Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 15 February 2016

Tamil Nadu Open University

B.Ed.,B.Ed(SE)  Term End Examination Revaluation 2016 Results Published

Download in www.tnou.ac.in

தினம் ஒரு புத்தகம் "எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினிங்க?


தொடக்ககல்வி - புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகள் (INSPIRE AWARD) 2016 - நடைமுறை படுத்துவதில் சில மாற்றங்கள் - இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "பனை வெல்லம், பனங்கற்கண்டு பயன்கள்"

பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை விரைவில் தேர்வு செய்ய முடிவு

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு விரைவில் 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் தாக்கல்

தமிழக சட்டசபை நாளை (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது.தற்போதைய அ.தி.மு.க. அரசின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும்.தமிழக சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இயலாது. எனவே அரசு செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும், ஏற்கனவே அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

நாளை பகல் 11 மணிக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார். தேர்தலை எதிர்கொள்ள வேண்டியதிருப்பதால் சில முக்கிய அறிவிப்புகளை இடைக்கால பட்ஜெட்டில் அ.தி.மு.க. அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்று நாளை காலை சபாநாயகர் தலைமையில் நடக்கும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அனேகமாக இந்த வாரம் முழுவதும் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டசபை கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள உள்ளனர். தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து விட்டதால் அனைத்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களும் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளது.சட்டசபை கூட்டத்தில் மதுவிலக்கு, அரசுஊழியர் போராட்டம் உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பதி.மு.க.வும், தே.மு.தி.க.வும் திட்டமிட்டுள்ளன. மது விலக்கை அறிவிக்க இரு கட்சிகளும் இந்த கூட்டத்தொடரில் வலியுறுத்தக்கூடும்.

அரசு ஊழியர்களை சமரசம் செய்யும் வகையில் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே அரசு ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் நீடிக்குமா என்பது நாளை தாக்கலாகும் இடைக்கால பட்ஜெட்டை பொருத்தே அமையும்.எனவே நாளை தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர் அனைத்துத் தரப்பினரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற ஊழியர்களும் போராட முடிவு!

அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு ஆத-ரவு தெரி-விக்கும் வகையில், நீதி-மன்ற ஊழியர்-களும் வரும், 17ம் தேதி முதல், வேலை நிறுத்த போராட்டத்தில் -ஈடுபட முடிவு செய்துள்-ளனர்.தமிழ்-நாடு நீதித்துறை ஊழியர் சங்-கத்தின், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கோவையில்நடந்தது. மாநில தலைவர் கருணாகரன், தலைமை வகித்தார்.

வருவாய் துறை அதிகாரிகளை தேட வேண்டிய அவசியமில்லை:டூ'ஆன் -லைனில்' பட்டா பெயர் மாற்றம் துவக்கம்!

இன்று முதல், இணையத்தில் (ஆன் -லைன்) பட்டா பெயர் மாற்றம் செய்யும் பணி துவங்குவதால், அதிகாரிகளை தேடி அலைய வேண்டிய சூழல், விண்ணப்பதார்களுக்கு ஏற்படாது என, வருவாய் துறை தெரிவித்து உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 12 தாலுகா அலுவலகங்களில்,3,512 கிராமங்கள் உள்ளன. அக்கிராமங்களில் இருக்கும்புஞ்சை, நஞ்சை மற்றும் நத்தம் ஆகிய நிலங்களின், பட்டா பெயர் மாற்றம்,தாலுகா அலுவலகங்களில் செய்யப்பட்டு வந்தன.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பேராசிரியர்களும் அரசு கல்லூரிகளுக்கு இடமாற்றமா? - பாதிப்பு நேருமோ என அரசு கல்லூரி ஆசிரியர்கள் அச்சம்

அரசு பல்கலைக்கழகமாக மாற்றப் பட்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கலை அறிவியல் பேராசிரியர்களை தொடர்ந்து பொறியியல் துறை பேராசிரியர்களும் அரசு பொறியியல் கல்லூரிகளுக்கும், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் இடமாற்றம் செய்யப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது.நீண்ட காலமாக அரசு நிதியுதவி பெறும் பல்கலைக்கழகமாக இயங்கி வந்த சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகம் கடந்த 2013-ம் ஆண்டு அரசு பல்கலைக்கழகமாக மாற்றப் பட்டது.

மருத்துவ நுழைவு தேர்வு 96 சதவீதம் பேர் ஆர்வம்

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டின் கீழ், 1,163 முதுநிலை மருத்துவப் படிப்புகள், 40 முதுநிலை பல் மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான நுழைவுத்தேர்வு, சென்னையில், ஐந்து கல்லுாரிகளில் நடந்தது. இதற்கு, 11 ஆயிரத்து, 438 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ‘தினத்தந்தி’ வழங்கும் ‘கல்வி நிதி’; பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வழங்குகிறார்


‘தினத்தந்தி’ வழங்கும் கல்வி நிதி பெற தகுதி பெற்றுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 30 மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கும் விழா நாளை(செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்படுகிறது. பரிசுகளை பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வழங்குகிறார்.


மாணவர் பரிசு திட்டம்

கல்விப்பணியில் பல புரட்சிகளை செய்து மாணவர்களுக்கு வழி காட்டி வரும் ‘தினத்தந்தி’ மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கி வந்தது.

2014-2015-ம் கல்வி ஆண்டு முதல் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் மேல்படிப்பை தொடர்வதற்கு வசதியாக ‘தினத்தந்தி’ கல்வி நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து மாவட்டத்திற்கு 10 மாணவ-மாணவிகள் வீதம் 340 பேர் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.34 லட்சம் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் தலா ரூ.10 ஆயிரம் தினத்தந்தியின் கல்வி நிதி பெற தகுதி பெற்றுள்ள 30 மாணவ-மாணவிகளின் பெயர் விவரம் வருமாறு:-

சென்னை மாவட்டம்

1.ப.காயத்ரி, ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விருகம்பாக்கம்.

2.டி.பிரியதர்ஷினி, சில்ரன்ஸ் கார்டன் மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர்.

3.ஜி.சுவேதா, ஞானோதய பெண்கள் உயர்நிலைப்பள்ளி, வியாசர்பாடி.

4.பி.ஜனனி, ஜான் காபிரியேல் உயர்நிலைப்பள்ளி, வில்லிவாக்கம்.

5.பி.சரஸ்வதி, நாதன் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, நெற்குன்றம்.

6.எஸ்.ராகுல், திரு.வி.க.மேல்நிலைப்பள்ளி, செனாய் நகர்.

7.இ.பூவரசன், ராமகிருஷ்ணா மிஷின் மேல்நிலைப்பள்ளி, தியாகராயநகர்.

8.இ.ஜெயதர்ஷினி, புனித வின்சென்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, அமைந்தகரை.

9.பி.ராஜதுரை, அன்னை வேளாங்கண்ணி உயர்நிலைப்பள்ளி, வியாசர்பாடி.

10.ஆர்.சந்தியா, ஞானோதய பெண்கள் உயர்நிலைப்பள்ளி, வியாசர்பாடி.

திருவள்ளூர் மாவட்டம்

1.ப.மோகனப்பிரியா, அரசினர் மகளிர் உயர்நிலைப்பள்ளி, கடம்பத்தூர்.

2.ஏ.சந்திரலேகா, சுதந்திரா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, திருத்தணி.

3.ஆர்.கார்த்திகா, டி.ஆர்.பி.சி.சி.சி.மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்.

4.பி.தாமோதரன், அரசினர் மேல்நிலைப்பள்ளி, வெள்ளியூர்.

5.எஸ்.உஸ்னா, இமாகுலேட் இருதய மேரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆவடி.

6.வி.எம்.விவேதா, அரசு உயர்நிலைப்பள்ளி, அத்திமாஞ்சேரிப்பேட்டை.

7.ஜி.சாரத பிரித்தா, டி.ஆர்.பி.சி.சி.சி. மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்.

8.எஸ்.கஜீதா பர்வீன், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருத்தணி.

9.ஜி.பவித்ரா, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, போரூர்.

10.எம்.ராகுல், வி.எம்.எச். மேல்நிலைப்பள்ளி, எஸ்.வி.ஜி.புரம்.

காஞ்சீபுரம் மாவட்டம்

1.ச.ஜெகதீசன், பாரதிதாசன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, காஞ்சீபுரம் மாவட்டம்.

2.ஜி.கே.இளமதி, செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, மறைமலைநகர்.

3.எஸ்.யஷ்வந்த் குமார், செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு.

4.கே.தமீம் நிஷா, புனித மாற்கு உயர்நிலைப்பள்ளி, மேற்கு வேளச்சேரி.

5.எஸ்.ஆனந்த், அரசு உயர்நிலைப்பள்ளி, வடக்குப்பட்டு.

6.டி.சாந்தகுமார், அரசு உயர்நிலைப்பள்ளி, கருநீலம்.

7.எம்.தெய்வானை, அரசு மேல்நிலைப்பள்ளி, மேடவாக்கம்.

8.ஆர்.தேவதர்ஷினி, எஸ்.எஸ்.கே.வி.பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காஞ்சீபுரம்.

9.வி.ரஞ்சனி, அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, காஞ்சீபுரம்.

10.கே.ஜின்சிவர்கிஸ், கிறிஸ்து கிங் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிழக்கு தாம்பரம்.

பள்ளிக்கல்வி இயக்குனர்

‘தினத்தந்தி’ கல்வி நிதி வழங்கும் விழா, சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் நடைபெறுகிறது.

விழாவுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தலைமை தாங்கி, மாணவ- மாணவிகளுக்கு கல்வி நிதியை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா, மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.‘தினத்தந்தி’ மேலாளர் து.ராக்கப்பன் வரவேற்று பேசுகிறார்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை (ASTPF) தமிழக அரசு இதுவரை மாநில கணக்குத் துறைக்கு ( GPF) ஆக மாற்ற முயற்சி எடுக்கவில்லை


பிளஸ் 2 விடைத்தாள் தைக்கும் பணி துவக்கம் தேர்வு ஆயத்தம்! அரை மதிப்பெண் வழங்க பிரத்யேக ஏற்பாடு!

பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள் முகப்பு சீட்டுடன் இணைத்து தைக்கும் பணி, நேற்று துவங்கியது. நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வில், முதல் முறையாக தமிழ், ஆங்கிலம், பாடங்களுக்கு அரை மதிப்பெண் வழங்க, முதன்மை விடைத்தாளில் பிரத்யேக புள்ளி வைத்த கட்டம் அச்சிடப்பட்டுள்ளது.

தொழிற்கல்வி ஆசிரியர்கள்( கணிணி அறிவியல்) பணியிடங்களுக்கு ஓர் ஆண்டு தொடர் நீட்டிப்பு!


TNTET:சட்ட மன்றக் கூட்டத் தொடருக்கு நம்பிக்கையுடன் காத்திருக்கும் டி.இ.டி நிபந்தனை ஆசிரியர்கள்.


அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை (ASTPF) தமிழக அரசு இதுவரை மாநில கணக்குத் துறைக்கு ( GPF) ஆக மாற்ற முயற்சி எடுக்கவில்லை


சான்றிதழ்களை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் -தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம்

பள்ளிகளில் மாயமான கம்ப்யூட்டர் சயின்ஸ் அச்சடித்த புத்தகங்கள் வீணாகும் அவலம்சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், 9ம் வகுப்பு வரை அறிமுகம் செய்யப்பட்ட,'கம்ப்யூட்டர் சயின்ஸ்' என்ற கணினி அறிவியல் பாடம், ஐந்து ஆண்டுகளாக மாயமாகிவிட்டது. அதனால்,அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் புத்தகங்கள், பாடநுால்கழககிடங்கில் மக்கி போகும் நிலையில் உள்ளன.

மாணவர்கள் குழப்பமோ குழப்பம் 10ம் வகுப்பு பொது தேர்வில் தமிழா, பிற மொழியா?

தமிழகத்தில், 2006 முதல், பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கும், தமிழ் கட்டாய பாடமாக்கப்பட்டது. இதன் படி, முதல் ஆண்டில், 1ம் வகுப்பு, அடுத்த ஆண்டில், 2ம் வகுப்பு என, தற்போது, 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாகியுள்ளது.இந்நிலையில், '2006ல் தமிழ் பாடம் கற்க துவங்கிய பிற மொழி மாணவர்கள், இந்த ஆண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத வேண்டும்' என, கல்வி ஆண்டின் துவக்கத்தில்,தேர்வுத்துறையும், பள்ளிக்கல்வித் துறையும் உத்தரவிட்டன.

ரயில் முன்பதிவில் காத்திருப்போர் பட்டியலை அறிந்துகொள்ள உதவும் செயலி அறிமுகம்!

ரயில் நிலையங்கள் வாரியாக காத்திருப்போர் பட்டியலை தெரிந்துகொண்டு பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதற்குவசதியாக செல்லிடப்பேசி செயலியை பொறியியல் மாணவர்கள் இரண்டு பேர் இணைந்து வடிமைத்துள்ளனர்.மேற்கு வங்க மாநிலம், காரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவன (ஐஐடி) மாணவர் ருணால் ஜாஜும், ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் உள்ள தேசிய தொழில் நுட்பக் கல்வி நிறுவன (என்ஐடி) மாணவர் சுபாம் பால்தவாவும் இணைந்து "டிக்கெட் ஜுகாட்' என்ற பெயரில் இந்தச் செயலியை வடிமைத்துள்ளனர்.

"பள்ளி செல்லும் குழந்தைகளில் 10 சதவீதம் பேருக்கு கற்றலில் குறைபாடு'

பள்ளி செல்லும் குழந்தைகளில் 10 சதவீதம் பேரிடம் கற்றலில் குறைபாடு காணப்படுகிறது என சென்னை டிஸ்லெக்சியா(கற்றலில் குறைபாடு) சங்கத் தலைவர் டி.சந்திரசேகர் கூறினார்.சென்னை டிஸ்லெக்சியா சங்கம், ரோட்டரி சங்கம் சென்னை- தெற்கு சார்பில் கற்றலில் குறைபாடுடைய குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி ஆயிரம் விளக்கு ஆசான் மெமோரியல் சீனியர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!