Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 14 January 2016

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "எண்ணெய் குளியல் ஏராள நன்மைகள்! "

‘துடைச்சு வெச்ச குத்துவிளக்கு மாதிரி இருக்கா பாரேன்…’ என்று சொல்வதற்கேற்ப, அந்தக் காலத்தில் பார்க்கும் அத்தனை பெண்களுமே மாசு மரு இல்லாத பொலிவுடன் பளிச்சென இருப்பார்கள். தினமும் தலைக் குளியல், வாரம் தவறாமல் எண்ணெய்க் குளியல் என குளத்தில் முங்கிக் குளிக்கும் சுகமே அலாதிதான். ஆனால், இன்றோ எங்கு பார்த்தாலும், எண்ணெய் இல்லாத தலைதான் தெரிகிறது. ‘தலைவலி வரும்… ஜலதோஷம் பிடிக்கும்… முகத்தில் எண்ணெய் வடியும்… தலைமுடியை அலசுவதே கஷ்டம்…” என்று எண்ணெய்க் குளியலைத் தவிர்த்துவிடுகின்றனர் இன்றைய இளைய தலைமுறையினர்.

கல்விச்சிறகுகளின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


வீடுகள், மாட்டுத் தொழுவங்களுக்கு 
வண்ணம் தீட்டி, பச்சரிசி, 
புது வெல்லம், செங்கரும்பு, 
மஞ்சள், மாக்கோலம், 
புத்தாடையுடன் பாரம்பரியம், 
பண்பாட்டை பறைசாற்றும் ஒருநாள்

பூமிப்பந்தின் ஆதாரமான சூரியன், 
உலகின் பசி போக்கும் உழவர்கள், 
படைப்புக் கருவிகளாக விளங்கும் 
கால்நடைகளுக்கு நன்றி 
தெரிவிக்கும் தைத்திருநாள்...!

பிழைப்புக்காக திசைகள் எட்டும் 
சென்ற பந்தங்கள் ஓர்நாளில் 
ஒன்றுகூடி மகிழும் திருநாள்..!

இந்த நன்னாளில்
பொங்கும் பொங்கல் உங்கள் 
வாழ்வில் பல வெற்றிகளை பெற்று
மகிழ்ச்சியுடன் வாழ எனது
மனமார்ந்த வாழ்த்துக்கள்

தினம் ஒரு புத்தகம் "தமிழகத்தில் மாற்றுக்கல்வி "


மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் VAO இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன..


8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை தேர்வு பிப்.27-க்கு ஒத்திவைப்பு

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி உதவித் தொகைக்கான தேர்வுபிப்ரவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்தி:

குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் அவசியம்

ஸ்மார்ட் கார்டு திட்டத்தை தொடங்குவதற்கான ஆரம்ப கட்டமாக ஆதார் எண்ணை குடும்ப அட்டையுடன் இணைத்தலை அவசியமாக்கியுள்ள தமிழக உணவுப் பொருள் வழங்கல்துறையினர், நியாயவிலைக் கடைகளில் ஆதார் அட்டையை நேரில் ஒரு முறை காண்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணி மும்முரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஒசூர் கல்வி மாவட்டங்களில் மொத்தம் உள்ள 1,076 அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 8,995 ஆசிரியர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.இப் பணியில், ஆசிரியர்கள் போலி சான்றிதழ்கள் கொடுத்து, ஆசிரியர் பணி பெற்றது தெரிய வந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தமிழரசு தெரிவித்தார்.

10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கும் வாக்காளர் பட்டியல் மற்றும் ரேஷன் அட்டை விபரம் சேகரிக்கும் பணி!

பத்தாம் வகுப்பு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கும், வாக்காளர் பட்டியல் மற்றும் ரேஷன் அட்டை விவரம் சேகரிக்கும் பணி வழங்கியிருப்பது, ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை உருவாகியுள்ளது.தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில்,கனமழை காரணமாக,அரையாண்டு தேர்வு ஒத்தி வைத்தது,பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சவாலாக உள்ளது.

ஏழாவது ஊதியக் கமிஷன் பரிந்துரையை செயல்படுத்த உயர்நிலைக் குழு

ஏழாவது ஊதியக் கமிஷன் பரிந்துரையை செயல்படுத்த உயர்நிலைக் குழுவைஅமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் 47 லட்சம் பேர், ஓய்வூதியதாரர்கள் 52 லட்சம்பேரின் ஊதியத்தைமாற்றியமைப்பதற்காக அமைக்கப்பட்ட 7வது ஊதியக் கமிஷன் தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.

பங்குச்சந்தையில் ஓய்வூதிய தொகை அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

பல நாடுகளில் பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்ட, அரசு ஊழியர் ஓய்வூதிய நிதியில் சரிவு ஏற்பட்டுஉள்ளது. இதனால் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.மத்திய, மாநில அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.தமிழகத்தில் 2003 ஏப்., 1க்குபின் பணியில் சேர்ந்த 4.20 லட்சம் ஊழியர்கள், புதிய ஓய்வூதியதிட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.

ரயில்வேயில் 18ஆயிரம் பணிக்கு தேர்வு:விண்ணப்பிக்க ஜன.25 கடைசி

மத்திய ரயில்வே துறையில் 18 ஆயிரத்து காலிப்பணியிடங்களைநிரப்ப, தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜன.,௨௫ க்குள் 'ஆன் லைன்' மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.பணியிடங்கள் விபரம் :

இன்ஜி., மாணவர் சேர்க்கை பிப்ரவரியில் ஆலோசனை

தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 535க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, சென்னை, அண்ணா பல்கலையில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும். மொத்தம், 2.15 லட்சம் பி.இ., - பி.டெக்., படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.


அதற்காக, உயர் கல்வித் துறையின் சார்பில், ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம், உயர் கல்வி செயலர் அபூர்வா, தொழில்நுட்ப கல்வித் துறை கமிஷனர் மதுமதி மற்றும் தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை பிரிவு செயலர், பேராசிரியர் இந்துமதி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.


இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம், பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்கவுள்ளது. இதில், வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கை நடத்தும் முறை, காலியிடங்களின் எண்ணிக்கை, கல்லுாரிகளின் இணைப்பு நிலவரம், விண்ணப்பம் வழங்கும் தேதி போன்றவை குறித்து, முடிவு செய்யப்பட உள்ளதாக, உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனவரி 14 தமிழ்நாடாக சென்னை மாநிலம் பெயர் மாற்றம் செய்யப்பட்ட தினம்..14:01:1969

(மதராசு மாநிலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சென்னை மாநிலம் (Madras State)இந்தியக் குடியரசில் ஒரு மாநிலம். இது தற்கால தமிழ்நாட்டின் முன்னோடியாகும். பிரிட்டிஷ் இந்தியாவில் சென்னை மாகாணம்என்று வழங்கப்பட்ட பகுதிகள், 1950 இல் இந்தியா குடியரசானவுடன் சென்னை மாநிலம் என்றழைப்படலாயின. 1950 முதல் 1953 வரை ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் அனைத்து பகுதிகளும் சென்னை மாநிலத்தில் இடம் பெற்றிருந்தன. இவையாவன -

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை செயல்படுத்த குழு - மத்திய மந்திரிசபை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை செயல்படுத்த அதிகாரம் அளிக்கப்பட்ட செயலர்கள் குழுவை அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 4 உறுப்பினர்கள் குழு, கடந்த நவம்பர் மாதம் 19-ந் தேதி நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் வழங்கியது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!