Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 26 February 2016

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் 'மூலிகைகளும் அதன் பயன்களும்'

நமது முன்னோர்களெல்லாம் மூலிகைகளை கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்க விளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம். தீராத வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி மூலிகைக்கு இருக்கிறது. ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாமே!
அருகம்புல் : மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்

7வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களில் 13 பேர் மயக்கம்

சென்னையில் 7வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் இடைநிலை ஆசிரியர்களில் 13 பேர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சென்னை டிபிஐ வளாகத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினம் ஒரு புத்தகம்"இறைஅன்பு மாணவர்களுக்கு சொன்னது'


தொடக்ககல்வி - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - துவக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் வைப்பு நிதி கணக்குகள் மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்து அரசானை வெளியீடு - பணிகளை துரிதப்படுத்த மாநில/மாவட்ட அளவில் "NODAL OFFICER" நியமனம் செய்து இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

விழிப்புணர்வு சிறப்பு ரயில் மார்ச் 1-இல் வேலூர் வருகை

வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு நிறுத்தப்பட உள்ள சிறப்பு ரயிலில் தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியீடு.

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுகான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்:

தேதி                பாடம்
18-04-2016      தமிழ்
20-04-2016      ஆங்கிலம்
21-04-2016      கணிதம்
22-04-2016      அறிவியல்
23-04-2016      சமூக அறிவியல்

ஏப்ரல் கடைசி வாரத்தில் தமிழக சட்டப்பேரவைத்தேர்தல்: மார்ச் 6-ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

தில்லியில் 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி நேற்று இறுதி கட்ட ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஒரே கட்டமாகவும், மே.வங்கம்,அசாமில் பல கட்டங்களாகவும் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் மத்தியில்நடைபெறலாம்.

அழகப்பா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தொலைதூரக் கல்வி 2015 டிசம்பருக்கான தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

29–ந்தேதி மத்திய பொது பட்ஜெட்: வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுமா?

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ரெயில் மந்திரி சுரேஷ் பிரபு ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பயணிகள்கட்டணம் உயர்த்தப்படவில்லை. பழைய திட்டங்களை விரைந்து நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்கள், புதிய ரெயில்கள் அறிவிக்கப்படவில்லை.

மேல்நிலைத்தேர்வு மார்ச் - 2016 - மைய வாரியாக வினாத்தாட்கள் எண்ணிக்கை ஒதுக்கீடு - உறுதி செய்து சான்று அனுப்ப அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் (மேல்நிலை) இணை இயக்குநர் அவர்களின் உத்தரவு கடிதம்.


100–க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு

சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று நடைபெற்றது. நிதிக்குழு தலைவர் சந்தானம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கூறி இருப்பதாவது:–

EMIS -அறிவுரைகள்

*.EMIS update all schools.முதல் வகுப்பு மாணவர்களை பதிவேற்றம் செய்யலாம்.

*.முதலில் நாம் செய்ய வேண்டியது நம்மிடம் படித்து ஜூன்-2015 க்கு பிறகுTC வாங்கி சென்ற மாணவர்களை transfer செய்ய வேண்டும்.

*.Transfer செய்வதற்கு முன் மாணவனின் admission no, date of TC issued கண்டிப்பாக வைத்து கொள்ள வேண்டும்.

புதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் அரசாணை வெளியீடு

புதிய ஓய்வு ஊதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்க, அரசாணை வெளியிட்டுள்ளதால் நீண்டகாலபிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.

பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் 100% அதார் அட்டை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர்உத்தரவு


TNPSC:உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணியிடம்: சான்றிதழ் சரிபார்க்க டி.என்.பி.எஸ்.சி. அழைப்பு

உதவி புள்ளியியல் துறை ஆய்வாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 1-ஆம் தேதி தொடங்குகிறது.உதவி புள்ளியியல் ஆய்வாளர் (Assistant Statistical Investigator) பதவிக்கான 270காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்றது.

பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு... 15 நிமிடம் தாமதமானால் தேர்வு எழுத முடியாது

'பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு, 15 நிமிடங்கள் தாமதமாக வந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது' என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது. இதற்கான விதிமுறைகளை, சுற்றறிக்கையாக ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதில், மாணவர்கள் குறித்த நேரத்திற்கு தேர்வு அறைக்கு வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சி.ஏ., நுழைவுத்தேர்வு, பாடத்திட்டம் மாற்றம்: இனி பிளஸ் 2 தேர்ச்சி கட்டாயம்

சி.ஏ., படிப்புக்கான நுழைவுத்தேர்வு மற்றும் பாடத்திட்டத்தில், அதிரடி மாற்றம் செய்யப்படுகிறது. இனி, பிளஸ் 2 முடித்தால் மட்டுமே, சி.ஏ., தேர்வை எழுத முடியும்.ஐ.சி.ஏ.ஐ., எனப்படும், இந்திய 'சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்' அமைப்பின், தேசிய தலைவர் எம்.தேவராஜ ரெட்டி மற்றும் துணைத் தலைவர் நிலேஷ் ஷிவ்ஜி விகம்சே, நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

ஊதிய பட்டியலை திருத்தி மோசடி அரசு பள்ளி ஊழியர் 'சஸ்பெண்ட்'

ஊதிய பட்டியலில் திருத்தம் செய்து, 15 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, அரசு பள்ளி இடைநிலை உதவியாளரை, 'சஸ்பெண்ட்' செய்து, தி.மலை முதன்மைக் கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த களம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஊதிய பட்டியலில் திருத்தம் செய்து, இளநிலை உதவியாளர் கண்ணன் என்பவர், முறைகேடாக ஊதியம் பெற்று வருகிறார் என்று, தி.மலை முதன்மைக் கல்வி அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பிளஸ் 2 தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்ட பொருள்கள் விவரம்

பிளஸ் 2 தேர்வு அறைக்குள் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் உள்ளிட்டவை கொண்டு செல்வதற்கு தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வரும் மார்ச் 4ஆம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை, மதுரை மாவட்டத்தில்92 மையங்களில் 37,863 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.

பள்ளிக் கல்வித் துறை மூலம் ரூ.126.94 கோடியில் கல்வி உபகரணங்கள்'

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.126 கோடியே 94 லட்சத்து 34 ஆயிரத்து 368 மதிப்பில் மாணவர்,மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அனைத்து வள மையப் பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை மாலை ஈடுபட்டனர்.மாவட்டத் தலைவர் பெ.மாங்கனி தலைமை வகித்தார். பொருளாளர் க.செந்தில்குமரன் வரவேற்றார்.

ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரை பயன்படுத்தியதால் புற்று நோய்: ரூ.493 கோடி நஷ்ட ஈடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்காவில் உள்ள மிசவுரி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜாக்குலின் பாக்ஸ் (வயது 62) இவர் கடந்த 35 ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரையும், ஷவர் டூ ஷவர் பவுடரையும் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் அவருக்கு கர்பப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஜாக்குலின் பாக்ஸ் இறந்தார்.

ஜான்சன் - ஜான்சன் நிறுவனத்தின் பொருள்களைப் பயன்படுத்தியதாலே அவருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக கூறிய அவரது குடும்பத்தினர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜான்சன்-ஜான்சன் நிறுவனம் அதனுடைய உற்பத்தி பொருளான முகப்பவுடரில் புற்று நோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயன பொருட்கள் இருப்பதை நுகர்வோருக்கு தெரிவிக்க தவறிவிட்டது என தெரிவித்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட ஜாக்குலின் குடும்பத்தாருக்கு, 72 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டனர். இதன் இந்திய மதிப்பு ரூ. 493.50 கோடி ஆகும். இது சம்பந்தமான சுமார் 1000 வழக்குகள் மிசவுரி மாநில நீதிமன்றத்திலும், சுமார் 200 வழக்குகள் நியூஜெர்ஸி கோர்ட்டிலும் நிலுவையில் உள்ளன.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பவுடர்களில் 'டால்கம்' பயன்படுத்தப்படுகிறது. இந்த டால்கம் பொருளால் புற்றுநோய் ஏற்படுகிறது என தெரியவந்ததையடுத்து, அமெரிக்காவில் பெரும்பாலான அழகுசாதனப் பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் டால்கம் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டன. எனினும், ஜான்சன் - ஜான்சன் நிறுவனம் தொடர்ந்து டால்கமை பயன்படுத்தி வந்துள்ளது. இந்நிலையில், ஜான்சன் - ஜான்சன் பவுடரை பயன்படுத்த இந்திய பெண்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!