Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 3 March 2016

GO(MS)No.80 Dt: March 02, 2016 கருணை அடிப்படையில் பணி நியமனம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - 1.2.2016 வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை வரன்முறைப்படுத்துதல் - ஆணை மற்றும் வழிமுறைகள் - வெளியிடப்படுகின்றன.

தினம் ஒரு புத்தகம் "சுவாமி விவேகானந்தர் "


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "மருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை!"


வெற்றிலை பொதுவாக சீதத்தை நீக்கும் சக்தி கொண்டது. வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும். வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.

தொடக்ககல்வி 3 முதல் 8 வகுப்பு வரைவகுப்பறைகளில் தேசிய, மாநில, மாவட்ட வரைபடங்களை பொருத்துமாறு உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி - தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2015/2016 - விருது பெறுவதற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்ப்பு - இயக்குனர் செயல்முறைகள்

TNPSC:தாய்-சேய் நல அலுவலர் பணிக்கு மார்ச் 15 முதல் 18 வரை சான்றிதழ் சரிபார்ப்பு

தாய்-சேய் நல அலுவலர் பணியில் 82 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச்-15 முதல், 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) தெரிவித்துள்ளது. 

தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் காலியாக உள்ள தமிழாசிரியர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் காலியாக உள்ள 2 தமிழாசிரியர் பணியிடங்கள், 1 ஓட்டுனர் பணியிடம், 2 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு நியமன ஆணை வழங்கிவிட்டு ரத்து செய்யக்கூடாது: அரசு தேர்வுத் துறைக்கு தலைமை ஆசிரியர்கள் வேண்டுகோள்

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையத்துக்கான உதவி முகாம் அலுவலர் பணிக்கு நியமன ஆணை வழங்கிவிட்டு பின்னர்ரத்து செய்யக்கூடாது என்று அரசு தேர்வுத் துறைக்கு தலைமை ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இது தொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் பி.நடராஜன் ஆகியோர் அரசு தேர்வுகள் இயக்குநருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

தேர்வு விதிமுறை; பின்பற்ற அறிவுறுத்தல்

பிளஸ் 2 பொதுத்தேர்வில், நேர அட்டவணையை தவறாமல் பின்பற்ற, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு,வரும், 4ல் துவங்குகிறது. விதிமுறையை தவறாமல் பின்பற்ற, தலைமை ஆசிரியர்களுக்கு, சுற்றறிக்கை மூலம் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

போலி ஆவணங்கள் தயாரித்ததாக ஆசிரியர்கள் மீதுமோசடி வழக்கு

போலி ஆவணங்கள் தயாரித்து பணியில் சேர்ந்ததாக பணி நீக்கம் செய்யப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.வேலூர் மாவட்டம், ஆற்காடு இருகூரை சேர்ந்தவர் பார்த்திபன். கடந்த 2013-14ம் ஆண்டு நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தகுதி தேர்வில் தோல்வியடைந்த இவர், தேர்வில் வெற்றி பெற்றதாக போலி ஆவணங்கள் தயார் செய்து விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே பிரமகுண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வரலாற்று ஆசிரி யராக கடந்த டிசம்பர் 16-ம் தேதி பணியில் சேர்ந்தார்.

இணைய சேவை மையங்களில் பாட நூல்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் இணைய சேவை மையங்களில், பாட நூல்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையில் பயிலும் மாணவர்களுக்காக, பாட நூல்கள் இணைய வழியில் விற்பனை செய்யப்படுகின்றன.

இயக்குனரகம் - செயலகம் 'லடாய்' அபராத வட்டி கட்டும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள்

மத்திய அரசு திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், தலைமை செயலகத்தில் சம்பளத்தை இழுத்தடிப்பதால், ஆசிரியர்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
தமிழக அரசின் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ், 2011 - 12ல், 1,590 முதுநிலை ஆசிரியர்கள்; 6,872 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 127 பல்வினைப் பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்தியகுடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கடைசி தேதி: 27.03.2016

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 127 பல்வினைப் பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.எண்.REP/83-1/DR/2016 தேதி: 29.02.2016பணி: பல்வினைப் பணிகாலியிடங்கள்: 127

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: தேர்வு கட்டுப்பாட்டு அறை திறப்பு சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்

அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) முதலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 15-ந்தேதி முதலும் நடைபெற உள்ளன.தேர்வுகள் குறித்து மாணவர்கள், தேர்வு எழுதுபவர்கள், பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துகள் மற்றும் சந்தேகங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசு தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேர தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. 

சென்டம்' வாங்குவது எப்படி? ' 104 ஐ அழைக்கும்மாணவர்கள்

பிளஸ் 2 தேர்வில், வினாத்தாள் எளிதாக இருக்குமா; 'சென்டம்' வாங்குவது எப்படி? என, மாணவர்கள், '104' உதவி எண்ணை அழைத்துள்ளனர். அவர்களிடம், மனநல ஆலோசகர்கள் போனில் பேசி, அச்சத்தை போக்குகின்றனர்.பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ளது.

சிறப்பு பள்ளி பணியிடம் நிரப்புவதில் முறைகேடு

அரசு சிறப்பு பள்ளிகளில், விடுதி துணை கண்காணிப்பாளர்உள்ளிட்ட பல பணியிடங்களை முறைகேடாக நிரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தில் அரசு சிறப்பு காது கேளாதோர், பார்வை குறையுடையோர், கை, கால் ஊனமுற்றோருக்கு என, 62 பள்ளிகள் உள்ளன. 

ஆசிரியர்கள் அதிர்ச்சி விடைத்தாள் திருத்தும் மைய அதிகாரி திடீர் மாற்றம்

பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்க, ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், கடலுார் மாவட்ட விடைத்தாள் திருத்தும் மைய அதிகாரி, திடீரென மாற்றப்பட்டுள்ளார். இதனால், பொதுத் தேர்வு துவங்கும் முன்னரே, ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பிளஸ் 2 பொதுத் தேர்வில் எந்த பள்ளி மாநில, 'ரேங்க்' எடுப்பது; எந்த பள்ளி, 100 சதவீத தேர்ச்சி பெறுவது என, கடும் போட்டி உண்டு. 

பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது: 8 லட்சத்து 82 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்

பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது. 8 லட்சத்து 82 ஆயிரத்து 44 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!