Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 11 January 2016

காமராஜ் பல்கலை தொலை தூர கல்வியில் மாணவர் சேர்க்கை

மதுரை காமராஜ் பல்கலை தொலைதூரக் கல்வி மையத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.காம்.,(சி.ஏ.,), பி.சி.ஏ., பி.லிட்., பி.பி.ஏ., எம்.ஏ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.ஜி.டி.சி.ஏ., டிப்ளமோ, டிப்ளமோ(பி.ஜி.,), சர்டிபிகேட் மற்றும் பல்கலையால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் சேர்க்கை நடக்கிறது.

ஐ.ஏ.எஸ்., பயிற்சி வகுப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு

பாட்கோ நடத்தும் ஐ.ஏ.எஸ்., பயிற்சி வகுப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு நேற்று நடந்தது; 176 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

புதுச்சேரி ஆதிதிராவிடர் மேம்பாட்டுக் கழகம்(பாட்கோ), சென்னை மனிதநேய அறக்கட்டளையுடன் இணைந்து, இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பு முடித்த ஆதிதிராவிட இளைஞர்களுக்கு, ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்., பயிற்சி அளித்து வருகிறது.

பிளஸ் 2 தேர்வு பணியில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க கூடாது!

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக, சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

இதில் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தன், பேசியதாவது:

முன் அனுமதி என்றால் என்ன ??? யார் முன்அனுமதி பெறவேண்டும்? யார் பின் அனுமதி பெற வேண்டும்???


இந்திய அஞ்சல் வட்டத்தில் 439 தபால்காரர் பணி

இந்திய அஞ்சல் துறையின் மேற்கு வங்க அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 439 Postman/Mailguard பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தினம் ஒரு புத்தகம் "சிரிக்கும் வகுப்பறை "


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "மருத்துவரின் காதலி கடுக்காய்!"

நோயற்ற வாழ்வு வாழவும், உடலினை உறுதி செய்யவும் இயற்கை நமக்கு பல்வேறு வளங்களை வழங்கியுள்ளது. நமது உடலை வலிமையுறச் செய்வதில் கடுக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

கடுக்காய் மரம் 4000 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது புராணங்களிலும் இம்மரத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை அருந்தும் போது ஒரு துளி அமிர்தம் சிந்தியது. அத்துளி பூமியில் விழுந்து கடுக்காய் மரமாக உருவெடுத்தது என புராணங்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 12 சுவாமி விவேகானந்தர் பிறந்ததினம்...இந்தியா தேசிய இளைஞர் நாள்..

சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, சனவரி 12, 1863 - சூலை 4.1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின்இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா(Narendranath Dutta). இராமகிருஷ்ணபரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன.

INSPIRE AWARD 2015/16- வெற்றிபெற்ற மாணவர்களின் வங்கி கணக்கில் பரிசுத்தொகை செலுதப்பட்டுவிட்டது - பதிவு செய்யாத பள்ளிகளுக்கு மீண்டும் வாய்ப்பு - இயக்குனர் செயல்முறைகள்


TNTET: 4 ஆண்டுகள் பணியாற்றி வருபவர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு கல்வித்துறை இயக்குனரிடம் மனு

நிபந்தனையின் அடிப்படையில் நிரந்தர பணியிடத்தில் 4 ஆண்டுகள் பணியாற்றி வரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், இணை இயக்குனர் கருப்பசாமி ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

பவுடர், சீப்பு, கண்ணாடியுடன் மாணவர்களை வரவேற்கும் அரசுப் பள்ளி: தனியார் பள்ளியை புறந்தள்ளிய கிராம மக்கள்

உசிலம்பட்டி அருகே ஒரு ஊரில் அவசரமாக பள்ளிக்கு வரும் மாணவர்கள் பயன்படுத்து வதற்காக வகுப்பறையிலேயே பவுடர், சீப்பு, கண்ணாடி, பற்பசை போன்றபொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. காலை யில் வந்தவுடன், தங்களை தயார்படுத்திய பின்பே மாணவர்கள் வகுப்பறைக்குச் செல்கின்றனர்.

கோயில்களில் ஆடை கட்டுப்பாடு உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

இந்து சமய அறநிலையத்துறை கோயில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற அமர்வு வரும் 18-ம் தேதி வரை இடைக்கால தடை விதித்துள்ளது.தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் ஜன. 1 முதல் ஆண், பெண் பக்தர்களுக்கு ஆடை, கட்டுப்பாடு விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜனவரி 20-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை கூட்டத் தொடர்: செயலாளர் ஜமாலுதீன் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 20-ம் தேதி தொடங்குகிறது.கூட்டத்தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டார்.அதில் கூட்டத்தொடர் ஜனவரி 20-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் கிடைக்காமல் 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள்,துறை அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்ற பின் உயர்கல்வி பயில வேண்டும். இதற்காக அரசு ஊக்க ஊதிய உயர்வை வழங்கி வருகிறது.அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிச் செயலர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும் என, அரசு தற்போது அறிவித்துள்ளது.

கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை – அனிஷா யூனுஸ்

சில தினங்களுக்கு முன் ஒரு பள்ளி முதல்வரைப் பார்த்து நான் கேட்ட கேள்விதான் இந்த ஆவணப்படத்திலும் கேட்கப்படுகிறது. வெள்ளையனை வெளியேற்றியபின் இந்தியாவின் ஒவ்வொரு தெருக்கோடியிலும் ஒரு பள்ளிக்கூடம் ஒரு பொறியியற்கல்லூரி, ஒரு கலைக்கல்லூரி என கொடி கட்டிப்பறக்கும் நாம், இந்த நொடி வரையிலும் ஏன் இன்னொரு ராமானுஜத்தையோ, சர் சி.வி இராமனையோ, ஹோமி ஜஹாங்கீர் பாபாவையோ உருவாக்க முடியவில்லை??? எத்தனை கடினம் மேற்கொண்டு, எத்தனை எத்தனை சொத்துக்களை விற்றுப் படிக்க வைத்தும் ஏன் வீட்டுக்கொரு அப்துல் கலாம், நாராயண மூர்த்தி, சுந்தர் பிச்சை உருவாக இயலவில்லை…. எங்கே தவறு?…. புட்டுப் புட்டு வைக்கின்றது இந்த ஆவணப்படம்.

மழை வெள்ளம் பாதிப்பு: ஆதார் அட்டை புகைப்படப்பணி மார்ச் மாதம் வரை நீட்டிப்பு

மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை மூலம் ஆதார் புகைப்படம் எடுக்கும் பணி கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உதவியுடன் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது

தமிழ் பாடத்திற்கு முன்பயிற்சி விடுமுறை கிடைக்குமா?

சமீபத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதைப்பார்த்த தமிழ் அய்யாக்களின், அம்மாக்களின் முகத்தில் ஈ ஆடவில்லை.  ஆம்! அவர்கள் முகம் எள்ளும் கொள்ளுமாக வெடித்தது! அப்படி என்ன ஆயிற்று அவர்களுக்கு? என்ற கேள்வி எழத்தானே செய்யும்.

சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு சென்னையில் தொடங்கியது. இந்த பயிற்சி வருகிற 13ம் தேதி வரை நடக்கிறது தமிழக தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதற்காக தமிழகத்தில் பல்வேறு அளவில் உள்ள 15 அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடக்கம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. தமிழகத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வுகள் நடக்கும். ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க இருந்தது.

1,330 அடி நீள திருக்குறள் பதாகை வெளியீடு

திருவள்ளுவர் தினத்தையொட்டி, 1,330 அடி நீளம் கொண்ட திருக்குறள் பதாகை வெளியிடப்பட்டது. 
சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலை முன் இதற்கான நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

"என்சிசி-யில் இணைத்துக் கொள்ள 7,859 கல்வி நிறுவனங்கள் காத்திருப்பு'

தேசிய மாணவர் படையில் (என்சிசி) தங்கள் மாணவர்களை இணைத்துக் கொள்ள 7,859 கல்வி நிறுவனங்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளன.
 இதுகுறித்து என்சிசி இயக்கத்தின் தலைமை இயக்குநர் அனிருத்தா சக்ரவர்த்தி தெரிவித்ததாவது:

அரசுத் துறைகள் தொடர்பான புகாரில் ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்: மத்திய அரசு அறிவிப்பு

அரசுத் துறைகள் தொடர்பாக இணையதளம் மூலம் புகார் தெரிவிப்பவர்கள், தங்களது ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும்: பிரணாப் முகர்ஜி

 நாட்டில் கல்வித் தரம் குறைந்து வருவதைத் தடுத்து, அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

CPS :சர்வதேச ஓய்வூதிய சந்தையில் இந்தியா


செட்' தேர்வில் முறைகேடுக்கு வாய்ப்பு

உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' தேர்வை, துணைவேந்தரே இல்லாத பல்கலை நடத்துவதால், முறைகேடுகளுக்கு வாய்ப்புள்ளது; தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சர் உறுதி என்னாச்சு?சத்துணவு ஊழியர் கேள்வி

  'முதல்வருடன் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்த அமைச்சர், அதன் பின், எங்களைக் கண்டு கொள்ளவில்லை' என, சத்துணவு ஊழியர்கள் சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.சத்துணவு ஊழியர்களின் மாநில மாநாடு, கிருஷ்ணகிரியில் நடந்தது. இதில், 'சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்கி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; சத்துணவு துறையை தனி துறையாக அறிவிக்க வேண்டும்'
 என்பது உட்பட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கலை வடிவம் பெறும் காகிதக் குப்பை: செலவில்லாமல் புதுமை படைக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்

கிறுக்கல்களுடன் கசக்கி தூக்கி வீசப்படும் காகிதங்களை கலைப் பொருட்களாகவும், பாரம்பரியம் உணர்த்தும் படைப்புகளாகவும் மாற்றி வருகின்றனர் கோவை தேவராயபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள்.

ஊழியர்களிடையே இந்தி பயன்பாட்டை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

மத்திய அரசு ஊழியர்களிடையே இந்தி மொழி உபயோகத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  இதுபற்றி மத்திய அரசின் அதிகாரப்பூர்வ மொழித்துறை செயலாளர் கிரிஷ் சங்கர் கூறுகையில்

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!