Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 12 February 2016

இந்திரா காந்தி திறந்தபல்கலைகழக BE.d -2015 தேர்வுமுடிவுகள் வெளியீடு!!!

TNPTF -ன் மாநில செயற்குழுவில் 15.02.2016 (திங்கள் கிழமை) முதல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசு ஊழியர்களுடன் இணைந்து காலவறையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்க முடிவு.

நமது கோரிக்கைகளை வென்றெடுக்க தொடர் வேலைநிறுத்தம் ஒன்றே தீர்வு..
16-ம் தேதிக்கு பிறகு களம் காண கால அவகாசம் இல்லை..
அரசின் சூழ்சிக்கு நமது கோரிக்கைகள் கேளிக்கைகளாய் போவது தொடர் வாடிக்கை....
பிறகு ஏன் இந்த வேடிக்கை...???

தினம் ஒரு புத்தகம் "கற்பனைக் குதிரை '


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "பேரீச்சம்பழம் உண்பதால் கிடைக்கும் நன்மைகள்"

இனிமையோடு குளுமையும் எண்ணெய்ப்பசை கொண்டதாகவும் இருக்கும். பேரீச்சம்பழம் இருமலைத் தணிக்க கூடியது. நெஞ்சகச் சளியைக் கரைத்து வெளித்தள்ளக் கூடியது. மலத்தை இளக்குவது, சிறுநீரைப் பெருக்கக் கூடியது, உடலுக்கு உரமாவது, சத்தூட்டமுள்ளது.

பள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி - கணினி பயிற்றுநர் - 1880 தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2016 முதல் 31.12.2016 வரை நீட்டிப்பு செய்து அரசு ஆணை


Flash News:1062 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

1062 முதுகலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் விரைவில் நியமனம் செய்ய நடவடிக்கை-பள்ளிக்கல்வித்துறை தகவல்.

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்கள் அனைவரையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: பள்ளிக் கல்விஇயக்குநர் உத்தரவு

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர் கள் அனைவரையும் அரசு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்ற றிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் போராட்டத்தை திரும்ப பெற வேண்டும்: கருணாநிதி

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டத்தை திரும்ப பெற வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

பிரதமர் மோடிக்கு டாக்டர் பட்டம்: பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் முடிவு

பிரதமர் நரேந்திர மோடிக்கு டாக்டர் பட்டம் வழங்க உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி நகரில் உள்ள பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தின் நூறாவது ஆண்டு பட்டமளிப்பு விழா வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இசைவு தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பட்டமளிப்பு விழா மேடையில் மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றுகிறார்.

இந்த விழாவின்போது, பிரதமர் மோடிக்கு டாக்டர் பட்டம் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும், இதுதொடர்பாக அவரது ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சித்துறையில் புதுமை திட்டங்களை அறிமுகப்படுத்தி, சீர்திருத்தத்தை ஏற்படுத்தியமைக்காகவும், பொதுச்சேவை மற்றும் ஆட்சித்துறையில் பிரதமர் மோடி ஆற்றிய அளப்பரிய பணிகளுக்காக அவருக்கு கவுரவ சட்ட டாக்டர் பட்டம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பிளஸ் 2 பொதுத்தேர்வு ஹால்டிக்கெட்: பிப்., 20 முதல் பதிவிறக்கம் செய்ய உத்தரவு

பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களின் ஹால்டிக்கெட், தேர்வறையில் அமர்வதற்கான திட்ட வடிவம், வருகை பதிவேடு உள்ளிட்ட அனைத்தும், ஆன்லைன் வழியாக, பதிவிறக்கம் செய்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மார்ச், 4ம் தேதி முதல், பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. இதில், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.

நாகையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசு பெண் ஊழியர் மாரடைப்பால் மரணம்.

நாகை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த தோழர் ஏ.அமுதா. . .

2003 போராட்டத்தின்போது பணிக்கு வந்த தற்காலிக இளநிலை உதவியாளர்.

CPS திட்டத்தில் உள்ள இவர் நேற்று துவங்கியுள்ள அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றார்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறுபான்மையின மாணவர்கள் தமிழ் மொழித்தேர்வுக்கு பதிலாக தாய் மொழியில் எழுதலாம் அரசு தேர்வுத்துறை முடிவு

எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் மொழித்தேர்வுக்கு பதிலாக சிறுபான்மையின மாணவர்கள் அவர்களின் தாய்மொழியில் தேர்வு எழுத அரசு தேர்வுகள் துறை முடிவு செய்துள்ளது.எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுதமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற மார்ச் மாதம் 15-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 13-ந் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை 11 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதால் கல்விப்பணி பாதிக்கிறது தலைமை தேர்தல் ஆணையரிடம் ஆசிரியர்கள் சங்கம்கோரிக்கை

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி சென்னையில் ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார். அவரை தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் பி.கே.இளமாறன் தலைமையில் உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

ரயில் கட்டணம் 10 சதவீதம் உயருகிறது?

ரயில்வே பட்ஜெட்டில் ரயில் பயணக் கட்டணம் 10 சதவீதமும், சரக்கு கட்டணம் 5 சதவீதமும் உயத்தப்படலாம் என ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.கடும் நிதி நெருக்கடியில் ரயில்வே துறை சிக்கியுள்ள நிலையில், வரும் 25ல், தாக்கல் செய்ய உள்ள ரயில்வே பட்ஜெட்டில், பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணங்கள் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

8ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிப்பு

தனித்தேர்வர்களுக்கு 8ம்வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரலில் நடக்கவுள்ளது. இதை எழுத விரும்புவோர் பிப்.18 முதல் 29 வரைwww.tndge.inஎன்ற இணையளத்தில் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.பனிரெண்டரை வயது பூர்த்தியடைந்த தனித்தேர்வர்கள் இத்தேர்வு எழுதலாம்.

விரைவில் ஆன்லைனில் பி.எப்., பணம் பெறும் வசதி

தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும்பி.எப்., பணத்தை ஆன்லைனில் திரும்ப பெறும் வசதியை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எ.ப்.ஓ.,), ஆரக்கிள் ஓ.எஸ்., மூலம் ஒருங்கிணைந்த டேட்டா சென்டர்களை செகந்திராபாத், கர்கூன், துவாரகா ஆகிய இடங்களில் அமைக்கவுள்ளது.

தொடரும் அரசு ஊழியர் 'ஸ்டிரைக்': மாநிலம் முழுவதும் இன்று மறியல்.

தமிழக அரசு ஊழியர் சங்கத்தினரின் காலவரையற்ற, 'ஸ்டிரைக்' இரண்டாவது நாளாக, நேற்றும் நீடித்தது. அரசிடம் இருந்து உறுதியான பதில் கிடைக்காததால், மாநிலம் முழுவதும், இன்று மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; அங்கன்வாடி பணியாளர்களைபணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 68 சங்கங்களை உள்ளடக்கிய, அரசு ஊழியர் சங்கத்தினர், காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கி உள்ளனர்.

சுகாதார ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை:பொது சுகாதாரத் துறையில், காலியாக உள்ள, 110 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள், தற்காலிக அடிப்படையில்நிரப்பப்பட உள்ளன. துப்புரவு ஆய்வாளர், டிப்ளமோ படித்தோர் இதில் சேரலாம்.'விண்ணப்பங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும் 23ம் தேதிக்குள், பொது சுகாதார இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், விவரங்களையும் இணையதளத்தில் அறியலாம்' என, பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

தனியார் பள்ளி கட்டணம் 40 சதவீதம் உயர்வு

தனியார் பள்ளிகளின் அடுத்த, மூன்று ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை, அரசு வெளியிட்டு உள்ளது. இதில், கடந்த ஆண்டை விட, 40 சதவீதம் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்க, நீதிபதி சிங்காரவேலர் தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் நல அலுவலகத்தில் ஆசிரியர்கள் நூதன போராட்டம்

கல்வித் தகுதிக்கு ஏற்ப மாற்றுப்பணி கோரி, குழந்தை தொழிலாளர் திட்ட ஆசிரியர்கள், தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், காலவரையின்றி காத்திருக்கும் நுாதன போராட்டத்தை துவக்கி உள்ளனர்.தமிழகத்தில், குழந்தை தொழிலாளர் திட்ட பள்ளிகளில், ஆசிரியர், பள்ளி எழுத்தர்என, 1,254 பேர் பணியாற்றி வருகின்றனர்.

70 துறைகளைக் கைவிட 30 பொறியியல் கல்லூரிகள்முடிவு

மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதைத் தொடர்ந்து, வருகிற 2016-17 கல்வியாண்டில் 70 துறைகளைக் கைவிட 30 பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது.இதுபோல, மாணவர் சேர்க்கை இடங்களைக் குறைக்க 20-க்கும்மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன.

5 மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி விருது: கால்சியம் ஆய்வுக்கு கிடைத்தது

கடல் சங்குகளில் கிடைக்கும் கால்சியத்தை இயற்கை உரமாக பயன்படுத்த முடியும்' என, ஆய்வு செய்த ராமநாதபுரம் மாணவர்கள் ௫ பேருக்கு 'இளம் விஞ்ஞானி' விருது கிடைத்தது.தேசிய அறிவியல் இயக்கம் சார்பில் சண்டிகாரில் 23வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுநடந்தது. இதில் ராமநாதபுரம் வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஜோஸன்ஹாரிஸ், ரங்கராஜா, சிவமதிபிரியா,அமிர்தா, கவியரசன் 'இளம் விஞ்ஞானி' விருது பெற்றனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!