Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 2 February 2016

2016 வருமான வரி 80 D குறித்த RTI தகவல்...

உலகிலேயே முதல்முறையாக ரோபோக்களை மட்டுமே கொண்ட விவசாயப் பண்ணையை உருவாக்குகிறது ஜப்பான்

விதைப்பதை தவிர தண்ணீர் ஊற்றி வளர்த்து அறுவடை செய்வது வரை அனைத்து வேலைகளையும் ரோபோக்கள் மட்டுமே செய்யும் விவசாய பண்ணை ஒன்றை ஜப்பான் நிறுவனம் உருவாக்க முடிவு செய்துள்ளது.
அடுத்த ஆண்டு முதல் 4,400 சதுர அடியில் இந்த பண்ணை செயல்பாட்டுக்கு வருகிறது. தொடர்ந்து ஜப்பானில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடுமையான தொழிலாளர் தட்டுப்பாட்டால் தவித்து வருவதை அடுத்து ரோபோ தொழிலாளர்களை பயன்படுத்த ஜப்பான் களமிறங்கியிருக்கிறது.

பள்ளியை திறந்து பாடம் நடத்த சத்துணவு ஊழியர் சங்கம் எதிர்ப்பு!

பள்ளியை திறந்து பாடம் நடத்தும்படி அதிகாரிகள் கூறுவதற்கு சத்துணவு ஊழியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 30ம் தேதி முதல் தொடர் மறியல் போராட்டம் நடத்தி வருகிறது. பிப்., 1ம் தேதி அனைத்து பள்ளிகளையும் மூடி மறியல் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது.

ரயில்வே பாதுகாப்பு படையில் 2030 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

செகேந்திராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தின் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.), ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை (ஆர்.பி.எஸ்.எப்.) போன்ற போலீஸ் பிரிவில் நிரப்பப்பட உள்ள 2030 கான்ஸ்டபிள் பணிக்கு தகுதியான இந்திய குடியுரிமை பெற்ற பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு1 நாள் ஊதியம் கட்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம் மத்திய  அரசு ஊழியர்களுக்கு நிகரான சம்பளம், புதியசம்பளகொள்கை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்கப்பள்ளிமற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் இன்று (பிப்ரவரி1ம் தேதி) மூன்றாவது  நாளை எட்டியுள்ளது.

அண்ணாமலைப் பல்கலை 369 உதவிப் பேராசிரியர்கள்,அரசு கல்லூரிகளுக்கு மாற்றம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 369 உதவிப் பேராசிரியர்கள், தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என துணைவேந்தர் பேராசிரியர் செ.மணியன் தெரிவித்தார்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தியதின் விளைவாக பல்கலைக்கழகத்தை தமிழகஅரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. 

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுவதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக புகார்

ஆசிரியர்களை மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, ஆதார் அடையாள அட்டை உள் ளிட்ட இதர பணிகளில் ஈடுபடுத்து வதால் பள்ளிகளில் மாணவர்களின் படிப்பு பெரிதும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

அரசு விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்ணுக்கும் பிரசவ கால விடுமுறை

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்ணுக்கும் மற்றவர்களைப் போன்று பிரசவ கால விடுமுறை வழங்க வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கிராம உதவியாளர் முதல் தாசில்தார் வரை 10,535 பணியிடங்கள் காலி

தமிழக வருவாய் துறையில், கிராம உதவியாளர் முதல் தாசில்தார் வரையில், 10,535 பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியிடத்தால் இரண்டு, மூன்று பணியிடங்களை, ஒருவர் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் துறை அலுவலர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதேபோல் பல்வேறு துறைகளில், காலிப்பணியிடங்கள் ஏராளம் உள்ளன.தற்போது, வருவாய் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விவரம்:

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வு எழுதும் மாணவர்கள் ஒழுங்கீனத்தில் ஈடுபட்டால் தண்டனை முதன் முதலாக ஹால் டிக்கெட்டில் எச்சரிக்கை

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வு எழுதும்போது மாணவ–மாணவிகள் தேர்வின் போது ஒழுங்கீனத்தில் ஈடுபடாதீர்கள் என்றும் அவ்வாறு ஈடுபட்டால் தண்டனை உண்டு என்றும் ஹால் டிக்கெட்டில் முதன் முதலாக எச்சரிக்கை வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.தேர்வுகள்

தினம் ஒரு புத்தகம் "மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் '


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "சாமை அரிசியின் பயன்கள்"

மருந்து செலவுக்காகவே சம்பாதியத்தில் ஒரு கனிசமான பகுதியை ஒதுக்கிடும் மக்களின் மத்தியில்,மருத்துவ செலவை குறைக்கலாம் என்றால் கசக்கவ போகிறது."நோய் நாடி நோய் முதல் நாடி" என்கிறது வள்ளுவம். வள்ளுவம் மட்டும்மில்லிங்க அனைத்து பாரம்பரிய வைத்திய முறைகளும் நோயினை வேரோடு பிடுங்கவே முயற்சிக்கின்றன. 

நாட்டின் வளர்ச்சிக்கு எத்தனை வசதிகள் இருந்தாலும், கல்வியறிவு இன்றி எதுவும் சிறக்காது (DINAKARAN)

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலை பள்ளி வரை தமிழ்மொழி வழி கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்தனர். 

மக்கள் தொகை பதிவேடு பணி: ஆசிரியர்களுக்கு தடை கோரி வழக்கு: அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

'ஆதார்' எண்களை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டுடன் இணைக்கும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரிய வழக்கில், 'அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் பேரவை பொதுச் செயலர் பாலசந்தர் தாக்கல் செய்த பொதுநல மனு:

வாக்காளர் பட்டியலில் சேர்க்க மனுக்கள் குவிகின்றன! பிரதான அரசியல் கட்சிகள் கலக்கம்!

9 சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 10,222 பேர் விண்ணப்பித்துள்ளனர். புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அவர்கள் யாருக்கு சாதகமாக ஒட்டளிப்பார்கள் என பிரதான அரசியல் கட்சிகள் கலக்கத்தில் உள்ளன.

வருவாய் ஊழியர்கள் 2 நாள் 'ஸ்டிரைக்'!

'காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; தாசில்தார், அலுவலர்களுக்கான தனி ஊதியம் வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு வருவாய் துறை அலுவலர்கள், இன்று முதல், இரு நாட்களுக்கு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதனால், கலெக்டர், தாசில்தார் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலகங்களில், பணி முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

வி.ஏ.ஓ., விண்ணப்பம் பிப்., 7 வரை வாய்ப்பு!

அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிராம நிர்வாக அலுவலரான, வி.ஏ.ஓ., பதவியில், 813 காலியிடங்களுக்கு, 28ம் தேதி, தேர்வு நடக்க உள்ளது. இதற்கு, 10 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அதன் விவரம், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது;

பொதுத் தேர்வு மாணவர்களுக்கு 'யுனிக் ஐ.டி.,' : தேர்வுத்துறை ஏற்பாடு

''பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 'யுனிக் ஐ.டி.,' எண்கள் (தனித்துவ அடையாள எண்) வழங்கப்படவுள்ளது,'' என தேர்வுத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்தார். மதுரையில் அவர் கூறியதாவது:

கட்டுமான பணி நிதியை கேட்கும் கட்சியினர் திணறும் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள்

மதுரையில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் (ஆர்.எம்.எஸ்.ஏ.) கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 'கட்டிங்' கொடுக்கும் பிரச்னையை சமாளிக்க முடியாமல் தலைமையாசிரியர்கள் திணறுகின்றனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!