Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 20 February 2016

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "வாழைத் தண்டு"

வாழைத் தண்டில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, ஆகிய தாதுப் பொருட்கள், வைட்டமின் பி,சி ஆகியவை உள்ளன. சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் கல் அடைப்பைக் கரைக்கும்.

தினம் ஒரு புத்தகம் "மந்திரிமா?தந்திரமா?


மதிய உணவு கண்காணிப்பு குழுவை மாற்றியது அரசு

 பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டத்தை, கண்காணிக்கும் குழுவில், முதன்முறையாக, சமூக அமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.

பள்ளிக்கூடங்களில் உளவியல் நிபுணர்களை நியமிக்க நடவடிக்கை: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில், பாரிமுனையை சேர்ந்த வக்கீல் எ.ரங்கநாயகி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

பாலியல் கொடுமைகளை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பள்ளிக்கூடங்களில், பாலியல் கொடுமை குறித்து விளக்கம் அளிக்க உளவியல் நிபுணர்களை நிரந்தரமாக நியமிக்கவேண்டும்.

சட்டசபையில் 110வது விதியின் கீழ் மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு சலுகை அளித்து ஜெயலலிதா அறிவிப்பு

முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று 110 வது விதியின் கீழ்  அறிக்கை ஒன்றை வாசித்தார் அதில் கூறி இருப்பதாவது:-

ஆசிரியர்களுக்கு சம்பளம் 'கட்'ஒழுங்கு நடவடிக்கையும் பாய்கிறது : SR - ல் பதிவு செய்ய உத்தரவு

பிப்., 10 முதல், 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டு, வேலைக்கு வராத ஆசிரியர்களுக்கு, ஒரு வார சம்பளத்தை பிடிக்க, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர் சங்கங்களுடன் சேர்ந்து, சில ஆசிரியர் சங்கங்களும், சில கல்வி அலுவலக ஊழியர் சங்கங்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. இதனால், வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

இதையடுத்து, வேலைக்கு வராமல், ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஊழியர்கள், ஆசிரியர்களிடம், எந்த விளக்கமும் கேட்காமல் சம்பளத்தை பிடிக்குமாறு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆசிரியர்களின் பணி புத்தகத்திலும் அவர்கள், ஸ்டிரைக்கில் ஈடுபட்ட தகவலை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்டிரைக்கில் பங்கேற்றவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், பதவி உயர்வு மற்றும் பணப்பலன் சலுகைகளை ரத்து செய்வது குறித்தும், அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயருகிறது

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அக விலைப்படி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இது தொடர்பாக மத்திய அரசு ஊழியர், தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கே.கே.என். குட்டி கூறியதாவது:–மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்த 6–வது ஊதியக்குழு பரிந்துரையில் அகவிலைப்படி உயர்வை நிர்ணயிக்க தனி கணக்கீட்டு முறை உருவாக்கப்பட்டது.கடந்த ஜனவரி 2015 முதல் டிசம்பர் வரையில் சராசரி நுகர்வோர் குறியீட்டு எண். 6.73 சதவீதமாக உள்ளது.அதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படலாம். அடிப்படை ஊதியத்துடன் இணைந்து அகவிலைப்படி விகிதம் தற்போதுள்ள 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக உயர்த்தப்படலாம்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த அகவிலைப்படி உயர்வுக்கு அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1–ந் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும். இதன் மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் முத்தமிழ் விழாஅரசு ஊழியர்களின் போராட்டம் தொடருமா? வாபஸ் ஆகுமா? செயற்குழு கூட்டத்தில் இன்று முக்கிய முடிவு

 சட்டசபையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த நிர்வாக தீர்ப்பாயம் உள்ளிட்ட சில கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

எல்.கே.ஜி.,க்கு ரூ.42 ஆயிரம் 'பீஸ்' சிங்காரவேலர் கமிட்டி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி பள்ளிகளில், கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய, அரசு சார்பில், நீதிபதி சிங்காரவேலர் தலைமையில், கல்வி கட்டண நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் சார்பில், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் நிர்ணயித்து, அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படுகிறது.

பி.இ. சான்றிதழின் உண்மைத் தன்மை: இணையதளத்தில் அறியலாம்

பொறியியல் பட்டச் சான்றிதழின் உண்மைத் தன்மையை www.annauniv.edu என்ற இணையதளத்தில் அறிய அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

வி.ஏ.ஓ., தேர்வு'ஹால் டிக்கெட்'

டி.என்.பி.எஸ்.சி.,யின் வி.ஏ.ஓ., தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.பிப்., 28ம் தேதி நடக்கவுள்ள, வி.ஏ.ஓ., தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, www.tnpsc.gov.in மற்றும், www.tnpscexams.net என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.

சந்தேகம் இருப்பின், 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்'.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6%அகவிலைப்படி உயர்வு?

கடந்த 2015 டிசம்பர் வரையில் நுகர்வோர் குறியீட்டு எண் 6.73%.அதன் அடிப்படையில் 6% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படலாம்.இதனால் 119சதவீதத்திலிருந்து 125%ஆக உயர்த்தப்படக்கூடும்.ஜன 1முதல் கணக்கிட்டு வழங்கப்படும்

பள்ளிக்கூடங்களில் உளவியல் நிபுணர்களை நியமிக்க நடவடிக்கை: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில், பாரிமுனையை சேர்ந்த வக்கீல் எ.ரங்கநாயகி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

பொதுத்தேர்வு பணிகள்: ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை

ஆசிரியர்களின் போராட்டத்தால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகள் முடங்கி உள்ளன. இதனால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!