Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 8 January 2016

ஜனவரி - 9 வெளிநாடு வாழ் இந்தியர் நாள்


(வெளிநாடுவாழ் இந்தியர்கள் நாள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வெளிநாடுவாழ் இந்தியர் நாள், 2003 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவைத் தவிர்த்த பிற நாடுகளில் வாழும் இந்தியர்களின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்துமும்பை வந்து சேர்ந்த நாளின் (ஜனவரி 9, 1915) நினைவாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இந்திய நகரத்தில் இவ்விழா கொண்டாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவின்போது, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இடங்கள்

ஆண்டுதோறும் இந்நாள் கொண்டாடப்பட்ட இடங்கள்:

2003 - புது தில்லி
2004 - புது தில்லி
2005 - மும்பை
2006 - ஐதராபாத்
2007 - புது தில்லி
2008 - புது தில்லி
2009 - சென்னை
2010 - புது தில்லி
2011 - புது தில்லி
2012 - ஜெய்ப்பூர்
2013 - கொச்சி
2014 - புது தில்லி
2015 - மகாத்மா மந்திர், காந்தி நகர், குஜராத்

நன்றி மஞ்சுளா பிரபாகரன்.

காஷ்மீரில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த முடிவு

காஷ்மீர் மாநில முதல்-மந்திரி முப்தி முகமது சயீத் மறைவைத் தொடர்ந்து, புதிய முதல்-மந்திரி பதவிக்கு அவருடைய மகள் மெகபூபாவை ஆதரிப்பதாக மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ.க்கள், கவர்னர் என்.என்.வோராவிடம் கடிதம் அளித்தனர். ஆனால், 4 நாள் துக்கம் நீடிப்பதால், மெகபூபா உடனடியாக பதவி ஏற்க ஆர்வம் காட்டவில்லை. 

அவரை பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் ராம் மாதவ் சந்தித்து, புதிய அரசு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். 4 நாள் துக்கம் முடிந்த பிறகு, தங்கள் நிலையை தெரிவிப்போம் என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, புதிய அரசு அமைப்பது குறித்து மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜனதாவும் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு அக்கட்சிகளின் தலைவர்களுக்கு கவர்னர் கடிதம் அனுப்பினார். உடனடியாக புதிய அரசு பதவி ஏற்க வாய்ப்பில்லாததால், குறுகிய காலத்துக்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.

அதேஇ - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2016- செய்முறைத் தேர்வுகள் மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் (Download) செய்வதற்கான வழிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்

SSLC SPECIAL GUIDE | பள்ளிக்கல்வித்துறை சார்பில் SCERT வெளியிட்டுள்ளபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான குறைந்த பட்ச கற்றல் கையேடுகளை பதிவிறக்கம் செய்யுங்கள்..

CLASS10 / SSLC | TAMIL| SPECIAL GUIDE MLM RELEASED BY SCERT FOR TN SCHOOL EDUCATION.

CLASS10 / SSLC | ENGLISH| SPECIAL GUIDE MLM RELEASED BY SCERT FOR TN SCHOOL EDUCATION.

CLASS10 / SSLC | MATHS TM| SPECIAL GUIDE MLM RELEASED BY SCERT FOR TN SCHOOL EDUCATION.

CLASS10 / SSLC | MATHS EM| SPECIAL GUIDE MLM RELEASED BY SCERT FOR TN SCHOOL EDUCATION.

CLASS10 / SSLC | SCIENCE EM| SPECIAL GUIDE MLM RELEASED BY SCERT FOR TN SCHOOL EDUCATION.

CLASS10 / SSLC | SCIENCE TM| SPECIAL GUIDE MLM RELEASED BY SCERT FOR TN SCHOOL EDUCATION.

CLASS10 / SSLC | SOCIAL SCIENCE TM| SPECIAL GUIDE MLM RELEASED BY SCERT FOR TN SCHOOL EDUCATION

நாடு முழுவதும் ஒரே விதமான பாட திட்டம்?

நாடு முழுவதும், ஆறு முதல், 14 வயதுவரையிலான குழந்தைகளுக்கு, பள்ளிகளில் ஒரேவிதமான பாடத்திட்டத்தை அமல்படுத்தஉத்தரவிட வேண்டும் எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில்பொதுநல மனு தாக்கல்செய்யப்பட்டு உள்ளது.ஏற்றத் தாழ்வுகள்:சுப்ரீம் கோர்ட்டில், வழக்கறிஞர் அஸ்வின்உபாத்யாயா என்பவர் தாக்கல்செய்துள்ள பொது நல மனுவிவரம்: 

நம் நாட்டில் தற்போது நடைமுறையில்உள்ள, பள்ளி கல்வி பாடத்திட்டத்தில்,பலவேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள்உள்ளன. குழந்தைகளின்,சமூக,பொருளாதார நிலைக்கு ஏற்பகல்வியும் மாறுபடுகிறது.

நாடு முழுவதும் ஒரே விதமான பாட திட்டம்?

நம் நாட்டை, மதச்சார்பற்ற மற்றும்ஜனநாயக நாடு என கூறுவதற்கு,இப்போதுள்ள பள்ளி கல்வி பாட திட்ட முறைநிச்சயம் உதவாது.சமூகம்,பொருளாதாரம், மதம்,கலாசாரம் என, எந்தவகையிலும்,குழந்தைகளிடம் வேறுபாடு இருக்கக் கூடாதுஎன,அரசியல் சட்டத்தின், 21வது பிரிவில்கூறப்பட்டுள்ளது.மேலும், மத்திய அரசின் கல்வி உரிமைசட்டமானது, குழந்தைகளுக்குஇலவசமாககல்வி வழங்க வேண்டும் என்பதை மட்டுமின்றி,ஆறுமுதல், 14 வயதுக்கு உட்பட்டகுழந்தைகளுக்கு, நாடு முழுவதும்,ஒரேமாதிரியான பாட திட்டத்துடன் கூடியகல்வியை வழங்க வேண்டும் என்பதையும்வலியுறுத்துகிறது.சமூக, பொருளாதார பாகுபாடுநீங்க வேண்டும் என்றால், ஒரேவிதமானபாடத் திட்டம் உடைய கல்வியை, நாடு முழுவதும்அமல்படுத்த வேண்டும்.

பின்லாந்து,டென்மார்க், நியூசிலாந்து, நார்வே,கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா,ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான் போன்றநாடுகளில், ஒரே மாதிரியான கல்வி முறைதான் அமலில் உள்ளது.உத்தரவிட வேண்டும்:அதுபோல, நம்நாட்டிலும், பள்ளிகளில் ஒரேமாதிரியானபாடத்திட்டத்தைஅமல்படுத்தும்படி, மத்திய,மாநிலஅரசுகளுக்குஉத்தரவிட வேண்டும்.இவ்வாறுஅவர் மனுவில் கூறியுள்ளார்.குளிர்காலவிடுமுறை முடிந்து, சுப்ரீம் கோர்ட் மீண்டும்இந்தவாரத்தில் செயல்படத் துவங்கும்.அப்போது, இந்த மனுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என,எதிர்பார்க்கப்படுகிறது

அகஇ - தமிழ் / சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு வட்டார மைய அளவில் ஒரு நாள் பயிற்சி

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் பட்டப்படிப்புடன் கூடிய 4 வருட பி.எட். படிப்பு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சந்திரகாந்தா ஜெயபாலன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு ‘12 பி’ அந்தஸ்து கிடைத்து இருக்கிறது. இந்த சிறப்பு அந்தஸ்து கிடைத்ததற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அந்தஸ்து இதுவரை 4 திறந்தநிலை பல்கலைக்கழகங்களுக்கு கிடைத்து உள்ளது. 5-வதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் பெற்றிருக்கிறது.

4 மண்டல மையம்

இந்த அந்தஸ்து பெற்றதனால் ‘நேக்’ என்ற தேதிய தர அங்கீகாரம் (என்ஏஏசி) பெறலாம். அதற்காக விண்ணப்பித்து இருக்கிறோம். சென்னை, கோவை, மதுரை, தர்மபுரி ஆகிய 4 இடங்களில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு மண்டல அளவில் மையம் ஏற்படுத்தப்பட உள்ளது. அதற்காக தமிழக அரசு ரூ.65 லட்சத்து 15 ஆயிரம் ஒதுக்கி உள்ளது.

மதுரையில் மண்டல மையம் அமைப்பதற்கான நிலத்தை கலெக்டர் வழங்கியுள்ளார். இதுபோல மற்ற இடங்களில் நிலம் கையகப்படுத்திய பின்னர் கட்டிடம் கட்டப்படும். சமுதாயக்கல்லூரிகள் அனைத்து மாவட்டங்களிலும் திறக்க இருக்கிறோம். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

தற்போது பி.எட். தபால்வழியில் நடத்தி வருகிறோம். அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய படிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளோம்.

பி.ஏ. பி.எட்., பி.எஸ்சி. பி.எட். ஆகிய இரு படிப்புகள் ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பாக அடுத்த கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இளங்கலை பட்டத்துடன், பி.எட். படிப்பும் சேர்ந்து படிக்கக்கூடிய இதற்கு மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும்.

ஆய்வுக்குழு

இந்த படிப்புக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் விண்ணப்பித்துள்ளோம். விரைவில் ஆய்வுக்கு வர உள்ளனர். மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கக்கூடிய ரெகுலர் பி.எட். படிப்பு, ரெகுலர் எம்.எட். படிப்பும் அடுத்த கல்வி ஆண்டில் கொண்டு வரப்படும். தபால் வழியில் பட்டயப்பிரிவில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் பி.எட். படிக்கும் வகையில் அறிமுகப்படுத்த உள்ளோம். தபால் வழியில் எம்.எட். படிப்பு கொண்டுவர உள்ளோம்.

இவ்வாறு பேராசிரியர் சந்திரகாந்தா ஜெயபாலன் தெரிவித்தார்.

பி.எட். படிப்பு விண்ணப்பிக்கும் தேதி: சாஸ்த்ரா பல்கலை.யில் நீட்டிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் பி.எட். தொலைநிலைக் கல்விக்கான விண்ணப்பங்களை ஜன. 18-ம் தேதி வரை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் பி.எட். தொலைநிலைக் கல்விக்கான நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிச. 31-ம் தேதி வரை கொடுக்கலாம் என்று இருந்த நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் ஜன. 18-ஆம் தேதி வரை அளிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் இணையதளமானwww.sastra.edu -ல் தெரிந்துகொள்ளலாம்.

ஆசிரியர்களுக்கான பாடம் எடுக்கும் பயிற்சி என்பதால் ஆசிரியர்கள் தவிப்பு!

தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வும், 11ம் தேதி துவங்குகிறது.

இதனால், மழை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையால், கிடப்புக்குப் போன பாடங்களை விரைந்து முடிக்க, ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக, ஆசிரியர்களுக்கான பாடம் எடுக்கும் பயிற்சியை, ஆர்.எம்.எஸ்.ஏ., என்ற, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அதாவது, 10ம் வகுப்பு பாடம் எடுக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கு, நேற்று முதல், 9ம் தேதி வரை, மூன்று நாட்கள், மாவட்ட ரீதியாக சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த மூன்று நாட்களும், பள்ளி வேலை நாட்கள் என்பதால், ஆசிரியர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

தேர்தல் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க நடவடிக்கை: மத்திய இணை அமைச்சர் தகவல்

தேர்தல் மற்றும் மக்கள் கணக்கெடுப்பு பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கேத்ரியா தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுத் தருவதில் தங்களது தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். தேர்தல் மற்றும் மக்கள் கணக்கெடுப்பு பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் கல்விப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களை இதிலிருந்து விடுவிக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது என்றார்.

TRB அறிவிப்பு. வெள்ளத்தில் சேதமான சான்றிதழ்களுக்கு பதில், புதிய ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்களை பெறலாம்

வெள்ளத்தில் சேதமான சான்றிதழ்களுக்கு பதில், புதிய ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்களை, பிப்., 5ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில், மாற்று சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்களை இழந்தோருக்கு டி.ஆர்.பி., புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, வெள்ளத்தில் சான்றிதழ் இழந்தோர், டி.ஆர்.பி.,யின்,http:/trb.tn.nic.in/இணையதளத்தில், பிப்.,5ம் தேதி வரை, சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

தொகுப்பூதிய பகுதி நேர ஆசிரியர்களுக்கு போனஸ் வேண்டி - முதல் அமைச்சர் தனிப்பிரிவில் கடிதம்

வேலை வழங்கக்கோரி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஊர்வலம். 

2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வழங்கக்கோரி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து லஸ் கார்டன் வரை ஊர்வலமாக சென்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அரசு அலுவலகங்களுக்கு இலவச இணையதள இணைப்புகள்: ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு

தனியார் நிறுவனங்களிடம் இருந்து அரசு அலுவலகங்களுக்கு இலவச இணையதள இணைப்புகளைப் பெறுவது தொடர்பான மனு மீது ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டது 

'ஜிலேபி, சிப்ஸ்' சாப்பிட மாணவர்களுக்கு தடை!: பாயசம், அல்வாவுக்கு அனுமதி

 பள்ளி கேன்டீன்களில், 'ஜிலேபி, சிப்ஸ்' போன்ற உணவு பண்டங்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது; பாயசம், அல்வாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

        மத்திய மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகம் சார்பில், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகளில், கேன்டீன் உணவுப் பொருட்கள் மற்றும் மாணவர் உடல்நலன் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

வங்கி ஊழியர் இன்று 'ஸ்டிரைக்'மூன்று நாட்கள் பாதிப்பு அபாயம்

வங்கி ஊழியர்கள், இன்று, ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், மூன்று நாட்களுக்கு வங்கி பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், இன்று, ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. நாடு முழுவதும், ஐந்து லட்சம் வங்கி ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது 

சத்துணவு ஊழியர் போராட்ட அறிவிப்பு 11 பேரின் ஊதிய உயர்வு நிறுத்தம் ரத்து

சத்துணவு ஊழியர்களின் தொடர் போராட்ட அறிவிப்பால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 பேரின் ஊதிய உயர்வு நிறுத்தத்தை நிர்வாகம் ரத்து செய்தது.

          ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 மாதங்களில் 23 சத்துணவு ஊழியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அதன்பின் சிலரது 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து செய்யப்பட்டு இடமாறுதல் செய்யப்பட்டனர். சிலருக்கு ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டது. இதை கண்டித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்ட ஊழியர்கள் டிச., 14 ல் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 'பொற்கிழி': தமிழ் வளர்ச்சித்துறை ஏற்பாடு

அண்ணாதுரை, ஈ.வெ.ரா., பெரியார் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு படைப்பு, பேச்சு, திறன் வெளிப்படுத்தலில் வெற்றி பெறும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு 'பொற்கிழி' வழங்க, தமிழ் வளர்ச்சித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

டி.ஆர்.பி.,அறிவிப்பு-ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்களை, பிப்., 5ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்

வெள்ளத்தில்  சேதமான சான்றிதழ்களுக்கு பதில், புதிய ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்களை, பிப்., 5ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானடி.ஆர்.பி., அறிவித்துஉள்ளது.வெள்ளம் பாதித்த பகுதிகளில், மாற்று சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!