Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 23 January 2016

மாணவர்களுக்கு எளிய ஓவிய பயிற்சி.
உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது - முதல்வர்.ஜெயலலிதா பேச்சு

சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-

நாளை டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வு.

அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்வு,நாளை நடக்கிறது. திருப்பூர், தாராபுரம், உடுமலை வருவாய் கோட்டங்களில், 35 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தேசிய தேர்வில் நெய்வேலி பள்ளி மாணவி தங்கம் வென்றார்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தேசிய தேர்வில் நெய்வேலியில் உள்ள என்எல்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி தர்ஷிணி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இரண்டாம் கட்ட உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுகலந்தாய்வு நடைபெற வாய்ப்பில்லை.

இரண்டாம் கட்டமாக கடந்த மாதம் 80 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து காலியாக உள்ள 117 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வுஆணை வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் திரு.இரவிச்சந்திரன் கூறுகையில்

பள்ளி மாணவ, மாணவியர்க்கு அரசின் சார்பில் நடத்தப்படும் சென்னை மாவட்ட கலைப் போட்டிகள் விவரம்92 சதவீதம் ! ஆதார்' அடையாள அட்டை வைத்திருக்கும் இளைஞர்கள்... வரலாற்று சாதனை படைக்கிறது மத்திய அரசின் திட்டம்

நாட்டின், 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள்தொகையில், 92 சதவீதம் பேருக்கு, 'ஆதார்' அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்கள், தகுதி உடையவர்களுக்கு மட்டும் சென்றடைவதோடு, நிதியுதவிகளில் மூன்றாம் நபரின் தலையீடு தடுக்கப்பட்டுள்ளது.

எஸ் எஸ் ஏ பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை அடுத்த மூன்று மாதங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.


28.01.16 தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.

தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு 28.01.16 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

மாதனூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆங்கில மொழியறிவு மேம்படுத்தும் திட்டம் தொடக்கம்

மாதனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான ‘குழுக் கற்றல் மூலம் மொழியறிவு மேம்படுத்தும் திட்டம்’ நேற்று தொடங்கப்பட்டது.

தினம் ஒரு புத்தகம் "கல்விச்சிந்தனைகள் காந்தி"


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "பழங்களின் பயன்கள் "

கொய்யா பழம்
* கொய்யா பழத்தில் வைட்டமின் ‘சி’ உயிர்ச்சத்து அதிக அளவில் உள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் ‘சி’ உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. எனவே கொய்யாபழத்தை சிறுவர்கள் சாப்பிடலாம்.

தொடக்கக்கல்வி - ஆசிரியர்களின் அனைத்து கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை கண்டறிய இயக்குனர் உத்தரவு - ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்ப படிவங்கள் வெளியீடு


பி.எப்., வட்டி 9 சதவீதம்?

இ.பி.எப்.ஓ., எனப்படும், வருங்கால வைப்பு நிதி அமைப்பு, நடப்பு, 2015 - 16ம் நிதியாண்டில், பி.எப்., முதலீடுகளுக்கு, 9 சதவீத வட்டி வழங்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இ.பி.எப்.ஓ., அறக்கட்டளை நிர்வாகியும், பாரதிய தொழிலாளர் சங்க செயலருமான பானுசுரே, டில்லியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: இ.பி.எப்.ஓ.,வின் நிதித் தணிக்கை மற்றும் முதலீட்டுக்குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், நடப்பு நிதியாண்டில், பி.எப்., முதலீடுகளுக்கு, 8.95 சதவீதம் வட்டி வழங்கலாம் என, பரிந்துரைத்தது. இம்மாத முடிவில், தணிக்கைக் குழு, மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளது. அப்போது, சமீபத்திய நிலவரப்படி, வருவாய் மதிப்பீடு செய்யப்படும்.

அப்போது, பி.எப்., மீதான வட்டி, 9 சதவீதமாக அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது. குழு பரிந்துரைக்கும் வட்டி வீதம், பி.எப்.ஓ.,வின் மத்திய அறக்கட்டளை நிர்வாகிகள் குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன்பின், நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிடும். இவ்வாறு அவர் கூறினார்.

விழி இழந்தாலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் அரசு மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியை

கீழக்கரை: விழி இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காமல் மாணவர்களின் எதிர்காலத்துக்கு வழிகாட்டி வருகிறார் ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியை வள்ளி.திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் வள்ளி,34. 5வயதுவரை சக பெண் குழந்தைகளுடன் ஓடி, சாடி விளையாடிய வள்ளியை திடீரென்று அம்மை நோய் தாக்கியது.

மின் தடை தீர்க்க வருகிறது 'மொபைல் ஆப்'

மின் தடை, மீட்டர் பழுது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, 'மொபைல் போன் ஆப்' மூலம் தீர்வு காண, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், அரசின் சேவைகள், கணினி மயமாக்கப்பட்டு, மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட உள்ளன.

7 ஆசிரியர்களுக்கு 'ஆப்சென்ட்'

பள்ளிக்கு தாமதமாக வந்த ஏழு ஆசிரியர்களுக்கு, ஒருநாள், 'ஆப்சென்ட்' போட்டு, திருவண்ணாமலை முதன்மைக்கல்வி அலுவலர் பொன்குமார் நடவடிக்கை எடுத்தார்.திருவண்ணாமலை மாவட்டத்தில், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக, கல்வித் துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

'கவுரவ பேராசிரியர்கள் பணி நிரந்தரமில்லை'

'காலியாக உள்ள கல்லுாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்.சட்டசபையில் நேற்று, கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:

"செட்' தேர்வுக்கான கட்டணம் உயர்வு

மாநில அளவிலான கல்லூரி ஆசிரியர் தகுதி (செட்) தேர்வுக்கான கட்டணம், அகில இந்திய அளவில் நடத்தப்படும் "நெட்' தேர்வைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது விண்ணப்பதாரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தேசிய அளவிலும், மாநில அளவிலும் தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, நடைமுறையிலுள்ள பயனளிப்புஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

வெறும் அறிவிப்போடு நின்றது சிறப்பாசிரியர்கள் நியமனம் :மவுனம் காக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம்

சிறப்பாசிரியர்கள் நியமனம் குறித்து சட்டசபையில் அறிவித்து நான்கு மாதங்களாகியும், இன்று வரை ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வு அறிவிக்காததால் ஆசிரியர்கள் விரக்தியடைந்துள்ளனர்.2015 செப்.,2 ல் 1,188 விளையாட்டு, ஓவியம், தையல் சிறப்பாசிரியர்கள் பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் நடத்தி நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.

அரசு பணியில் உள்ளவர்கள் Passport அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்ப இணைப்பு படிவம்

அரசு பணியில் உள்ளவர்கள் Passport அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்புவதற்கு முன்பே அவரவர் appointment authority க்கு மேற்காணும் இணைப்பு படிவத்தை அனுப்பிவிட வேண்டும்.அதன் அசல் கடிதம் ஒன்றை (செராக்ஸ் கூடாது) passport அலுவலகம் செல்லும் போது அங்கு கொடுக்க வேண்டும். இதில் பெறுநர் முகவரி pin code உட்பட முழுமையாக தெரிந்திருக்க வேண்டும்.பெறுநர் பெயரும் தெரிந்திருக்க வேண்டும்

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!