Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 27 February 2016

தினம் ஒரு புத்தகம் "சமத்துவக் கல்வி"


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "அம்மை நோய்கள் வருவது ஏன்?"

 தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயிலா  என்று எண்ணும் அளவுக்கு வெயிலின் கடுமை நீடிக்கிறது. இதனால் பல நோய்கள் நம்மை நோக்கிப் படையெடுக்கின்றன. அவற்றில் அம்மை நோய்களுக்கு முக்கிய இடமுண்டு. அதிலும் குறிப்பாகச் சின்னம்மை (Chicken pox) நோய் அதிதீவிரத் தொற்றுநோய் என்பதால், இதுதான் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

TNTET :ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் வருகிற 04.03.2016 அன்று பதிவாளர் கோர்ட் எண்-2 இல் வரிசை எண் 27 ஆக விசாரணைக்கு வருகிறது...


தொடக்கக்கல்வி செயல்முறைகள் -திருச்சி வருமான வரித்துறை அலுவலர் பள்ளிகளின் பெயர் மற்றும் பள்ளிகளின் முகவரி அனுப்ப கோருதல் சார்பு


ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது? தேர்வு எழுதிய 8 லட்சம் பேர் காத்திருப்பு...

ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு நடந்து முடிந்து, எட்டு மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாததால், தேர்வெழுதிய, எட்டு லட்சம் பேர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள, 4,362 ஆய்வக உதவியாளர் பணிக்கு, கடந்த ஆண்டு மே, 31ல் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது; இதில், எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.

16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்: அரசு நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தில் பணிபுரியும் 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 'டி.இ.டி.,'ஆசிரியர் தகுதி தேர்வின்றி 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் அரசு, அரசு நிதி உதவிபெறும் பள்ளி மற்றும் சிறுபான்மைப் பள்ளிகளில் பணிபுரிகின்றனர்.மத்திய அரசின் கல்வி உரிமை சட்டம் 2009ல் அமலானது.

பள்ளிக்கல்வி துறை, தேர்வுத்துறை அலட்சியத்தால், தகுதி காண் பருவம் முடித்த நுாற்றுக்கணக்கானோருக்கு,சான்றிதழின் உண்மை தன்மை தெரியாமல், பதவி உயர்வு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 10 ஆண்டுகளாக சம்பளம் அளித்த பிறகும், அவர்களின் சான்றிதழ் உண்மையானதா என, கண்டுபிடிக்க முடியாமல் பள்ளிக்கல்வி துறை திணறுகிறது. இதனால், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுநிராகரிக்கப்பட்டு உள்ளது.

நாளைய வி.ஏ.ஓ., தேர்வு: வினாத்தாளில் மாற்றம்

முறைகேட்டை தடுக்க நாளை (பிப்., 28) நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 813 வி.ஏ.ஓ., பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு நாளை நடக்கிறது. முறைகேடுகளை தடுக்க இந்த தேர்வுக்கான வினாத்தாளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

ஆயிரம் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுஒரே மேஜருக்கு அதிக வாய்ப்பு

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பதவி உயர்வு மூலம் 1000க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒரே 'மேஜருக்கு' (பட்டமேல்படிப்பு) அதிக வாய்ப்பு உள்ளது என, கல்வித்துறை தெரிவிக்கிறது.அரசு உயர்,மேல்நிலைப்பள்ளிகளுக்கான காலியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்விலும், 50 சதவீதம் நேரடி தேர்வு மூலமும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

ஆண்டுக்கணக்கில் மாயமாகும் ஆசிரியர்கள் பட்டியல் எடுக்க அதிகாரிகள் உத்தரவு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில், ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டும் என்றாலும், முறையான அனுமதி வாங்க வேண்டும். உயர் கல்விபடிக்க; பாஸ்போர்ட் பெற; வெளிநாடு செல்ல; சொத்துகள் வாங்க, உயர் அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்து, முன் அனுமதி பெற வேண்டும்.ஆனால், கல்வித்துறையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், பல விதமாக விடுப்பு எடுக்கின்றனர்.

பதவி உயர்வால் காலியான தலைமையாசிரியர் பணியிடங்கள்: தகுதி பட்டியல் பரிசீலிக்கப்படுமா?

கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர்களாக (டி.இ.ஒ.,க்கள்) பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், முழு ஆண்டு தேர்வில் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் கற்பித்தல் மேம்பாடு, செயல்பாடுகள் கண்காணிப்பு, 14 வகை மாணவர் நலத்திட்டங்கள் வழங்கல் உட்பட பல்வேறு பணிகளில் தலைமையாசிரியர்களுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது.

பிளஸ் டூ , எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள்: முழு விடையையும் அடித்தால் ஓராண்டு தேர்வு எழுத தடை

தமிழகத்தில் பிளஸ் டூ, எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், தங்களது விடைத்தாளில் எழுதிய விடைமுழுவதையும் அடித்தால் ஓராண்டுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேர்வு துறை அறிவித்துள்ளது.

மகிழ்ச்சியுடன் படித்தால் தேர்வு... பூப்பந்து!: இறையன்புவின் தன்னம்பிக்கை 'டிப்ஸ்' (தேர்வு காலங்கள்)

பிளஸ் 2 தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்காக, இறையன்பு ஐ.ஏ.எஸ்., கூறியதாவது: தேர்வு என்பது அறிவை விரிவாக்கிக் கொள்ள உதவும் பயிற்சியே தவிர... அது ஒன்றும் யுத்தம் அல்ல.மாணவர்கள் தேர்வு நெருங்குகின்ற போது புதிதாக வாசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல், ஏற்கனவே வாசித்தவற்றை திரும்ப படித்து திடப்படுத்தி கொள்வது அவசியம்.

தேர்வறை கண்காணிப்பாளர் நியமனம்; இந்தாண்டும் குலுக்கல் முறை

பிளஸ்2பொதுத்தேர்வுக்கு,தேர்வறை கண்காணிப் பாளர்களை நியமிப்பதில்,நடப்பாண்டிலும் குலுக்கல் முறையே பின்பற்றப்படுவதாக,கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க,ஒவ்வொரு தேர்வு மையங்களிலும்,தேர்வறை கண்காணிப்பாளர்கள்,முதன்மை கண்காணிப்பாளர்கள்,துறை அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

சமையல் கியாஸ், மண்எண்ணெய், மானியங்களை குறைக்க வேண்டும்: பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரை

பாராளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்வது வழக்கம்.
2016-17-ம் நிதி ஆண்டுக் கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி, பாராளுமன்றத்தில் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) தாக்கல் செய்கிறார். அதற்கு முன்னோடியாக நேற்று அவர் பாராளுமன்றத்தில் 2015-16-ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார்.
பொருளாதார ஆய்வறிக்கையில் அனைத்து வகையிலான மானிய குறைப்பு நடவடிக்கையில் மத்திய அரசு துரிதமாக ஈடுபட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!