Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 29 January 2016

TNPSC : 2016ம் ஆண்டிற்கான தேர்வுகள் (ANNUAL PLANNER)அட்டவணை வெளியீடு


பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு 30 முதல் ஹால்டிக்கெட்

மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு எழுத ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது ஹால்டிக்கெட்டை அரசு தேர்வுத் துறை இணைய தளத்தில் (www.tndge.in) ஜனவரி 30 முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஹால்டிக்கெட் இல்லாத வர்கள் தேர்வு எழுத அனுமதிக் கப்பட மாட்டார்கள் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

6,7& 8 வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்திற்கான காணொளி பாடங்கள்

அனைத்து பாடங்களுக்கும் காணொளி மூலம் மாணவர்களுக்குபுரியும்வண்ணம் தயாரிக்கப்பட்டு உள்ளது.DVD தேவைபடுவோர் இறைஅருள் 8098773950 என்ற எண்ணிலும் RK 9843398567 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளவும்.

தினம் ஒரு புத்தகம் "பள்ளிக்கூடத்தேர்தல் "


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்" குதிகால் வலி ஏற்படுவது ஏன்?"

தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்குக் குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். இவர்கள் காலையில் எழுந்ததும் தரையில் நின்றால் போதும், தீயை மிதித்ததுபோல் ‘சுள்’ ளென்று ஒரு வலி குதிகாலில் தொடங்கி, கால் முழுவதும் பரவும். எரிச்சலும் மதமதப்பும் கைகோத்துக்கொள்ளும். ஓர் அங்குலம்கூடக் காலை எட்டுவைத்து நடக்க முடியாது; மாடிப்படி ஏற முடியாது. அத்தனை சிரமம்!

வாக்காளர் பெயர் சேர்ப்பு: ஜன. 31, பிப். 6-ல் சிறப்பு முகாம்

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், வருகிற ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 6 ஆம் தேதி ஆகிய இருநாள்கள் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.இதுதொடர்பாக தமிழகத தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானி வெளியிட்ட செய்தி குறிப்பு:

01.02.2016 மறியல் தொடர்பாக வேலூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் சுற்றறிக்கை..


ஒரே நேரத்தில் இரட்டை டிகிரிக்கு யு.ஜி.சி., தடை

'இனி, ஒரே நேரத்தில், இரண்டு பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம்' என, கல்லுாரிகளுக்கு பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., எச்சரிக்கை விடுத்துள்ளது.

கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மாணவர்கள் தினசரி வகுப்பில் படித்து கொண்டே, திறந்தவெளி பல்கலை அல்லது வேறு பல்கலைகளில், தொலைதுார கல்வியில் மற்றொரு பட்டம் படிப்பது வழக்கம். அதே போல், ஒரு தொலை துார கல்வி பட்டம் படித்து கொண்டே, வேறு பல்கலையில் இன்னொரு தொலைதுார பட்டமும் படிப்பர். இதனால், மூன்று ஆண்டுகளில் அவர்களுக்கு, இரண்டு பட்டப்படிப்பு சான்றிதழ்கள் கிடைக்கும். எந்த வேலைக்கு என்ன தகுதி தேவையோ, அந்த சான்றிதழை பயன்படுத்தி பணிக்கு சேர்ந்து விடுவர்.

பள்ளிக் கல்வித் துறை - இளநிலை உதவியாளர் நியமனம்: நாளை கலந்தாய்வு

பள்ளிக் கல்வித் துறையில் 98 இளநிலை உதவியாளர் பணியிடத்துக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு சனிக்கிழமை (ஜன.30) பணி நியமனத்துக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம், சென்னை-6 என்ற முகவரியில் சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் இந்த கலந்தாய்வில் பங்கேற்க வரும் தகுதி பெற்றவர்கள், தேர்வாணையத்திலிருந்து பெறப்பட்ட அறிவிப்பு கடிதத்தையும், தேர்வு நுழைவுச் சீட்டையும் எடுத்து வரவேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வி.ஏ.ஓ. தேர்வுக்கான கலந்தாய்வு; 1-ந் தேதி சென்னையில் நடக்கிறது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2013-2014-ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 14-ந் தேதி நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் அதே ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி வெளியிடப்பட்டது.
மூன்றாம் கட்ட கலந்தாய்வுக்கு 17 காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான மாவட்ட ஒதுக்கீடு 1-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல், சென்னை, பாரிமுனை பஸ் நிலையம் அருகில் உள்ள பிரேசர் பாலச்சாலை, வ.உ.சி நகரில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவெண்கள் அடங்கிய தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதி பெற்றவர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. மதிப்பெண்கள், தரவரிசை, இடஒதுக்கீடு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதி மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப விண்ணப்பதாரர் அனுமதிக்கப்படுவர். அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது.
தகவல்கள், தவறாக இருக்கும் பட்சத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்படும். கலந்தாய்விற்கு வரத் தவறுபவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கற்றல் அடைவுத் திறன் குறித்து அதிகாரிகள் ஆய்வு

தமிழகம் முழுவதும் மிகவும் குறைவான திறன் அடைவு உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்புத் திறன் மற்றும் கணிதத் திறன்களில் மாணவர்களது அடைவுத் திறனின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை அனுப்பும்படி தொடக்கக் கல்வி இயக்ககம் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் குறித்து கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

'சி.பி.எஸ்.இ., பள்ளிக்கு தமிழக அரசு கல்வி கட்டணம் நிர்ணயிக்க முடியாது'

'தமிழக அரசின், பள்ளி கல்விக் கட்டண ஒழுங்குமுறை சட்டம், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு பொருந்தாது என்பதால், அவை, தங்களுக்கு ஏற்ற கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

மேல்நிலைத் பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ஆன்-லைனில் 30.01.2016 முதல் 01.02.2016 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!