Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 30 November 2016

Half Pay Salary News - அரை சம்பள விடுப்பு உத்தரவு - விளக்கம்

சமீபத்தில் வந்திருக்கும் Half pay salary government letter ல் அனைத்து படிகளுக்கும் Half pay தான் என கூறப்பட்டுள்ளது அதாவது இது SUPERIOR SERVICE க்கு மட்டும் தான் பொருந்தும் யாரெல்லாம் 6600 GRADE PAY வாங்ஙகுகிறார்களோ அவர்களுக்கு மட்டும் தான்.தொடக்க நிலை ஆசிரியர்களின் உச்சபச்ச GRADE PAY 5400 தான் மற்றும் Hr.Sec hm GP 5700/-ஆகையால் இதற்கும் நமக்கும் துளி அளவு கூட தொடர்பில்லை நம் ஆசிரியர்களில் யாரும் தேவை இல்லாமல் கவலை பட வேண்டாம் .

SSA - அனைத்துப் பள்ளிகளிலும் 1முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு 8.12.2016 அன்று கீழ்கண்ட தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

"பெண் குழந்தைகள் உரிமைக்க்கல்வி" பயிற்சி - MODULE

RMSA - SLAS - 2016 கற்றல் அடைவுத் தேர்வு நடத்துவது குறித்த வழிமுறைகள்...

குழந்தைகளின் நினைவாற்றலை வளர்ப்பதற்கான டிப்ஸ்...ஆசிரியர் தீலிப்கனமழை- பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு.

*சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,நாகை,கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை.

*விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம்,வானூர் வட்டம்.

*புதுச்சேரி,காரைக்கால் பள்ளிகளுக்கு 2 நாட்கள்  விடுமுறை.
                
-பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

*மேலும் மழையின் அளவைப்பொருத்து அந்தந்த மாவட்ட நிர்வாகமே விடுமுறை விட அரசு உத்தரவு.விரைவில் மேலும் பல மாவட்டங்கள் அறிவிக்கப்படும்.

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம்

திரையரங்குகளில் திரைப்படம் தொடங்கும் முன்பு தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசிய கீதம் இசைக்கப்படும் போது, திரையரங்கின் திரையில் தேசியக் கொடி காட்டப்பட வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மத்திய அரசும் ஒப்புக் கொண்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள திரையரங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கும் போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தொடர்பாக மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பள்ளிக்கல்வி துறைக்கு ரூ24,129 கோடி ஒதுக்கீடு, இயக்குனர் கண்ணப்பன் பேச்சு

SCERT:நல்லொழுக்க பாடத்தில் ஆசிரியர்களுக்கு 2 நாள் சிறப்பு பயிற்சி

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:-

அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 9, 10-ம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், ஒழுக்கத்தை நிலைநாட்டவும் நற்பண்புகள் கொண்ட கல்வி (நல்லொழுக்க பாடம்) வழங்கப்பட உள்ளது.அதற்கான வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களுக்கு பள்ளி பாடத்துடன் 40 வகையான நற்பண்புகளை இணைத்து கற்பித்தலும், கற்றலும் என்னும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்காக பிரத்யேக ஆசிரியர் கையேடு தயாரிக்கப்பட்டு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள நற்பண்புகள் பாடவேளையைப் பயன்படுத்திவாரத்துக்கு ஒரு பாடம் என்ற முறையில் ஆண்டு முழுவதும் நற்பண்பு கல்வி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.இதற்காக மாநில அளவில் முதன்மை கருத்தாளர் பயிற்சி சென்னையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை (நேற்று) நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன (டயட்) விரிவுரையாளர் ஒருவரும், பட்டதாரி ஆசிரியர்கள் 2 பேரும் கலந்துகொண்டனர். இப்பயிற்சி புதன்கிழமையும் (இன்றும்) நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் டிசம்பர் 2, 3-ம் தேதிகளில் பயிற்சி நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, ஒன்றியங்களில் டிசம்பர் 7, 8-ம் தேதிகளில் பயிற்சி நடைபெறும். இந்தப் பயிற்சியின் மூலம்15 ஆயிரம் ஆசிரியர்களும் 20 லட்சம் மாணவ-மாணவிகளும் பயன்பெறுவர்.

SCERT வாரத் தேர்வு (worksheet) குறைகள்

தமிழ்நாட்டில் என்னென்ன கல்வி முறை எப்படி உள்ளது எனத் தெரியாமலேயே தேர்வு நடத்தப்படுகிறதா?

மதிப்பெண் உண்டா? கிடையாதா?

சில பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி
1,2,3 ஆம் வகுப்பு வரையில் உள்ளது. சில பள்ளிகளில் 1,2,3,6,7 வகுப்புகள் ஆங்கில வழிக்கல்வியில் உள்ளது.

ஆனால் வினாக்கள் தமிழில் மட்டும் உள்ளது.

ஒரு முறைக் கொடுத்த வினாத்தாலே மறுபடியும் கொடுக்கப் படுகிறது.

பத்து மதிப்பெண்களுக்கு தேர்வு எனக் கூறி விட்டு
7 வினாக்களும்
8 வினாக்களும்
9 வினாக்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்ட சில வினாக்களுக்கு விடையே இல்லை.

முதலில் XEROX எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற அறிவிப்பு அதன் பிறகு கரும்பலகையில் எழுதிப்போட்டு தேர்வு நடத்த வேண்டும் என்ற உத்தரவு.

கீழ்வகுப்பு வினாக்களில் வரும் படங்களையும் ஆசிரியர் வரைந்து போட்டு நடத்த வேண்டுமா?

அப்படியென்றால் அவர் வகுப்பில் இருக்கும் ஒரு கரும்பலகையில் எத்தனை படங்கள் வரைந்து போடுவார்?

ஏன் இந்த தடுமாற்றம்?

நோக்கம் சிறந்ததாக இருந்தால்
அதனை சிறந்த முறையில்
திட்டமிட்டு
செயல்படுத்த வேண்டாமா?

எந்த திட்டமிடலும் இல்லாமல்
தினம் தினம் ஒரு அறிவிப்புக் கொடுத்து ஏன் குழப்ப வேண்டும்.

ஒரு திட்டத்தை செயல்படுத்தும் முன்பு அதில் உள்ள தவறுகள் களைந்தெடுக்கப்பட்டு
வகுப்பறைக்கு வரும் போது
100% சதவீதம் தெளிவுடன்
இருந்தால் தானே

மாணவர்களும் குழப்பம் இல்லாமல் இருப்பார்கள்?

கல்வியை கல்வியாகப் பாருங்கள்

விளையாட்டாக்கி விடாதீர்கள்.

இன்று சம்பள தினம்: வங்கி ஏ.டி.எம்.கள் முழு நேரம் இயங்குமா? அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் எதிர்பார்ப்பு

அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு இன்று சம்பள தினம். அவர்கள் தங்கள் பணத்தை எடுப்பதற்கு வசதியாக வங்கி ஏ.டி.எம்.கள் முழு நேரம் இயங்குமா? என எதிர்பார்த்து இருக்கின்றனர்.

ஏ.டி.எம்.களை தேடி ஓடுவார்கள்

மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மாதம் தோறும் கடைசி தேதி அன்று சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். மேலும் ஒரு சில தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் மாதத்தின் கடைசி தினத்தில் சம்பளம் வழங்கப்படும். பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் மாதத்தின் முதல் வாரத்தில் சம்பளம் வழங்கப்படும். 

மாதச் சம்பள ஊழியர்களை பொருத்தவரையில், வீட்டு வாடகை, மளிகை சாமான்கள், பால், அரிசி வாங்குவது, மின்சார கட்டணம் போன்ற பல்வேறு தேவைகளுக்காக தங்களின் சம்பள தினத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். சம்பளம் போடப்பட்ட மறு கணமே, இவர்கள் வங்கிகளின் ஏ.டி.எம்.களை தேடி ஓடுவார்கள். பெரும்பாலும் ஒரு வார காலத்துக்குள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக தங்களின் சம்பளத்தில் பெரும் பகுதியை வங்கி கணக்கில் இருந்து எடுத்து கொள்வார்கள். அதன் பிறகு, அவர்களின் பணத் தேவைகள் குறைவாகவே இருக்கும். 

ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு

500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, கடந்த 8–ந் தேதி அறிவிக்கப்பட்டதால் மாத சம்பளதாரருக்கு பெருமளவு பாதிப்பு இல்லை. ஆனால், இந்த அறிவிப்புக்கு பிறகு, வங்கி ஏ.டி.எம்.களில் ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது என ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது. 

இந்த அறிவிப்பை தொடர்ந்து, வங்கிகள் தோறும் பணம் எடுக்க மக்கள் வெள்ளம் அதிகமாக காணப்பட்டது. ஏ.டி.எம்.களில் நிரப்பப்படும் பணமும், பணம் நிரப்பிய சில மணி நேரங்களிலேயே தீர்ந்து விடும். அதன் பிறகு, அந்த ஏ.டி.எம்.கள் காலியாகவே கிடக்கும். மேலும், புதிய 2,000 ரூபாய் நோட்டுகள், 500 ரூபாய் நோட்டுகள் வைக்கும் வகையில் ஏ.டி.எம்.களில் மாற்றம் செய்வதாக கூறி பல்வேறு ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பப்படாமல் இருந்தது. 

ஊழியர்களின் எதிர்பார்ப்பு

தற்போது புதிய ரூபாய் நோட்டுகள் வைப்பதற்கான மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தாலும், போதுமான அளவு பணம் ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகளுக்கு வராததால், குறைந்த எண்ணிக்கையிலான ஏ.டி.எம்.களில் குறைந்த அளவு பணமே நிரப்பப்படுகிறது. இதனால் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் மூடப்பட்டு காணப்படுவதுடன், ஏ.டி.எம். சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இன்று அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வங்கிகளில் போடப்படுவதால், இவற்றை எடுக்க ஏ.டி.எம். மையங்களில் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை சமாளிக்கும் வகையில் அனைத்து ஏ.டி.எம்.களும் திறக்கப்பட்டு, முழுமையான அளவில் பணம் வைக்கப்படுமா? என அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன அனைத்து ஊழியர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனை வங்கி நிர்வாகங்கள் எப்படி சமாளிக்கப்போகின்றன என்பது இன்றுதான் தெரியவரும். 

பணம் எடுக்கும் வரம்பு உயர்வு

இந்த நிலையில் வங்கிகளில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு தொகையை 24 ஆயிரத்தில் இருந்து தளர்த்தி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. 

இந்த உச்சவரம்பு தளர்வு வியாபாரிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்படுகிறது. குறிப்பிட்ட அளவு பணம் மட்டுமே எடுக்க முடியும் என்ற உத்தரவால் வியாபாரிகள் தங்களது பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்வது குறைந்து உள்ளது. இவர்கள் டெபாசிட் செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலேயே உச்சவரம்பு உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரு வியாபாரி அதிகம் டெபாசிட் செய்தால் அவருக்கு இந்த உச்சவரம்பு பொருந்தும். 

வங்கிகளுக்கு போதுமான பணம் வரத்து இல்லாததால், மேலே குறிப்பிட்டபடி உச்சவரம்பு உயர்த்தப்பட்டாலும் குறைந்த அளவே பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது

ஒரு ரூபாய் நோட்டு உருவாகி, இன்றுடன் நுாறு ஆண்டாகிறது.

நுாறு, ஐநுாறு ரூபாய் நோட்டுகளின், 'முதல்வனான' ஒரு ரூபாய் நோட்டு உருவாகி, இன்றுடன் நுாறு ஆண்டாகிறது. 'ஒத்த ரூபா நோட்டு' என, சற்றே மலிவாக அழைக்கப்பட்டாலும், பிற ரூபாய் நோட்டுகள் உருவாக, இந்த ஒரு ரூபாய் நோட்டு தான் முன்னோடியாக இருந்து இருக்கிறது. 

 

         கடந்த, 1917, நவ., 30ல், முதல் ஒரு ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதைய வர்த்தகர்கள், பண பரிவர்த்தனை செய்ய, இந்த ஒரு ரூபாய் நோட்டு பெரிதும் உதவிகரமாக இருந்துள்ளது. கோவை முன்னாள் தபால் அலுவலர் ஹரிஹரன், இந்த பழைய ரூபாய் நோட்டுகளை, பத்திரமாக பராமரித்து வருகிறார்.  
அவர் கூறியதாவது: முதல் ஒரு ரூபாய் நோட்டின் இருபுறமும், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் படம் அச்சிடப்பட்டிருந்தது. 1935, ஏப்., 1ல் ரூபாய் நோட்டு அச்சிடும் உரிமம், இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டது. அதன் பின், அச்சிடப்பட்ட, முதல் ஒரு ரூபாய் நோட்டில், முதலில் எட்டு மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. 1940ல் அச்சிடப்பட்ட நோட்டில், ஆறாவது ஜார்ஜின் உருவப்படம் அச்சிடப்பட்டது. நாடு சுதந்திரம் பெற்ற பின், பதவியேற்ற நிதியமைச்சரின் மேற்பார்வையில் அச்சிடப்பட்ட ஒரு ரூபாய் நோட்டு, மகிழ்ச்சியில் திளைத்திருந்த மக்களின் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த, 1949ல் நிதித்துறை செயலர், கே.ஆர்.கே.மேனன் கையெழுத்திட்ட நோட்டில், முதல் முதலாக அசோக ஸ்துாபி இடம் பெற்றது. 
1951ல் ஹிந்தியில் அச்சிடப்பட்ட ஒரு ரூபாய் வெளியானது. அதன் பின், 1994ல், நிறுத்தப்பட்ட, ஒரு ரூபாய் நோட்டு, 2015 மார்ச், 6ல், மறுபடியும் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு ரூபாய் நோட்டு அச்சிட, 1.14 காசு செலவாவதாக, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கடந்த, 1943ல் ஒரு சவரன் தங்கத்தின் விலை, 13 ரூபாய் ஆக இருந்தது. அதன்படி எடுத்துக் கொண்டால், இன்று அந்த ஒரு ரூபாய் நோட்டு, 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ளது. தற்போது அரசால் செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை விட, இந்த ஒரு ரூபாய் நோட்டின் மதிப்பு, அதிகம் என்பது தான் வினோதம்!

'பேஷன் டெக்னாலஜி' பட்ட படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய ஜவுளித் துறை கட்டுப்பாட்டில் இயங்கும், தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனம், சென்னை, ராஜிவ்காந்தி சாலையில் உள்ளது. 

 அதன் சார்பில், 2017ம் ஆண்டுக்கான இளங்கலை, முதுநிலை பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை, 'ஆன்லைன்' மூலம், 2017 ஜன., 10 வரை பதிவு செய்யலாம்; ஜன., 16 வரை, அபராத கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம். பிப்., 12ல், எழுத்து தேர்வு நடத்தப்படும்; ஏப்ரல், மே மாதங்களில், நேர்முக தேர்வு நடத்தப்படும். ஜூன் முதல் வகுப்புகள் துவக்கப்படும்.

மேலும், விபரங்களுக்கு, 044 - 2254 2755 என்ற தொலைபேசி எண் அல்லது academic.chennai@nift.ac.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்

தமிழகத்தை மிரட்டும் கனமழை..

தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கிறது. அது, 48 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வடமேற்கு திசை நோக்கி நகரும். இதன் காரணமாக டிசம்பர் 1 முதல் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும் என்று கூறியுள்ளார். மேலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார். தென்மேற்கு காற்று திசைமாறிய காரணத்தால் வடகிழக்கு பருவமழை தாமதமானதாக குறிப்பிட்ட அவர், மீனவர்கள் யாரும் வங்கக் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் உடனடியாகக் கரை திரும்புமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இன்று விவரம் சேகரிக்கிறது அதிகாரிகள் குழு

வேலூர் மாவட்டத்தில், குடும்ப அட்டைகளில் இதுவரை 64 சதவீதம் பேர் ஆதார் அட்டை எண்ணை இணைத்துள்ளனர். எஞ்சிய அட்டைதாரர்களை இணைப்பதற்காக அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு வீடுவீடாக ஆய்வு செய்யும் பணியை புதன்கிழமை தொடங்குகிறது.

 சுமார் 10.5 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் கொண்ட வேலூர் மாவட்டத்தில், அரக்கோணம் வட்டத்தில் 151 கடைகள், நெமிலியில் 115 கடைகள், வாலாஜாவில் 186, ஆற்காட்டில் 159, காட்பாடியில் 184, வேலூரில் 164, அணைக்கட்டில் 105, குடியாத்தத்தில் 114, பேர்ணாம்பட்டில் 96, ஆம்பூரில் 143, வாணியம்பாடியில் 123, நாட்டறம்பள்ளியில் 85, திருப்பத்தூரில் 190 கடைகள் என 1,815 நியாய விலைக் கடைகளில் செயலி முறை பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு செயலியை இயக்க மாவட்டத்தில் 8 மையங்களில் செயல்முறை பயிற்சி அளிக்கப்

பட்டுள்ளது.

 நியாய விலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் செயலியில் குடும்ப அட்டையில் உள்ள 5 வயதுக்கு மேற்பட்ட அனைத்து உறுப்பினர்களின் பெயர், ஆதார் எண், செல்லிடப்பேசி போன்ற தகவல்கள் பதிவு செய்யப்படுவதுடன், பொருள்கள் வாங்கிய விவரம், குடும்பத் தலைவரின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது.

 இந்தத் திட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இதுவரையில் 64 சதவீத அட்டைதாரர்கள் தங்களது ஆதார் எண், செல்லிடப்பேசி விவரங்களை நியாய விலைக் கடைகளில் பதிவு செய்துள்ளனர்.

 ஆதார் அட்டை எடுக்கத் தவறியவர்களுக்கு அட்டை எடுக்கும் பணி அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையில், நியாய விலைக் கடைகளில் ஆதார் அட்டை இணைப்பதற்காக அண்மையில் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் சுமார் 50,000 பேர் இணைந்துள்ளனர்.

 மாவட்டம் முழுவதிலும் உள்ள 13 வட்டங்களில் துணை ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மண்டலக் குழுவானது, வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து, ஆதார் அட்டையை நியாய விலைக் கடைகளில் இணைக்கும் முயற்சி எடுக்கவுள்ளது.  

இதுகுறித்து பொதுவிநியோகத் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:  ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம், போலி கார்டுகளை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண், செல்லிடப்பேசி விவரம் இணைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

 நியாய விலைக் கடைகளில் ஆதார் அட்டை இணைக்காத உறுப்பினர்களை இணைப்பதற்காக வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யும் பணி புதன்கிழமை முதல் தொடங்கி சில நாள்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 நியாய விலைக் கடையில் குடும்ப அட்டையில் பெயர் உள்ள உறுப்பினரின் ஆதார் அட்டை இணைக்க முடியாதவர்களின் பெயரை நீக்கம் செய்வதோ, பொருள்கள் வழங்குவதோ நிறுத்தப்பட மாட்டாது என்றார்.

புதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி

1. எட்டாம் வகுப்பு வரைக்கான, 'வகுப்பு நிறுத்தம்' கொள்கை, இனி, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பின்பற்றப்படும். 

2. இளம் வயதிலேயே மாணவர்களின் ஆர்வத்தையும், இயல்திறனையும் கண்டறிய, 'கல்வி விருப்பத் தேர்வுகள்' நடத்தப்படும். கற்றலுக்கு சிறப்புத் தேவை வேண்டியவர்கள், மெதுவாகக் கற்பவர்கள் மற்றும் குறை சாதனையாளர்களை கண்டறிந்து பயிற்சிகள் கொடுத்து, எதிர்காலத்தில் அவர்களை, தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்றவர்களாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 

3. அறிவியல், கணிதம், ஆங்கிலம் என, மூன்று பாடங்களுக்கு, தேசிய அளவில் பொதுவான பாடத் திட்டமும்; சமூக அறிவியல் போன்ற இதர பாடங்களுக்கு, தேசிய மற்றும் மாநில அளவிலான, இரு பகுதிகள் இருக்கும் வகையில் பாடத் திட்டங்கள் பின்பற்றப்படும். 

4. பத்தாம் வகுப்பில் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலத்தில் தேர்வுத் தோல்விகளை குறைக்க, இந்தப் பாடங்களில் உயர் தகுதி நிலை மற்றும் குறைந்த தகுதி நிலை என, இரு தேர்வுகள் நடத்தப்படும்.

 5. பாடநுாலில் உள்ளதை மட்டுமின்றி விரிந்த விழிப்புணர்வு, புரிதல், கற்றதன் முழுமைத் தெளிவு மற்றும் உயர்வகை சிக்கல்களுக்கு விடைதேடும் திறன் போன்றவற்றை கணிப்பிடும் வகையில் தேர்வுமுறைகள் மாற்றப்படும்.

6. அனைத்து விதமான பள்ளிகளிலும், குறைந்தபட்சம் இருக்க வேண்டிய வசதிகளும், மாணவர்கள் பெற வேண்டிய கற்றறி அளவுகளும் உறுதி செய்யப்படும்.

7. போதிய மாணவர்களும், உட்கட்டமைப்பு வசதியும் இல்லாத பள்ளிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, 'தொகுப்பு பள்ளிகளாக' மாற்றும் பணி மேற்கொள்ளப்படும். 

8. பள்ளிகளின் தரம், தலைமை, நிர்வாகம், ஆசிரியர்- திறன், தன்மதிப்பீடு போன்றவற்றின் அடிப்படையில், நாடு தழுவிய தரவரிசை தயாரிக்கப்படும். 9. ஆங்காங்கு இருக்கும் சூழ்நிலைகள் மற்றும் முறைகளுக்கு ஏற்ப, இப்போதைய கல்வி உரிமைச் சட்ட அணுகுமுறையில் சில மாற்றங்கள் பரிந்துரைக்கப்படும். தேவையெனில், மிகவும் ஒதுக்கப்பட்ட மற்றும் புலம்பெயர்ந்த மற்றும் கடினமான சூழ்நிலைகளில் இருக்கும் குழந்தைகளுக்கென, 'மாற்றுப் பள்ளிகளை' உருவாக்க பரிந்துரைக்கப்படும். மேற்குறித்த கல்வி முறை மாற்றங்களை, 'தகுதி, சமவாய்ப்பு' என்ற அறிவுப் பார்வையில் ஏலாதவை என, ஒதுக்கிவிட முடியாது. ஒவ்வொரு வகுப்பிலும், புரிதலில் உயர், சராசரி, கீழ் என்ற நிலைகளில் மாணவர்கள் இருப்பது தெரிந்த உண்மை. வகுப்பில் உள்ள அனைவரும் தேர்வு பெற வேண்டும் என்பதும், உயர் மதிப்பெண்களுடன் பலர், தங்களின் முழுத்திறமையை வெளிப்படுத்தி, வெற்றி பெற வேண்டும் என்பதும் இயல்பான எதிர்பார்ப்புகளே. பின்தங்கிய மாணவர்களை, தேர்வில் வெற்றி நிலைக்குக் கொண்டு வர, ஆசிரியர்கள் கடினமாக செயல்பட வேண்டும். அதேபோல, உயர்நிலை மாணவர்களின் திறமையை மிளிரச் செய்து, அவர்களை உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டியதும் அவர்களின் கடமையாகும். இந்த இரு முயற்சிகளிலும், ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் ஈடுபடும் போது, பல நடைமுறை சிக்கல்கள் தோன்றுகின்றன. இந்த சிக்கல்களை தீர்க்க, இதுவரை நாம் எடுத்த எந்த முயற்சியும் வெற்றி தரவில்லை. மாணவர்களின் கற்றறி நிலைக்கு கணிப்பீடு இல்லையெனில், பல தீமைகள் விளையும். ஆனால், கற்றறி தகுதியில், பல காரணங்களால் பின்தங்கியிருக்கும் குழந்தைகளை கணிப்பீடு என்ற பார்வையில், 10ம் வகுப்பை முடிப்பதற்குள், இரண்டு மூன்று ஆண்டு காலத்தை, பயனறச் செய்யும் செயல் எப்படி ஏற்புடைத்ததாகும்? பெற்றோரிடம் உதவி பெற முடியாத, பெரும்பாலான இத்தகைய குழந்தைகளின் நிலை கருதி, எட்டா-ம் வகுப்பு வரை, 'வகுப்பு நிறுத்தம் இல்லை' என்ற கொள்கை, சில ஆண்டுகளாக செயலில் இருப்பதன் பயனாக, எந்த குறிப்பிடத்தக்க நன்மையையும் அவர்கள் பெற்றுவிடவில்லை. ஒவ்வொரு ஆண்டிறுதி தேர்விலும், தோல்வி பெற்றவர்களுக்கு என, எடுக்க வேண்டிய தனி முயற்சிகள் சடங்காகி, அவர்களை தேர்வுக் கோட்டுக்கு ஒவ்வொரு முறையும் துாக்கி விட்டு விடும், உண்மைக்கு சான்றுகள் தேவையில்லை. இப்போது, கல்வியறிவு இருந்தாலும் இல்லையென்றாலும், குழந்தைகளைப் பள்ளி நேரத்துக்கு முன்னும் பின்னும், தனிப்பயிற்சிக்கு அனுப்புவதே சிறந்த வழி என, பெற்றோர் நம்பத் தொடங்கி விட்டனர். பள்ளியில் ஒருவகை பயிற்சி, வீட்டுவேலை, தேர்வுகள், தனிப்பயிற்சியில் வேறொருவகை பயிற்சி, வீட்டுப்பாடம், தொடர் தேர்வுகள் - என, குழந்தைகள் தவிக்கின்றனர். வகுப்பு நிறுத்தம் எந்த வகுப்பில் இருந்தாலும் முடிவு ஒன்றே. இளமையில், இரண்டு மூன்று ஆண்டுகளை விரக்தியில் வீணடிப்பர். 10ம் வகுப்புத் தேர்வை எழுதப்போகும் எந்த மாணவனும், தன் படிப்பு காலத்தில் இந்த இழப்பைச் சந்திக்கக் கூடாது. இந்த நோக்கில், வகுப்பு நிறுத்தம் இல்லாமல் கற்பிக்கும் முறையை, நாம் செம்மைப்படுத்தியாக வேண்டும். தேர்வு மதிப்பீட்டின் நோக்கமும், தொடர்ந்து பின்தங்கும் மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சிகளை, எப்படிக் கொடுப்பது என்பதை நோக்கியே இருக்க வேண்டும். 'கல்வி விருப் பத் தேர்வுகள்' இளம் வயதில், தீமையையே விளைவிக்கும். மாணவர்களுக்கு ஒரு பாடத்தில் விருப்பமில்லாமல் போவதற்கு, அதுவரை அந்தப் பாடத்தைக் கற்பித்த ஆசிரியரே பெரும் காரணம்; அடுத்து வரும் வகுப்புகளில் அவர்கள் விருப்பம் மாறும். மேலும், இளம்வயதில் மாணவர்கள் ஒரே பாடத்தில் சிறந்து விளங்குவதை விட, ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களின் அறிவை, -குறிப்பிட்ட அளவுக்கு பெற்றிருப்பதே அவர்களின் எதிர்காலத்துக்கு உதவியாயிருக்கும். பத்தாம் வகுப்பில் குறிப்பிட்ட பாடங்களுக்கு, இரண்டு தகுதிநிலைத் தேர்வுகள் வைக்கும் முறை தோல்வியையே காணும். தொழிற்கல்விக்கு என, மாணவர்களை நாம் துரத்தக் கூடாது. இந்த முயற்சியில் நாம் முன்னமே தோற்றுள்ளோம். எம்.பில்., வகுப்பில் இப்படித் தான், 'முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே, பிஎச்.டி., ஆய்வில் சேரலாம்' என்ற முறை தோல்வியைச் தழுவியிருக்கிறது. அறிவியல், கணிதம், ஆங்கிலம் மூன்றுக்கும், நாடு தழுவிய பாடத்திட்டம் என்ற கொள்கையும், தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரும் கொள்கையும் நன்மை தரும்.நாடு தழுவிய அளவில், பள்ளிகளின் தரவரிசை காண்பதும், ஒவ்வொரு நிலையிலும் வெளிவரும் மாணவர்களின் கற்றறி நிலைகளை ஒப்பீட்டில் அறிவதும் வரவேற்கத்தக்க முயற்சிகளே. 'எழுபது, 80 சதவீத பள்ளிகள் தரம் தாழ்ந்தவை' என, முத்திரை குத்திவிட்டால் மட்டும் போதாது. அவற்றை உயர்த்துவதற்கு என்ன உதவியைச் செய்யப் போகிறோம்? அப்படி ஏதாவது செய்திருந்தால், 80 ஆயிரத்துக்கும் மேலான அரசு பள்ளிகளை, சமீப நாட்களில் மூடும் நிலை வந்திருக்காது. ஐந்து ஆண்டுகளை (2010 - -15) கடந்திருக்கும், கல்வி உரிமைச் சட்டம், குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை. நாட்டில், 8.3 சதவீத பள்ளிகள் மட்டுமே இச்சட்டம் முன்வைத்த, 10 எதிர்பார்ப்புகளுக்குள் இருப்பதும், 80 ஆயிரத்து, 647 மத்திய, -மாநில அரசு பள்ளிகள் மூடப்பட்டதும், 21 ஆயிரத்து, 351 தனியார் பள்ளிகள் அங்கீகாரமில்லாமல் இயங்குவதும் தெரிய வந்துள்ளது. உண்மையில், கல்வி உரிமைச் சட்டத்தின் தோல்வியை மூடி மறைக்கும் முயற்சியையும், அதன் மீது அக்கறை கொள்ளாத போக்கையுமே புதிய கல்விக்கொள்கை வடிவம் நமக்குக் காட்டுகிறது. கருத்துக்கேட்கும் நிலையிலேயே எதிர்ப்புகளாலும், இப்போது எல்லா நிலைகளிலும் புதிய கொள்கை நீர்த்துக் கொண்டிருப்பதில் வியப்பேதுமில்லை.தமிழகத்தில் வரும் கல்வியாண்டிலிருந்து, பிளஸ் 1, பிளஸ் 2க்குப் புதிய பாடத்திட்டம் தாயார் நிலையில் இருப்பதாகச் செய்தி வந்துள்ளது; 'மாற்றங்கள் இருக்கும், ஆனால் பெரிய அளவில் இருக்காது' என்ற செய்தியும் வருகிறது. அது உண்மையானால், நம் மாணவர்கள், தேசிய அளவில் மீண்டும் தோல்வியை சந்திக்க நேரிடும்.அதைத் தவிர்க்க, தேசிய மற்றும் உலக அளவிலான போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு, தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட வல்லுனர்கள் தயாரிக்கும் பாடத்திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அதற்கும் மேலான பாடத்திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

திடீரென அதைச் செய்ய முடியாதெனில், எப்போதைக்கு தயாராகும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இதன் மூலம் போட்டிகளில் பின்னுக்கு ஓடுபவர்களாக, நம் குழந்தைகள் இருப்பதை தவிக்க முடியும்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!