Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 21 February 2016

ஜேக்டோ உயர் மட்ட குழு முடிவு: புதிய அரசு அமையும் வரை அனைத்து போராட்டங்களும் ஒத்திவைப்பு. புதிய அரசு அமைந்த பின் போராட்டம் தொடரும்.

சர்வதேச தரத்தில் ஒருலட்சம் மாணவர்கள் படிக்கும் மாபெரும் பல்கலைக்கழகம் அமைக்க பாபா ராம்தேவ் திட்டம்

பதாஞ்சலி ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரும் யோகாசன குருவுமான பாபா ராம்தேவ், உத்தரப்பிரதேசம் மாநிலம், மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார்.

அவ்விழாவில் பேசிய பாபா ராம்தேவ், நாட்டின் தலைநகரான டெல்லியில் ஒருலட்சம் மாணவர்கள் படித்து பட்டதாரிகளாகும் வகையில் சர்வதேச தரத்திலான மாபெரும் பல்கலைக்கழகம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இன்னும் ஐந்தாண்டுகளுக்குள் செயல்பட தொடங்கும் இந்த பல்கலைக்கழகத்தின் கல்வித்தகுதியைப் பார்த்து, உலகின் பிரபல பல்கலைக்கழகங்களான கேம்பிரிட்ஜ், ஹார்வார்ட் போன்ற பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் டெல்லி வர ஆசைப்படும் வகையில் இந்த புதிய பல்கலைக்கழகம் இருக்கும் என பாபா ராம்தேவ் குறிப்பிட்டுள்ளார்.

JACTO வை உடைத்த அரசியல் கட்சிகள் ..... நொறுங்கிப்போன ஆசிரியர்கள் போராட்டம் - dinamalar

ரூ.251 விலையில் தருவதாக அறிவித்த ‘ஸ்மார்ட்போன்’ நிறுவனத்தில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை:

ரூ.251 விலையில் ‘ஸ்மார்ட்போன்’ தருவதாக அறிவித்த செல்போன் நிறுவனத்தில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.ரூ.251–க்கு ஸ்மார்ட்போன்உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகரைச் சேர்ந்த ‘ரிங்கிங் பெல்ஸ்’ என்ற செல்போன் நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தயாரிப்பான ‘பிரீடம் 251’ என்னும் ஸ்மார்ட்போனைமிகக் குறைந்த விலைக்கு (ரூ.251) விற்பனை செய்வதாக அறிவித்தது. 

இதையடுத்து கடந்த 18 மற்றும் 19–ந்தேதிகளில் மட்டும் அந்த நிறுவனத்தின் இணையதளம் மூலம் 6 கோடிக்கும் அதிகமானோர் இந்த ரக செல்போனை வாங்குவதற்கு முன்பதிவு செய்தனர்.அதே நேரம், இவ்வளவு குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை விற்பனை செய்வது சாத்தியமல்ல என்று இதர செல்போன் நிறுவனங்கள் போர்க்கொடி உயர்த்தின. இதுதொடர்பாக மத்திய அரசுவிசாரணை நடத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.திடீர் ஆய்வுஇதைத்தொடர்ந்து மத்திய உற்பத்திவரி துறை மற்றும் வருமானவரி இலாகா அதிகாரிகள் சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த நிறுவனத்தின் நிதி கட்டமைப்பு மற்றும் கம்பெனிகளின் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை அவர்கள் ஆய்வு செய்தனர்.

 சில ஆவணங்களை மேற்சோதனைக்காக அவர்கள் எடுத்தும் சென்றனர்.இதுபற்றி சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தலைவர் அசோக் சத்தாவிடம் நிருபர்கள் கேட்டபோது அவரும், வருமானவரி மற்றும்உற்பத்திவரி துறை அதிகாரிகள் தங்களது நிறுவனத்தில் ஆய்வு நடத்தியதை ஒப்புக்கொண்டார்.

விளக்கம் அளிக்க உத்தரவு

அவர் கூறுகையில், ‘‘இந்தியாவில் தயாரிப்போம், திறன் இந்தியா, புதிய தொழில் தொடங்கிடுவோம் ஆகிய திட்டங்களின் அடிப்படையில் இதைச் செயல்படுத்தி இந்த மைல்கல்லை அடைய திட்டமிட்டு இருக்கிறோம். ஆய்வு நடத்திய அதிகாரிகள் எங்களதுஎதிர்காலத்துக்காக சில வழிகாட்டுதல்களையும் வழங்கினர். இதற்காக தங்களது ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளிப்பதாக தெரிவித்தனர்’’ என்றார்.பிரீடம் 251 ஸ்மார்ட்போனை இந்திய தரநிர்ணயச் சான்றுஇல்லாமல் சந்தைப்படுத்தி இருப்பது தொடர்பாக மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் ரிங்கிங்பெல்ஸ் நிறுவனத்திடம் விளக்கம் அளிக்கும்படி கேட்டும் உள்ளது. இந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மை குறித்து உத்தரபிரதேச மாநில அரசு ஆய்வு நடத்தும்படியும் உத்தரவிட்டு இருக்கிறது.

7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு; நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.

Empowered Committee of Secretaries processing the recommendations of 7th Pay Commission (7thCPC) in an overall perspective, are likely to double the percentage of pay hike recommended by the pay commission.As per reports, central government employees are likely toexpect basic pay hike of around 30%, which will be effective January 1, 2016. 

The 7th central pay commission in its report submitted in November 2015 had recommended a pay hike of 23.55% for central government employees, with the highest basic salary at Rs 250,000 and the lowest at Rs 18,000.The employees have been protesting that the hike in totality is only 14.27%, the lowest in 70 years., and are mulling over to go on an indefinite strike from 11 April.

Arguably, even the 6th CPC had recommended a 20 percent hike on the basic pay, which was revised to 40 percent at the time of implementation in 2008.The 7th CPC , with its recommendations, is expected to cause an annual burden of Rs 1.02 lakh crore on the exchequer, which would last for two to three years.The notification to announce the pay commission award is expected in the budget.

மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி: வீடு வீடாக சென்று தகவல் சேகரிக்க வலியுறுத்தல்

மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணியில் வீடு வீடாக சென்று தகவல் சேகரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் தேசிய மக்கள்தொகை  பதிவேட்டில் விவரங்களை பதிவுசெய்ய, வீடு வீடாக சென்று தகவல்களை சேகரிக்கும்  பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மக்கள்தொகை  பதிவேட்டில் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

இப்பணிகளை செய்வோர், பெரும்பாலும் ஓரிடத்தில் இருந்துகொண்டு தகவல் சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் குடும்பங்களின் உண்மை நிலையை அறிந்து தகவல் சேகரிக்க முடியாத சூழ்நிலை உருவாகும்.எனவே,மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், வீடுகளுக்கு நேரடியாக சென்று தகவல் சேகரிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசு ஊழியர் போராட்டம் ஒத்திவைப்பு

பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், பிப்., 10 முதல், காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தி வந்தனர். மறியல், கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில், 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா, நேற்று முன்தினம் பல சலுகைகளை அறிவித்தார். 

'இது, வாக்குறுதிகளாகவே உள்ளன; அரசாணைகளாக தரவில்லை' எனக்கூறி, அரசு ஊழியர்கள், 'ஸ்டிரைக்' கை தொடர்ந்தனர்.நேற்று, போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக, அரசு ஊழியர் - ஆசிரியர் போராட்டக்குழு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தமிழ்செல்வி கூறியதாவது: நாங்கள், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினோம். முதல்வர் அறிவிப்பில், 14 கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. சட்டசபைத் தேர்தல் பணி, போலியோ முகாம், அரசு பொதுத்தேர்வுகளையும் கருத்தில் கொண்டு, காலவரையற்ற, 'ஸ்டிரைக்' ஒத்தி வைக்கப்படுகிறது. 'அறிவிப்புக்களுக்கான அரசாணைகளை தர வேண்டும்; புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடுவது தொடர்பாக, வல்லுனர் குழுவை அறிவிக்க வேண்டும்' என, அரசை வலியுறுத்தி உள்ளோம். அறிவிப்புகளுக்கு அரசு செயல் வடிவம் தரும் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லாவிட்டால், மீண்டும் போராட்டத்தை துவங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் போராட்டம் 'வாபஸ்'கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில், நான்கு நாட்களாக உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தி வந்தது. 

இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில், 110வது விதியின் கீழ் அறிவிப்புக்களை வெளியிட்டார். 'இது, திருப்தி அளிக்கிறது; போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி' என, தெரிவித்துள்ள மாற்றுத்திறனாளி அமைப்புக்கள், போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளன.

மத்திய அரசின் 'குரூப் பி', 'குரூப் சி' பணி: மார்ச் 10 கடைசி தேதி

நாடு முழுவதும் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 'குரூப் பி' மற்றும்'குரூப் சி' பணியாளர்களை 'ஸ்டாப் செலக் ஷன் கமிஷன்' (எஸ்.எஸ்.சி.,) தேர்ந்தெடுக்க உள்ளது. பட்டதாரி நிலை ஒருங்கிணைந்த தேர்வுக்கு (சி.ஜி.எல்.,) இணையதளம் மூலம் மார்ச் 1௦ க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.எஸ்.எஸ்.சி., சார்பில் விஜிலென்ஸ், ரயில்வே, வெளியுறவு, நிதி உள்ளிட்ட துறைகளில் துணை அலுவலர், இன்ஸ்பெக்டர், ஆடிட்டர் பதவிகளுக்காக பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

பதவிகளை பொறுத்து ௧௮ முதல் ௩௨ வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்ப கட்டணமாக ரூ.௧௦௦ செலுத்த வேண்டும். கட்டணம், வயது வரம்பில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சலுகை உண்டு. விண்ணப்பிக்க வேண்டிய இணைய தள முகவரி: www.ssconline2.gov.in அல்லது http://sscregistration.nic.in.

பொதுத்தேர்வு பணி சுணக்கம் ஆசிரியர்கள் மீதுநடவடிக்கை எடுக்க திட்டம்

அரசுக்கு எதிரான போராட்டத்தால், பொதுத்தேர்வு பணிக்கு ஒத்துழைக்காத ஆசிரியர்கள் மீது, பொதுத்தேர்வுக்கு பின் நடவடிக்கை எடுக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் துவங்கி, ஏப்ரலில் முடிகின்றன. தேர்வு மையங்கள் அமைத்தல்; மாணவர் இறுதி பட்டியல் தயாரித்தல்; 'ஹால் டிக்கெட்' வழங்கும் பணிகள் தீவிரமாகியுள்ளன.

பொதுத்தேர்வை அமைதியாகவும், வினாத்தாள், 'லீக்' போன்ற பிரச்னைகள் இன்றி நடத்தி முடிப்பதில், தேர்வுத்துறை தீவிரமாக உள்ளது.ஆனால், ஆசிரியர்களின் தீவிர போராட்டத்தால், தேர்வுக்கான முன் தயாரிப்பு பணி; ஆசிரியர்களுடன் தேர்வு விதிமுறைஆலோசனை கூட்டம் நடத்துவதில், தேர்வுத்துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்வுப்பணிகளை ஏற்க மறுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, தேர்வுத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.பொதுத்தேர்வு முடிந்த பின், இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிய வந்துள்ளது.பள்ளிக்கல்வித்துறை முரண்டுதேர்வுத்துறையில் போதிய ஆட்கள் இல்லாததால், பள்ளிக்கல்வி துறையில் உள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் கூடுதல் வேலைப்பளு சுமத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஆனால், பள்ளிக்கல்வி பணிகளை காரணம் காட்டி, தேர்வுப்பணிகளை கிடப்பில் போடுவதாக, ஊழியர்கள் மீது தேர்வுத்துறை அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். பள்ளிக்கல்வி பணியாளர்களும் தேர்வுத்துறை பணியால், மற்ற பணிகள் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். 

இதுதொடர்பாக, கல்வி அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர் சிலர் கூறியதாவது: தேர்வுத்துறை தனி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த துறைக்கு தனியாக ஊழியர் உள்ளனர். ஆனால், அங்கு போதிய ஆட்கள் இல்லாததால், அவர்களின் பணிகளை பள்ளிக்கல்வி துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது சுமத்துவதால், வழக்கமான பள்ளி பணிகள் பாதிக்கப்படுகின்றன. தேர்வுத்துறை பணிகளை பள்ளி கல்வி துறையினர் கவனிப்பதால், சில நேரங்களில் முறைகேடுக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

இது தொடர்பாக, அதிகாரப்பூர்வ தகவலை பெற, தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தை நேரிலும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்ட போது, அவரிடம் விளக்கம் பெற முடியவில்லை

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது செயல்முறைகளில் மாற்றம்

மத்திய அரசு நிதியுதவி வழங்கும், 'புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது'க்கான செயல்முறைகளில், மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது.பள்ளி மாணவ, மாணவியரிடையே அறிவியல் ஆர்வம் அதிகரிக்கவேண்டும் என்பதற்காக, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில், ஆண்டுதோறும் புத்தாக்க அறிவியல் ஆய்வு- - இன்ஸ்பயர்) விருது வழங்கப்படுகிறது.

இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் மாணவர் குழுவுக்கு, தலா, 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில், சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்துக்கு உதவும் வகையில், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டன.தமிழகத்தில் இவ்விருதுக்கு, 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் விண்ணப்பித்து, தலா ௫,௦௦௦ ரூபாய் உதவித்தொகையை பெற்றுள்ளனர். இந்த உதவித்தொகை மூலமாக, தங்களது கண்டுபிடிப்புகளைகாட்சிப்படுத்த வேண்டும்.தற்போது, அவற்றில் சிலமாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.மாணவர்களின் அறிவியல் செயல்முறைகள், விருதுக்கான விழாவில் காட்சி படுத்துவதோடு நின்று விடாமல், சமூகத்துக்கு பயன்படும் வகையிலும், அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல உதவும் வகையிலும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதில், மத்திய அரசு அறிவித்துள்ள புதிய திட்டங்களான 'மேக் இன் இந்தியா' 'ஸ்வச் பாரத்' 'ஸ்வஸ்த் பாரத்' 'டிஜிட்டல் இந்தியா' ஆகிய திட்டங்களுக்கு உதவும் வகையில், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

உதாரணமாக 'மேக் இன் இந்தியா' திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில், புதிய கருவிகள் மற்றும் கண்டுபிடிப்பு, புதிய தொழில்நுட்பம், புது வகை பொருட்கள் ஆகியவற்றில், மாணவர்கள் செயல்முறை விளக்கங்களையும், வடிவங்களையும் தயார் செய்ய வேண்டும்.இப்புதிய மாற்றங்களை பின்பற்றி, அறிவியல் செயல்முறைகளை உருவாக்கும் படி, பள்ளிக்கல்வித்துறை செயலர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.

ஓய்வூதியம் பெறுவோருக்கு உயிர் சான்று அளிக்க சென்னை மாநகராட்சி உத்தரவு

ஓய்வூதியம் பெறுவோருக்கு உயிர் சான்று அளிக்க, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்,2016-17ம் ஆண்டிற்கான உயிர் சான்று, வரும், மார்ச் 1ம் தேதி முதல் ஜூன், 30ம் தேதி வரை, அலுவலக வேலை நாட்களில், காலை, 10:30 மணிமுதல், மாலை, 4:00 மணி வரை, மாநகராட்சி ஓய்வூதிய பிரிவில் வழங்க வேண்டும்.

கடந்த, 1979ம் ஆண்டு டிச., 31ம் தேதி வரை, ஓய்வு பெற்றோர், மார்ச்சிலும், 1989ம் ஆண்டு டிச., 31ம் தேதி வரை ஓய்வு பெற்றோர், ஏப்ரலிலும், 1999ம் ஆண்டு டிச., 31ம் தேதி வரை ஓய்வு பெற்றோர், மேமாதமும், 2000ம் ஆண்டு ஜன., 1 முதல், தற்போது வரை ஓய்வு பெற்றோர், ஜூனிலும், தங்களது உயிர் சான்று அளிக்க வேண்டும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

வியாழனை போலவே உள்ள 5 கோள்கள் கண்டுபிடிப்பு!

சூரிய மண்டலத்திற்கு அப்பால் ஐந்து புதிய கோள்களை, வானியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். இங்கிலாந்தின், தெற்கு வான் பகுதியை, 'வாஸ்ப் சவுத்' என்ற எட்டு கேமராக்களைக் கொண்ட சாதனம் மூலம், 'கீல்' பல்கலைக் கழக ஆய்வாளர்கள் ஆராய்ந்து வந்தனர்.

அதன் மூலம்தான் சமீபத்தில் இந்த ஐந்து கோள்களையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.ஐந்து புதிய கோள்களுக்கும் வாஸ்ப்-- 119 பி, வாஸ்ப் -- 124 பி, வாஸ்ப் -- 126 பி, வாஸ்ப் - -129 பி மற்றும் வாஸ்ப்-- 133 பி என்றுஅவர்கள் பெயரிட்டுள்ளனர். இவை ஐந்தும், சூரியனைப் போலவே உள்ள நட்சத்திரங்களை மையமாகக் கொண்டு வலம் வருகின்றன. ஐந்து கோள்களுமே, மிகவும் வெப்பமானவை என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அந்த கோள்கள், தாம் சார்ந்துள்ள நட்சத்திரங்களை வலம் வர, 2.17 முதல், 5.75 நாட்கள் எடுத்துக் கொள்வதாக, கீல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஐந்து கோள்களும் வலம் வரும் நட்சத்திரங்கள், சூரியனுக்கு சமமான நிறை கொண்டவையாக இருக்கலாம். அவற்றின் வெப்பம் மற்றும் அடர்த்தியை வைத்துப் பார்க்கையில், அவை சூரியனை விட அதிக வயதுள்ளதாகவும் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். வியாழனைவிட நிறை குறைவாக உள்ள வாஸ்ப்--124 பி என்ற கோள், தான் சார்ந்துள்ள நட்சத்திரத்தை வலம் வர, 3.4 நாட்கள் ஆகிறது.

விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ஐந்து கோள்களில், வாஸ்ப் - 126 பி கோள்தான் மிகவும் நிறை குறைவானது. இந்த கோளின் மேற்பரப்பில் ஈர்ப்பு விசையும் குறைவு. மேலும், அது வலம் வரும் நட்சத்திரமும் பிரகாசமாகஒளிவிடுகிறது. ''இதனால் பூமியிலிருந்தபடியே மேலும் ஆராய்ச்சிகள் செய்து, அதன் வளிமண்டலம், அதிலுள்ள வளங்கள் போன்றவற்றை ஆராய்வதற்கு வாஸ்ப் - -126 பி கோள் தோதானதாக இருக்கும்,'' என்று கீல் பல்கலைக்கழக ஆய்வுக்குழுவைச் சேர்ந்த, கோயெல் ஹெல்லியர் தெரிவித்தார்.

"தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவ குறுந்தகடு தயார்" !

1லிருந்து 5ஆம் வகுப்பு வரை கணிதம் தவிர அனைத்துப் பாடங்களுக்கும் ஆடியோ மற்றும் வீடியோ கொடுக்கப் பட்டுள்ளன. பாடல்கள் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு வீடியோவுடன் பாட வரிகளும் கொடுக்கப் பட்டுள்ளன. வார்த்தைகளால் விளக்கமுடியாத பல பாடக்கருத்துகள் உரிய விளக்கங்களுடன் வீடியோ காட்சிகளாக உள்ளன.

குறுந்தகட்டின் நன்மைகள்:- பாடக்கருத்துகள் தெளிவாகப் புரிகிறது. வாசிப்புத்திறன் மேம்படுகிறது. சிறந்த கற்றல் கற்பித்தல் துணைக்கருவியாக உள்ளது. ஆசிரியர்களின் பணிச்சுமையை பெருமளவு குறைக்கிறது. மகிழ்ச்சியான கற்றலுக்கு வழிவகுக்கிறது. DVD பெற விரும்புவோர் 9791440155 என்ற எண்ணில் ஆசிரியர் குருமூர்த்தி அவர்களை தொடர்புகொள்ளவும். DVD விலை ரூ.300/-. மணிஆர்டர் அல்லது SBI வங்கியில் பணப்பரிமாற்றம் செய்து உங்கள் முகவரியை மேற்கண்ட எண்ணுக்கு அனுப்பினால் Professional courier ல் DVD அனுப்பி வைக்கப்படும்.
DVD யை பெற்று மாணவர்களின் சிறப்பான கற்றலுக்கு வழிவகுப்பீர் ! நன்றி.
www.rkkalvisiragukal.blogspot.com

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

நாடு முழுவதும், இரண்டாம் கட்ட போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம், இன்று நடக்கிறது. தமிழகத்தில், 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.குழந்தைகளுக்கு, இளம்பிள்ளை வாத நோய் வராமல் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் போலியோ தடுப்புக்கான முதற்கட்ட முகாம், ஜன., 17ம் தேதி நடந்தது.

தமிழகத்தில், 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட திட்டமிடப்பட்டு, 70.50 லட்சம் குழந்தைகளுக்கு போடப்பட்டது.இரண்டாம் கட்ட போலியோ தடுப்பு முகாம், நாளை நடக்கிறது. தமிழகம் முழுவதும், 43 ஆயிரத்து, 51 முகாம்கள், 1,652 நகரும் மையங்கள் மற்றும் ௧,௦௦௦ நடமாடும் மருத்துவ முகாம்களும் அமைக்கப்படுகின்றன. இப்பணியில், இரண்டு லட்சம் ஊழியர்ஈடுபடுகின்றனர். 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.மறந்துடாதீங்க...!
● ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்
● முதல் தவணை சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், இரண்டாம் தவணையும் சொட்டு மருந்து தர வேண்டும்
● புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும், சில நாட்களுக்குமுன் சொட்டு மருந்து தரப்பட்ட குழந்தைகளுக்கும், மீண்டும் சொட்டு மருந்து தர வேண்டும் என, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!