Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 18 February 2016

ஆசிரியர்கள் பலத்த எதிர்ப்பு எதிரொலி! ஜாக்டோ அறிவிப்பில் மாற்றம்! பிப்ரவரி 26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்


தினம் ஒரு புத்தகம் "தன்னம்பிக்கையோடு வாழும் நிக்வோய்சிக்"


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "கடுக்காய் பொடியின் ரகசியம்"

உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல, திருமூலர் அறுபதுக்கும் மேற்பட்ட காயகற்ப முறைகளைக் குறிப்பிட்டுள்ளார். உடல் நலம் பெற எவர் முனைந்தாலும், முதலில் உடலில் உள்ள அழுக்குகளை அகற்றிக் கொள்ள வேண்டும். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர் குறிப்பிடுகிறார். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலாய் கருது' என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவச பயணத் திட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையிலான ஒரு திட்டம் இம்மாதம் 24-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு:

மத்திய அரசு பணிகளில் காலியிடங்களை நிரப்ப தேர்வு: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் பல்வேறு பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு பணியாளர் தேர்வாணையம் மே மாதம் எழுத்துத் தேர்வு நடத்த உள்ளது. இதற்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.இது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

7,000 மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத விலக்கு!

தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதும் சிறுபான்மை மொழி மாணவ, மாணவியருக்கு, தமிழ் பாட தேர்வில் இருந்து, அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் விலக்கு அளித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தமிழ் பாடத்தை கட்டாயமாக்கும் சட்டத்தை கடந்த, 2006 ஜூன், 12ம் தேதி தமிழக அரசு கொண்டு வந்தது.

அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய இயலாது: அமைச்சர் பழனியப்பன் சூசகம்

அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய இயலாது என்று சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன்சூசகமாகத் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் நேற்று இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப் பினர் விளவங்கோடு விஜயதரணி பேசும்போது, ‘‘நிறைய படித்து, மிகக் குறைவான சம்பளம் பெறுவதால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ள அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

காலிப்பணியிடங்களை நிரப்ப கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் வலியுறுத்தல்

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவேண்டும் என, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. அதன் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத்தலைவர் பாலசுப்ர மணியன் முன்னிலை வகித்தார்.

26.02.2016 முதல் தொடர் வேலை நிறுத்தம் ஜாக்டோ ஒருமனதாக தீர்மானம்

25.02.2016 தேதிக்குள் தமிழக அரசு ஜாக்டோவின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையெனில், 25.02.2016 அன்று மாலை ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூடி 26.02.2016 முதல் தொடர் வேலை நிறுத்தம் நடத்த

ஒருமனதாக இன்றைய ஜாக்டோ கூட்டத்தில்  முடிவாற்றப்பட்டுள்ளது.

ஜாக்டோ பொதுக்குழு இன்று அவசர ஆலோசனை

ஜாக்டோ பொதுக்குழு (ஆசிரியர் சங்கம்) சென்னையில் இன்று அவசரமாக கூடுகிறது. வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்துவது குறித்து ஜாக்டோ முக்கிய ஆலோசனை நடந்தவுள்ளது. இந்த ஆலோசனையில் அரசு ஊழியர்களுடன் இனைந்து போராடுவது குறித்தும் முடிவு எடுக்கப்படுகிறது. 

நீடிக்கிறது அரசு ஊழியர் 'ஸ்டிரைக்' மறியலில் 50 ஆயிரம் பேர் கைது

தமிழகத்தில் அரசு ஊழியர்களின், 'ஸ்டிரைக்' நேற்று, எட்டாவது நாளாக நீடித்தது. மாநிலம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட, 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

தேர்வு அறையில் நாற்காலிக்கு தடை

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், கடந்த ஆண்டை போல், தேர்வு அறையில் ஆசிரியர்களுக்கு நாற்காலிக்கு தடை விதிக்க, தேர்வுத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.பிளஸ் 2வுக்கு மார்ச், 4; மார்ச், 15ல் 10ம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன. தேர்வு அறையில் ஆசிரியர்களின் கண்காணிப்பு பணிகளில் மாற்றம்கொண்டு வரப்படுகிறது.

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை பல்கலையில், நவம்பரில் நடந்த தேர்வுகளின் முடிவுகள், இன்று வெளியாகின்றன. இதுகுறித்து, சென்னை பல்கலை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி திருமகன் வெளியிட்ட அறிவிப்பில், 'சென்னை பல்கலையின் இளங்கலை, முதுகலை பட்ட படிப்புகளுக்கான நவம்பர் மாத தேர்வு முடிவுகள், பிப்., 18 மாலையில் வெளியாகும்.

தலைமை ஆசிரியர்கள் ஒப்படைக்க வேண்டிய EMIS - படிவம்வேலைநிறுத்தத்திற்கு தனியார் பள்ளி ஆசிரியர் சங்கம் ஆதரவு:

இன்று (18.02.16) முதல் தனியார் பள்ளி ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்வர் என்ற அறிவிப்பினை தனியார் பள்ளி ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளர் திரு.கனகராஜ் அவர்கள் வெளியிட்டுள்ளார்..

ஆண் குழந்தைகளுக்கான பொன்மகன் சேமிப்பு திட்டம்: முதிர்வு தேதிக்கு முன்பாக பணம் பெறும் வசதி அறிமுகம்

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களில் சேமிப்பு பழக்கத்தை உருவாக்கும் வகையில் ‘பொன்மகன் பொது வைப்பு நிதி’ என்ற திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 4-ந்தேதி சென்னையில் தொடங்கப்பட்டது. தற்போது முதிர்வு தேதிக்கு முன்பாக பணம் எடுக்க விரும்பினால், குறைந்தபட்சம், பணம் செலுத்திய தொடக்க தேதியில் இருந்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருந்தால் பணத்தை பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!