Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 31 January 2016

பிப்ரவரி 01முதல் பிப்ரவரி 29 வரை முக்கிய தினங்கள், முக்கிய நிகழ்வுகள், பிரபலங்கள் பிறந்த தினங்கள் , நினைவு தினங்கள் மற்றும் சுதந்திரம் கொண்டாடும் நாடுகள்...

🍁💐🍁💐🍁💐🍁
முக்கிய தினங்கள்
🍁💐🍁💐🍁💐🍁
 1 இந்தியக் கடலோர காவல் படை தினம்.
 2 உலக ஈர நில நாள்.
 4 உலக புற்றுநோய் தீமை தினம்.
 9 மக்கள்தொகை கணக்கெடுப்பு நாள்.
 10 விஞ்ஞானிகள் தினம் (SCIENCE DAY)
 12 டார்வின் தினம்.
 13 உலக வானொலி தினம்.
 14 காதலர் தினம்.
 16 தேசிய ஆற்றல் சேமிப்பு தினம்.
 18 தேசிய கடற்படை தினம்.
 20 சமூக நீதி நாள்.
 21 அகில உலக தாய்மொழி தினம்.
 24 மத்திய கலால் வரி தினம்.
 25 உலக காசநோய் தடுப்பு தினம்.
 28 தேசிய இளைஞர் தினம்.
 28 தேசிய அறிவியல் தினம் (சர்.சி.வி. ராமன் விளைவு வெளியிட்ட நாள்

🍁💐🍁💐🍁💐🍁 முக்கிய நிகழ்வுகள்
🍁💐🍁💐🍁💐🍁

5, 1852- ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் உலகப் புகழ்பெற்ற "ஹெரீம் டேஜ்' என்ற மியூசியம் திறக்கப்பட்டது.
 5, 2007- காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு - இறுதித் தீர்ப்பு வெளியானது.
 5, 2012- இங்கிலாந்தில் பிறந்த 17 மணி நேரமே ஆன குழந்தைக்கு, இதய ஆப்ரேசன் செய்து வெற்றி பெற்றனர்.
 6, 1952- இங்கிலாந்தில் இளவரசியாக இரண்டாம் எலிசபெத் முடிசூட்டு விழா நடந்தது - அப்போது வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமராக இருந்தார்.
 6, 2012- பிலிப்பைன்ஸ் பூகம்பத்தில் 44 பேர் இறந்தனர்.
 8, 1963- அமெரிக்கா கியூபாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்திக்கொண்டது. ஜனாதிபதி கென்னடி உத்தரவிட்டார்.
 8, 2012- தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக பேராசிரியர் திருமலைசாமி நியமனம்.
 9, 1951- முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 
 ஆரம்பம்.
 9, 2010- இந்தியா - 11-ஆவது தெற்காசியப் போட்டியில் 90 தங்கம், 55 வெள்ளி, 30 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றது.
 10, 1931- இந்தியாவின் தலைநகராக டெல்லி உருவானது.
 10, 1942- அமெரிக்கா பகலொளி நேரம் 1 மணி நேரம் கூடுதல் எனக் கணக்கெடுக்கப்பட்டது.
 11, 1965} பிரதம மந்திரி லால்பகதூர் சாஸ்திரி, ""நேருவின் உறுதிமொழி தொடரும். இந்தி பேசாத மக்கள் ஒத்துழைக்கும் வரை ஆங்கிலம் தொடர்ந்து நீடிக்கும்'' என்றார்.
 12, 1996} பாலஸ்தீன குடியரசுத் தலைவராக "யாசர் அராபத்' நியமிக்கப்பட்டார்.
 14, 1998} கோவையில் பல்வேறு 13 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
 14, 2012} அமெரிக்காவின் மனிதநேய விருதை இந்தியப் பொருளாதார மேதை அமர்த்தியா சென்னுக்கு, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வழங்கினார்.
 15, 2012} இந்திய ரஷ்ய நல்லுறவுக்குப் பங்காற்றிய எழுத்தாளர் டி. ஜெயகாந்தனுக்கு "ரஷ்ய சிவிலியன்' விருதான "ஆர்டர் ஆப் பிரண்ட்ஷிப்' வழங்கப்பட்டது.
 17, 1863} உலகின் முதல் முதலாக "செஞ்சிலுவைச் சங்கம்' தோன்றியது.
 17, 1924} விக்னோன் கலர் பிலிமைக் கண்டுபிடித்தார்.
 17, 2001} சென்னையில் தமிழ் இணைய பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
 17, 2002} பிரான்சில் "பிராங்' நாணயம் விடைபெற்று "யூரோ' அமலானது.
 18, 1911} உலகிலேயே முதன்முதலாக ஆகாய விமானம் மூலம் இந்தியத் தபால்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
 18, 1930} சூரிய குடும்பத்தின் ஒன்பதாவது கோளாக "புளூட்டோ' அமெரிக்கா வானவியல் விஞ்ஞானி "கிளைட்' என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
 19, 1986} ரஷ்ய விண்வெளி கலம் மிர்-1 விண்ணில் செலுத்தப்பட்டது.
 20, 1745} இந்திய தபால் இலாகா பதிவுத் தபால் முறையை அறிமுகப்படுத்தியது.
 20, 1947} இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கலாம் என பிரிட்டிஷ் பிரதமர் அட்லி பிரபு அறிவித்தார்.
 20, 1986} ரஷ்யாவின் மிகப் பெரிய வானில் மிதக்கும் "மிர் விண்வெளி நிலையம்' நிறுவப்பட்டது.
 20, 1987} இந்தியாவில் 24-ஆவது மாநிலமாக அருணாசலப் பிரதேசம் உருவானது.
 23, 1861} அமெரிக்காவில் ஆப்ரஹாம் லிங்கன் மிகுந்த பாதுகாப்புடன் வந்து ஜனாதிபதியின் முதல் உரையை நிகழ்த்தினார்.
 23, 1947} முகமது அலி ஜின்னா பாகிஸ்தானைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என கேட்டார்.
 23, 2012} மத்திய அரசின் சேவை வரியைக் கண்டித்து இந்தியா முழுதும் திரைத்துறையினர் வேலை நிறுத்தம் செய்தனர்.
 24, 2010} சச்சின் டெண்டுல்கர் தென் ஆப்பிரிக்காவுடன் ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் (இரட்டை சதம்) எடுத்து, கிரிக்கெட்டில் சாதனை புரிந்தார்.
 24, 2011} அமெரிக்கா, நாசாவால் அனுப்பிய டிஸ்கவரி விண்கலம் ஓய்வு பெற்றது.
 26, 1887} பிரான்சு - பாரிசில் ஈகில் டவர் கட்டும் பணி துவங்கியது.
 26, 2008} ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்துக்கு முதல்வர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
 26, 2012} தமிழகத்தில் தஞ்சை அரண்மனையில் 400 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய மன்னர் காலத்திய குளம் கண்டுபிடிக்கப்பட்டது.
 27, 2010} காமன்வெல்த் சாம்பியன் ஹிப் போட்டிகளில் இந்தியா 23 தங்கம் உள்பட 49 பதக்கங்களைப் பெற்று முதலிடம் பெற்றது.
 28, 1919} இந்திய கணிதமேதை ராமானுஜன் லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராகத் தேர்வு.
 28, 1928} சர்.சி.வி.ராமன், ராமன் விளைவுகளை வெளியிட்டார்.
 28, 2003} மனித குளோனிங் முயற்சிக்கு அமெரிக்கா பாராளுமன்றம் தடை 
 விதித்தது.
 28, 2012} புதுடெல்லியில் நடைபெற்ற ஹாக்கியில் இந்தியா - பிரான்ûஸ 8-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

🍁💐🍁💐🍁💐🍁
பிரபலங்களின் பிறந்த தினங்கள்
🍁💐🍁💐🍁💐🍁
 4, 1922 பண்டிட் பீம்சென் ஜோஷி - 
 ஹிந்துஸ்தானி பாடகர்.
 6, 1890 அப்துல் கபார் கான். எல்லை காந்தி - சுதந்திரப்
போராட்ட வீரர்.
 6, 1911 ரோனால்டு ரீகன் - அமெரிக்காவின் 
 40-ஆவது ஜனாதிபதி.
 7, 1812 சார்லஸ் டிக்கன்ஸ் - ஆங்கில 
 நாவலாசிரியர்.
 8, 1897 ஜாஹீர் உசைன் - இந்தியாவின் 3-ஆவது ஜனாதிபதி.
 10, 1950 மார்க் ஸ்பிட்ஸ் - ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் 7 தங்கப் பதக்கங்களை வென்ற அமெரிக்க வீரர்.
 11, 1847 தாமஸ் ஆல்வா எடிசன் - மின்சார பல்பு போன்ற ஆயிரத்துக்கு மேற்பட்டவற்றைக் கண்டுபிடித்த விஞ்ஞானி.
 12, 1809 சார்லஸ் டார்வின் - பரிணாம தத்துவம் கண்ட விஞ்ஞானி.
 12, 1809 ஆப்ரஹாம் லிங்கன் - அமெரிக்காவின் 16-ஆவது ஜனாதிபதி.
 12, 1824 தயானந்த சுவாமிகள் - ஆர்யா சமாஜ் 
 நிறுவனர்.
 13, 1879 சரோஜினி நாயுடு - கவிக்குயில் என்ற புகழ் பெற்றவர். சுதந்திரப் போராட்ட வீராங்கனை.
 22, 1857 பேடன் பவுல் - சாரண இயக்கம் கண்ட "சாரண இயக்கத் தந்தை'.
 15, 1564 கலீலியோ - தூரதிருஷ்டிக் கண்ணாடி கண்டுபிடித்த விஞ்ஞானி.
 18, 1745 வோல்டா - மின்கலம் கண்டுபிடித்த 
 விஞ்ஞானி.
 18, 1836 ராமகிருஷ்ண பரமஹம்சர் - இந்து மதத் துறவி.
 18, 1860 ம. சிங்காரவேலர் - சிந்தனைச் சிற்பி.
 19, 1627 சத்ரபதி சிவாஜி - மராட்டிய வீரமன்னன்.
 19, 1855 உ.வே. சாமிநாத அய்யர் (உ.வே.சா) 
 ஏடுகள் மூலம் உள்ள தமிழ் இலக்கண இலக்கியங்களை பதிப்புச் செய்தவர்.
 22, 1898 தில்லையாடி வள்ளியம்மை - சுதந்திரப் போராட்ட வீரர்.
 22, 1732 ஜார்ஜ் வாஷிங்டன் - அமெரிக்க முதல் ஜனாதிபதி.
 24, 1948 ஜெயலலிதா - தமிழக முதல்வர்.
 26, 1802 விக்டர் ஹுயூகோ - பிரெஞ்சு 
 எழுத்தாளர்.
 29, 1896 மொரார்ஜி தேசாய் - ஜனதா கட்சியின் முதல் பிரதமர்.
 29, 1904 ருக்மணி தேவி (அருண்டேல்) - 
 கலாஷேத்ரா நிறுவனர்.

🍁💐🍁💐🍁💐🍁 நினைவு தினங்கள்
🍁💐🍁💐🍁💐🍁
 1, 1876 மகா வித்வான் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
 1, 2003 கல்பனா சாவ்லா - இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை.
 3, 1969 சி.என். அண்ணாதுரை - முன்னாள் 
 தமிழக முதல்வர்.
 4, 1974 சத்யேந்திரநாத் போஸ் - இந்திய 
 விஞ்ஞானி.
 5, 2008 மகரிஷி மகேஷ் யோகி
 6, 1931 மோதிலால் நேரு - சுதந்திரப் போராட்ட வீரர். நேருவின் தந்தை.
 19, 1915 கோபால கிருஷ்ண கோகலே - சுதந்திரப் போராட்ட வீரர்.
 
 22 1944 கஸ்தூரிபா காந்தி - காந்தியின் மனைவி.
 
 22 1958 அபுல் கலாம் ஆசாத் - சுதந்திரப் போராட்ட வீரர்.
 
 23 1977 ஈ.வி.கே. சம்பத் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.
 
 25 2001 டொனால்டு ஜார்ஜ் பிராட்மேன் - கிரிக்கெட் சாதனையாளர்.
 
 26 1936 கமலாநேரு - நேருவின் மனைவி - இந்திரா காந்தியின் தாயார்.
 
 28 1963 டாக்டர். ராஜேந்திர பிரசாத் - இந்தியாவின் முதல் ஜனாதிபதி.
 
🍁💐🍁💐🍁💐🍁
சுதந்திரம் கொண்டாடும் நாடுகள்
🍁💐🍁💐🍁💐🍁
4 இலங்கை,
6 கெயிட்டி,
28 எகிப்து
🙏🙏🙏🙏🙏🙏🙏
 
நன்றி: மஞ்சுளா பிரபாகரன்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) நிர்வாகக் குழுவுக்கு 11 பேர் புதிய உறுப்பினர்களை ஆளுநர் ரோசய்யா நியமனம் செய்துள்ளார்

புதிய உறுப்பினர்களின் பட்டியல் விவரம்:

1. பிரதாப் குமார்

2. சுப்பையா

3. முத்துராஜ்

4. சேதுராமன்

5. பாலுசாமி

கணித அருஞ்சொற்பொருள்

A - வரிசை
ABACUS - மணிச்சட்டம்
ABCISSA - கிடைத் தொலைவு
ABELIAN GROUP - அபீலியன் குலம்
ABERRATION - பிழர்ச்சி
ABOVE BOUNDED - மேல்வரம்புடையது
ABRIDGE NOTATION - சுருக்கக் குறிமானம்

அரசு பள்ளி எதிரில் வீசப்படும் பயன்படுத்தப்பட்ட ஊசிகள்: மாணவர்களுக்கு தொற்று நோய் அபாயம்

உளுந்தூர்பேட்டை பேரூராட்சி விருத்தாசலம் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராம மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி எதிரில் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் நோயாளிகளுக்கு போடப்பட்ட ஊசிகள் கொட்டப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான ஊசிகள் கொட்டப்பட்டு வருவதால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும் சாலையில் நடந்து செல்பவர்களின் காலில் குத்தி காயம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பிள்ளைகளுக்கு தொற்று நோய் ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது. மேலும் ரோட்டில் நடந்து செல்பவர்களின் காலில் இந்த ஊசி குத்தி ரத்தத்துடன் செல்கின்றனர்.

மருத்துவ கேள்விகளுக்கு சரியான பதில்: அசத்துகிறார் ஒன்பதாம் வகுப்பு மாணவி

சென்னையில், 9ம் வகுப்பு மாணவி, நோய்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் குறித்த மருத்துவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அசத்தினார்.சென்னையில் உள்ள தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவி பாக்கிய ஸ்ரீ, 14. தந்தை பாஸ்கர், விழுப்புரத்தில் விவசாயம் செய்து வருகிறார். 

தடகளப் போட்டி: அரசு பெண்கள் பள்ளிக்கு கோப்பை

மேலூர் வட்ட அளவிலான நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கிடையேயான தடகளப் போட்டிகளில் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மூன்றாவது முறையாக ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சுழற்கோப்பையை பெற்றது.

 மேலூர் வட்ட அளவிலான தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கிடையே தடகளப் போட்டிகள் மேலூரிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. மேலூர் சுப்ரீம் அரிமா சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இப்போட்டிகளில் மாணவிகளுக்கான பிரிவில் 54 புள்ளிகளைப் பெற்று ஒட்டு மொத்த சாம்பியனாக மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சுழற்கோப்பையை பெற்றது.

 மாணவர்களுக்கான பிரிவில் மேலூரிலுள்ள மில்ட்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.தடகளப் போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு சுப்ரீம் அரிமா சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் வி.முருகேசன் தலைமை வகித்தார். மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.ராவணன் போட்டியைத் தொடங்கி வைத்தார். பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு எஸ்.பி.மெய்யப்பன் தலைமை வகித்தார்.  மேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் டி.மங்களேஸ்வரன் பரிசுகளை வழங்கினார். பொறியாளர் வைரமுத்து வரவேற்றார். போட்டிக்கான ஏற்பாடுகளை அரிமா சங்க நிர்வாகிகள் எஸ்.சரவணன், ஆர்.மணி, எஸ்.சேவுகமூர்த்தி, மருத்துவர் கதிரேசன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் செய்திருந்தனர்.

ISRO விஞ்ஞானிகள் அரசுப்பள்ளி மாணவனுக்கு வாழ்த்து !

விருதுநகர் மாவட்டம், நாரணாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் ஜெயக்குமார். செய்த செயல்திட்டமான தானியங்கி தீயணைப்பான் செயல்திட்டத்தின் செயலாக்கத்தினை, ISRO விஞ்ஞானி இங்கர்சால்,சோலார் விஞ்ஞானி  சூரியமூர்த்தி மற்றும் அப்துல்கலாம் அவர்களுடன் பல் ஆண்டுகள் பணியாற்றிய ISRO  விஞ்ஞானி சிவசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் விளக்கமளித்தான். அம்மாணவனின் திறனை வியந்து பாராட்டி பரிசு அளித்தனர். மேலும் அம்மாணவனை இளம் விஞ்ஞானி ஆக்க பயிற்சி அளிக்கவும் முன் வந்து அம்மாணவனை Studentns science forum ல் உறுப்பினராக்கி உள்ளனர்.  விழாவானது இராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி வாசன் மெட்ரிக் பள்ளியில் வைத்து நடைபெற்றது.

தினம் ஒரு புத்தகம் 'இவைகளா கனவுப்பள்ளிகள் "


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "பாதாம்"

பாதாம் என்பதும் ஒருவகை எண்ணெய் வித்துதான். புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு கொட்டை வகை இது. டயட் செய்கிறவர்களுக்கும், கொழுப்பைத் தவிர்க்கச் சொல்கிறவர்களுக்கும் எண்ணெய் வித்துகள் வேண்டாம் என வலியுறுத்தப்படும். ஆனால், பாதாம் மட்டும் விதிவிலக்கு. பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது!

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி அரசு உதவி பெறும் மாணவர் கட்டுரை போட்டியில் முதல் பரிசு வெற்றி பெற்றதற்கு பாராட்டு

 
தியாகிகள் தினவிழா மற்றும் கே.எம்.எஸ்.கல்வி அறக்கட்டளை சார்பில் நடுநிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர் வி.வசந்த குமார் முதல் பரிசை வென்றார்.இதே பள்ளியின் மாணவர் கண்ணதாசன் மற்றும் மாணவி தனம் ஆகியோர் சிறப்பு பரிசுகள் பெற்றனர். பரிசுகளை பொற்கிழிக்கவிஞர் அரு.சோமசுந்தரன் மற்றும் குன்றக்குடி மடத்தின் ஆதீனப்புலவர் பரமகுரு வழங்கினார்கள். விடுமுறை நாளன்று மாணவர்களை போட்டிக்கு அழைத்து சென்றதுடன் பயிற்சி அளித்த ஆசிரியை கலாவல்லி மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பதா?: ராமதாஸ் அறிக்கை

எந்த பிரிவினருக்கும் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மக்கள் விரோத ஆட்சியை ஜெயலலிதா நடத்தி வருகிறார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசுக்கு சமத்துவம் காக்கும் அரசு என்று விருது வழங்கலாம். ஒரு பிரிவினருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி, இன்னொருபிரிவினருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்கும் பாரபட்சமான அணுகுமுறையை பின்பற்றக்கூடாது என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருக்கிறார்.

அதனால் தான் 5ஆண்டுகளாக எந்த பிரிவினருக்கும் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மக்கள் விரோத ஆட்சியை ஜெயலலிதா நடத்தி வருகிறார்.ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும், புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்,மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தேவை என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அமைப்பினர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி சென்னையில் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். அப்போராட்டத்தில் நான் பங்கேற்று ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தேன். அதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 8ஆம் தேதி இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர். அதன்பிறகும் அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. அதனால் ஆசிரியர்கள் நேற்று முதல் 3 நாட்களுக்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி, நாளை ஒரு நாள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டமும் நடத்தவுள்ளனர். இதனால் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் ஒரு கோடி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும்.அதேபோல், புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 60 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பிப்ரவரி 8&ஆம் தேதி சென்னையில் உண்ணாநிலை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

அந்த போராட்டத்திற்கு பலன் கிடைக்கவில்லை என்றால் போராட்டத்தை தீவிரப்படுத்தவும் அரசு ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர். அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டால் ஒட்டுமொத்த நிர்வாகமும் நிலைகுலைந்து விடும். தமிழகத்திற்கோ, தமிழக மக்கள் நலனுக்கோ இது எந்த வகையிலும் நல்லதல்ல.தமிழக மக்களின் நலனில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அக்கறை இருந்தால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய தமிழக அரசு தவறிவிட்டது. மாறாக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை காவல்துறை மூலம் கைது செய்திருக்கிறது. அதேபோல், தங்கள் கோரிக்கைகள் பற்றி விளக்குவதற்காக சந்திக்க வந்த அரசு ஊழியர்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும், தலைமைச் செயலாளர் ஞானதேசிகனும் பல மணி நேரம் காத்திருக்க வைத்து சந்திக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர். பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு தங்களை சந்தித்த அரசு ஊழியர்களிடம் எந்த வாக்குறுதியும் அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதனால் அரசு ஊழியர்களின் உண்ணாநிலை போராட்டம் உறுதியாகியுள்ளது.2011&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அ.தி.மு.க.தேர்தல் அறிக்கையில்,‘‘அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணி வரன்முறை உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் அவ்வப்போது நிறைவு செய்யப்படும். அரசு நிர்வாகத்தில் இருக்கும் துறை மற்றும் நிர்வாக ரீதியான பணி சிக்கல்கள் ஆராயப்பட்டு அவற்றை சீராக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்பின் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய முறைக்கு பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்.

ஆனால், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றவில்லையோ, அதேபோல் அரசு ஊழியர்களுக்கு தந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டார். முந்தைய ஆட்சியின் போது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வேலைநிறுத்தம் மேற்கொண்ட அரசு ஊழியர்களை நள்ளிரவில் கைது செய்ததுடன், ஒரே கையெழுத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தஜெயலலிதா, இன்னும் திருந்தவில்லை என்பதையே அவரது செயல்கள் காட்டுகின்றன. அப்படிப்பட்ட ஜெயலலிதா வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்ற மாட்டார்.தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என பா.ம.க. விரும்புகிறது. அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பா.ம.க. வரைவுத் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அடுத்த சில நாட்களில் சந்தித்து பேசி, சமூக ஒப்பந்தம் செய்து கொள்ளவுள்ளார். பா.ம.க. ஆட்சிக்குவந்தவுடன் சமூக ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து கோரிக்கைகளும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று உறுதிஅளிக்கிறேன்

பத்தாம் வகுப்பு வரலாறு 2 மதிப்பெண் கூடுதல் வினாக்கள்

Thanks
B. SRINIVASAN.
M.A.,M.Ed.,M.C.A.,M.A
(YOGA)GRADUATE TEACHER
GHS GANGALERI 635 122
KRISHNAGIRI - DT


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 'எம்.பி. கோட்டா' சேர்க்கை 10ஆக உயர்வு

கேந்திரிய வித்யாலயா என்ற கே.வி., பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான எம்.பி.,க்கள் ஒதுக்கீடு, ஆறு இடங்களில்இருந்து, 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு எம்.பி.,யும்., ஆறு மாணவர்களை சிபாரிசின் படி, கே.வி., பள்ளிகளில் சேர்க்க முடியும். இந்த ஒதுக்கீடு, வரும் கல்வி ஆண்டு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. 

10 ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் திருச்சி மத்திய சிறையின் 67 கைதிகள்

திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகளில், 67 பேர், நடப்பாண்டு, ௧௦ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதவிண்ணப்பித்து உள்ளனர்.தமிழகத்தில் சென்னை புழல், வேலுார், சேலம், கடலுார், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள மத்திய சிறையில், விசாரணை மற்றும் தண்டனை கைதிகள், 20,000 பேர் அடைக்கப் பட்டுள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்கள், அரசு ஊழியர் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு: ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சிக்கு வந்தால் போராடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மக்கள் நலப் பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணப்படும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் முகநூலில் வெளியிட்ட பதிவில், ''மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ அமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த போராட்டத்தை திடீரென்று அவர்கள் துவங்கவில்லை. 

பிஎச்டி படிப்பதற்காக ஆண்டுக்கு 10,000 மாணவர்களை அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டும்

பெங்களூரு: பிஎச்டி படிப்பதற்காக ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து 10 ஆயிரம் மாணவர்களை அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டும் என இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.இந்திய-அமெரிக்க வர்த்தக மாநாடு பெங்களூருவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி கலந்துகொண்டார். மாநாட்டில் இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி பேசியதாவது:

தமிழகத்தில் பெருகும் இன்ஜி. மாணவர்கள் கேள்விக்குறியாகும் வேலைவாய்ப்பு

புதுடெல்லி: தமிழகத்தில் அதிகளவில் இன்ஜினியர்கள் உருவானாலும், அவர்களுக்குரிய வேலை கிடைப்பதில்லை என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.தற்போது ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு டாக்டர் அல்லது இன்ஜினியர் உருவாகி வருகின்றார். அவர்கள் தங்களது படிப்புக்கு ஏற்ற வேலைக்கு செல்வதில்லை. அதுவும் தமிழகத்தில் படித்து முடித்த இன்ஜினியர்களுக்கு உரிய வேலை கிடைப்பதில்லை என்பதை சமீபத்திய புள்ளிவிவரம் உறுதிப்படுத்துகிறது.

பள்ளிகளில் கணிணி அறிவியலை அடிப்படை திறனாக கற்பிக்க 4 பில்லியன் டாலர் வழங்க வேண்டும்: ஒபாமா

அமெரிக்காவில் பொருளாதார சூழ்நிலை மாறிவரும் நிலையில் அங்குள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கணிணி அறிவியலை ஒரு அடிப்படை திறனாகவே பயிற்றுவிக்கப்பட வேண்டும். குறிப்பாக, பெண் குழந்தைகள், சிறுபான்மையின மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற தகுதியாக இருக்கும் வகையில் கணிணி அறிவியல் கற்பிக்கப்பட வேண்டும். அதற்காக 4 பில்லியன் டாலர் நிதி உதவியை பாராளுமன்றம் வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். 

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!