Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 16 February 2016

EIGHTH STANDARD PUBLIC EXAMINATION (PRIVATE CANDIDATE) - APRIL 2016

Applications are invited for admission to the Eighth Standard Public Examination (Private study) to be held in  April 2016  only from  Private  Candidates  who have  completed  12\  years of    age as  on 01.04.2016.

>Applications can be uploaded through online at the nodal centres mentioned in the website www.tndge.in from  18.02.2016  to 29.02.2016.

>REMITTANCE OF EXAMINATION FEES :  The Examination fee of Rs.125/-  and also online application Registration fee Rs.50/- to be  paid at the Nodel Centres by the candidate directly. 

>Enclosures:   1. Transfer Certificate (Xerox copy) / Record Sheet (Xerox copy) /  Birth Certificate (Xerox copy) (Any one) 2. Self Addressed Cover with stamped  Rs.40/- 

>THE LAST DATE FOR APPLYING FOR THE EXAMINATION IS  29.02.2016.

www.tndge.in

தினம் ஒரு புத்தகம் 'விளையாடுவோம் சிந்திப்போம்"


NMMS-2016 Hall Ticket Download

பி.எப். வட்டி விகிதம் 8.8 சதவீதமாக உயர்வு: மத்திய மந்திரி தகவல்

நடப்பு நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (பி.எப்.) வட்டி விகிதம் 8.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "நெல்லிக்காய் – மருத்துவ பயன்கள்"

நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளைக் கொண்டது; குளிர்ச்சித் தன்மையானது; கண்களுக்குக் குளிர்ச்சி தரும்; செரிமானத்தைக் தூண்டும்; சிறுநீர் பெருக்கும்; குடல் வாயுவை அகற்றும்; பேதியைத் தூண்டும்; உடல்சூடு, எலும்புருக்கி நோய், பெரும்பாடு, வாந்தி, வெள்ளை, ஆண்குறிக் கொப்புளங்கள் போன்றவற்றைக் குணமாக்கும்.

தேர்தல் பணி அலுவலர்களுக்கு வழங்கப்படும் ‘படி’ மற்றும் போக்குவரத்து போலீஸ் செலவுகள் அதிகரித்துள்ளதால் தேர்தல் செலவு 35 சதவீதம் உயர்வு

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி விட்டது. தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.வழக்கமாக சட்டமன்ற தேர்தலுக்கான செலவு தொகையை மத்திய அரசு வழங்கும். பாராளுமன்ற தேர்தல் செலவுகளை மத்திய அரசும் மாநில அரசும் பகிர்ந்து கொள்ளும்.கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் ஆணையத்துக்கு ரூ. 148 கோடி செலவானது. இந்த தேர்தலுக்கு 35 சதவீதம் செலவு தொகை அதிகரித்துள்ளது.

2016 - 17 பட்ஜெட் : பள்ளி கல்வித்துறை அறிவிப்புகள்

பிப்.16-தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:2016–2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கென 24,820 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு பாதிக்கும் அபாயம்?மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் இன்று ஸ்டிரைக்

பிளஸ் 2 தேர்வு நெருங்கும் நிலையில், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், இன்று முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், பொதுத் தேர்வு பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ' நிர்வாகிகளுடன், அமைச்சர்கள் குழு பேச்சு நடத்தியது; ஆனால், எந்த உறுதியும் அளிக்கவில்லை.எனவே, ஜாக்டோவில் உள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, நேற்று முதல், காலவரையற்ற போராட்டத்தை துவக்கினர். 'முதல் நாளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை' என, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் பாலசந்தர் தெரிவித்தார்.

மகளிர் குழுவினர் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு

தேனி,:சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பள்ளிகளில் மகளிர் சுயஉதவிக்குழுவினரின் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு சமைத்து வழங்கப்படுகிறது.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்.,10 முதல் அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம்

தேர்வு துறை திட்டம் தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமரா

 தனியார் பள்ளி தேர்வு அறைகளில், ஆசிரியர் உதவியுடன் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்த, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது; அரசு ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

அரசுக்கு எதிராக கொதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்:

மறியல் செய்த ஆயிரக்கணக்கானோர் கைது
சென்னை: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், காலி பணி இடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த 10ம்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமாக அரசு ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் அரசு துறை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

12ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு சுமார் 60 ஆயிரம் பேர் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.இதையடுத்து சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக இருந்ததால் அரசு ஊழியர்கள் அனைத்து மாவட்டங்களிலும் எழுச்சி கூட்டங்களை நடத்தினார்கள்.இந்த நிலையில் அரசு ஊழியர் சங்க போராட்டத்திற்கு ஆசிரியர் கூட்டணி ஆதரவு அளித்தது. இன்று (திங்கட்கிழமை) முதல் ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அந்த சங்கத்தை சேர்ந்த மோசஸ் அறிவித்து இருந்தார். அரசு ஊழியர்களின் போராட்டம் இன்று மேலும் தீவிரமாகிறது.

முடங்கிய பணிகள்

இன்று காலை முதல் வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை, வணிக வரித்துறை, வேலை வாய்ப்பு துறை, தொழிற் பயிற்சி துறை போன்றவற்றில் ஊழியர்கள் வேலைக்கு வராததால் துறைரீதியான பணிகளும், மக்கள் பணிகளும் முடங்கின. அரசுஊழியர்களின் போராட்டம் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாலை மறியல்

தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று காலை முதல் அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று அரசு ஊழியர் சங்கத்தினர் மாநில தலைவர் இரா.தமிழ்செல்வி தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் கைது

சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே அரசு ஊழியர்கள் திரண்டனர். மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். விருந்தினர் மாளிகையை முற்றுகையிட சென்ற அவர்களை போலீசார் தடுத்து மறித்தனர். இதனால் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசார் அவர்களைகைது செய்தனர்.

மாநிலம் முழுவதும் கைது

அரசு ஊழியர்களின் தொடர் சேலை நிறுத்த போராட்டத்தால் பல்வேறு துறைகளின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.முதல்வர் அறிவிப்பாரா?அரசு ஊழியர்கள் போராட்டத்தில் நீதித்துறை, ரேஷன் கடை ஊழியர்களும் இன்று பங்கேற்கிறார்கள். எங்களின் முக்கிய 4 கோரிக்கைகளை முதல்வர் அறிவித்து விட்டால் முக்கிய பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்று அரசு ஊழியர் சங்கத்தினர் மாநில தலைவர் இரா.தமிழ்செல்வி கூறியுள்ளார்.

போராட்டம் தீவிரமாகும்

இனி பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை. பட்ஜெட் கூட்டத் தொடரிலோ அல்லது முதல்வரின் பிறந்தநாள் அறிவிப்பாகவோ நல்ல செய்தி வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி இல்லை என்பது போன்ற நழுவலான அறிவிப்புவரும் பட்சத்தில் எங்களது போராட்டம் மேலும் தீவிரமாகும் என்று தமிழ் செல்வி கூறியுள்ளார். பட்ஜெட்டில் முதல்வர் அறிவிப்பாரா?

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!