Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 9 January 2016

பண்டிகை கால சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை ஒட்டி பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வரும் 16-ம் தேதி புதுச்சேரியிலிருந்து விழுப்புரம், விருத்தாச்சலம், சேலம், ஈரோடு, திருப்பூர் மார்க்கமாக கோயமுத்தூருக்கு ரயில் எண் 06167 இயக்கப்படும். இந்த ரயில் புதுச்சேரியிலிருந்து பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.00 மணிக்கு கோவையை அடையும்.

கட்டைவிரல் அச்சுக்களால் தேசியக்கொடி: பள்ளி மாணவர்கள் கின்னஸ் சாதனை


சத்தியமங்கலம் சாரு மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த 766 மாணவர்கள் தங்களது கட்டைவிரல் அச்சுக்களை கொண்டு தேசிய கொடியை உருவாக்கி வெள்ளிக்கிழமை உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

ரெயில் கட்டணம் உயர்கிறது: ரூ.12 ஆயிரம் கோடி திரட்ட முடிவு

ரெயில்வே மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மத்திய நிதி அமைச்சகம் ஆண்டு தோறும் கணிசமான தொகையை ரெயில்வே அமைச்சகத்துக்கு வழங்கி வருகிறது.அந்த வகையில் 2015–16ம் நிதியாண்டுக்கு ரெயில்வே திட்ட செலவுகளுக்காக மத்திய நிதி அமைச்சகம் ரூ.40 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்திருந்தது.இந்த நிலையில் நிதி அமைச்சகத்தின் திட்ட செலவு ஒதுக்கீடுகள் திருத்தம் செய்யப்பட்ட போது,

ஆசிரியர் கல்வி; டிப்ளமோ தேர்வு முடிவு வெளியீடு.

ஆசிரியர் கல்வி டிப்ளமோ மாணவ, மாணவியருக்கான தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. தமிழகத்தில், 400க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சிப்பள்ளிகள் உள்ளன. இதில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு, இரண்டுஆண்டுகள் நடத்தப்பட்டு, டிப்ளமோ வழங்கப்படுகிறது. இதில், தேர்ச்சி பெறுபவர்கள், அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிய வாய்ப்புள்ளது. 

2015-16 பள்ளி வேலை நாள்,ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு,மகப்பேறு விடுப்பு குறித்து சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் RTI- பதில்மிஸ்டு கால் மூலம் பணத்தை டிரான்ஸ்பர் செய்யும் புதிய வசதி அறிமுகம்

முன்னணி தனியார் வங்கியான பெடரல் வங்கி மி்ஸ்டு கால் மூலம் பணத்தை பரிமாற்றம் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.மிஸ்டு கால் டிரான்ஸ்பர் வசதியை பெற முதலில் பெடரல் வங்கியின் வாடிக்கையாளர் அவர் கணக்கு வைத்திருக்கும் கிளையில் பதிவு செய்ய வேண்டும்.

புத்தகங்களில் வரும் சோட்டா பீம்: கணிதம், ஆங்கிலம் கற்க உதவும் பீம்

சோட்டா பீம் கதாபாத்திரத்துடன், தொலைக்காட்சியில் வரும் தொடர்களையே பார்த்துகொண்டிப்பதால், குழந்தைகள் பாடங்களில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.

பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட இயக்குனர் உத்தரவு.

சேலத்தில் பானை மீது நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த மாணவிகள்

சேலம் குளூனி மெட்ரிக் குலேசன் மேல்நிலைப் பள்ளியின் 55–வது ஆண்டு விழாவை முன்னிட்டும், இந்தியர்களின் கலாச்சாரத்தினையும் தமிழ்நாட்டின் பண்பாட்டினை பறைசாற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் இன்று பள்ளி வளாகத்தில் பானையின் மீது நின்று இறைவணக்க பாடல், பாரதியாரின் பாரத சமுதாயம் வாழ்கவே பாடல் ஆகிய பாடல்களுக்கு 6.4 நிமிடங்கள் 483 மாணவிகள் குழுவினராக இணைந்து பரதநாட்டியம் நடனம் ஆடி கின்னஸ் சாதனை படைத்தனர்

பசங்க 2 படம்: 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இலவசம்!

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, அமலா பால், பிந்து மாதவி மற்றும் குழந்தைகள் பலரும் நடித்துள்ள படம், பசங்க 2. இந்தப் படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி, நல்ல வசூலைப் பெற்றுள்ளது. 
இதற்காக 2டி எண்டர்டெயிண்மென்ட் சார்பாக, பாண்டிராஜுக்கு கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார் சூர்யா.படத்துக்கு மேலும் கூட்டம் வருவதற்காக புதுச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது

பள்ளி மாணவர்கள் ஜங்க் உணவுகளை கொண்டு வருவதை தடுக்க கடும் சோதனை: சிபிஎஸ்இ

பள்ளி மாணவர்கள் ஜங்க் உணவு வகைகளைக் கொண்டு வருவதையும்,பள்ளி கேன்டீன் மற்றும் 200 மீட்டர் பரப்பில் ஜங்க் உணவுகள் விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து சிபிஐஎஸ் பள்ளிகளுக்கு நிர்வாகம் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

எஸ்சி, எஸ்டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு தொடர்பான தீர்ப்பில் பிழை: ஒப்புக்கொண்டது உச்ச நீதிமன்றம்.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின (எஸ்சி, எஸ்டி) பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களின் பதவி உயர்வு தொடர்பாக ஓராண்டுக்கு முன்னர் அளிக்கப்பட்ட தீர்ப்பில் பிழை உள்ளதை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது."எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்குவதை அரசியல் சாசனம் அனுமதிக்கிறது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ள 27,499, எஸ்.எஸ்.எல்.சி. 24,665 மாணவர்கள்

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 27ஆயிரத்து 499, மாணவர்களும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 24ஆயிரத்து 665 மாணவர்களும் எழுத உள்ளனர்.தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும் மார்ச் 4- ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1-ஆம் தேதி முடிவடைகிறது.

தேர்தல் முறைகேட்டை அனுப்ப;வாட்ஸ் ஆப், பேஸ்புக் வசதி

சென்னை: ''சட்டசபை தேர்தல் முறைகேடு புகார்களை, படங்களுடன் அனுப்ப, 'வாட்ஸ்ஆப், பேஸ்புக்' வசதி செய்யப்பட்டுஉள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.கண்ணியமான தேர்தலுக்கான அமைப்பின் சார்பில், 'கண்ணியமான தேர்தல்' என்ற தலைப்பில், வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம், துவங்கியது.

உங்களுக்கு என்ன பயிற்சி வேண்டும்? தனித்தனியே கேட்கப்படும் கேள்வியால் ஆசிரியர்கள் குழப்பம்

உங்களுக்கு என்ன பயிற்சி வேண்டும்?' என, ஒவ்வொரு ஆசிரியரிடமும், தனித்தனியே விவரம்கேட்கப்படுவதால், ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை,அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஒரு சில நாள் பாடம் சார்ந்து, பயிற்சி வழங்கப்பட்டு வந்தன. இவை சமீப காலமாக அதிகரித்து, அனைவருக்கும் கல்வி திட்டம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம், ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை என தனித்தனியே ஆண்டுக்கு, 20 நாள் வரை பயிற்சி வழங்கப்படுகிறது

பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க,தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் சுற்றறிக்கை

அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான, பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களின் மேற்படிப்பு, பணி அனுபவம் அடிப்படையில், தலைமை ஆசிரியர்களாகவும், நிலை வாரியாகவும்,பதவி உயர்வு வழங்கப்படுகிறது.அதன்படி,

பணி நிரந்தரத்துக்காகக் காத்திருக்கும் கெளரவ விரிவுரையாளர்கள்

தமிழகம் முழுவதும் 84 அரசு கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் 3,350 கெளரவ விரிவுரையாளர்களை பணிநிரந்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் 2004-ஆம்ஆண்டு சுய நிதிப் பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் அப்போதைய அதிமுக அரசு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

பாடத்திட்டம் திடீர் மாற்றம்: மாணவர்கள் அதிர்ச்சி

உயர் படிப்புக்கான உதவித்தொகை தரும், தேசிய வருவாய் வழி தேர்விற்கு, 15 நாட்களே உள்ள நிலையில், திடீரென பாடத்திட்டம் மாற்றப்பட்டதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

தேர்தல் பயிற்சி யாளர்களுக்கான பயிற்சி முகாம்: சென்னையில் நாளை துவக்கம்

சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு, பயிற்சி அளிக்க உள்ள பயிற்சியாளர்களுக்கான முகாம், சென்னையில் நாளை முதல் மூன்றுநாட்களுக்கு, நடைபெற உள்ளது.தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், ஓரிருமாதங்களில் நடைபெற உள்ளது.

பி.ஏ., - பி.எஸ்சி.,யுடன் இணைந்து பி.எட்., படிப்பு

பி.ஏ., மற்றும் பி.எஸ்சி.,யுடன் இணைந்த, பி.எட்., படிப்பை, வரும்கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்ய, திறந்தநிலை பல்கலை முடிவு செய்துள்ளது.பல்கலை துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் அளித்த பேட்டி:எங்கள் பல்கலைக்கு, யு.ஜி.சி., மானிய அந்தஸ்து கிடைத்துள்ளது.

தினம் ஒரு புத்தகம்"உலகக் கல்வியாளர்கள்

தேர்தல் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க நடவடிக்கை:மத்திய இணை அமைச்சர் தகவல்

தேர்தல் மற்றும் மக்கள் கணக்கெடுப்பு பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கேத்ரியா தெரிவித்துள்ளார்.அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுத் தருவதில் தங்களது தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் மீண்டும் ஜல்லிகட்டு நடத்த மத்திய அரசு அனுமதி

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தில் மீண்டும் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.ஜல்லிகட்டு விளையாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே விதமான பாட திட்டம்?

நாடு முழுவதும், ஆறு முதல், 14 வயதுவரையிலான குழந்தைகளுக்கு, பள்ளிகளில் ஒரேவிதமான பாடத்திட்டத்தை அமல்படுத்தஉத்தரவிட வேண்டும் எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில்பொதுநல மனு தாக்கல்செய்யப்பட்டு உள்ளது.ஏற்றத் தாழ்வுகள்:சுப்ரீம் கோர்ட்டில், வழக்கறிஞர் அஸ்வின்உபாத்யாயா என்பவர் தாக்கல்செய்துள்ள பொது நல மனுவிவரம்:

அரையாண்டு தேர்வு:

கல்வித்துறை சர்க்குலர்
துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 11ம் தேதி முதல் அரையாண்டுத் தேர்வுகளை நடத்த,தொடக்கக் கல்வி துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ்,இயங்கும் பள்ளிகளில், 1முதல், 8ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத் தேர்வுகள் வரும், 11ம் தேதி முதல், 27ம் தேதி வரை,நடத்த வேண்டும். இதன்படி,உதவி மற்றும் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் வாயிலாக,அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தேர்வுக்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள,அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு,சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

National Apricot Day – January 9 NATIONAL APRICOT DAY Apricot lovers from all over the United States observe National Apricot Day every year on January 9th.

Today's Reason to Celebrate

January 9, 2016 is

National Apricot Day

Celebrate National Apricot Day! Did you know that the word "apricot" means "precious" in Latin? Apricots ripen earlier than most summer fruits, making them a precious commodity every spring.

The apricot tree emerged in China more than 4,000 years ago and eventually made its way across Asia to the Mediterranean. Centuries later, Spanish explorers introduced the apricot to the New World and planted the trees all over the west coast. Today, farmers in California’s San Joaquin Valley produce 95% of the apricots grown in the United States.

Whether you prefer them fresh, broiled, grilled, or poached, enjoy an apricot today in honor of the occasion! Happy National Apricot Day!

Thanks: Manjula Prabakaran

தினம் ஒரு உடல் நலம்..சர்க்கரையை நோயை குணப்படுத்த உதவும் சில வீட்டு சிகிச்சைகள் - 

இந்த உலகத்தில் வாழும் கோடிக்கணக்கானோர் ஒன்று தங்கள் இரத்தத்தில் குறைந்த அளவிலான சர்க்கரையுடன் வாழ்கின்றனர் அல்லது அதிக அளவிலான சர்க்கரையுடன் வாழ்கின்றனர்.

சர்க்கரை நோயாளிகள் அன்றாடமும் உடல்நல பிரச்சனைகளோடு போராட வேண்டி வருகிறது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தாமல் விட்டாலோ அல்லது கவனிக்காமல் விட்டாலோ கண் தெரியாமை, சிறுநீரக நோய், இரத்த குழாய் பாதிப்பு, தொற்று, இதய நோய், நரம்பு பாதிப்பு, அதிக இரத்த கொதிப்பு, வாதம், மூட்டு ஊனம் மற்றும் கோமா போன்றவைகள் ஏற்படும்.

உங்களுக்காக, உங்கள் சர்க்கரை நோய்க்காக நாங்கள் சில வீட்டு சிகிச்சைகளைப் பற்றி கூறுகிறோம். உடல் எடை மற்றும் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடுகளுக்கான உணவு சிகிச்சைகளும் இதில் அடக்கம்.

சமைக்கப்படாத இயற்கை உணவு 
அனைத்து வகையான நோய்களுக்கும் சிறந்த மருந்தாக விளங்குவது சமைக்கப்படாத இயற்கை உணவு தான். இந்த உணவுகளில் அவைகளுக்கென சொந்த என்ஸைம்கள் உள்ளது. இவைகள் ரசாயனத்துடன் நீர்க்கப்படுவதில்லை. முளைத்த பயறு, பழங்கள், பழச்சாறுகள், நட்ஸ் போன்றவைகளை அப்படியே பச்சையாக உண்ணலாம். நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை உண்ணும் போது நம் உடலில் சர்க்கரை மெதுவாக உறிஞ்சப்படுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் சமநிலையுடன் விளங்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை நிலை நிறுத்தும் வேலையை திறம்பட செய்யும் கரைகின்ற வகையிலான நார்ச்சத்து. ஆப்பிள், ஆப்ரிகாட், பீட்ரூட், பெர்ரி, கேரட், சிட்ரஸ் பழங்கள், முள்ளங்கி வகை கிழங்கு போன்ற சில பழங்கள் மற்றும் காய்கறிகளில் கரைகின்ற நார்ச்சத்து வளமையாக உள்ளது. சர்க்கரை நோய் உள்ள பலரும் அவதிப்பட்டு வரும் எல்.டி.எல். கொலஸ்ட்ரால் உயர்வை குறைக்கவும் கூட கரைகின்ற நார்ச்சத்து உதவுகிறது.


முழுமையான உணவு 
காய்கறிகள் மற்றும் பழங்கள் அடங்கிய உணவுகளில் வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் வளமையாக உள்ளது. தமனி சுவர்கள் நச்சு அடையாமல் இருக்கவும், பாதிப்படையாமல் இருக்கவும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் தடுக்கும். அப்படி இல்லாத பட்சத்தில் அடைப்பு ஏற்பட்டு இதய நோய் உண்டாகிவிடும்.

உடற்பயிற்சி 
மருந்து மாத்திரை இல்லாமல் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது உடற்பயிற்சி. இந்த நோயின் தீவிரத்தை இது குறைக்கும். அதனால் நீண்ட கால சிக்கலையும் குறைக்கும். உடற்பயிற்சிக்கு தேவையான ஆற்றல் உடல் எடையை குறைக்க உதவும். இதனால் உடல் பருமன் பிரச்சனையும் நீங்கும். உடற்பயிற்சி என்பது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும். இதனால் டைப் 2 வகை சர்க்கரை நோய்க்கு மூல காரணமாக விளங்குவதை இது கையாளும். மேலும் சீரான முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால் கொலஸ்ட்ரால் அளவும், இரத்த கொதிப்பும் கூட குறையும். தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தால் கூட நல்ல பயன் கிடைக்கும்.

தியானம் 
தியானம் செய்வதால் நம் உடலில் உள்ள இன்சுலின் எதிர்ப்பு குறையும். கார்டிசோல், அட்ரினாலின் மற்றும் நோராட்ரினலின் போன்ற சில மன அழுத்த ஹார்மோன்கள் இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் அளவுகளின் உற்பத்தியை தீவிரப்படுத்தும். ட்ரான்ஸ்சென்டென்ட்டல் தியான முறை மூலமாக நரம்பியல் ஹார்மோன்களை குறைத்தால், இரத்தத்தில் உள்ள இன்சுலின் மற்றும் க்ளுகோஸின் அளவு சமநிலையுடன் விளங்கும். மெட்டபாலிக் சிண்ட்ரோம் மற்றும் சர்க்கரை நோயை நடுநிலையாக்க இது உதவும்.

துளசி இலை 
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க துளசி இலை உதவுகிறது. துளசி இலையில் விஷத்தன்மையுள்ள அழுத்தத்தை போக்கும் ஆற்றல்மிக்க ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளது. இந்த அழுத்தம் தான் சர்க்கரை நோயில் பல சிக்கல்களை உண்டாக்குகிறது.

ஆளி விதைகள் 
இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை நிலைப்படுத்த ஆளி விதைகள் உதவும். குறிப்பாக ஆளி விதைகளை உட்கொண்டு வந்தால் உணவிற்குப் பிற்பட்ட சர்க்கரை அளவு 28 சதவீதமாக குறையும்.

இலவங்கப்பட்டை 
உணவில் 1 கிராம் அளவில் இலவங்கப்பட்டையை சேர்த்துக் கொண்டு ஒரு மாதத்திற்கு அதை உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.

கிரீன் டீ 
கிரீன் டீ என்பது புளிப்புச்சத்து ஏறாத வகையாகும். அதனால் அதில் பாலிஃபீனால் அளவு அதிகமாக இருக்கும். இதனால் திடமான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் ஹைபோக்ளைசெமிக் தாக்கங்கள் இருக்கும். இரத்தத்தில் சர்க்கரை கட்டுப்பாடான அளவில் வெளியேற பாலிஃபீனால் உதவும்.

முருங்கைக்காய் இலைகள் 
இந்த இலைகளில் உள்ள நார்ச்சத்து தெவிட்டான நிலையை அதிகரித்து உணவு உடைபடுவதை குறைக்கச் செய்யும்.

நாவல் பழ விதைகளின் பருப்பு 
சர்க்கரையை கட்டுப்படுத்தி சர்க்கரை நோய்க்கான அறிகுறியை பறந்தோட வைக்க உதவும் நாவல் பழ இலைகள். எனவே சர்க்கரை நோயாளிகள் நாவல் இலைகளை மெல்ல பரிந்துரைக்கப்படுகிறது.

பாகற்காய் 
இரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்க உதவும் பையோ ரசாயனமான இன்சுலின்-பாலிபெப்டைட் இந்த செடியில் உள்ளது. பாகற்காயை குழம்பில் மற்றும் சூப்களில் பயன்படுத்தலாம்.

வேம்பு 
சர்க்கரை நோய்க்கான சிகிச்சைக்கு கொழுந்து வேம்பு இலைகளை பயன்படுத்தலாம். அதிலிருந்து எடுக்கப்படும் சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால் சர்க்கரை நோய்க்கு நல்ல பலனை அளிக்கும்.

கருப்பு சீரகம் 
கருப்பு சீரகம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுவதால், சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க இவற்றைப் பயன்படுத்தலாம்.

நாவல் பழ விதை 
நாவல் பழ விதைகளில் உள்ள க்ளுகோசைட், ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றுவதை தடுக்கும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும். மேலும் இன்சுலின் உயர்வை கட்டுப்பாட்டில் வைக்கும். மேலும் இதயத்தை பாதுகாக்கும் குணங்களையும் இந்த பழம் கொண்டுள்ளது.

எம்.எஸ்சி. படித்துவிட்டு விவசாயம் பார்க்கும் மாணவி: கூலி ஆட்கள் இல்லாமல் நாற்று நட்டு களையெடுக்கிறார்

பெண்கள் இன்று களம் காணாத துறைகள், களங்களே இல்லை. அதில் விவசாயமும் விதிவிலக்கல்ல. மதுரை அலங்காநல்லூர் அருகே வலசை கிராமத்தில் எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு குரூப்-2 அரசு தேர்வுக்கு தயாராகும் தனலெட்சுமி(23), வீட்டுக்கு வருமானம் தேடித் தரும் வகையில் விவசாயம் செய்யத் தொடங்கிவிட்டார்.

இவரது தந்தை மனோகரன். தாய் சரோஜா. தம்பி தீபன். மனோகரன், மதுரை தனியார் பேருந்தில் நடத்துநராகப் பணிபுரிகிறார். இவர் ஒருவரின் வருமானத்தில் குடும்பத்தை நடத்த முடியாததால் மகன் தீபனை படிக்க வைக்க முடியவில்லை. தனலெட்சுமி மட்டும் குடும்ப வறுமையிலும் படிப்பை விடாமல் கஷ்டப்பட்டு படித்து கடந்த ஆண்டு எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ளார். படிப்பு முடிந்ததும் வழக்கமான பெற்றோரை போல் தனலெட்சுமி பெற்றோரும், அவரை வேலைக்கு அனுப்பியுள்ளனர். மதுரையில் தனியார் கம்பெனியில் ரூ.7,500 ஊதியத்துக்கு வேலைக்கு சென்றுள்ளார். பேருந்து பயணக் கட்டணம், கைச்செலவு போக கையில் எதுவும் மிஞ்சவில்லை. அதனால், அந்த வேலையை உதறிவிட்டு தற்போது சொந்த ஊரிலேயே தனலெட்சுமி விவசாயம் செய்யத் தொடங்கிவிட்டார்.

இதுகுறித்து தனலெட்சுமி கூறியதாவது: எங்கப்பா, அம்மாவுக்கு விவசாயம் செய்ய ஆசை. ஆனால் சொந்த நிலம் கிடையாது. நான் சிறிய வயதாக இருக்கும்போது, எங்கள் ஊர் பக்கம் ஒருவரிடம் ஒரு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து எங்கப்பா விவசாயம் செய்தார். பள்ளி விடுமுறை நாட்களில் அம்மாவுடன் நானும் வயலுக்குச் செல்வேன். அப்போது அவர்களும், வேலைக்கு வந்தவர்களும் களை எடுப்பது, நாற்று நடுவதைப் பார்த்து நானும் செய்வேன். விளையாட்டாக செய்த விவசாயத்தை இப்போது முழுமையாக கற்றுக்கொண்டேன்.

ஒரு கட்டத்தில் எங்கப்பா, விவசாயத்தில் லாபம் கிடைக் காததால் பேருந்து நடத்துநர் பணிக்கு சென்றுவிட்டார். விவசாயத்தை விட மனமில்லாமல் நானும், எங்கம்மாவும் இப்போது செய்கிறோம். எனக்கு விவசாயம் செய்யதான் ஆசை.

பெரும்பாலான நேரம் வீட்டில் சும்மா இருப்பதால் எங்கம்மாவுடன் சேர்ந்து விவசாயம் செய்கிறேன். களையெடுக்க, நாற்று நட ஆட்களை கூப்பிட்டால் அவர்கள் 3 மணி நேரம்தான் வேலை பார்ப்பார்கள். அதற்கு ரூ.200 சம்பளம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு வந்து போக பேருந்து கட்டணம், டீ, வடை வாங்கிக் கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு 10 பேர் வந்தால் ரூ.1500 செலவாகும். 3 மணி நேரத்துக்கு மேல அவர்கள் ஒரு நிமிடம்கூட வயலில் நிற்கமாட்டார்கள். வரப்பை விட்டு மேலே ஏறிவிடுவார்கள். ஒரு ஏக்கரில் 40 மூட்டை நெல் கிடைக்கும். இதில் 10 மூட்டையை நிலத்தின் சொந்தக்காரருக்கு குத்தகையாக கொடுக்க வேண்டும். இதுபோக உரம், மருந்து செலவை கணக்கிட்டால் போட்ட முதலை எடுப்பதே சிரமம். அரிசி விலை உச்சத்தில் இருந்தாலும் விவசாயிகளுக்கு உற்பத்தி செய் யும் நெல்லுக்கு விலை கிடைப்ப தில்லை. எங்களிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கும் நெல் வியாபாரிகளுக்குதான் லாபம். சொந்த நிலத்தில் திட்டமிட்டு விவசாயம் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்காலத்தில் சொந்தமாக நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்.

இன்று விவசாய நிலங்கள் எல்லாம் கல் முளைத்த கட்டிடங் களாக மாறி வருகின்றன. மக்கள் தொகை பல மடங்கு பெருகி வருகிறது. எவ்வளவோ ஆராய்ச் சிகள், கண்டுபிடிப்புகள் நடக்கிறது. இவற்றுக்கெல்லாம் அடிப்படை தேவை உணவுதான். உணவில் லாமல் எந்த கண்டுபிடிப்புகள், ஆராயச்சிகளாலும் பயனில்லை என்றார். படித்துவிட்டு பெரிய வேலையில் கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற சராசரி பெண்களில் இருந்து மாறுபட்டு நிற்கும் தனலெட்சுமியின் சமுதாய அக்கறை, பணம் சம்பாதிக்க கிராமங்களைவிட்டு நகரங்களை நோக்கி ஓடும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!