எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!





Thursday, 11 February 2016
உதவி பேராசிரியர்கள் நியமனம் தற்காலிகமாக நிறுத்தம்.
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலையில், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, அனைத்து பல்கலை மாணவர் சங்க தலைவர் வினோத்குமார் கூறியதாவது:
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும்விளையாட்டு பல்கலையில், உதவி பேராசிரியர் உட்பட பல பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடந்தது.இதில், பல முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, இந்த விவகாரத்தில், சி.பி.ஐ., விசாரணை தேவை என, அனைத்து பல்கலை மாணவர் சங்கம் சார்பில், முதல்வர் தனிப் பிரிவில் மனு கொடுக்கப்பட்டது.
இது குறித்து, 'தினமலர்' நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்குவதற்காக,நேற்று நடக்க இருந்த சிண்டிகேட் கூட்டம் நடக்கவில்லை.தேதி குறிப்பிடாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தற்காலிகமாக பணியிடங்களை நிரப்புவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு உதவிய, 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி. இவ்வாறு வினோத்குமார் தெரிவித்தார்.
தமிழகத்தில் 65616 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்-ஆணையர்
வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க 17 லட்சம் விண்ணபங்கள் வந்ததாகவும் அதில் 16 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வாக்காளர் பட்டியலில் உள்ள பிழையை நீக்க பிப்ரவரி 15 முதல் 29ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும் நசீம் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 65,616 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "புத்துணர்ச்சி தரும் இளநீர்!"
இளநீர் இயற்கை அளித்த இனிய பானம் மட்டுமன்று; பல பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தாகவும் உள்ளது.