Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 6 February 2016

வேலூர் கல்லூரி வளாகத்தில் விழுந்தது எரிகல்: டி.ஐ.ஜி தகவல்

வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே சென்னை– பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட் என்ற இடத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இன்று மதியம் வானத்தில் இருந்து திடீரென மர்ம எரிபொருள் ஒன்று கல்லூரி வளாகத்தில் விழுந்து வெடித்தது. மர்ம எரிபொருள் விழுந்ததில் அங்கு நின்றிருந்த கல்லூரி பஸ் டிரைவர் காமராஜ் (வயது 27) கருகி உயிரிழந்தார். தோட்டக்காரர்கள் சசிக்குமார் (36), முரளி (27) ஆகியோர் பலத்த தீக்காயமடைந்தனர். 

இந்நிலையில், கல்லூரி வளாகத்தில் விழுந்த மர்ம பொருளை வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில், அது வெடிகுண்டு அல்ல என்றும், விண்ணில் விழுந்தது எரிகல் என்றும் உறுதி செய்துள்ளனர். இத்தகவலை வேலூர் டி.ஐ.ஜி. தமிழ்சந்திரன் தெரிவித்தார். 

மேலும், அந்த எரிகல்லை ஆய்வுக்காக அகமதாபாத் விண்வெளி நிலைய ஆராய்ச்சியாளர் எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "தேன் சாப்பிடுவதால் உள்ள பயன்கள்'

தேன் ஓர் இனிய உணவுப்பொருள் மருத்துவ குணமும் கொண்டது, பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில் (திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகிறது. தினமும் தேன் பருகினால் என்றும் இளைமையாக இருக்கலாம் என்பது அறிவில் ரீதியான உண்மை என்று பயன்படுத்திய பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தினம் ஒரு புத்தகம் "குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்"

வேலூர்: பொறியியல் கல்லூரியில் மர்மப் பொருள் வெடித்து ஒருவர் மரணம்: 4 பேர் காயம்

நாட்றம்பள்ளி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மர்மப் பொருள் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கூறியதாவது:

‘நெட்’ தேர்வுக்கு எம்எஸ்சி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

சிஎஸ்ஐஆர் அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிப்பதாவது:கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் கணிதம் மற்றும் அறி வியல் சம்பந்தப்பட்ட பாடங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு அறிவியல் தொழில் ஆராய்ச்சிக் குழு (சிஎஸ்ஐஆர்) நடத்தும் நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.அந்த வகையில் இந்த ஆண்டுக் கான முதலாவது தகுதித்தேர்வு ஜூன் மாதம் 19-ம் தேதி நடை பெற உள்ளது. 

29 பேர் பதவி உயர்வு பெற்று மாவட்ட கல்வி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்களும், நியமிக்கப்பட்ட பதவி மற்றும் ஊர் விவரம் வருமாறு:-

29 தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு

அரசு உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 29 பேர் பதவி உயர்வு பெற்று மாவட்ட கல்வி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்களும், நியமிக்கப்பட்ட பதவி மற்றும் ஊர் விவரம் வருமாறு:-

ஆசிரியர்களின் சாதனைகள் மற்றும் திறமைகளை பதிவு செய்யும் தளம்

பிப்ரவரி மாத CRC கூட்ட நாட்கள் விவரம் தலைப்பு : வகுப்பறையில் பயிற்சிகளின் தாக்கம் தொடக்க நிலை : 20.02.2016 உயர்தொடக்கநிலை : 27.02.2016


SASTRA UNIVERSITY DDE B.ED.,COUNCELLING ON 27.02.2016&28.02.2016


அரசுப்பள்ளி வகுப்பறைகளில் விரைவில் வண்ண வண்ண சித்திரங்கள் கற்பனை வளத்துடன் ஆங்கிலம் கற்பிக்க திட்டம்

அரசுப்பள்ளி மாணவர்கள், ஆங்கிலத்தில், அசத்தும் வகையில், வகுப்பறைகளில், வண்ண ஓவியங்களை வரைந்து, கற்பித்தல் திறனை ஊக்குவிக்கும் புது திட்டம் கல்வித்துறையால், செயல்படுத்தப்பட்டுள்ளது. மேகத்தில் மிதப்பது, நிலாவை பிடிப்பது என குழந்தைகளின் உலகம் என்றுமே, கற்பனை வளமும், வண்ணமயமான காட்சிகள் நிறைந்ததாகவே இருக்கும். ஆனால், பள்ளிக்குள் நுழைந்ததும், அவர்களின் உலகத்தை விட்டு வெளியேற்றி, தங்களுக்கான சூழலை இழப்பதாக கருதுகின்றனர் இன்றைய பள்ளி குழந்தைகள். 

TET : தகுதித் தேர்வை பூர்த்தி செய்யாத பள்ளி ஆசிரியருக்கும் சம்பளம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

'தகுதித் தேர்வை பூர்த்தி செய்யாவிட்டாலும், உச்சநீதிமன்ற வழக்கு முடிவுக்கு வரும்வரை, சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியருக்கு, சம்பளம் வழங்க வேண்டும்,' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

2015-16 ஆம் கல்வி ஆண்டில் புதிய தொடக்கப் பள்ளிகள் துவக்கப்படும் குடியிருப்பின் பெயர் பட்டியல்...


புத்தக வெளியீட்டு விழா

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் நகரில் 06.02.2016 அன்று மாலை 5.00 மணிக்கு ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் திரு.ச.இரகுபதி அவர்கள் எழுதி வெளியிடும்

29 கல்வி அலுவலர்கள் நியமனம்.

29 தலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

3 மாவட்டங்களுக்கு விடுமுறை.

கும்பமகோணம் மகாமகம் திருவிழாவை முன்னிட்டு பிப்ரவரி 22 தஞ்சை,நாகை,திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை தமிழக அரசு அறிவிப்பு

7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஏற்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு

புதுடெல்லி, பிப். 5–மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு வழங்க 7–வது சம்பள கமிஷன்பரிந்துரை செய்துள்ளதை மத்திய அரசு அப்படியே ஏற்க முடிவு செய்துள்ளது.நாடு முழுவதும் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

இது தவிர 52 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள விகிதம்சீரமைக்கப்படும்.

மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சீரமைக்க 7–வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன், மாநில அரசுகள் மற்றும் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தியது.பின்னர் தனது பரிந்துரைகளை அறிக்கையாக தயார் செய்து மத்திய அரசிடம் அளித்தது.இதில் பல்வேறு முரண்பாடுகள்இருப்பதாகவும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும், மற்ற அதிகாரிகளுக்கும் சம்பள விகிதத்தில் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாகவும் அதிருப்தி எழுந்தது. போக்குவரத்து அலவன்ஸ் உயர்த்தப்படவில்லை என்றும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து 7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை ஆராயவும் முரண்பாடுகளை சரி செய்யவும் மத்திய அரசின் கேமினட் செயலாளர் பி.கே.சின்கா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதில் 42 அரசுத்துறை செயலாளர்களுக்கு இடம் பெற்று இருந்தனர்.

இந்த குழு சம்பள கமிஷன் பரிந்துரைகளில் உள்ள முரண்பாடுகள் பற்றி பல்வேறு தரப்பிடம் கருத்து கேட்டது. விரைவில் இதற்கு இறுதி வடிவம் கொடுத்து மத்திய மந்திரிசபையின் ஒப்புதல் பெறப்படும். அதன் பிறகு அமலுக்கு வரும்.7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை அமல்படுத்துவதில் பிரதமர் மோடி அதிக ஆர்வம் காட்டி வருகிறார். வருகிற மத்திய பட்ஜெட்டில்சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்கான பணிகளில் நிதிமந்திரி அருண்ஜெட்லி கவனம் செலுத்தி வருகிறார்.7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகளில் எந்தவித மாற்றமும் செய்யாமல் அப்படியே அமல்படுத்தவும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்ததும் மத்திய அரசுஊழியர்களுக்கு சம்பள உயர்வு அமலுக்கு வரும்.மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு வழங்க சம்பள கமிஷன் சிபாரிசு செய்துள்ளது. பல்வேறு அலவன்சுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆகவும் அதிகபட்ச சம்பளம் ரூ.2.55 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஊழியர்கள் ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணிக்கொடை உச்ச வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாகஉயர்த்தப்பட்டுள்ளது.இந்த சம்பள உயர்வை ஜனவரி 1–ந்தேதியிட்டு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்புவெளியானதும் ஏப்ரல் 1–ந்தேதி முதல் சம்பள உயர்வை பெறலாம்

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!