Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 22 February 2016

டி.பி.ஐ., வளாகத்தில் இரு சங்கங்கள் தொடர் உண்ணாவிரதம்!!!

ஊதிய உயர்வு கோரி, பள்ளி கல்வித்துறை தலைமை அலுவலகமான, டி.பி.ஐ., வளாகத்தில், இரண்டு சங்கங்கள் காலவரையற்ற உண்ணாவிரதம், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

            தமிழக பள்ளிகளில், 2012ல், இரவு காவலர்களாக, 2,000 பேர்; துப்புரவாளர்களாக, 3,000 பேர் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். இரவு காவலர்கள், 14 ஆயிரம் ரூபாய் காலமுறை ஊதியத்துக்கு மாற்றப்பட்டனர். ஆனால், துப்புரவு பணியாளர்களுக்கு, 3,500 ரூபாய் தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படுகிறது.'தங்களுக்கும் கால முறை ஊதியம் வேண்டும்' என, பள்ளிக்கல்வி துப்புரவு பணியாளர்கள், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரியர்கள் போராட்டம்: அதேபோல, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி, பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினரும், டி.பி.ஐ., வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
'பாரபட்சத்தை நீக்க வேண்டும்': கோரிக்கை குறித்து, பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலர் ராபர்ட் கூறியதாவது:அரசு தொடக்கப் பள்ளிகளில், 5ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களாக, 2009ல், 21 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். எங்களுக்கு காலமுறை ஊதியத்தில், 5,200 ரூபாய் அடிப்படை ஊதியமாக வழங்கப்பட்டது.
எங்களுக்கு ஒரு நாள் முன்னதாக நியமனம் ஆனவர்களுக்கு, எங்களை விட, 3,000 ரூபாய் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பினரும், ஒரே கல்வித் தகுதியில் ஒரே விதமான பணிகளையே செய்கிறோம். எனவே, இந்த பாரபட்சத்தை நீக்க நடவடிக்கை எடுக்கும் வரை, போராட்டத்தை நிறுத்த மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.
ஜாக்டோ போராட்டம் 3 மாதம் ஒத்திவைப்பு: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து உட்பட, 15 அம்ச கோரிக்கைகளுக்காக, ஜாக்டோ ஆசிரியர் சங்க கூட்டுக்குழு, பல போராட்டங்களை நடத்தியது. இந்த கோரிக்கைகள் குறித்து, தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஜாக்டோவும், அரசு ஊழியர்கள் போல் தீவிர போராட்டங்களை நடத்தவில்லை.
இந்நிலையில், ஜாக்டோ அமைப்பின் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம், நேற்று திருச்சியில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற, பல சங்க நிர்வாகிகள் போராட்டங்களை தொடர விரும்பவில்லை. அதனால், ஜாக்டோ அமைப்பின் சார்பில், பிப்., 25ல், கோட்டை நோக்கி பேரணி; 26ல், 'ஸ்டிரைக்' ஆகிய போராட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
சட்டசபையில், 110வது விதியின் கீழ், முதல்வர் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஒரே அரசாணையில் இந்த இரண்டு பணியிடங்களும் நிரப்பப்பட்டன. ஆனால், ஊதியத்தை மட்டும் பாரபட்சமாக கொடுக்கின்றனர். துப்புரவு பணியாளர்களுக்கும் கால முறை ஊதியம் வழங்க வேண்டும்

ரூ.251க்கு ஸ்மார்ட் போன்: முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 7 கோடி

ஏழை, எளிய மக்களும் வாங்கும் வகையில் ரூ.251க்கு ஸ்மார்போனை அறிமுகப்படுத்திய ரிங்கிங் பெல் நிறுவனத்தில் சுமார் 7 கோடி பேர் முன்பதிவு செய்திருப்பதாக நிறுவனர் மோஹித் கோயல் தெரிவித்துள்ளார்.

ரூ.251க்கு ஸ்மார்ட்போன் என்றதும், அப்படி என்னதான் இருக்கும், எப்படி ரூ.251க்கு ஸ்மார்ட்போன் என பல்வேறு உந்துதல்கள் மக்களிடையே ஏற்பட்டது.அதன் விளைவு, ஸ்மார்ட் போன் முன்பதிவு இணையதளத்தில் ஒரே நேரத்தில் 6 லட்சம் பேர் நுழைந்து, இணையதளமே முடங்கிப்போனதுதான்.பிறகு ஒரு வழியாக இணையதளம் சீர் செய்யப்பட்டு முன்பதிவுநடைபெற்றது.இது குறித்து பேசிய மோஹித், இதுவரை 7 கோடிக்கும் அதிகமானோர் எங்கள் நிறுவனத்தின் ஃப்ரீடம் 251 செல்போனைவாங்க முன் பதிவு செய்துள்ளனர்.

இவற்றில் முதல் தவணையாக ஆன்லைன் மூலம் 25 லட்சம் பேருக்கும், கடைகளில் 25 லட்சம் பேருக்கும் வரும் ஜுன் மாதம் 30ம் தேதிக்குள் ஃப்ரீடம் 251 ஸ்மார்ட் போன் அனுப்பி வைக்கப்படும்.செல்போன் உரியவரிடம் சேரும் வரை, அவர் செலுத்திய பணத்தை நாங்கள் தொடமாட்டோம். வங்கிலேயே டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

காற்று மாசடைவதில் சீனாவை கடந்தது இந்தியா: கிரீன்பீஸ் எச்சரிக்கை

2015-ம் ஆண்டில் மாசடைந்த காற்றின் அளவில் சீனாவையும் இந்தியா கடந்து விட்டது என்று உலக சுற்றுச்சூழல் இயக்கமான கிரீன்பீஸ் எச்சரித்துள்ளது.

நாசா செயற்கைக் கோள் தரவுகளைக் கொண்டு கிரீன்பீஸ் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இது குறித்து கிரீன்பீஸ் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த நூற்றாண்டில் இந்திய மக்கள் மீது தாக்கம் செலுத்திய நுண்ணிய காற்று மாசின் அளவு சீன மக்களின் மீதான தாக்கத்தை விட அதிகம்.

காற்றில் அடையும் மாசைக் குறைக்க சீனா கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டதால் தாக்கம் குறைந்துள்ளது. ஆனால் இந்தியாவில் பத்தாண்டுகள் காலமாக காற்றில் மாசின் அளவு அதிகரித்தே வந்துள்ளது.

உலகச் சுகாதார மையத்தின் தரவுகளின் படி உலகில் அதிக அளவில் தூசிதும்பட்டை நிறைந்த 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தது. குறிப்பாக வட இந்தியாவில் காற்றில் தூசியின் அளவு காலங்காலமாக அதிகரித்தே வந்துள்ளது.

நாசா செயற்கைக் கோள் தகவல்களின் படி கடந்த பத்தாண்டுகளில் சராசரியாக காற்றில் தூசியின் அளவு இந்தியாவில் 2% அதிகரித்து வந்துள்ளது.
என்று கூறிய கிரீன்பீஸ் அறிக்கை இதனால் மக்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிப்படைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளது

அறநூல் ஒப்புவித்தல் போட்டி

அறநூல் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ,மாணவியர்க்கு பாராட்டு விழா 

 தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக போட்டி போட்டு அறநூல் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு உதவி பெறும் பள்ளி மாணவ,மாணவியர்க்கு பாராட்டு விழா

 பாராட்டு விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை கலாவல்லி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர்  லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .காரைக்குடி   தமிழ்ச் சங்கம் சார்பாக நடைபெற்றஅறநூல் ஒப்புவித்தல் பள்ளிப் பரிசு போட்டிகளில் ஆத்திசூடி,கொன்றைவேந்தன்,வெற்றி வேற்கை ,மூதுரை,நல்வழி,நன்னெறி ஆகியவற்றை மனனம் செய்து கருத்துடன் தெரிவித்து இப்பள்ளி மாணவ,மாணவியர்   11 பேர் வெற்றி பெற்று பரிசு பெற்றனர். 2ம் வகுப்பில்  மாணவர் வெங்கட்ராமன், 3ம் வகுப்பில் மாணவிகள்  ஜனஸ்ரீ ,கீர்த்தியா ,4ம் வகுப்பில் மாணவர்கள் ஐயப்பன்,அஜய் பிரகாஷ், 5ம் வகுப்பில் மாணவர்  கார்த்திகேயன், மாணவி மாதரசி ,6ம் வகுப்பில் மாணவர்கள்  ரஞ்சித்,விக்னேஷ்,7ம் வகுப்பில் மாணவர்  நந்த குமார் , மாணவி தனலெட்சுமி ஆகியோர் பரிசுகள் பெற்றனர். பரிசு பெற்றவர்களை ஆசிரியர் அனைவரும் பாராட்டினார்கள்.ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.பள்ளி விடுமுறை நாளன்று மாணவர்களை ஆசிரியர்கள் காரைக்குடிக்கு அழைத்து சென்று போட்டிகளில் பங்கேற்க செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

பட விளக்கம் : அறநூல் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ,மாணவியர்க்கு பாராட்டு விழாவில் மாணவ,மாணவியர் பெற்ற சான்றிதழ் மற்றும் பரிசு பொருள்களுடன் உள்ளனர். 

சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியில் பல்வேறு காலிப்பணியிடகளை நிரப்புவதற்கான அறிவிப்பு

சென்னை, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியில் பல்வேறு காலிப்பணியிடகளை நிரப்புவதற்கான அறிவிப்பு  வெளியாகி  உள்ளது. கடைசி தேதி 11.3.2016

தினம் ஒரு புத்தகம்


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் 'எலுமிச்சை பழம் மற்றும் பயன்கள்"

எலுமிச்சம் பழத்தின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். இதன் மருத்துவப் பயனை உணர்ந்து ஆரோக்கியம் பெறுங்கள்.
வீட்டிற்கு திடீர் விருந்தாளி வருகிறார், குடிக்கக் கொடுக்க எதுவுமே இல்லையெனில் நமது நினைவுக்கு சட்டென வருவது எலுமிச்சை. நமக்கு மிக மிக எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கக் கூடிய பொருட்களில் ஒன்று எலுமிச்சை.

இன்ஸ்பயர் விருது கண்டுபிடிப்பில் மாற்றம்

மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க வேண்டும், என்ற அடிப்படையில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது (இன்ஸ்பயர்) வழங்கப்படுகிறது.

சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள்:திருவண்ணாமலை மாவட்டத்தில் பிப்ரவரி 24, 25, 26-ம் தேதிகளில் நேர்க்காணல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்க்காணல் வரும் 24, 25, 26-ம் தேதிகளில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

‘தி இந்து - யங் வேர்ல்டு’ சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி

‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் இணைப்பிதழான ‘யங் வேர்ல்டு’ சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி நடத்தப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, பாண்டிச்சேரி உட்பட நாடு முழுவதும் 21 நகரங் களில் இப்போட்டி நடத்தப்படுகிறது.இதில் ‘ஜூனியர்ஸ்’ பிரிவில் 4, 5, 6-ம் வகுப்பு மாணவர்களும், ‘சீனி யர்ஸ்’ பிரிவில் 7, 8, 9-ம் வகுப்பு மாணவர்களும் பங்கேற்கலாம்.

விஜய் டி.வி யில்ஒரு வார்த்தை ஒரு இலட்சம் நி்கழ்ச்சி - அரசுப்பள்ளிக்கு கிடைத்த அங்கீகாரம்


விஜய் டி.வி யில்ஒரு வார்த்தை ஒரு இலட்சம் நி்கழ்ச்சியில் முன் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ள மூலந்துறை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களை வாழ்த்துவோம்....அரசுப்பள்ளிக்கு கிடைத்த அங்கீகாரம்... பயிற்சி அளித்த ஆசிரியப் பெருமக்களை வாழ்த்தி வணங்குகிறோம்..

கட்டாய தமிழ் தேர்வு மாணவர்கள் தேர்ச்சி பாதிக்கும் அபாயம்

பிறமொழி மாணவர்களுக்கான, 10ம் வகுப்பு தமிழ் தேர்வு பிரச்னையில், குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில், தமிழ் அல்லாத இந்தி, உருது, தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் போன்ற, 11 மொழிகளை தாய்மொழியாக கொண்ட, 7,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

தேர்வர்கள் கடும் அதிர்ச்சி:'செட்' தேர்வு வினாத்தாள் எடுத்து வர தடை

உதவிப் பேராசிரியர்களுக்கான, மாநில அரசின், 'செட்' தகுதித்தேர்வின் இறுதியில், தேர்வர்கள் வினாத்தாள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படாததால், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், பேராசிரியர் பணியில் சேர்வதற்கான மாநில தகுதித் தேர்வான, செட் தேர்வு நேற்று நடந்தது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடைமுறைப்படி, தேர்வர்களுக்கு இலவச கறுப்பு, 'பால்பாய்ன்ட்' பேனா வழங்கப்பட்டது;மொபைல் போன்கள் தேர்வறையில் தனியாக வைக்கப்பட்டன.

குரூப் பி, குரூப் சி' பணி-விண்ணப்பிக்க மார்ச் 10 கடைசி.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு, 'குரூப் பி' மற்றும் 'குரூப் சி' பணியாளர்களை 'ஸ்டாப் செலக் ஷன் கமிஷன்' (எஸ்.எஸ்.சி.,) தேர்ந்தெடுக்க உள்ளது.பட்டதாரி நிலை ஒருங்கிணைந்த தேர்வுக்கு (சி.ஜி.எல்.,) இணையதளம் மூலம் மார்ச், 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.எஸ்.சி., சார்பில் விஜிலென்ஸ், ரயில்வே, வெளியுறவு, நிதி உள்ளிட்ட துறைகளில் துணை அலுவலர், இன்ஸ்பெக்டர், ஆடிட்டர் பதவிகளுக்காக பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அண்ணா பல்கலையில் அறிமுகம்:போலி சான்றிதழ் கண்டுபிடிக்க வசதி

போலி சான்றிதழ் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, அண்ணா பல்கலையில் நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் பல இடங்களில் போலி சான்றிதழ் பிரச்னைகள் உருவெடுத்து உள்ளன. அரசு வேலை, மேற்படிப்பு, தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்வது, பாஸ்போர்ட் எடுத்தல், சொத்து பிரச்னைகளை தீர்த்தல், வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் பெறுதல், நீதிமன்ற வழக்குகள், பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்தல் உள்ளிட்ட பல பணிகளுக்கு, கல்விச்சான்று தேவைப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு எல்.டி.சி., விடுமுறை சலுகை

மத்திய அரசு ஊழியர்களுக்கான, எல்.டி.சி., எனப்படும் விடுமுறை பயண சலுகை பெறுவதற்கான நெறிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. மேலும், விடுமுறை கால புகைப்படங்கள், தகவல்களை பகிர்ந்து கொள்ளும்படியும், ஊழியர்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

வெளிநாட்டு மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் படிக்க வாய்ப்பு

வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள், இந்திய ஐ.ஐ.டி.,க்களில் சேர்ந்து படிக்கும் வகையில், அவர்களுக்கு தனி நுழைவுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்தியாவில், 18 இடங்களில் ஐ.ஐ.டி.,என்கிற இந்திய தொழில்நுட்ப கழகம், செயல்பட்டு வருகிறது இதில், மாணவர்சேர்க்கை, நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்டுவருகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி, ஐ.ஐ.டி.,யில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

மத்திய அரசு பள்ளிகளில் சமஸ்கிருத பாடத்தை திணிக்கும் முடிவை கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

மத்திய அரசு பள்ளிகளில் சமஸ்கிருத பாடத்தை திணிக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ்
வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு கல்விக்கூடங்களில் 3-வது மொழியாக சமஸ்கிருதத்தை கொண்டு வரக்கூடாது: கருணாநிதி வலியுறுத்தல்

மத்திய அரசு கல்விக்கூடங்களில் 3-வது மொழியாக சமஸ்கிருதத்தை கொண்டு வரக்கூடாது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் :வெயிலில் இருந்து பாதுகாக்க வழிமுறைகள் "

முதலில் தினமும் 3 முதல் 5 லிட்டர் வரை சுகாதாரமான தண்ணீர் குடிக்க வேண்டும். முடிந்த வரை இயற்கையில் கிடைக்கும் பழங்கள், இளநீர் முதலியவற்றை சாப்பிட வேண்டும். இதனால் தாகம் மற்றும் உடல் சூடு தணிவதுடன் இயற்கை சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்

தினம் ஒரு புத்தகம் "மந்திர விதைகள் "


கணினி ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்-ஜி.கே.வாசன் அறிக்கை.

கணினி ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்: ஜி.கே.வாசன்வலியுறுத்தல்அரசு பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை விரைவில்நிரப்பவேண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!