Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 19 February 2016

தினம் ஒரு புத்தகம் "மந்திர விதைகள் '


தேர்தல் பணிகளில் ஊனமுற்றோர், கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரிய மனு தள்ளுடி

தேர்தல் பணிகளில் ஊனமுற்றோர், கர்ப்பிணி, சர்க்கரை, ஆஸ்துமா, இதய நோயால் அவதிப்படும் ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நாளை மறுநாள் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்: தமிழகத்தில் 43 ஆயிரம் மையங்கள்

தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக 43 ஆயிரத்து 51 மையங்கள் தயாராகி வருகின்றன.

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாளை மனித சங்கிலி "ஜாக்டோ' முடிவு.

தேனியில் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ( ஜாக்டோ) சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தமிழ்நாடு
மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொருளாளர் சரவணக்குமரன் தலைமை வகித்தார்.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தேர்வில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த பொதுத் தேர்வுக்கான செய்முறைத்
தேர்வுகள், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் மார்ச் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதுகுறித்த அறிவிப்பு கிடைக்கப்பெறாத தனித் தேர்வர்கள், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது மாவட்ட கல்வி அலுவலரை நேரில் தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "எப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உங்களுக்கு உதவும் 21 குறிப்புகள்"

1. தினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளை சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இருதய நோய் அபாயம் வெகுவாக குறையும். ஆயுளில் மூன்றாண்டுகளை அதிகரிகëகும் என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள். இருதயத்துக்கு ஆரோக்கியம் அளிக்கும் நல்ல கொழுப்பு, ஒட்டுமொத்த நலத்தைக் காக்கும் `செலினியம்’ ஆகியவை கொட்டை வகை உணவுகளின் சொத்து.

அரசு ஊழியர்களுக்கான குடும்ப நல நிதி ரூ.3 லட்சமாக உயர்வு: முதல்வர் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடும்ப நலநிதி ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பேரவையில் அறிவித்தார்.

CPS:அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.14 ஆயிரம் கோடி பென்ஷன் பணம் அரசு கஜானாவில் பாதுகாப்பாக உள்ளது: நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

 புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.14 ஆயிரம் கோடி, அரசு கஜானாவில் வட்டியுடன் பாதுகாப்பாக உள்ளது என்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் நேற்று இடைக்கால பட்ஜெட் மீது நடந்த விவாதம் வருமாறு:

அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகள் உட்பட 11 அறிவிப்புகள்: சட்டப்பேரவையில் ஜெயலலிதா பட்டியல்

அரசு ஊழியர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், அவர்களுக்கான குடும்ப நல நிதி உயர்வு, கவுரவ விரைவுரையாளர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் சட்டப்பேரவையில் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா, "அரசின் அடித்தளமாக, அச்சாணியாக, முதுகெலும்பாக விளங்குபவர்கள் அரசு அலுவலர்கள்.

ஊதிய விகிதங்கள் மாற்றம் மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆராய வல்லுநர் குழு:

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆராய வல்லுநர் குழு:
1.4.2003 முதல் அரசுப் பணியில் சேர்ந்துள்ள அரசு அலுவலர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதியப்பங்களிப்புத் தொகையும், அரசின் பங்களிப்புத் தொகையும், இவற்றிற்கான வட்டித் தொகையும் அரசுக் கணக்கில் தனியே வைக்கப்பட்டுள்ளன.பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டிய தொகை உடனடியாக வழங்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் கலெக்டர் அலுவலகங்களில் 75 ஆயிரம் அரசு ஊழியர்கள் விடிய, விடிய போராட்டம்

அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை கடந்த 10–ந்தேதி தொடங்கினார்கள்.புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வருகிறது.மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய அரசு ஊழியர்கள் கடந்த 12–ந்தேதி முதல் மறியல் போராட்டத்தில் குதித்து கைதானார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான படிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த 10–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு ஊழியர்களுக்கு...

 குடும்ப நல காப்பீட்டுத்தொகை உதவி 150000/- லிருந்து 200000/- உயர்வு.
அரசு பணிகள் பொது அரசாணைமூலம் மமுறைப்படுத்தப்படும்.
சத்துணவு ஓய்வூதியம் 1500/- உயர்வு

ஆதார் எண் சேகரிக்ககாலக்கெடு நீட்டிப்பு

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில், பொதுமக்களின் ஆதார் எண்ணை சேர்ப்பதற்காக, தமிழகத்தில், ஜன., 18 முதல் பிப்., 5 வரை, வீடு வீடாகச் சென்று, ஆதார் எண் சேகரிக்கும் பணி நடைபெறும்' என, அறிவிக்கப்பட்டிருந்தது.பணி நிறைவடையாததால், பிப்., 25 வரை இப்பணியை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது

TNPSC :குரூப் - 2 பணிக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார், நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளில், குரூப் - 2 பதவிக்கான, 2012 நவம்பரில் நடந்த தேர்வில் தேர்வானவர்களுக்கு, ஆறு கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட்டு, பணிகள் ஒதுக்கப்பட்டுஉள்ளன.

'நோ ஒர்க்; நோ பே' என்ற அடிப்படையில், 'வேலைக்குவராத நாட்களுக்கு, ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாது' என, அரசு அதிரடி உத்தரவு

'புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்; அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 68 சங்கங்களை உள்ளடக்கிய, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், பிப்., 10 முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகிறது.

தனித்தேர்வர்களுக்கு 'ஹால் டிக்கெட்'

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, 'தத்கல்' மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு, இன்று முதல், 'ஹால் டிக்கெட்' தரப்படுகிறது. அறிவியல் செய்முறை தேர்வுகள், பிப்., 22ம் தேதி முதல், மார்ச் 2ம் தேதி வரை நடைபெறும்'என, தேர்வுத் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்த விரிவான விவரங்களை, http://www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் அறியலாம்.

விடைத்தாளில் விளையாடினால் 2 பருவத்திற்கு தேர்வு எழுத முடியாது: மாணவர்களுக்கு எச்சரிக்கை

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரசு தேர்வு விடைத்தாளில் விளையாடினால் 2 பருவங்களுக்கு தேர்வு எழுத முடியாது என, மாணவர்களை தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.மார்ச் 4 ல் பிளஸ் 2 அரசு தேர்வு, மார்ச் 15 ல் பத்தாம் வகுப்பு தேர்வு துவங்குகின்றன. கடந்த காலங்களில் சில மாணவர்கள் தாங்கள் எழுதிய விடைகள் அனைத்தையும் விளையாட்டு தனமாக பேனாவால் கோடிட்டு அடித்து விடுகின்றனர்.

முதல்வர் அழைத்து பேசும் வரை போராட்டம் அரசு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

''அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளை அழைத்து முதல்வர் ஜெயலலிதா பேசும் வரை போராட்டம் தொடரும்,'' என, சங்க மாநில செயலாளர் செல்வம் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது: புதிய ஓய்வூதியத் திட்டம்ரத்து செய்யப்படும் என முதல்வர் ஜெ., கடந்த சட்டசபை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!