Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 6 March 2016

அரசியல் பிரமுகர்களை தேர்தல் அதிகாரிகள் சந்தித்தால் கடும் நடவடிக்கை

தேர்தல் பணியில் இருக்கும் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் யாரும் அரசியல் பிரமுகர்களை சந்தித்துப் பேசக் கூடாது. அப்படி யாரும் சந்தித்துப் பேசினால் அது தேர்தல் நடத்தை விதி மீறலாகக் கருதப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

இணையத்தில் தமிழ் வளர்க்கும் ஆசிரியர்! பார்வதி ஸ்ரீ


ஆசிரியர் அதிகாரிகளுக்காக வேலை செய்கிறார்; நல்ல ஆசிரியர் மாணவர்களுக்காக வேலை பார்க்கிறார்; சிறந்த ஆசிரியரோ, அவர்களின் பெற்றோர்களுக்காக பணிபுரிகிறார்.

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் 417 பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய அணுசக்தி துறையின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டம்  கல்பாக்கத்தில் செயல்படும் வரும் இந்திராகாந்தி அணுசக்தி ஆராய்ச்சி  மையத்தில் (IGCAR) டெக்னீஷியன் மற்றும் ஸ்டைபன்டரி டிரெய்னி  (கேட்டகிரி-2) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

10th Hall Ticket download - INSTRUCTION


உயர்தரக் கல்வியுடன் நல்லொழுக்கத்தைக் கற்றுத் தருவது அவசியம்: முன்னாள் பள்ளி கல்வித்துறை இயக்குனர்

 மாணவர்களுக்கு உயர்தரக் கல்வி போதிக்கும் பணியுடன்,நல்லொழுக்கத்தைக் கற்றுத் தரும் பொறுப்பும்,கடமையும் ஆசிரியர்களுக்கு உண்டு என்று முன்னாள் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கே.மாரியப்பன் கூறினார்

யாருக்கு பி.எப்., வரி விலக்கு

புதுடில்லி;பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெறும் போது, வரி விலக்கு பெறக்கூடிய தொழிலாளர் பிரிவுகள் குறித்து, மத்திய அரசு விரைவில் அறிவிப்பாணை வெளியிட உள்ளது.மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, பார்லி.,யில் தாக்கல் செய்த, 2016 - 17ம்நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், தொழிலாளர்கள், பணி ஓய்வுபெறும் போது, திரும்பப்பெறும், பி.எப்., தொகைமீது வரி விதிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையத்தில் வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி 7.3.2016.

தினம் ஒரு புத்தகம் "அனாடமிக் செவி வழி தொடு சிகிச்சை"


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் 'கோடையின் கொடை நுங்கு பதநீர்"

கோடை வந்தாச்சி  உடலில் இருக்கும் நீரை, சூரிய வெப்பம் உறிஞ்சத் தொடங்கிவிட்டது. அதை, ஈடு செய்யா விட்டால், உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு, பல்வேறு பிரச்சினைகள் வந்துவிடும். வைட்டமின்கள், நீர்ச்சத்து, தாது உப்புக்கள் நிறைந்த, நுங்கும் பதநீரும் உடலின் நீர் இழப்பைச் சரிசெய்யும்.

சர்வதேச கால்பந்து போட்டி தேர்வு:ராமநாதபுரம் மாணவர் சாதனை


சர்வதேச கால்பந்து போட்டி வீரர்களுக்கான தேர்வில் ராமநாதபுரம் மாணவர் 4ம் கட்ட தேர்வுக்கு முன்னேறினார்.
இந்தியாவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான சர்வதேச கால்பந்து போட்டி 'பிபா' சார்பில் அடுத்தாண்டு நடக்கிறது. இதற்கு தகுதியான வீரர்களை இந்திய விளையாட்டு ஆணையம், அகில இந்திய கால்பந்து சம்மேளனம் தேர்வு செய்கிறது. பிப்., 14, 20, 21ல் சிவகங்கையில் நடந்த முதல், இரண்டாம் கட்ட தேர்வுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மாணவர்கள் 75க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவது கட்டாயம்-பள்ளிக்கல்வித்துறை


விரிவுரையாளர் தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியீடு.

ஆசிரியர் பயிற்சி மையங்களில், காலியாக உள்ள, 222 விரிவுரையாளர் பணி தேர்வுக்கான பாடத் திட்டத்தை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.பள்ளிக் கல்வித் துறையின் கீழ், மாவட்டந்தோறும், 'டயட்' எனப்படும், மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஆசிரியர் பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.இந்த மையங்களில், பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சியும், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, டிப்ளமோ ஆசிரியர் பயிற்சிபடிப்பும் நடத்தப்படுகின்றன.

பொதுத்தேர்வு மாணவர்களை கலங்கடிக்காதீங்க! பறக்கும் படையில் உள்ள ஆசிரியர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பீதி ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது' என, பறக்கும் படையில் உள்ள ஆசிரியர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.பிளஸ் 2 பொதுத்தேர்வில், முறைகேடுகளை கண்டுபிடிக்க, 3,000 பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள்; 15 ஆயிரம் முழு நேர உடற்கல்வி ஆசிரியர்கள்; 2,000 தொழிற்கல்வி ஆசிரியர்கள், பறக்கும் படையில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

யாருக்கு ஓட்டளித்தோம் என காட்டும் இயந்திரம் செயல்படுவது எப்படி?


'யாருக்கு ஓட்டளித் தோம்' என, காண்பிக்கும், 'வி.வி.பி.ஏ.டி.,' இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி விளக்கம் அளித்தார்.

இ.பி.எப். வரி விதிப்பு ரத்து ஆகுமா? பாராளுமன்றத்தில் அறிவிப்பு வெளியாகிறது

இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பணத்தை திரும்ப எடுக்கிறபோது, 60 சதவீத தொகைக்கு வரி விதிக்கப்படும், 40 சதவீத தொகைக்கு மட்டுமே வரி விலக்கு என்றும், இது ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் பட்ஜெட் உரையின்போது பாராளுமன்றத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!