Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 7 February 2016

தினம் ஒரு புத்தகம்


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்"

முடி நன்கு வளர்வதற்கு நெல்லிக்காய் சாப்பிட வேண்டும் மற்றும் நெல்லிக்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும் என்று சொல்வார்கள். மேலும் உடல்நல பிரச்சனைகளைக் குணப்படுத்தும் வைத்தியங்களிலும் நெல்லிக்காய் பயன்படுகிறது. ஏனெனில் நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவைகள் வளமாக நிறைந்துள்ளது.
உடல் எடை குறைப்பிற்கும் நெல்லிக்காய் ஜூஸ் பயன் தரும்.
நெல்லிக்காய் கசப்பாக இருந்தாலும், இதனை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், முடி பிரச்சனைகள், சரும பிரச்சனைகள் மட்டுமின்றி, ஆரோக்கியமும் மேம்படும்.

தேவாரம்   ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  பள்ளியில் தேவாரம் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

கல்வி வளர்ச்சி நாள் - அலுவலர்களின் அதிகாரங்களில் மாற்றம் ஏற்படுத்தி அரசாணை வெளியீடு
பணி நிரந்தரம் செய்ய பகுதி நேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனத் தமிழகப் பகுதி நேரச் சிறப்பாசிரியர்கள் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தஞ்சாவூரில் இந்தச் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

8 வகுப்பு மாணவர்களுக்கு சாதி மற்றும் இருப்பிட சான்றிதழ்களை பள்ளியிலேயே வழங்க இயக்குனர் உத்தரவு


புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது (Inspire Award) அனைத்து மாணவர்களும் பங்கேற்க நடவடிக்கை எடுக்க உத்தரவு


எஸ்எஸ்எல்சி தேர்வு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மார்ச் மாதம் நடைபெறவுள்ள எஸ்எஸ்எல்சி பொதுத் தேர் வுக்கு, அரசு தேர்வுத் துறையால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற் போது விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் பிப்ரவரி 11, 12-ம் தேதிகளில் சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்: ஆசிரியர் கூட்டணி மாநாட்டில் தீர்மானம்

கோவில்பட்டியில் நடைபெறும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மாநாட்டில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ரா.பாலசுப்பிரமணியன் பேசினார்.

அடுத்த மாதம் மத்திய அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: ரெயில்வே, அஞ்சல் சேவை முடங்கும் ஆபத்து

மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த மாதம் முதல் வாரம் தொடங்கி, காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் ரெயில்வே, அஞ்சல் உள்ளிட்ட சேவைகள் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அரசு நிதி வருவாயில் 90 சதவீதம் ஊழியர் சம்பளத்திற்கு செல்கிறதா: அரசு ஊழியர் சங்கம்மறுப்பு

அரசு நிதி வருவாயில் 90 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளத் திற்கு செல்கிறது என அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ள தகவல் தவறானது,'' என, சங்க மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன்தெரிவித்தார்.தேனியில் அவர் கூறியதாவது:

என்.எஸ்.எஸ்., திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு இன்றி முகாம்களை நடத்தமுடியாமல் பள்ளிகள் தவிப்பு

காரைக்குடி:நாட்டு நலப்பணி திட்டத்திற்கு (என்.எஸ்.எஸ்.,முகாம்) கடந்த 2 ஆண்டாக மத்திய அரசின் உதவி தொகை வழங்கப்படாததால், முகாம்களை நடத்த முடியாமல் பள்ளிகள் திணறி வருகின்றன. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பு நேரத்தின் ஒரு பகுதியை சேவைக்காக செலவிட வேண்டும். சமூக மற்றும் தொழிலாளர் சேவை, சமூக சேவையுடன் தொடர்புள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.

பிளஸ் 2 செய்முறை தேர்வு நாளை துவக்கம் - தேர்வு விதிகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வில், முதற்கட்டமாக, செய்முறை தேர்வு, நாளை துவங்குகிறது. தேர்வின் போது, ஆய்வகங்களில் அதிரடி சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும், மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் 4ம் தேதி, பொதுத்தேர்வு துவங்கி, ஏப்., 1ம் தேதி முடிகிறது; 8.80 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். 

இணைப்பு சான்றிதழ் இல்லை: பி.எட்., கல்லூரிகளில் முறைகேடு

தமிழகத்தில் உள்ள, 650 பி.எட்., கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்தும், இன்னும் பல்கலையால் இணைப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை. சான்றிதழ் வழங்க, விதிமுறைகளை மீறி, சிலர் வசூல் வேட்டை நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. 

10ம் வகுப்பு தேர்வு'தத்கல்' திட்டம்அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, 'தத்கல்' திட்டத்தில் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

சான்றிதழை மறுப்பதா: கல்லூரிகளுக்கு எச்சரிக்கை

'கட்டண பாக்கி பிரச்னையால், மாணவர்களுக்கு வழங்காமல் வைக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை உடனே வழங்க வேண்டும்' என, இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு, தமிழக உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.