Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 29 February 2016

தினம் ஒரு புத்தகம் "விண்மீன்கள்"


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "உடல் வனப்பைக் கூட்டும் வெந்தயம்"

உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.

ஆண்டுக்கு ரூ5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளோருக்கு ரூ3,000 வரிசலுகை

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 3வது பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.பட்ஜெட் தாக்கலின் போது பெரும்பாலானோர்களால் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரிச்சலுகை அறிவிக்கப்பட்டது.

வீட்டுக்கடன்களுக்கு சிறப்புச் சலுகைகள்: அருண் ஜேட்லி அறிவிப்பு

வீட்டுக்கடன்களுக்கு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.நாடாளுமன்ற மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2016 - 17ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அதில்,

ஓய்வூதிய திட்டம்: புதிய மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை அறிவிப்பு

மத்திய அரசின் புதிய ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்திற்கான பங்களிப்பில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், மத்திய அரசின் புதிய ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய 8.33% பங்களிப்பை அரசே அளிக்கும் என்று கூறினார்.ஊதியக் குழு பரிந்துரையை செயல்படுத்த இடைக்கால நிதி ஒதுக்கீடு

தேசிய தொழில்நுட்ப ஆசிரியருக்கான விருது: தேனாடு ஊராட்சி பள்ளி ஆசிரியர் தேர்வு

தேசிய அளவில் சிறந்த தொழில்நுட்ப ஆசிரியராக, கோத்தகிரி தேனாடு ஊராட்சிபள்ளி ஆசிரியர்தர்மராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு நிறுவனம் (ஐ.சி.டி.ஏ.சி.டி.,), தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, எல்காட் நிறுவனம் ஆகியவை சார்பில் ஆண்டுதோறும் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஆசிரியர், கல்லூரிபேராசிரியர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கோரிக்கை ஏற்கப்பட்டதால் ஆசிரியர் போராட்டம் 'வாபஸ்'

கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.தமிழக தொடக்க பள்ளிகளில், 2009 ஜூன், 1க்கு பின், இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்களுக்கு, அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் முரண்பாடு ஏற்பட்டது. இதை சரிசெய்ய கோரி, ஆசிரியர்கள் பல முறை மனு அளித்தும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை.

இந்த நிலையில், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்கத்தினர், எட்டு நாட்களாக, சென்னையில், கல்வித்துறைதலைமை அலுவலகம் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 25 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதையடுத்து, சங்கத்தினருடன், தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் பேச்சு நடத்தினார். பின், கல்வித்துறை செயலர் சபிதாவுக்கு அறிக்கை அனுப்பினார். அதில் ஆசிரியர்களின் சம்பளத்தில் தவறு நிகழ்ந்துள்ளதை அரசுசெயலரும் கண்டுபிடித்தார்.

இதை தொடர்ந்து, போராடிய ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் போது, சரி செய்வதாக கல்வித்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதற்கான எழுத்துப்பூர்வ உத்தரவும் தருவதாக அதிகாரிகள் கூறியதால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

வல்லுநர் குழுவில் அரசு ஊழியரை சேர்க்க வலியுறுத்தல்

அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு ஊழியர்களின் போராட்டத்தில் வலியுறுத்தப் பட்ட 20 அம்ச கோரிக்கைகளில் 11 கோரிக் கைகளை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ள தமிழக முதல்வருக்குநன்றி. அதில், 8 கோரிக்கைகளை செயல்படுத்துவதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

TNPSC :டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு தமிழக அரசில் பணி

தமிழக அரசில் காலியாக உள்ள Tester பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய பட்ஜெட் 2016-17 : முக்கிய அம்சங்கள்

வேளாண் துறைக்கு ரூ.35,984 கோடி ஒதுக்கீடுபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014 மே 26-ம் தேதி பதவியேற்றது. மத்திய அரசில் நிதியமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஜேட்லி 3-வது முறையாகதனது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.மத்திய பொது பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:
* மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்.

மத்திய பொது பட்ஜெட் :கல்வித் துறை முக்கிய அம்சங்கள்

1. 10 அரசு கல்வி நிறுவனங்களும், 10 தனியார் கல்வி நிறுவனங்கள் உலகத்தரத்துக்கு மேம்படுத்தப்படும்.
2. பள்ளிச் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புச் சான்றிதழ்கள் டிஜிட்டல் ஆவணங்களாகவும் வழங்கப்படும்.
3. அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக 62 நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும்.

மத்திய பட்ஜெட் 2016-17:வருமான வரி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை.

* வருமான வரி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை.
*வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் புதிதாக இணையும் ஊழியர்களுக்கான 8.33% பங்களிப்பை முதல் மூன்று ஆண்டுகளுக்கு அரசே ஏற்கும்.
* வாடகை வீட்டில் வசிக்கும் வருமான வரிதாரருக்கு ரூ60,000 வரை வரிச்சலுகை. வாடகை வீட்டில் வசிப்போருக்கு இதுவரை சலுகை ரூ.24,000 ஆக இருந்தது.

Tamil Nadu Government Scholarships Orders issued.

Tamil Nadu Government Scholarships Orders issued.G.O Ms.No. 208 Dt: February 23, 2016 Scholarships - Tamil Nadu Government Scholarships to cadets of Tamil Nadu studying in Rashtriya Indian Military College (RIMC), Dehradun - Enhancement of Scholarship amount from Rs. 12,000/- to Rs. 40,000/- per annum - Orders issued.

தேசிய திறனறி தேர்வு ரிசல்ட் வெளியீடு

பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை பெற வேண்டுமெனில், மத்திய அரசு சார்பில் நடத்தப்படும், தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டுக்கான திறனறித் தேர்வில், மாநில அளவிலான முதல் கட்ட தேர்வு, நவம்பரில் நடந்தது.

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்ட பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை துவங்குகின்றன.பிளஸ் 2 தேர்வு, நாளை துவங்கி, ஏப்., 22 வரை நடக்கிறது. 10ம் வகுப்பு தேர்வு நாளை துவங்கி, மார்ச், 28ல் முடிகிறது. நாடு முழுவதும், 16 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த, 25.67 லட்சம் பேர் இத்தேர்வுகளை எழுத உள்ளனர்.

ஐ.ஏ.எஸ்., தேர்வு 'இன்டர்வியூ' இனி அழைப்பு கடிதம் வராது

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, இனிமேல்,நேர்முகத்தேர்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட மாட்டாது என்றும், மாறாக, தேர்வாணையத்தின் இணைய தளத்தில், 'இ - சம்மனை' டவுண்லோடு செய்து கொள்ளலாம் என்றும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான தேர்வை, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆண்டுதோறும் நடத்துகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம்: முதல்–அமைச்சர் ஜெயலலிதாதலையிட்டு தீர்வு காணவேண்டும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–தமிழகத்தில் கடந்த 10–ந் தேதி முதல் 19–ந் தேதி வரை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது சுமுகமான சூழல் ஏற்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு எழுத்து தேர்வு 813 பணியிடங்களுக்கு 7 லட்சத்து 70 ஆயிரம் பேர் எழுதினர்.

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. 813 காலிப்பணியிடங்களுக்கு 7 லட்சத்து 70 ஆயிரத்து 750 பேர் எழுதினார்கள். அதாவது ஒரு பணிக்கு 948 பேர் போட்டி போட்டு எழுதி உள்ளனர்.கிராம நிர்வாக அலுவலர்கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்கள் 813–ஐ நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை மேற்கொண்டது.

பிளஸ் 2 தேர்வு முறைகேடுகள் நடந்தால் புகார் அளிக்க பெட்டி

பிளஸ் 2 தேர்வில், முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடந்தால், அதுகுறித்து புகார் அளிக்க, அனைத்து தேர்வு மையங்களிலும் புகார் பெட்டி வைக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதில், பெற்றோர் மற்றும் தனித்தேர்வர்களும் புகார் மனுக்களை போடலாம்.பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 4ல் துவங்கி, ஏப்ரல், 1ல் முடிகிறது.

பள்ளி மாணவர்களுக்கு பங்கு சந்தை தேர்வு

பள்ளிகளில், 8ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை, பங்குச்சந்தை பாடம் குறித்து தனியாக தேர்வு நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளி களில், முதன் முறையாக, 2010ல், பங்கு சந்தை குறித்த பாடம், 8ம் வகுப்பு, ௯ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, விருப்ப பாடமாக அறிமுகம் செய்யப்பட்டது.

பரத நாட்டிய கலைஞர் ருக்மினி தேவியின் 112-வது பிறந்த தினம் இன்று: கூகுள் சிறப்பு மரியாதை

புகழ்பெற்ற நடன கலைஞர் ருக்மிணி தேவி அருண்டேலின் பிறந்தநாள் இன்று. கூகுள் நிறுவனம் ருக்மினி தேவிக்கு மரியாதை செலுத்தும் விதமான இன்று அவரது படத்தினை பதிவு செய்துள்ளது.

1904-ம் வருடம் மதுரையில் பிறந்த இவர் ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞராக திகழ்ந்தார். கலாசேத்திரா என்ற நடனப் பள்ளியினை நிறுவினார். சமூகத்தில் ஒரு சாரார் மட்டும் பயின்ற சதிர் என்ற நடனத்திற்கு, பரதநாட்டியம் என்ற பெயரிட்டு பலரும் பரவலாக பயில முனைப்புடன் செயல்பட்டவர். 

ருக்மிணியின் நடனம் அழகியல் மற்றும் ஆன்மீகத் தன்மை நிறைந்ததாக இருந்தது. 

ருக்மிணி, விலங்குகள் மீது தீவிர அன்பினைக் கொண்டிருந்தார். இந்திய பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்த போது, விலங்கு வதை சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றினார்.

1937ஆம் ஆண்டில் இந்திய அரசின் உதவியோடு, நலிவடைந்திருந்த நெசவுத் தொழிலினை, ஊக்குவிக்கும் பொருட்டு, சில நெசவு ஆலைகளை நிறுவினார். பல்வேறு வகைகளிலும், கண்கவர் வண்ணங்களிலும், அழகான வேலைப்பாடுகளுடைய கைத்தறி ஆடைகளை இந்த ஆலை தயாரித்தது. 

1977ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், ருக்மிணியை குடியரசுத் தலைவர் பதவியினை வகிக்குமாறு அழைப்பு விடுத்தார். கலை மற்றும் கலைசார்ந்தவற்றிற்காக பணிபுரிவதே தன் விருப்பம் என்று கூறி அப்பதவியினை ஏற்க மறுத்தார்.

1986ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 24ஆம் தேதி, ருக்மிணி இறந்தார். அதன் பிறகு, அவர் துவக்கிவைத்த கலாக்ஷேத்ரா தேசிய சிறப்பு வாய்ந்த நிறுவனமாக பாராளுமன்றத்தினால் அறிவிக்கப்பட்டது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தினமும் தேசியகொடி ஏற்ற வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேச விரோத கோஷம் எழுப்பப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் தினந்தோறும் தேசியகொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தேசியகொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த பள்ளிகளில் தினமும் தேசியகொடி ஏற்றுமாறு கேந்திரிய வித்யாலயா சங்கேதனின் கூடுதல் கமிஷனர் யு.என்.கவரே, பள்ளி முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மாணவர்கள் மரியாதை செலுத்துவதற்கு ஏதுவாக, பள்ளியின் முக்கியமான பகுதியில் தேசியகொடியை காலையில் ஏற்ற வேண்டும் எனக்கூறியுள்ள அவர், மாலையில் சூரியன் மறைவுக்கு முன் கொடியை இறக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்திய தேசியகொடி சட்டம் 2002 மற்றும் தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்பு சட்டம் 1971 போன்றவற்றை பள்ளிகள் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள கேந்திரிய வித்யாலயா சார்பில் நாடு முழுவதும் 1100-க்கும் அதிகமான பள்ளிகள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

TNTET : ஆசிரியர் தகுதித்;தேர்வில் (2013 ) தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் பணிநியமணம் வேண்டி மார்ச் 01 முதல் தொடர் உண்ணாவிரதம்

கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வி;ல் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2014ம் ஆண்டு பணிநியமணத்துக்கான சான்றிதழ்; சரிபார்ப்பும் முடிந்த நிலையில் வெய்ட்டேஜ் என்னும் முறையால் வாழ்வுரிமை இழந்தனர்.... பின்னர் 2014ம் கல்வியாண்டுக்கான காலி ஆசிரியர் பணியிடமும் 2015ம் கல்வியாண்டுக்கான ஆசிரியர் காலி;ப்பணியிடமும் அரசு இன்று வரை தெரிக்கவில்லை..

இருப்பினும் அரசு நம்மை வைத்தே இனிவரும் ஆசிரியர் பணியிடங்ளை நிரப்பும் என்று நம்பிக்கை வைத்தனர்...
அனைத்தும் கானல் நீராகவே இருந்தது... அதனால் டி.இ.டி தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்களும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மன உளைச்சலுக்கு ஆளாயினோம்... ஆகவே அரசு டி.இ.டி 2013ல் தேர்வில் தேர்ச்சிப்பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நமக்கு பணிநியமனம் வழங்க வேண்டியும்... வெய்ட்டேஜை திரும்ப பெறுமாறும்... இனிவரும் காலங்களில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்களாகிய எங்களை வைத்தே காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டியும் மார்ச் 01 முதல் தொடர் போராட்டம் நடைபெற முடிவெடுத்துள்ளோம் நண்பர்களே...

இத்தனை நாள் ஏதோ எனக்கென்ன என்று இருந்து விட்டாய் இனியும் நீ அவ்வாறு இருந்தால் .. டி.இ.டி 2013 என்ற அத்தியாயம் முடிந்து விடும்... துணிந்து வா.. தோல்விகள் நமக்கில்லை...
போராட்டம் ஒன்றும் நமக்கு புதிதல்ல... புதிரல்ல...
நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு துளிக்காற்றும் கூட தேசப்பிதா காந்தி திருப்பூர் குமரன் வ.உ.சி போன்ற எண்ணற்றோர் போராடி தான் நமக்கு விடுதலை சுவாசத்தை அள்ளித்தந்தார்கள்... போராட்டக்குணம் நம் இரத்தத்தில் ஊறிப்போனது தான்... உரிமைக்காக போராடுவனே சிறந்த மனிதன்...
உன்னிடம் எதிர்பார்ப்பது உன் வருகையை மட்டும் தான்... உன் பிள்ளைகள்.. உன் குடும்பத்தார்.. உன் தந்தை தாய் ...உறவினர்கள் என அனைவரோடும் கலந்து கொள்.... ஏனெனில் இது நம் இறுதிகட்ட முயற்சி.... நம் பணிநியமனம் இழந்து தவிக்கும் உன் உறவினர்கள் மற்றும் குடும்பத்தார்கள் என அனைவரும் திரட்டு.. அரசுக்கு பணிவாய் நமது கோரிக்கையை எடுத்துரைப்போம்...

அன்று சுதந்திர போராட்ட வீரர்கள் 'முழு சுதந்திரத்தை தவிர வேறு எதனாலும் திருப்தி அடையமாட்டோம்' என முழுங்கினார்கள்...

இன்று... நாம் ' பணிநியமணம் அல்லது பணிநிமணம் சார்ந்த எழுத்துப்பூர்வ அறிக்கையினால் மட்டுமே தவிர வேறு எதனாலும் நமது போராட்டதிலிருந்து பின்வாங்க போவதில்லை'

ஆகவே தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு வருகை தந்து உங்கள் உரிமையை நிலைநாட்ட வாரிர்...
நாள் : மார்ச் 01 முதல்... இடம் : டி.பி.ஐ வளாகம் ... சென்னை

தொடர்புக்கு:
பி.இராஜலிங்கம் 9600208188
கபிலன் 9092019692
செல்லத்துரை 9843633012
சிவா 8807148088
கோவிந்தன்

மாவட்ட வரியாக ஒருங்கிணைப்பாளர்கள்:
திண்டுக்கல் புவனேஸ்வரி - 9688414105
தருமபுரி பிரகாசம் -  978737442
விழுப்புரம் நடராசன் - 9443517563
சிவகங்கை சமையமுத்து – 9843519554
வேலூர் நந்தகுமார் - 9965855880
மதுரை 7598360223

விரைவில் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தொடர்பு எண்கள் வெளியிடப்படும்

பாராளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகிறது

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 23-ந் தேதி தொடங்கியது.

25-ந் தேதி ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) 2016-17-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் (வரவு- செலவு திட்டம்) மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது.

நிதி மந்திரி அருண்ஜெட்லி, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 3-வது பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அப்போது புதிய வரிகள், வரிச்சலுகைகள் பற்றிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில், வரும் நிதி ஆண்டில் 7 முதல் 7.75 சதவீத வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அருண் ஜெட்லி கூறி இருந்தார். எனவே உற்பத்தி துறைக்கு ஊக்கம் அளித்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் பல நாடுகளின் பொருளாதாரம் நலிந்தும், சரிந்தும் காணப்படும் நிலையில், மத்திய அரசின் இந்த பட்ஜெட் அரசுக்கு பெரும் சவாலாகவே இருக்கும் என கருதப்படுகிறது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!