Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 8 March 2016

பி.எப். வரிவிதிப்பு திட்டத்தை கைவிட்டது மத்திய அரசு

பி.எஃப். தொகை எடுப்பில் 60% தொகைக்கு வரிவிதிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடுவதாக அருண் ஜேட்லி செவ்வாயன்று அறிவித்தார்.

2016-17-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த அருண் ஜேட்லி, ஏப்ரல் 1, 2016-க்குப் பிறகான பி.எஃப். பிடித்தத் தொகையில் எடுப்பின் போது 60% தொகைக்கு வரிவிதிக்கும் திட்டத்தை அறிவித்தார்.

இ.பி.எப். வட்டிக்கு வரி ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், சர்ச்சையை ஏற்படுத்தியது.இதையடுத்து இ.பி.எப். வட்டிக்கு வரிவிதிப்பது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று வெளியிட்டுள்ளார்.

தினம் ஒரு புத்தகம் "மனித உறவுகள் '


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "நரம்பு தளர்ச்சி தீர செவ்வாழைப்பழம்"

செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் antioxidant காணப்படுகிறது. செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் விட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும்.

SLAS 2015-16 Result Overall for Tamilnadu state.


தமிழ்நாடு மின் நிறுவனத்தில் 2175 பணி

தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்தில் 2175 தொழில்நுட்ப உதவியாளர், மின்னியல், தொழில்நுடப் உதவியாளர், இயந்தரவியல், உதவி வரைவாளர், களப்பணி உதவியாளர்(பயிற்சி), சோதகர் வேதியர், இளநிலை உதவியாளர், நிர்வாகம், இளநிலை உதவியாளர் கணக்கு, இளநிலை தணிக்கையாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் தட்டச்சர் போன்ற பணிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக, தகுதியுள்ள உள்ளவர்களிடமிருந்து எழுத்துத்தேர்விற்கு 02.03.2016முதல் 16.03.2016 வரை இணைய வழிமூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசு பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?

பணி: Block health statistician

காலியிடங்கள்: 172

சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200

தகுதி: கணிதத்தில் இளங்கலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிளஸ் 2 தேர்வில் முறைகேடு: 6 பேர் பிடிபட்டனர்

பிளஸ் 2 தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக திருவள்ளூர், தஞ்சாவூரில் 6 பேர் பிடிபட்டுள்ளனர்.
 தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. மொழிப் பாடம் முதல் தாள் தேர்வு கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், 2-ஆம் தாள் தேர்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் ஊக்க ஊதியத்தை அதிகரிக்க வேண்டும்: கலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

அரசு பொதுத் தேர்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதியத்தை ரூ. 80-இல் இருந்து ரூ. 400ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கலை ஆசிரியர் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கத்தின் அவசரக் கூட்டம் கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.ராஜ்குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலர் முரளி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

சென்னையில் நேற்று, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான, சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், தலா இரண்டு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தலைமை தாங்கினார். தேர்தல் கமிஷனில் இருந்து வந்திருந்த அதிகாரிகள், பயிற்சி அளித்தனர்.

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை: முதல்கட்டமாக ரூ.70,000 கோடி ஒதுக்கீடு

 மத்திய அரசுப் பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்துவது தொடர்பான 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முதல்கட்டமாக ரூ.70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆசிரியர் பணியிடம்; பதவி உயர்வுக்கு பட்டியல் தயாரிப்பு!

அரசு மேல்நிலைப்பள்ளிகளில், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி பெற்ற ஆசிரியர்களின் பட்டியல் தயாரித்து அனுப்ப,தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் பாதியளவு, பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

பிளஸ் 2 தமிழ் இரண்டாம் தாளில் எதிர்மறைக் கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்க வலியுறுத்தல்.

பிளஸ் 2 தமிழ் இரண்டாம் தாள் தேர்வில் கதைப் பகுதியில் கேட்கப்பட்ட எதிர்மறைக் கேள்விக்கு மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என தமிழாசிரியர்கள் வலியுறுத்தினர்.அதே வேளையில் பெரும்பாலான வினாக்கள் பள்ளிக் கல்வித் துறை, அரசுப் பள்ளி மாணவர்களுக்காக வழங்கிய குறைந்த கற்றல் பெட்டகத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு: தமிழ் இரண்டாம் தாள் 331 பேர் எழுதவில்லை

.பிளஸ் 2 பொதுத் தேர்வில் திங்கள்கிழமை நடைபெற்ற மொழிப் பாடங்களில் பிரஞ்சு மொழித் தேர்வெழுத அனைவரும் வந்த நிலையில், தமிழ் இரண்டாம் தாள் தேர்வுக்கு 331 பேர் வரவில்லை.கடந்த 4ஆம் தேதி தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு தமிழ் முதல் தாளுடன் தொடங்கியது. இந்நிலையில் திங்கள்கிழமை தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்.

பள்ளிக் கல்வித் துறையில் தன்னிச்சையாக செயல்படும் தூத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,  அந்த அலுவலகத்தில் ஆசிரியர்கள் பலர் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


ஆசிரியர்களை கண்காணிக்கும்கல்வித்துறை அதிகாரிகள்.

தேர்தல் நேரத்தில் ஆசிரியர்களை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். தொடக்க கல்வித்துறையில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஒருங்கிணைந்து, இரண்டு பேரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தி வருகிறது.

பள்ளி 'மேப்'பிலும் ஜெ., படம்:தேர்தல் விதியால் நீக்கப்படுமா?

பள்ளி வகுப்பறைகளில் உள்ள, 'மேப்'பிலும் முதல்வர் ஜெ., புகைப்படத்தை நீக்கி, தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்து, மாணவர்களுக்கு கற்பிக்ககோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு சார்பில், பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள, 'மேப்'பில், முதல்வரின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதியின்படி, அரசு அலுவலகங்களில், முதல்வரின் புகைப்படம் அகற்றப்பட்டு வரும் நிலையில், வகுப்பறை மேப், புத்தக பைகளில் ஒட்டப்பட்டுள்ள முதல்வரின் புகைப்பட ஸ்டிக்கரை என்ன செய்வது என, தெரியாமல், ஆசிரியர்கள் குழம்பி போய் உள்ளனர்.

தேர்தல் விதிமீறல் புகார் தெரிவிக்க'வாட்ஸ் ஆப்' மொபைல் எண் அறிவிப்பு.

தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க, 'வாட்ஸ் ஆப்' மொபைல் போன் எண் மற்றும் 'மொபைல் ஆப்ஸ்' அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:தமிழகத்தில், தேர்தல் விதிமீறல் குறித்துபுகார் தெரிவிக்க, வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் தொடர்பான சந்தேகங்களை,பொதுமக்கள் அறிந்து கொள்ள, கட்டணமில்லா டெலிபோன் எண்,1950 அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 தேர்வு வினாத்தாள்: தனியார் பள்ளிகள்கலக்கம்!!!

பிளஸ் 2 தேர்வில், பாடங்களின் உள் பகுதியிலிருந்து கேள்விகள் இடம் பெறும் நடைமுறை அமலாகியுள்ளதால், தனியார் பள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளன. மாணவர்களை, 'சென்டம்' வாங்க வைக்கும் வகையில் தனியார் பள்ளிகளில், கல்லுாரி பேராசிரியர்கள் மூலம் அவசர சிறப்பு வகுப்புகளை துவங்கி உள்ளனர்.புதிய மாற்றம்:பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 4ல் துவங்கியது.

வாய்ப்புற்று நோயை தீர்க்கும் அருமருந்தாகும் வேப்பிலை! அண்ணாமலைப் பல்கலை.அறிவியலாளர்கள் கண்டுபிடிப்பு.

அனைத்து நோய்களையும் தீர்க்கும் கற்பக மரமாக திகழும் வேப்பிலையின் இலை மற்றும் பூவிலிருந்து எடுக்கப்பட்டதாவர வேதிப்பொருளான நிம்போலைடூ வாய்ப்புற்று நோயை குணமாக்கும் சக்தி கொண்டது என அண்ணாமலைப் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.இன்றளவில், வாய்ப்புற்று நோய்க்கு பல்வேறு சிகிச்சைகள் இருப்பினும் புற்று நோயாளிகளின் வாழ்நாள் திறன் மிகவும் குறைவாகவே உள்ளது.

பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம்: தலைமை ஆசிரியை பணி இடைநீக்கம்

சக மாணவர்களால் தாக்கப்பட்டு, பள்ளி மாணவர் உயிரிழந்தசம்பவத்தில் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியை திங்கள்கிழமை பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே கொல்லப்பட்டியைச் சேர்ந்த பழனிசாமி மகன் சூர்யா (9). அவர் கோழிக்கால்நத்தம் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.அதே வகுப்பில் மாணவர் சூர்யாவுடன் படித்த, வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த சக மாணவர்கள் இரண்டு பேருக்கும் இடையே பிப்ரவரி 29-ஆம் தேதி காலை மோதல் ஏற்பட்டது.

எட்டாம் வகுப்பு மாணவ,மாணவிகள்  அறிவியல் ஆய்வக களப்பயணம்

தேவகோட்டை -   தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகள்  கல்லூரி ஆய்வகங்களுக்கு  அறிவியல் ஆய்வக களப்பயணம் மேற்கொண்டனர்.இப்பள்ளி  8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கல்லூரி ஆய்வக சோதனை கூடங்களுக்கு நேரில் களப் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!