Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 9 February 2016

இங்கிலாந்தில் உள்ள கோஹினூர் வைரத்தை கேட்டு பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தை அலங்கரிக்கும் கோகினூர் வைரத்தை திரும்ப ஒப்படைக்குமாறு இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஆனால், இந்தியாவின் இந்த கோரிக்கையை திட்டவட்டமாக இங்கிலாந்து தொடர்ந்து ஏற்க மறுத்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானும் கோஹினூர் வைரத்துக்கு உரிமை கோரியுள்ளது.

ஜாக்டோவின் கோரிக்கைகள் முதல்வர் பரிசீலித்து பட்ஜெட்டில் அறிவிப்பார் என அமைச்சர்கள் குழு உறுதிமொழி; இதையடுத்து அடுத்த கட்ட முடிவு குறித்து பிப்ரவரி 16 அன்று கூட ஜாக்டோ முடிவு

அரசு தரப்பில் கூறப்பட்டுள்ள உறுதிமொழிக்கேற்ப தமிழக அரசின் பட்ஜெட் உரையில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என ஜாக்டோ நம்பிக்கை வைக்கிறது, பட்ஜெட்டில் கோரிக்கைகள் இடம் பெறவில்லை எனில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து பிப்ரவரி 16ந்தேதி அறிவிக்கப்படும்
என ஜாக்டோ உயர்மட்டக்குழு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு ஐடிஐயில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு ஐடிஐயில் காலியாகவுள்ள பணிமனை உதவியாளர் பணியிடத்துக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, சென்னை கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்ட அறிக்கை:சென்னை, கிண்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் அரசினர்தொடர் அறிவுரை மையம்  ஆகியவற்றில்  காலியாகவுள்ள  பணிமனை உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பிட விண்ணப்பங்கள்   வரவேற்கப்படுகின்றன.

தமிழக சட்டப்பேரவை 16ம் தேதி கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை வருகிற 16ம் தேதி காலை 11 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் 2016-2017ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். தமிழக சட்டப்பேரவை  கூட்டம் ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்தில் கவர்னர் உரையுடன் கூடுவது  மரபு. அதன்படி, 2016ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த 20ம்  தேதிகூடியது. 

85 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம்:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல்சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஸ்டிரைக்

தமிழக அரசினை கண்டித்து சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடஉள்ளனர். சத்துணவு, அங்கன்வாடி மையங்கள் 2 நாட்கள் மூடப்படுவதால் மையங்களில் உணவு சாப்பிடும் 85 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் 68 ஆயிரம் பள்ளி சத்துணவு மையங்கள், 73 ஆயிரம் அங்கன்வாடி மற்றும் குறு அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் சுமார் சுமார் 2.5 லட்சம் ஊழியர்கள்பணியாற்றி வருகின்றனர். 

ஜாக்டோ பேச்சுவார்த்தை முழு விவரம்-தமிழ்நாடுஆசிரியர் கூட்டணிபொதுசெயலர் செ.முத்துசாமி அவர்களின் அறிக்கை

ஜாக்டோ தரப்பில் 15 அம்சக்கோரிக்கைகளை, ஒவ்வொரு கோரிக்கையாக ஒவ்வொரு சங்கபிரதிநிதிகள் தெளிவாக எடுத்துக்கூறினர்.

அப்போது கல்வித்துறை செயலர் அவற்றை கவனமாக குறிப்பெடுத்துக்கொண்டார்.

அதேசமயம் முக்கிய கோரிக்கைகளை நிதியமைச்சர் அவர்களும் தனது குறிப்பேட்டில் குறிப்பெடுத்துக்கொண்டார்.

பிப்ரவரி 01 ம் தேதி நடைபெற்ற போராட்டத்திற்கு ஊதியம் பிடிக்கப்படுவதில்லை-இயக்குநர்

ஜாக்டோவின் இன்றைய பேச்சுவார்த்தையில் இயக்குனர் அளித்த தகவல்..

பிப்ரவரி 01 ம் தேதி நடைபெற்ற போராட்டத்திற்கு ஊதியம் பிடிக்கப்படுவதில்லை-இயக்குநர்

தமிழக சட்டப்பேரவைக்கு மே 14ம் தேதி தேர்தல்? தேர்தல் ஆணையம் ஆலோசனை

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் மே 14ம் தேதி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே மாதம் 22ம் தேதியோடு முடிவடைகிறது. இதே போல தமிழகம் உட்பட, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களும்சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ளன.

JACTTO : முதல்வரிடம் பேசி விரைவில் தீர்வு - நிதி அமைச்சர் திரு.பன்னீர்செல்வம் உறுதி

இன்று நடைபெற்ற ஆசிரியர் இயகங்களுடானான பேச்சுவார்த்தையில் அனைத்து சங்கங்களும் ஒவ்வொரு கோரிக்கைகள் குறித்து பேசின. அனைத்து கோரிக்கைகளையும் கேட்டறிந்த அமைச்சர்கள் மாண்புமிகு முதல்வரிடம் பேசி விரைவில் நல்ல தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு.  நிதி அமைச்சர் திரு. பன்னீர்செல்வம் அவர்கள் விரைவில் நல்ல செய்தியை அனைவரும் எதிர்பார்க்கலாம் என தெரிவித்தார் 

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "அறுசுவை"

அறுசுவை எனப்படுவது நாக்கு அறியக்கூடிய ஆறு வகை சுவைகளாகும். பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. அவையாவன: துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியனவாகும். ஆயுர்வேதம் உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் சற்று விரிவாய் பார்க்கலாம்.

தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.

இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது
துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது
அக்கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று சொல்வார்கள்

தினம் ஒரு புத்தகம் "வாசிப்பு மற்றும் தேர்வு முறையின் அரசியல்"

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி பற்றிய அறிவுரைகள்


ஜாக்டோ பிரதிநிதிகள் மற்றும் தமிழக அரசுடனானபேச்சுவார்த்தை மாலை 5.50 மணிக்கு தொடங்கியது

ஜாக்டோ பிரதிநிதிகள் மற்றும் தமிழக அரசுடனான பேச்சுவார்த்தை மாலை 5.50 மணிக்கு தொடங்கியது. 

ஒவ்வொரு சங்கத்தின் சார்பில் ஒருவர் வீதம்மொத்தம் 21 பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கு பெற்றுள்ளனர். 

தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்

தமிழகத்தில் 68 ஆயிரம் பள்ளி சத்துணவு மையங்கள், 73 ஆயிரம் அங்கன்வாடி மற்றும் குறு அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த மையங்களில் சுமார் 2½ லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்டங்களாக போராட்டம் நடத்தினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நாளை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.இது தொடர்பாக தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு இணை கன்வீனர் மு.வரதராஜன் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் மொத்தம் 547 நேரடி நியமனம்:


தொடக்கக்கல்வி செயல்முறைகள்-சார்நிலைப்பணி உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பதவிக்கு 31.12.2009 முடிய 5 தேர்வுகளிலும் தேர்ச்சிப்பெற்று முழுதகுதிப்பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பட்டியலை மாவட்ட அளவில் தயாரித்து அனுப்ப கோருதல் சார்பு


விடுமுறை நாள்களில் மட்டுமே ஆசிரியர்களுக்குகல்விசாரா பணி: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

மக்கள் தொகை பதிவேட்டில் ஆதார் எண் இணைக்கும் பணி உள்ளிட்ட கல்விசாரா பணிகளில் விடுமுறை நாள்களில் மட்டுமே ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்று சென்னைஉயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.ஆதார் எண் இணைக்கும் பணிகளுக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்தத் தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் சி.பாலசந்தர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

10ம் வகுப்பு தனித்தேர்வு- ஆன்லைனில் பிப். 11, 12ல் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) ஆன்லைனில் பிப். 11, 12ல் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மார்ச் 15ல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கவுள்ளது.

பிப்.13 ல் மதுரையில் வி.ஏ.ஓ., மாதிரி தேர்வு தினமலர், என்.ஐ.பி., நடத்துகிறது

மதுரையில் தினமலர் நாளிதழ், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப்பேங்கிங் (என்.ஐ.பி.,) சார்பில் மாதிரி வி.ஏ.ஓ., தேர்வு பிப்.,13ல் நடக்கிறது.டி.என்.பி.எஸ்.சி., சார்பில் 813வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு பிப்.,28ல் தேர்வு நடக்கிறது. இதற்கு 10 லட்சத்திற்கும் மேல் விண்ணப்பித்துள்ளனர்.

அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில், நேற்று உண்ணாவிரதம் நடந்தது.சென்னை சேப்பாக்கத்தில் நடந்த, உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, தேவேந்திரன், சண்முகம் ஆகியோர் தலைமை தாங்கினர். 

மக்கள் தொகை பதிவு பணியில் ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரத்தில் ஈடுபடுத்தவில்லை: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்.

ஆதார் எண்களை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டுடன் இணைக்கும் பணியில், பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்களை ஈடுபடுத்தவில்லை' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். 

தமிழ்நாடு துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் பேரவை பொதுச் செயலர் பாலசந்தர் தாக்கல் செய்த பொதுநல மனு: 'ஆதார்' எண்களை தேசிய மக்கள் தொகை பதிவேடுடன் (என்.பி.ஆர்.,) இணைக்கும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கிறது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, ஆசிரியர்களை கல்விசாராத பணியில் ஈடுபடுத்தக்கூடாது. என்.பி.ஆர்., பணியால், பள்ளி வேலைநாட்கள் மேலும் குறையும். 'ஆதார்' எண்ணை, என்.பி.ஆருடன் இணைக்கும் பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, பாலசந்தர் மனு செய்திருந்தார்.

நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சி.டி.செல்வம் கொண்ட அமர்வு விசாரித்தது. மனுதாரர் வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜரானார்.

அரசு வக்கீல்கள் வாதம்:

தமிழக அரசு சிறப்பு வழக்கறிஞர் சண்முகநாதன்:

2011 ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஆதாருடன், மக்கள் தொகை பதிவை இணைக்கும் பணி நடக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு, இயற்கை பேரிடர் மீட்பு, தேர்தல் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த சட்டத்தில் இடமுண்டு. தற்போது, பள்ளி வேலை நேரத்தில் மக்கள் தொகை பதிவேட்டுப் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்தவில்லை.

மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சாமிநாதன்:

விடுமுறை நாட்கள் மற்றும் பள்ளி வேலை நேரம் முடிந்த பின்தான், மக்கள் தொகை பதிவேட்டு பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இதற்கு சட்டத்தில் வழிவகை உண்டு.இவ்வாறு வாதிட்டனர். இதை பதிவு செய்த நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!