Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 4 January 2016

தினம் ஒரு புத்தகம் "ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை "


ருசிக்காக சாப்பிடாதீங்க... பசியோட சாப்பிடுங்க!

வயிற்றுப் பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். அதனால் தான் ஔவையார் கூட பசிப்பிணி என்றார். பசிக்கும் போது சாப்பிடவேண்டும். ஆனால் தட்டு நிறைய உணவு இருந்தும் அதை சாப்பிட சிலருக்கு பசி எடுக்காது. பசிக்கா விட்டால் கூட அதுவும் ஒரு நோய்தான். பசியின்மைக்கு பல பிரச்சினைகள் உண்டு. ஜீரணமண்டலத்தை சீராக்கி நன்றாக பசிக்க உணவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

Income Tax - 2015-16


தமிழக அரசின் புதுவாழ்வு திட்டத்தில் ஆலோசகர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழக அரசின் புதுவாழ்வு திட்டத்தில் ஆலோசகர் பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:Consultant-Enterprise Development
சம்பளம்: மாதம் ரூ.75,000 - 1,00,000
தகுதி: Business Administration,Management, Economics, Social Work,Agri & Allied பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் அல்லது முதுகலை பட்டயம் பெற்றிருக்கவேண்டும்.

பி.எட்., கல்லூரி துவங்க தடையில்லா சான்று

பி.எட்., கல்லுாரிகள் துவங்க, தடையில்லா சான்று கோரி, மூன்று கல்வி அறக்கட்டளைகள் அளித்த மனுக்கள் மீது நான்கு வாரங்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்திற்கு, கெடு விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி கவுன்சில்:

வேலுார், மதுரை மற்றும் பிற நகரங்களில் இயங்கும் கல்வி அமைப்புகள் சார்பில், பி.எட்., கல்லுாரிகள் துவங்க அனுமதி கோரி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு விண்ணப்பிக்கப்பட்டது.ஆனால், ஆசிரியர் கல்வி பல்கலை மற்றும் ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில்களிடம் இருந்து பெறப்பட்ட, தடையில்லா சான்று இணைக்கப்படவில்லை.

இதனால், விண்ணப்பங்களை நிராகரிப்பது தொடர்பாக, மூன்று கல்வி அறக்கட்டளைகளுக்கு, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் தென் மண்டல இயக்குனரகம், நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து, மூன்று கல்வி அறக்கட்டளைகள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பிறப்பித்த உத்தரவு:

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் விதிமுறைகளில், பி.எட்., கல்லுாரிகள் துவங்க விண்ணப்பத்துடன், தமிழக ஆசிரியர் கல்வி பல்கலை மற்றும் தமிழக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் தடையில்லா சான்றை கட்டாயம் இணைக்க வேண்டும்; இல்லாவிட்டால், அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் கல்வி அறக்கட்டளைகள், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் நோட்டீசுக்கு பதில் அளிக்காமல், நீதிமன்றத்தை நாடியுள்ளன; இந்த விஷயத்தில் தலையிட முடியாது; மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சிலின் நோட்டீசுக்கு பதிலளிக்க, மனுதாரர் கல்வி அறக்கட்டளைகளுக்கு, இரண்டு வாரம் அவகாசம் வழங்கப்படுகிறது. தடையில்லா சான்று கோரி மனுதாரர்கள் அளித்த விண்ணப்பங்கள், 2015 ஜூன் முதல் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த விண்ணப்பங்கள் மீது நான்கு வாரங்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, தமிழக ஆசிரியர் கல்வி பல்கலைக்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

7 நாட்களுக்கு பள்ளிகளை மூட அரசு முடிவு

மணிப்பூரில் நிலநடுக்கத்தால் கடும் சேதம்: 7 நாட்களுக்கு பள்ளிகளை மூட அரசு முடிவு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் இன்று அதிகாலை ஏற்பட்ட பூகம்பத்தால் கடுமையாக குலுங்கின. மணிப்பூர் மாநிலத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியிருந்தது.

தொடக்க நிலை மாணவர்களுக்கு எளிமையாக ஆங்கில உரையாடல் பயிற்சிகடந்த 2 ஆண்டில் 16 கோடி நோட்டுகள் வெளியீடு: 20 ஆண்டுகளாக ரூ.1 நோட்டு வெளியிடவில்லை - ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தகவல்

தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஒரு ரூபாய் நோட்டுகள் வெளி யிடப்படாத நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் 16 கோடி ஒரு ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட் டுள்ளன. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் இது தெரியவந்துள்ளது.

பணிக்கால விடுப்புகளும் & ஊதியமும் முழு விவரம்

1.தற்செயல்விடுப்பு-முழுஊதியம்&படிகள்

2.சிறப்புதற்செயல்விடுப்பு-முழுஊதியம்&படிகள்

3.கட்டுப்படுத்தப்பட்டவிடுப்பு-முழுஊதியம்&படிகள்

4.மகப்பேறுவிடுப்பு-முழுஊதியம்&படிகள்

5.கருச்சிதைவுவிடுப்பு-முழுஊதியம்&படிகள்

ஓய்வறியா கல்விப் பணியாற்றிய ஆசிரியை

தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஓய்வறியா கல்விப் பணியாற்றிய ஆசிரியைக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

எல்.கே.ஜி., மாணவர் இப்போதே சேர்க்கை

கட்டாய கல்வி உரிமை சட்ட விதிகளை மீறி, நுழைவுத் தேர்வு நடத்தி, முன்கூட்டியே தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கை நடப்பதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

1,144 உதவி பேராசிரியர் பணியிடம் 'நெட்' தேர்வர்கள் வேண்டுகோள்

தமிழகத்தில் காலியாக உள்ள 1,144 உதவி பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என ஆராய்ச்சி மற்றும் 'நெட்' தேர்வில் தேர்வானவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.தமிழகத்தில் 76 அரசு கலைக் கல்லுாரிகள் உள்ளன. இதில், 1,144 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

வணிக நிலையங்கங்களுக்கான தமிழ்ப் பெயர்கள்:

1 டிரேடர்ஸ் : வணிக மையம்
2 கார்ப்பரேஷன் : நிறுவனம்
3 ஏஜென்சி : முகவாண்மை
4 சென்டர் : மையம், நிலையம்
5 எம்போரியம் : விற்பனையகம்
6 ஸ்டோர்ஸ் : பண்டகசாலை
7 ஷாப் : கடை, அங்காடி
8 அண்கோ : குழுமம்
9 ஷோரூம் : காட்சியகம், எழிலங்காடி
10 ஜெனரல் ஸ்டோர்ஸ் : பல்பொருள் அங்காடி

01.01.2016 முதல் அகவிலைப்படி உயர்வு 6% (119% லிருந்து 125% ஆக உயருகிறது!!


இரண்டாம் பருவத் தேர்வுக்கு முன், மூன்றாம் பருவத்திற்கான பாடங்களை நடத்தலாமா?