Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 20 January 2016

சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாட போக்குவரத்து இணை ஆணையாளர் வலியுறுத்தல்9 மாவட்ட ஆட்சியர் மாறுதல்


அரசு பள்ளிகளில் எழுத்தர் பணிக்கு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த முறையில் பணி அமர்த்தலாம்

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள எழுத்தர் பணிக்கு, ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு எழுத்தர்களை ஓராண்டுக்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்தலாம் என்று மாநில கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் மாநில அரசின் கீழ் ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டு தகவல்களை ஆதார் அட்டையுடன் இணைத்தல்-சரிசெய்யும் பணி தொடங்கியது

தேசிய மக்கள் தொகை பதிவேட்டு தகவல் தொகுப்பினை ஆதார் அட்டையுடன் இணைத்தல் மற்றும் சரிசெய்யும் பணி தொடங்கியது. இதற்கான பணியில் தமிழகம் முழுவதும் 70 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.

பல்கலைக்கழகங்களில் யோகா படிப்புகள்: ஆய்வுக் குழு அமைப்பு

நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களில், யோகா சார்ந்த கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளையும், நிகழ்ச்சிகளையும் நிறுவுவது தொடர்பாக, பெங்களூரில் உள்ள சுவாமி விவேகானந்தா யோகா பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஹெச்.ஆர்.நாகேந்திரா தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

புதிய வாக்காளர் பட்டியலை இணையதளத்திலும் காணலாம்

வாக்காளர் பட்டியல்களை, தலைமைத் தேர்தல் ஆணையத்தின் வலைதளமான http://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம்.

ஜன. 23-இல் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு தேர்வுப் போட்டிகள்

சென்னை நேரு விளையாட்டரங்கில் அரசு ஊழியர்களுக்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகிற சனிக்கிழமை (ஜன.23) நடைபெறுகிறது.

தஞ்சாவூர் மாவட்ட அளவில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள்

நாளை (21.01.16) தஞ்சாவூர் மாவட்ட அளவில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் தஞ்சை சத்யா ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது..

பத்தாம் வகுப்பு முதல், இரண்டாம் திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு.


New Health Insurance Scheme - Only New IDCard

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-31 ராக்கெட்

கடல் ஆய்வுக்கான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1இ என்ற செயற்கைக் கோளுடன் பிஎஸ்எல்வி சி-31 ராக்கெட் இன்று (புதன்கிழமை) காலை 9.31 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

5-வது செயற்கைக்கோள்:

லேப்டாப்களை கொண்டு வர பிளஸ் 2 மாணவருக்கு உத்தரவு.

தமிழக அரசு சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது.
லேப்டாப் பெற்றுக் கொண்டவுடன், சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்பட
வேண்டும். ஆனால் பலருக்கு இது தெரிவதில்லை. இதனால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான லேப்டாப்கள், மாணவர்களின் வீடுகளில் முடங்கியுள்ளன. இதை ஆய்வு செய்த அரசு, எல்காட் நிறுவனம் மூலம் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ய உத்தரவிட்டுள்ளது.

சென்னை அறிவியல் விழா 2016 போட்டிக்கு மாணவர்களை அனுப்ப தலைமை ஆசிரியர்கள் ஏற்பாடு செய்யலாம்.

சென்னை அறிவியல் விழா"***

#மாபெரும் அறிவியல் கண்காட்சி #

தலைப்பு- 'பேரிடர் மேலாண்மை'

நாள்- 26.02.2016 முதல் 29.02.2016 முடிய

*போட்டிகளின் தலைப்புகள்*

வணிக நிலையங்கங்களுக்கான தமிழ்ப் பெயர்கள்:

பிற மொழிப்பெயர்கள் > தமிழ்ப் பெயர்கள்
1 டிரேடரஸ் : வணிக மையம்
2 கார்ப்பரேஷன் : நிறுவனம்
3 ஏஜென்சி : முகவாண்மை
4 சென்டர் : மையம், நிலையம்
5 எம்போரியம் : விற்பனையகம்

படிப்பை மட்டும் கொடுங்கள் - தலையங்கம்

எத்தனை கனவுகள்! ஆசைகள்! பிஞ்சு கரம்பிடித்து பிள்ளையை பள்ளிக்கூடத்தில் சேர்த்த முதல் நாளிலேயே பெற்றோர்கள் கனவு கோட்டை கட்டி விடுகிறார்கள்.அந்த கோட்டையில் ராஜாவாக, ராணியாக, மந்திரியாக, உயர்ந்த பதவி வகிக்கும் அதிகாரியாக... இன்னும் இப்படி பலபல தோற்றங்களில் அந்த பிள்ளைகள் வலம் வருவது போல் கனவு காண்கிறார்கள்.தங்கள் சுகங்களையும், வேதனைகளையும் தியாகம் செய்து பிள்ளைகளின் சந்தோஷத்தை மட்டுமே தங்கள் சந்தோஷமாக தாங்கி வாழ்கிறார்கள்

ஜன. 23-இல் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு தேர்வுப் போட்டிகள்

சென்னை நேரு விளையாட்டரங்கில் அரசு ஊழியர்களுக்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகிற சனிக்கிழமை (ஜன.23) நடைபெறுகிறது.

வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செய்தி குறிப்பு :-

அனைத்து தலைமை ஆசிரியர்களும் வழிபாட்டு கூட்டத்தில் பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் படிகட்டில் பயணம் செய்வதாகவும் இதனால் நடத்துனரிடம் சண்டையிட்டு, மாணவர்கள் காவல்துறையினரால் தண்டிக்கப்பட வேண்டியுள்ள சூழ்நிலை பத்திரிக்கை மற்றும் மாவட்ட ஆட்சியர் பார்வையில் உள்ளதால், இது குறித்து தவறுகள் நடைபெறாமல் இருக்க மாணவர்களுக்கு தக்க அறிவுரைவழங்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறது.

ஓய்வூதியத்தில் இருந்து வருமான வரி பிடித்தம்: கருவூலம்-கணக்குத் துறை தகவல்

வருமான வரி பிடித்தத்துக்கு உள்பட்ட ஓய்வூதியர்கள் தங்களது நிரந்தர கணக்கு எண்ணை ("பான்') கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசின் கருவூலம்-கணக்குத் துறை தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அத்துறை சார்பாக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிராம பள்ளிகளை தத்தெடுக்கிறது விளையாட்டு பல்கலை

விளையாட்டு பல்கலை துணைவேந்தர் மூர்த்தி, சென்னையில் நேற்று அளித்த பேட்டி: விளையாட்டு பல்கலை பட்டமளிப்பு விழா, நாளை, கவர்னர் தலைமையில், ராஜ்பவனில் நடக்கிறது. இதில், பல்கலை மற்றும்அதன், 11 உறுப்புக் கல்லுாரிகளில் படித்த, 2,308 மாணவ, மாணவியரில், 161 பேர் பட்டம் பெறுகின்றனர்.

புதிய வாக்காளர் சேர்க்க வாய்ப்பு: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழகத்தில் இன்று (ஜன.,20) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். புதிய வாக்காளர்களை சேர்க்க வாய்ப்பு உள்ளது. அதற்கான அறிவிப்பு வந்த பின் புதிய வாக்காளர்கள்,'ஆன் லைனில்' விண்ணப்பிக்க வேண்டும்,'' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ்லக்கானி கூறினார்.மதுரையில் அவர் கூறியதாவது:

பகுதிநேர ஆசிரியர்கள் : மாபெரும் உண்ணாவிரத போராட்டம் ...

அனைத்து மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகளுக்கும் வணக்கம்!

வருகின்ற ஞாயிறன்று 24.01.2016 காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை  நடைபெறும்மாபெரும் உண்ணாவிரத போராட்டம் சரித்திரம் படைக்க நம் குரல் கோட்டையில் ஒளிக்கஉணர்வுடன் கலந்து கொள்ளத் துடிக்கும் அனைத்து மாவட்ட பகுதிநேர ஆசிரியர்களையும்வரவேற்று மகிழ்கின்றோம்.

அன்புடன்
மாவட்ட நிர்வாகிகள்
திருவண்ணாமலை

TPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறியலாம்

Get your
👉 pay slip
👉 annual salary statement
👉 pay drawn particulars...
👇
Enter your
👉 Employee code (TPF/CPS number)
👉 Suffix (EDN)
👉 Date of birth(DD/MM/YYYY)
Click Here

பீகார் 10-ம் வகுப்பு தேர்வில் காப்பி அடிக்கும் மாணவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம், பெற்றோர்களுக்கு சிறை

பீகாரில் 10-ம் வகுப்பு தேர்வில் காப்பி அடிக்கும் மாணவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் உதவிசெய்யும்  பெற்றோர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

 

பீகாரில் 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த வருடம் மார்ச் 17–ந் தேதி தொடங்கி நடைபெற்றது. அப்போது தேர்வு அறையில் பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும் மாணவ–மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் வேண்டப்பட்டவர்கள், தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு,  ‘காப்பி‘ அடிப்பதற்காக ஜன்னல் வழியாக ‘பிட்‘டுகளை வழங்கினர். சிலர் புத்தகத்தின் சில பகுதிகளை அப்படியே கிழித்து கொடுத்தனர்.ஏற முடியாதவர்கள், கீழே நின்றபடி ‘பிட்‘ காகிதங்களை சுருட்டி உள்ளே வீசினார்கள். 

இன்னும் சிலர் நீண்ட கம்பின் நுனியில் வைத்து ஜன்னல் வழியாக உள்ளே கொடுத்தார்கள். மொத்தத்தில் தேர்வு அறைகளில் இருந்த கிட்டத்தட்ட எல்லா மாணவர்களுமே ‘பிட்‘ தட்டுப்பாடு இன்றி பரீட்சையை பயம் இன்றி வெற்றிகரமாக எழுதினார்கள். இந்த அரிய காட்சியை, அந்த வழியாக சென்ற பத்திரிகை புகைப்படக்காரர்கள் இந்த அபூர்வ காட்சியை படம் பிடித்து, பீகாரில் பள்ளிக்கூட தேர்வு எப்படி நடக்கிறது? என்பதை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தினார்கள். அதைப்பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இவ்விவகாரம் சர்வதேச அளவில் செய்தியானது.

இந்நிலையில் இந்தமுறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீகார் பள்ளி கல்வித்துறை, 10-ம் வகுப்பு தேர்வில் காப்பி அடிக்கும் மாணவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் உதவிசெய்யும் பெற்றோர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டும் என்றும் எச்சரித்து உள்ளது. “காப்பி அடிக்கும் மாணவர்கள் அடுத்த மூன்று வருடங்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்,” என்று பீகார் பள்ளி கல்வித்துறை தலைவர் லால் கேஷ்வார் பிரசாத் சிங் கூறிஉள்ளார். முன்னதாக ஒரு வருடமாக இருந்தது.

 

பீகார் மாநிலத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடக்கிறது. தேர்வு நடைபெறும் பள்ளி அறைகளில் சி.சி.டி.வி. கேமராக்களை வைக்கவும் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. தொடர்ந்து உயர் அதிகாரிகள் கண்காணிக்கவும் கேட்டுக் கொண்டு உள்ளது. 

கடந்த வருடம் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக பீகார் மாநில கல்வி மந்திரி பி.கே.சாகி பேசியபோது, மாணவர்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பீகாரில் நேர்மையாக தேர்வை நடத்துவது என்பது முடியாத காரியம், இது அரசுக்கு மிகவும் சவாலான பிரச்சினை என்று கூறினார். 

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!