Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 5 March 2016

TNPSC- DEPARTMENTAL EXAMINATIONS MAY -2016 TIME TABLE


தினம் ஒரு புத்தகம் "செய்து பாருங்கள் விஞ்ஞானி ஆகலாம்'


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்"

வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம்.

அனைத்து தனியார் பள்ளிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும், காலை நேர பிரார்த்தனைக் கூட்டத்தின் போது தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14 ஆண்டுகளாக தவறாது பள்ளிக்கு வரும் மாணவி

பள்ளியில் சேர்ந்த நாள் முதல், பள்ளி இறுதி ஆண்டு வரை, ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல், 100 சதவீத வருகை தந்து சாதனை மாணவிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Bharathidasan University B.Ed (2014-15&2015-16 ) batch Class Time Table

Annamalai University UG Time Table

புதுக்கோட்டை மாவட்டத்திக்கு 7.03.2016 அன்று உள்ளூர் விடுமுறை.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவிக்கை  : திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் தேர் திருவிழா 07.03.2016 அன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவங்களுக்கும் உள்ளூர் விடுமுறை.

தமிழ்நாடு மின் வாரியத்தில் 2,175 பணியிடம்:மார்ச் 7 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மின் வாரியத்தில், 2,175 ஊழியர் தேர்வுக்கு, மார்ச், 7 முதல், மின் வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு மின் வாரியம், கணக்காளர்,உதவியாளர் உட்பட, 2,175 புதிய ஊழியர்களை தேர்வு செய்யஉள்ளது.இதற்கு, 'மின் வாரிய இணையதளத்தில், மார்ச், 2 முதல் விண்ணப்பிக்கலாம்' என, மின் வாரியம் ஏற்கனவே அறிவித்தது.

ரூ.251 மொபைலுக்கு புது சோதனை:'காப்பி' அடித்தால் நடவடிக்கை என 'ஆட்காம்' எச்சரிக்கை

'உலகிலேயே மிகவும் மலிவாக, 251  ரூபாய்க்கு ஸ்மார்ட் மொபைல் போனை, விற்பதாக கூறியுள்ள, 'ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனத்துக்கு, எங்களுடைய மொபைலை, 3,600 ரூபாய்க்கு விற்றுள்ளோம்' என, 'ஆட்காம்' என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கூடுதல் வசதி:அதிகாரிகள் தகவல்

வரும் சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் நேரம்,தேதி பதிவு செய்யும் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது,' என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குப்பதிவிற்கு அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.தேர்தலுக்கு தேவையான அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவிற்கு இந்தாண்டு புதிய இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவிப்பு

''தமிழகம் முழுவதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. வாகன சோதனை துவங்கி உள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்து உள்ளார்.இது குறித்து, நேற்று, ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

தமிழகத்தில் அண்ணா பல்கலை, சென்னை பல்கலை மற்றும் மதுரை காமராஜர் பல்கலை ஆகிய 3 பல்கலைகள் நிதியுதவிக்கு தகுதி

சென்னை;''மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டத்தின் கீழ், தமிழகத்தில், மூன்று பல்கலைகள், நிதியுதவி பெற தகுதியுள்ளவையாக உள்ளன,'' என்று பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் துணைத் தலைவர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் பட்டமளிப்பு விழா, துணைவேந்தர் தங்கசாமி தலைமையில், சென்னையில் நேற்று நடந்தது.

ஏப்.11 முதல் மத்திய அரசு ஊழியர் 'ஸ்டிரைக்': சமரச பேச்சு தோல்வி

அரசுடன் பேச்சு தோல்வி அடைந்ததால் திட்டமிட்டபடி ஏப்.,11 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடக்கும்' என மத்திய அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், குறைந்தபட்சஊதியம் ரூ.26 ஆயிரம், 52 வகையான படிகளை ரத்து செய்யக்கூடாது, ஐந்து முறை பதவி உயர்வு உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.,11 முதல், மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர்.

ராமநாதபுரம் அரசு ஊழியர்களுக்கு 10 நாள் சம்பளம் போச்சு!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர் உத்தரவால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு 10 நாட்கள் ஊதியம் வழங்கப்படவில்லை. மற்ற மாவட்டங்களில் அரசு ஊழியர்களுக்கு முழுமையாக ஊதியம் கிடைத்துள்ளது.புதிய பென்ஷன் திட்டம் ரத்து, காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பிளஸ் 2 தேர்வு எழுத வராதவர்கள் விவரம் இன்டர்நெட்டில் பதிவேற்ற உத்தரவு

தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு இன்று துவங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் 11ஆயிரத்து 45மாணவர்களும், 12ஆயிரத்து 148 மாணவியரும் என மொத்தம் 23ஆயிரத்து 193பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக 66 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வர்களுக்காகவும், கண்காணிப்பு அலுவலர்களுக்காகவும் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.இதன்படி விடைத்தாளில் தேர்வர்கள் கடைசியாக எழுதிய வரியின் கீழ் தேர்வுத்துறை சார்பில் ரப்பர் முத்திரை இட வேண்டும்.

தேர்வு முடிந்த பின்பு அறை கண்காணிப்பாளர்கள் விடைத்தாள்களை தாமதமின்றி தேர்வுக் கட்டுப்பாட்டு அறைக்கு எடுத்து வர வேண்டும். தேர்விற்கு பயன்படுத்தப்படும் சுவர் கடிகாரம் நல்லநிலையில் இயங்கக்கூடியதாக இருக்கிறதா என்ற சரிபார்த்து கொள்ள வேண்டும். இதைப்பார்த்துத்தான் பெல்லடிக்க வேண்டும். ஒவ்வொரு தேர்வும் முடிந்தவுடன் வருகை புரியாதோர் விபரங்களை பிற்பகல் 2 முதல் 5 மணிக்குள் www.tndge.in என்ற இணையத்தில் முதன்மைக் கண்காணிப்பாளரே பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இணையதள வசதி இல்லாத இடங்களில் தேர்வு மையத்தின் அருகில் உள்ள கணினி வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.மாணவர்கள் சில விடைகளை அடிக்க நேர்ந்தால் மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது என்று குறிப்புரையை பேனாவால் எழுத வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் கல்வித்துறையால் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இ - சேவை' மையங்களில் பாட புத்தகங்களை 'ஆர்டர்' செய்யலாம்:வீட்டிற்கே 'டோர் டெலிவரி' செய்ய முடிவு

தமிழக அரசின் பாடநுால் கழக புத்தகங்களை, பெற்றோர், இனி நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்க வேண்டியதில்லை. அரசின், 'இ - சேவை' மையங்களில், புக் செய்தால், மாணவர்களின் வீட்டிற்கே இலவச, 'டோர் டெலிவரி' செய்யும் திட்டத்தை, தமிழ்நாடு பாடநுால் கழகம் துவங்கியுள்ளது. தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வி பணிகள் கழகத்தின் சார்பில், சமச்சீர் கல்வி புத்தகங்கள், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த புத்தகங்களைத் தான், அரசு பள்ளிகள் முதல், தனியார் மெட்ரிக் பள்ளிகள் வரை, மாணவர்களுக்கு வழங்கி பாடம் நடத்தப்படுகின்றன. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் பாட புத்தகங்களை வாங்க, சென்னையில், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள புத்தக விற்பனை மையம், பள்ளிகளில் உள்ள பாடநுால் வினியோக மையத்தில் காத்து நிற்க வேண்டும். இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக பாடநுால் கழகம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, பெற்றோரை குஷிப்படுத்தியுள்ளது. அதாவது பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு தேவையான புத்தகங்களை வாங்க, அருகிலுள்ள இ - சேவை மையங்களுக்கு சென்றால், அங்கு பாடநுால் கழக புத்தக இருப்பு மற்றும் விலை விவரம் வழங்கப்படும்.

அதன்படி, புத்தக இருப்புக்கு ஏற்ப, தேவையான பாட புத்தகங்களை அதற்குரிய பணம் செலுத்தி, 'புக்' செய்யலாம். இந்த பதிவுக்கு, இ - சேவை மையத்தில் ரசீது வழங்கப்படும்; பின், வீட்டு முகவரிக்கே புத்தகம் அனுப்பி வைக்கப்படும். இது குறித்து பாடநுால் கழக அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும், எந்த இ - சேவை மையத்திலும், முன்பதிவு செய்யலாம். பாடநுால் கழகம் நிர்ணயித்த விலையை மட்டுமே கொடுத்து, ரசீது பெற்றுக் கொள்ளலாம். கூரியர் மூலம் இலவச டெலிவரி கிடைக்கும். கூரியருக்கோ, பதிவு செய்வதற்கோ கூடுதல் கட்டணம் எதுவும் கிடையாது. மாணவர்கள், தங்களது பள்ளி பெயரை சொல்ல வேண்டுமென்ற அவசியமும் இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

வகுப்பறையில் 'மேப்' மாட்டாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

அரசு பள்ளிகளில், மூன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, வகுப்பறையில் கண்டிப்பாக வரைபடங்கள் மாட்ட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு மற்றும் உதவிபெறும் தொடக்கப் பள்ளி மாணவர்கள், தங்களின் நாடு, மாநிலம், வசிக்கும் பகுதியை புவியியல் ரீதியாக அறிந்து கொள்ள, ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டுமென, உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக, வகுப்பறை சுவர்களில் வரைபடங்களை மாட்ட அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக, மூன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, புவியியல் வரைபடங்கள், அரசின் சார்பில் இலவசமாக வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்த படங்களை, வகுப்பறைகளில் கண்டிப்பாக, மாணவர்கள் பார்வையில் படும்படி மாட்டி வைத்து, அதிலுள்ள இடங்களை மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டுமென, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

வரைபடத்துடன் கற்றுத் தராத ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

G.O.(Rt).No.142 Dt: February 26, 2016 New Health Insurance Scheme 2012 for the employees of Government Departments and other Organisations – Empanelment of Accredited Hospitals - Approval of additional hospitals based on the recommendations of the Accreditation Committee – Notified - Orders issued.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!