Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 27 January 2016

ஊழல் குறைவான நாடுகள்: முதல் இடத்தில் டென்மார்க், 76-வது இடத்தில் இந்தியா

2015ம் ஆண்டு ஊழல் குறைவான நாடுகளின் பட்டியலில் இந்தியா 76-வது இடத்தில் உள்ளதாக உலகளாவிய ஊழல் போக்கு குறியீட்டின் தரவரிசைப் பட்டியல் தெரிவிக்கிறது. இந்த பட்டியலில் தொடர்ந்து 2-வது ஆண்டாக டென்மார்க் முதல் இடத்தில் உள்ளது. 

தொடக்கக்கல்வி-2015-2016 நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தலைமைப்பண்பு வளர் பயிற்சி

SSA வுடன் இணைந்து நடத்துதல்-மாநில அளவிளான கருத்தாளர் பயிற்சிக்கு தலைமையாசிரியர்களை தேர்ந்தெடுத்து அனுப்புதல்

மார்ச் மாதத்திற்குள் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் : கல்வி இயக்குனரகம் முடிவு!

நாடு முழுவதும் சிறுவர் முதல் பெரியோர்
வரை அனைவருக்கும் ஆதார் எண்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆதார்
புகைப்படம் எடுப்பதற்காக சிறப்பு மையங்கள்
திறக்கப்பட்டுள்ளது.

ஆதரவற்ற குழந்தைகளை குறித்து 1098-க்கு தகவல் தெரிவிக்கலாம்: சென்னை ஆட்சியர்

பொது இடங்களில் காணப்படும் ஆதரவற்ற குழந்தைகளை குறித்து 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

தினம் ஒரு புத்தகம் "ஓய்ந்திருக்கலாகாது "


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்"

"சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்..."
நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...
இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.

கல்வியறிவோடு தலைமைப் பண்பும் அவசியம்: மாணவர்களுக்கு மும்பை பல்கலை. துணைவேந்தர் அறிவுரை

உலகின் தலைசிறந்த நாட்டை உருவாக்க, கல்வியறிவுடன் தலைமைப் பண்பையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்வது அவசியம் என மும்பை பல்கலைக்கழகத் துணைவேந்தர் சஞ்சய் தேஷ்முக் தெரிவித்தார்.
 சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் 40-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Republic Day Parade - 26th January 2016

'பேஸ்புக்' விமர்சனம்:ஆசிரியர் 'சஸ்பெண்ட்

தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், முள்ளுவாடி அரசு துவக்கப் பள்ளியில், ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் மூர்த்தி, 34. இவர், முதல்வர் ஜெயலலிதா, தர்மபுரி கலெக்டர் விவேகானந்தன், சி.இ.ஓ., மகேஸ்வரி ஆகியோர் குறித்து, பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப்பில், அநாகரிகமான வார்த்தைகளால் விமர்சனம் செய்து, தகவல்களை பரப்பி உள்ளார்.

         இதையடுத்து, மூர்த்தியை சஸ்பெண்ட் செய்து, டி.இ.இ.ஓ., ராஜசேகரன் உத்தரவிட்டார்.

'செட்' தேர்வு அவகாசம் தேர்வர்கள் அதிருப்தி

பிப்ரவரி மாதம் நடக்கவுள்ள, 'செட்' தேர்வுக்கு, குறுகிய கால அவகாசமே இருப்பதால், தேர்வர்கள் அதிருப்தியில் உள்ளனர். கல்லுாரிகளில், உதவிப் பேராசிரியர் பணி தகுதித்தேர்வான, 'செட்' தேர்வு, மாநில அரசு சார்பில் நடத்தப்படுகிறது. பாரதிதாசன், பாரதியார் உட்பட பல பல்கலைகள், மூன்றாண்டுகளுக்குஒரு முறை தேர்வு நடத்துகின்றன.

'பேஸ்புக் - வாட்ஸ் ஆப்' ஜோடி வாடிக்கையாளருக்கு வசதிகள்

தகவல் அனுப்ப உதவும், 'ஆப்'களால் எழுந்துள்ள கடும் போட்டியை சமாளிக்க, முன்னணி சமூக வலைதளமான, 'பேஸ்புக்' உடன் இணைந்து, தகவல்கள், ஆவணங்கள் பரிமாற்றம், 'வீடியோ' அழைப்பு உள்ளிட்ட பல்வேறு புதியவசதிகளை, 'வாட்ஸ் ஆப்' ஏற்படுத்தித் தந்துள்ளது.மொபைல் போனில் தகவல் அனுப்ப உதவும், 'வாட்ஸ் ஆப்'புக்கு போட்டியாக, 'லைன், வைபர், மெஸேஜ்மீ, வாக்ஸர், ஹேடெல், டெக்ஸ்ட்நவ், டாக்கடோன், கீக்' என, ஏராளமான, 'ஆப்'கள், மக்களிடையே பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவில், வாட்ஸ் ஆப் முன்னணியில் உள்ளது.சமூக வலைதளங்களில் ஜாம்பவானாக திகழும், பேஸ்புக், 'வாட்ஸ் ஆப்'பை, பெருந்தொகைக்கு விலைக்கு வாங்கியது.

அரசு இ-சேவை விவரங்களை அறிய புதிய கைபேசி செயலி அறிமுகம்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் தலைமைச் செயலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், மாநகராட்சியின் அனைத்து மண்டலம், பகுதி, கோட்ட அலுவலகங்கள், சென்னை. மதுரை,திருச்சி, கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என 465 இடங்களில் அரசு இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளில் முன்னாள் ராணுவத்தினருக்கு பணி?

பள்ளிகளில் உடற்பயிற்சி அளிப்பது, தேசத்துக்காக தியாகம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பணிகளில் முன்னாள் ராணுவத்தினரை ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்தத் தகவலை தெரிவித்தார்.

மாணவர் அழுத்தங்களை குறைக்கும் வகையில் இலங்கையில் கல்வி மறுசீரமைப்பு

இலங்கையில் மாணவர்களுக்கான அழுத்தங்களை குறைக்கும் வகையில் கல்வியில் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கல்வி அமைச்சுக்கு உத்தரவிட்டிருக்கிறார். மாணவர் அழுத்தங்களை குறைக்கும் வகையில் இலங்கையில் கல்வி மறுசீரமைப்பு புலமைப்பரிசில் பரீட்சை காரணமாக ஐந்தாம் வகுப்பு மாணவர்களும் பெற்றோரும் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் மற்றும் 6 வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்கள் எதிர்கொள்ளும் பாடங்களின் எண்ணிக்கை குறித்த அழுத்தங்கள் பற்றி கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்த ஜனாதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார்.

5 சதவீத மதிப்பெண் சலுகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று 24.09.2014 தேதிவரை நியமனம் பெற்ற அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் முன் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மறியல்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் முன் மறியல் செய்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த மறியல் போராட்டத்துக்கு தலைமையேற்ற தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க பொதுச் செயலாளர் டி.கனகராஜ் கூறியதாவது:

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழை முதல் பாடமாக தேர்வெழுத 7 ஆயிரம் மாணவர்களுக்கு விலக்கு - உயர் நீதிமன்றம்

சிறுபான்மையின பள்ளிகளில் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவர்கள் தமிழை முதல் பாடமாக தேர்வு எழுத விலக்கு அளிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 7 ஆயிரம் மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!