Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 7 January 2016

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் எலும்புகள் பலமாகும்"

ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் உடலில் உள்ள எலும்புகள் பலமடையும் என்று நிபுணர்கள்தெரிவித்துள்ளனர். 

ஆலிவ் எண்ணெயில் உயர்தர வைட்டமின் A,D,E, K மேலும் பீட்டா கரோட்டின் மேலும் ஆன்டி ஆக்சிடன்கள்உள்ளது. இது புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் ஆலிவ் எண்ணெயில் உள்ள மேனோஆன்சாச்சுலேரேட்டர்ஃபேட்டி ஆசிட் MUFA ஆனது கெட்ட கொழுப்புகளையும் மேலும் டிரைகிளிசரைட்ஸ்போன்றவைகளையும் இது குறைக்கிறது. இது உயர் இரத்தம் அழுத்தத்தையும் இதய நோய்களையும்பாதுகாக்கிறது. 

தினம் ஒரு புத்தகம் "முதல் ஆசிரியர் "


இந்திரா காந்தி திறந்தவெளிபல்கலை கழகத்தின் தேர்வு முடிவுகள் வெளியீடு!!!

INDIRA GANDHI NATIONAL OPEN UNIVERSITY

B. Ed. Entrance Test September, 2015 Results Published

THE REGIONAL CENTRE WILL SEND OFFER LETTER FOR ADMISSION BASED ON THE RANK OBTAINED IN THE ENTRANCE TEST AND AVAILABILITY OF SEATS

ஜெர்மனில் அனைத்து பள்ளிகளும் அரசு பள்ளிகளே ஜெர்மனி பெண் ஆராய்ச்சியாளர் சுபாஷினிட்ரெம்மல் பேச்சு


 தேவகோட்டை:"வாழ்க்கை முழுவதும் கல்வி தான் சிறந்த நண்பனாக இருக்கும்,' என ஜெர்மனி பெண் ஆராய்ச்சியாளர் சுபாஷினிட்ரெம்மல் பேசினார்.

தாய் மொழியில் பயின்றால்தான் மக்கள் வளம் பெறுவார்கள் 

ஜெர்மனில் அனைத்து பள்ளிகளும் அரசு பள்ளிகளே 

தங்க நகையே அணியாத நாடு ஜெர்மன் 

 வாழ்க்கையில் கல்வி தான் நண்பன்

ஜெர்மன் பெண் ஆராய்ச்சியாளர் பேச்சு 

அரசுப்பள்ளி ஆசிரியர்களே! உங்களின் தனித்திறமை ,சாதனைகளை வெளிப்படுத்த ஓர் அரிய வாய்ப்பு
தொடக்கக் கல்வி துறை - துவக்க & நடுநிலை பள்ளிகளில் இரண்டாம் பருவ தேர்வு தேதிகள் அறிவிப்பு - வேலூர் மா.தொ.க. அலுவலர் (பொ) அவர்களின் செயல்முறைகள்


NMMS தேர்விற்கான வினாக்கள் 7-ம் வகுப்பு மூன்று பருவ புத்தகத்திலிருந்தும் இருந்தும், 8 வகுப்பு முதல் இரண்டு பருவ புத்தகத்திலிருந்தும் கேட்கப்படும் - இயக்குனர் செயல்முறைகள்


Annamalai University Apply Convocation -Last Date

81st Annual Convocation 2016 for Degree/Diploma ll b held on 26.02.16

>Fees-Rs.750/-
>Last date for of filled in applications-20.01.16

ஆசிரியர்கள் அடிக்கடி பயிற்சிக்கு செல்வதால் மாணவர்களின் படிப்பு பாதிப்பு: ஜாக்டா ஆசிரியர் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டா) ஒருங்கிணைப்பாளர் பி.கே.இள மாறன், முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

நவோதயா பள்ளி சேர்க்கை வரும் 9ம் தேதி தேர்வு

புதுவை ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில் 6ம் வகுப்பு சேர்க்கைக்கான தேர்வு, வரும் 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.காலாப்பட்டு ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளி முதல்வர் வினையத்தான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

10ம் வகுப்பு தேர்வுக்கட்டணம் ஜன., 20க்குள் செலுத்த உத்தரவு

பத்தாம் வகுப்பு தேர்வுக் கட்டணத்தை மாணவர்களிடம் இருந்து, ஜன., 20ம் தேதிக்குள் வசூலித்து செலுத்த வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் மாதத்தில் தொடங்குகிறது. இதற்கான மாணவர் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டது.

மத்திய அரசு பணிகளில் ஓபிசி வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் 11 சதவீத இடங்களே நிரப்பப்பட்டுள்ளன: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளிச்சம்

மத்திய அரசு பணிகளில் ஒபிசி வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டில் 11 சதவீத இடங்களே நிரப்பப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

மண்டல் கமிஷன் பரிந்துரை யின் அடிப்படையில் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இந்த இடஒதுக்கீடு மத்திய அரசு பணியில் கடந்த 1993-ல் இருந்தும் ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறு வனங்களில் 2008-ல் இருந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஜுன் மாதத்திற்கு பின்னர் 7-வது ஊதிய குழு சம்பளம்- மத்திய அரசு தகவல்

ஜனவரி மாத SSA பயிற்சி தேதிகள் - கிருஷ்ணகிரி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் செயல்முறைகள்


பள்ளித் தேர்வு அறிவிப்பு: ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவதை தவிர்க்க வலியுறுத்தல்

பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு, பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணிகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

100க்கும் மேற்பட்ட போலி ஆசிரியர்கள் - சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்

தமிழகத்தில் பல மாவட்டங்களில் போலி சான்றிதழ்களை கொடுத்து அரசு பள்ளிகளில் பலர் ஆசிரியர் பணியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. கடந்த 1991க்கு பின்னர் பணியில் சேர்ந்த பலரது சான்றிதழ்களை சரிவர ஆய்வு செய்யாததே இதற்கு காரணம். 

தமிழகத்தில் மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஜனவரி 18ல் துவக்கம்

மக்கள் தொகை விபரத்தை உறுதிப்படுத்த, தமிழகத்தில் ஜன.,18 முதல் பிப்.,5க்குள் 2வது முறையாக ஆசிரியர்கள் வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில் ஈடுபட்ட ஆசிரியர்கள் வீடுகள் தோறும் சென்று வீட்டில் உள்ள தலைவர், தலைவி பெயர், குழந்தைகள், அசையும், அசையா சொத்துக்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்ற 42 விதமான விபரங்களை சேகரித்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு விண்ணப்பத்தில் பூர்த்தி செய்தனர்.

இந்நிலையில், மீண்டும் தமிழகத்தில் மக்கள் தொகை விபரங்களை உறுதிப்படுத்தும் விதமாக, 2ம் கட்டமாக ஆசிரியர்களை கொண்டு வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2011ல் மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்திய அதே ஆசிரியர்களே இப்பணிகளில் ஈடுபட வேண்டும். இப்பணியை ஜனவரி 18ல் துவக்கி பிப்ரவரி 5க்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பு எப்படி: 2011ல் எடுத்த கணக்கெடுப்பு விபரத்துடன் கூடிய விண்ணப்பம் ஆசிரியர்களுக்கு 'பிரிண்ட் அவுட்' செய்து வழங்கப்படும். அந்த விண்ணப்பத்தையே வீடுகள் தோறும் எடுத்துச் சென்று, வீட்டில் உள்ள குடும்ப தலைவர், தலைவி பெயர் சரியாக உள்ளதா, குழந்தைகள் மற்றும் இதர விபரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும். இதில் கூடுதலாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, அலைபேசி எண்களை கண்டிப்பாக கேட்டு பெற வேண்டும். 2011க்கு பின் பிறந்த குழந்தை இருந்தால், அவர்களது விபரம், மாறுதலாகி சென்ற குடும்பத்தினர், புதியதாக திருமணம் முடித்தோர் விபரங்களை கூடுதலாக சேகரிக்குமாறு, ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குனர் ஒருவர் கூறுகையில், “வீடுகள் தோறும் வரும் ஆசிரியர்களுக்கு குடும்ப தலைவர்கள் முழு விபரம் வழங்கி, ஒத்துழைப்பு தர வேண்டும். ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, அலைபேசி எண்களை ஆசிரியர்களிடம் கண்டிப்பாக வழங்க வேண்டும். ஆதார் அட்டை இல்லாதோர் மக்கள்தொகை பதிவேடு (இ.ஐ.டி.,எண்) எண்ணை காண்பிக்கலாம். இக்கணக்கெடுப்பு படி தான், ரேஷன் கார்டுக்கு 'ஸ்மார்ட் கார்டு' தயாரிக்கும் திட்டம் உள்ளது. எனவே மக்கள் உண்மையான தகவலை தரவேண்டும்,” என்றார்.

தமிழில் இனிஷியல்!' ஆசிரியர்களுக்கு உத்தரவு

அரசாணைகள், உத்தரவுகள் அனைத்தும், தமிழிலேயே வெளியிட வேண்டும்' என, ஐந்தாண்டுகளுக்கு முன், தமிழக அரசு உத்தரவிட்டது. அதேபோல், 'கல்வி அதிகாரிகள் முதல், ஊழியர்கள் வரை, தமிழில் கையெழுத்து போட வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்

தமிழகம் உள்பட நாடு முழுவதும் 3.5 லட்சம் வங்கி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை (ஜன.8) ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஜனவரி 8, ஜனவரி 9 (இரண்டாவது சனிக்கிழமை), ஜனவரி 10 (ஞாயிறு) ஆகிய மூன்று நாள்கள் தொடர்ந்து வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
காரணம் என்ன?

பொதுத் தேர்வு: இன்று முதல் 104-இல் உளவியல் ஆலோசனை

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 104 தொலைபேசி சேவை மூலம் வியாழக்கிழமை முதல் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.மூன்று கட்டங்களாக இந்த சேவை வழங்கப்படவுள்ளது. தேர்வுக்கு முன்பு தேவைப்படும் ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், உணவு முறைகள் உள்ளிட்டவை குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும். 

13,000 ஊழியர்கள் இன்று விடுப்பு

 தமிழகம் முழுவதும், 13 ஆயிரம் வருவாய் துறை அலுவலர்கள், இன்று ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் நடத்துவதால், வெள்ள நிவாரணம் உள்ளிட்ட வருவாய் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.'வருவாய் துறையில் காலியாக உள்ள, 7,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும்; ஊதிய குளறுபடிகளுக்கு தீர்வு காண வேண்டும்;

TRB-Direct Recruitment of Secondary Grade Teachers 2015- Social Defence Department List


செப்டம்பர் - 2014 ல் சேர்ந்த ஆசிரியர்களுக்கு போனஸ் பகுதியாக கிடைக்கும்

September 2014 ல் சேர்ந்த ஆசிரியர்களுக்கு bonus பகுதியாக கிடைக்கும். Go annexure 4 ஆம் பக்கத்தில் 3    வது பத்தியை நன்கு படிக்கவும்.

Bonus period

1-4-2014 to 31-3-2015--12months.

இதில் 8 மாதம் பணிபுரிந்து இருந்தால் முழு bonus உண்டு.

ஒருவர் 6  மாதம் 12 நாட்கள் பணிபுரிந்து இருந்தால் 6 மாதங்கள் கணக்கிட்டு 6/12 ×1000=₹500வழங்கப்படும்.(B.T எனில்)

ஒருவர் 7 மாதம் 15 நாட்கள் எனில் 8/12×1000 என கணக்கிடவும்.

ஒருவர் 5 மாதம் 20 எனில் bonus இல்லை.  

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!