ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் - சுவிட்ஸர்ஸாந்து
43.  1996-இல் சிறந்த அரசு சேவைக்காக ராமன் மாக்சேசே விருது பெற்றவர் - டி.என். சேஷன்
44.   இந்திய தேசிய காங்கிரஸ் துவங்கப்பட்ட ஆண்டு - 1885
45.   "மெயின் காம்ப்" நூலை எழுதியவர் - ஹிட்லர்
46.   கொலம்போ திட்டம் எந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது - 1951
47.   முதல் கிழக்கிந்திய கம்பெனியின் ஆங்கில கவர்னர் - வாரன் ஹேஸ்டிங்
48.  மும்பைக்கும் தானாவிற்கும் இடையே போடப்பட்ட முதல் ரயில் பாதையின் நீளம் - 32 கி.மீ
49. மாக்னா கார்ட்டா எனும் சுதந்திர சாசனம் இரண்டாம் ஜானினால் கையெழுத்திடப்பட்ட ஆண்டு - 1215
50.   "லார்ட்ஸ்" கிரிகெட் மைதானம் எங்குள்ளது - லண்டன்
51.  யுரேகா! யுரேகா! என்று கூறியவர் - ஆர்கிமிடிஸ்
52.  தேசிய பாதுகாப்புக்கழகம் உள்ள இடம் - கடக்வாஸ்லா
53.  கண்ட்லா துறைமுகம் எந்த மாநிலத்தில் உள்ளது - குஜராத்
54.  இந்தியாவின் முதல் பொழுதுபோக்கு வண்ணப்படம் - இன்சானியத்
55.  ராணுவ இசைப்பள்ளி உள்ள இடம் - பஞ்சுருத்தி
56.  தாஷ்கண்ட் ஒப்பந்தத்துடன் தொடர்புடையவர் - லால்பகதூர் சாஸ்திரி
57. நான் ஏராளமான மருத்துவர்களின் உதவியுடன் இறந்து கொண்ருக்கிறேன் என்றவர் - அலெக்சாண்டர்
58.  லோக் சபாவின் ஆயுட்காலம் - 5 ஆண்டுகாலம்
59.   டிக்பாயில் கிடைப்பது - பெட்ரோல்
60.   உலகின் மிக நீளமான ஆறு - நைல்
61.   பொகாரோ எஃகு ஆலை எந்த நாட்டு உதவி பெற்றது - ரஷ்யா
62.   ஜலஹல்லி எதனுடன் தொடர்புடையது - இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ்
63.   1992-இல் ஒலிம்பிக் நடைபெற்ற இடம் - பார்சிலோனா
64.   மறைமுக வரி என்பது எது - எக்ஸைஸ் வரி
65.   டாக்டர் வாட்சன் கதாபாத்திரத்தில் வந்தது - ஷெர்லாக் ஹோம்ஸ்
66.   இராணி கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது -  கிரிக்கெட்
67.   இந்தியாவில் வானொலி கொண்டுவரப்பட்ட ஆண்டு - 1927
68.   சூயஸ் கால்வாயின் நீளம் - 165 கி.மீ
69.   மைடியர் குட்டிச்சாத்தான் முதல் படம் - முப்பரிமாணம் (3D)
70.   வைகை எக்ஸ்பிரஸ் எந்த  இரு நகரங்களுக்கிடையே ஒடுகிறது - சென்னை - மதுரை

முதல்வர் உடல்நிலையில் முன்னேற்றம்! அப்போலோ மருத்துவமனை அறிக்கை

தேர்தல் பயிற்சிக்கு வராவிட்டால் நடவடிக்கை!!!

தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத, அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்தல் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். தமிழகத்தில், அக்., 17, 19ல், உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது; வேட்புமனு தாக்கல் துவங்கி உள்ளது. 

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும், பயிற்சி வகுப்புகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அவர்களுக்கு, தேர்தல் பொறுப்பில் உள்ள, வருவாய் அதிகாரிகள் கடிதம் அனுப்பி உள்ளனர். 'தேர்தல் பயிற்சி வகுப்புகளில், பங்கேற்காவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, அவர்களுக்கு, மொபைல் போனில் எச்சரிக்கை தகவலும் அனுப்பப்பட்டு உள்ளது.

Tamilnadu Open University Term End Examination Timetable for B.Ed., B.Ed. (SE), December 2016 Timetable Exam Form Instruction

CLICK HERE TO DOWNLOAD - TIME TABLE..

CLICK HERE TO DOWNLOAD - EXAM FORM..

CLICK HERE TO DOWNLOAD - INSTRUCTION...

THANKS;MR.NISAR AHMED

தேர்தல் பயிற்சிக்கு வராவிட்டால் நடவடிக்கை!!!

தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத, அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்தல் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். தமிழகத்தில், அக்., 17, 19ல், உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது; வேட்புமனு தாக்கல் துவங்கி உள்ளது. 
தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும், பயிற்சி வகுப்புகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து அவர்களுக்கு, தேர்தல் பொறுப்பில் உள்ள, வருவாய் அதிகாரிகள் கடிதம் அனுப்பி உள்ளனர். 'தேர்தல் பயிற்சி வகுப்புகளில், பங்கேற்காவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, அவர்களுக்கு, மொபைல் போனில் எச்சரிக்கை தகவலும் அனுப்பப்பட்டு உள்ளது.

அரசு இணைய சேவை மையங்களில் நாளை முதல் ஆதார் பதிவு

தமிழகம் முழுவதும் உள்ள அரசு இணைய சேவை மையங்கள் மூலம் ஆதார் பதிவு சனிக்கிழமை (அக்.1) முதல் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கென எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள இந்தத் திட்டமானது, உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
தமிழகத்தில் பயோ-மெட்ரிக் அடிப்படையில் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கருவிழிப் படலம், கைவிரல் ரேகைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆதார் பதிவுகள் செய்யப்படுகின்றன.தமிழகத்தில் இந்த ஆதார் பதிவு முறையை தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையம் மேற்கொண்டு வந்தது.

இதுகுறித்து ஆணையத்தின் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஆதார் பதிவை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தோம். இதுவரை அனைத்து மாவட்டங்களிலும் மொத்தமாகச் சேர்த்து பயோ-மெட்ரிக் பதிவுகளை மட்டும் 98.10 சதவீதம் முடித்துள்ளோம். மேலும், இந்தப் பதிவுகளை அடிப்படையாக வைத்து 89.83 சதவீதம் பேருக்கு ஆதார் எண்களை வழங்கியுள்ளோம்.பயோ-மெட்ரிக் அடிப்படையில் ஆதார் எண்ணை அளிப்பதால் ஒரு சில வாரங்கள் அவகாசம் தேவைப்படுகிறது. இதுவரை தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையம் ஆதார் பதிவுப் பணிகளை மேற்கொண்டு வந்தது. அக்டோபர் 1 -ஆம் தேதி முதல் இந்தப் பணியை தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் மேற்கொள்ளும் என்று ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எத்தனை மையங்கள்?:தமிழகத்தில் அரசு இணைய சேவை மையங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களின் செயல்பாட்டுக்காக பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை அரசு தலைமைச் செயலகம், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள், 54 கோட்ட அலுவலகங்கள், சென்னை, மதுரை மண்டல கடவுச்சீட்டு அலுவலகங்கள் என மொத்தம் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு இணைய சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அக்டோபர் 1-ஆம் தேதி முதல் இந்த மையங்களின் மூலம் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதுகுறித்து அரசு இணைய சேவை மைய அதிகாரிகள் கூறியதாவது: ஆதார் எண்களை வைத்திருத்தவர்களுக்கு அதன் அடிப்படையில் பிளாஸ்டிக் அட்டைகளை அரசு இணைய சேவை மையம் மூலம் வழங்கி வந்தோம். இனி, ஆதார் பதிவுகளையே மேற்கொள்ள உள்ளோம். இதற்கென தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையமானது, அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு 1,280 கருவிகளை வழங்கியுள்ளது.இந்தக் கருவிகள் மூலம் கருவிழிப் படலம், கைவிரல் ரேகைகளைப் பதிவு செய்ய முடியும். அரசு இணைய சேவை மையங்கள் அதிகளவு உள்ளதால் ஆதார் பதிவுகளை விரைவாகவும், மக்கள் நீண்ட வரிசையில் நிற்காமல் உடனடியாக மேற்கொள்ளவும் வழி ஏற்படும்.

எந்தக் கட்டணமும் இல்லை:ஆதார் பதிவை மேற்கொள்வதற்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. அரசு இணைய சேவை மையங்களில் பிற சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், ஆதார் பதிவுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டம் என்பதால், ஆதார் பதிவு அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்படும்.

பிளாஸ்டிக் அட்டை:ஆதார் எண் உருவாக்கப்பட்டவுடன், அதற்கான தகவல் விண்ணப்பதாரரின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பிவைக்கப்படும். இந்த எண்ணைக் கொண்டு சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் ஆதார் பிளாஸ்டிக் அட்டையை அதற்கான கட்டணத்தைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம் என்றனர் அவர்கள்

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!