Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 15 January 2016

தேயிலை உற்பத்தியில் உலகிலேயே 2-வது இடத்தில் இந்தியா!

உலக அளவில் தேயிலையை அதிக அளவில் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது. எகிப்து, பாகிஸ்தான், பிரிட்டன் நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து சிடிசி கிரேடு தேயிலை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதேபோல், ஈராக், ஈரான் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு ஆர்தோடக்ஸ் ரக தேயிலையும் ஏற்றுமதியாகி வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் தேயிலை ஏற்றுமதி 1.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் தேயிலை உற்பத்தி 3.9 சதவீதம் அளவுக்கு 106.88 மில்லியன் கிலோவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, அசாம் மாநிலத்தில் 17.3 சதவீதம் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு ஊக்கத்தொகை மாநில அரசு திட்டம்

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.ரூ.10 ஆயிரம் உதவித்தொகை

மத்திய அரசு தேர்வாணையம் (யு.பி.எஸ்.இ.) சார்பில் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ். ஆகிய உயர் பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வில் மராட்டிய மாநிலத்தில் இருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.எனவே சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு மராட்டிய அரசு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஊக்கதொகை வழங்க திட்டமிட்டது. இந்த திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.பயிற்சி மையங்கள்

இதற்காக மும்பை, நாக்பூர், கோலாப்பூர், அமராவதி, அவுரங்காபாத், நாசிக் ஆகிய பகுதிகளில் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இந்த மையங்களில் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.இந்த புதிய திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.23.46 கோடி கூடுதல் செலவாகும் என்று அரசு அறிவித்துள்ளது.

CPS இல் மேலும் ஒரு வழக்கு

 திண்டுக்கல் மாவட்டம் தென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியையாக CPS இல் பணியாற்றி ஓய்வு பெற்று 3
ஆண்டுகளாகியும் எவ்விதமான ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை. எனவே., ஓய்வூதியம் வழங்கும்படி கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. 

திண்டுக்கல் எங்கெல்ஸ்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தேர்வை பயமின்றி எதிர்கொள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி ஆசிரியர்கள் மூலம் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்கள் தேர்வை பயம் இன்றி எதிர்கொள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்

மூலத்துறை அரசுப்பள்ளியின் முத்தான மாணவர்கள்...மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ...

கோவை மாவட்டத்தில் உள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி' சுட்டிகள் சுனில்குமார் & கோகுல் ஆகியோர் மீண்டும் 'விஜய் தொலைக்காட்சி'யில் வரும் ஞாயிறு(17-01-16) மாலை 7:00 மணிக்கு "ஒரு வார்த்தை ஒரு லட்சம்"... நிகழ்ச்சியின் காலிறுதிச் சுற்றில் விளையாட உள்ளார்கள்...

நிகழ்ச்சியை காணுங்கள்...மாணவர்களை வாழ்த்துங்கள்...
ஜெ.திருமுருகன்
கணித பட்டதாரிஆசிரியர்,
மூலத்துறை

கம்ப்யூட்டர் தெரிந்தால் தான் இனி மத்திய அரசு வேலை!

அரசு பணிகளில், எழுத்தர்களுக்கு பதில், நவீன தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தத் தெரிந்த, நிர்வாக உதவியாளர்களை பணியில் சேர்க்க,மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு பணிகளில், எல்.டி.சி., எனப்படும்,

ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை விவரங்களை பதிவிறக்கம் செய்யலாம்

 ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை தொடர்பான விவரங்களை இணையதளத்தில் (http:218.248.44.30ecsstatus) இருந்து பதிவிறக்கலாம் செய்து கொள்ளலாம்.

'ப்ளே ஸ்கூல்'களுக்கு கட்டணம் நிர்ணயம்

 'ப்ளே ஸ்கூல்' எனப்படும், கே.ஜி., முதல், 3ம் வகுப்பு வரையிலான மழலையர் பள்ளிகளுக்கான கட்டணத்தை, நீதிபதி சிங்காரவேலர் கமிட்டி நிர்ணயம் செய்ய உள்ளது. 

அரசு உதவி பெறும் பள்ளி அங்கீகாரம் வழங்க கெடு

அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான, அங்கீகார பிரச்னையை சரிசெய்யும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தர விட்டுள்ளார்.

TNPSC GROUP-2 [A] HALL TICKED PUBLISHED

அதிரடி மாறுதல்களுடன் வருகிறது ‘சென்டாக் கவுன்சிலிங்’

புதுச்சேரி மாநிலத்தில் அரசு, தனியார் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு காலி இடங்களுக்கு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், போலிச்சான்றிதழ் கொடுத்து தமிழக மாணவர்களை சேர்ந்ததாக புகார் எழுந்தது.

போலி ஆசிரியர்களை ‘களை’ எடுக்க உத்தரவு!

போலி சான்றிதழ் புகார்களால், 1.5 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆதார் எண் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,700 கோடி மிச்சமாகும்: உலக வங்கி பாராட்டு

ஆதார் அடையாள எண் மூலம் ஊழல் தடுக்கப்பட்டு இந்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,700 கோடி மிச்சமாகும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

வாஷிங்டனில் உள்ள உலக வங்கியின் தலைமை அலுவலகத்தில் ‘உலக வளர்ச்சி அறிக்கை 2016: டிஜிட்டல் டிவிடெண்ட்ஸ்’ என்ற அறிக்கை வெளியிடப்பட்டது. அப்போது அவ்வங்கியின் தலைமை பொருளாதார வல்லுநர் கவுஷிக் பாசு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வேலையில்லா பட்டதாரிகளுக்கு 25 சதவீத மூலதன மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் ஜெயலலிதா அறிவிப்பு

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!