Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 9 March 2016

மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்: ஜெயலலிதா வலியுறுத்தல்

மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த நினைக்கும் திட்டத்தை கைவிட வேண்டுமாறு பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

முழு சூரிய கிரகணம்: இருளில் மூழ்கிய இந்தோனேசியாவின் சில பகுதிகள்


முழு சூரிய கிரகணத் தாக்கத்தினால் இந்தோனேசியாவின் சில பகுதிகள் 2 நிமிடங்களுக்கும் மேல் இருளில் மூழ்கியது.

முழு சூரிய கிரகணம் புதன் காலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை ஏற்பட்டது. இந்த சூரிய கிரகணத்தை உலகின் பல பகுதிகளிலும் மக்கள் கண்டு களித்தனர். இந்த சூரிய கிரகணத்தினால் இந்தோனேசியாவின் சில பகுதிகள் 2 நிமிடங்களுக்கும் மேல் இருளில் மூழ்கியது.

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "ரத்த அழுத்தத்தை விரட்டும் வழி"

நம் உடலில் உள்ள சின்னச் சின்ன குறைபாடுகளை கண்டுகொள்ளாமல் விடும்போது அது பெரிய ஆபத்துகளை உருவாக்குகிறது. அந்த வகையில் மிகவும் ஆபத்தானது ரத்த அழுத்தம். சாதாரண விஷயம் போல தோன்றினாலும் இதை கட்டுக்குள் வைக்காவிட்டால் இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் கண்கள் என முக்கிய உறுப்புகள் பாதிக்க வாய்ப்புள்ளது என்கிறார் மருத்துவ நிபுணர் குமரன் அப்புசாமி. ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் 40 வயதுக்கு மேல்தான் வரும் என்று சொன்னது அந்தக் காலம். இப்போது 25 வயதிலேயே ஹார்ட் அட்டாக் பயமுறுத்தத் தொடங்கிவிட்டது. இதற்கு அடிப்படை காரணம் ரத்த அழுத்தப் பிரச்னை.

தினம் ஒரு புத்தகம் "ரோஸ் '


தமிழ் இலக்கியங்களை ‛இ-புத்தக’ வடிவில் கைப்பேசியில் படிக்கும் வசதி அறிமுகம்

தமிழ் இலக்கிய நூல்களை ‛இ-புத்தக’ வடிவில் கைப்பேசியில் படிக்கும் புதிய வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ரூ.25 செலுத்தி வாக்காளர் அடையாள அட்டை பெற புதிய வசதி: ராஜேஷ் லக்கானி தகவல்

தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை இதுவரை பெறாதவர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி எளிய முறையில் வாக்காளர் அடையாள அட்டை பெறலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

PGTRB:பேரவை தேர்தலுக்குப் பிறகே முதுகலை பட்டதாரிஆசிரியர் தேர்வு நடத்தப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு


ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி.சி. 32 ராக்கெட்


ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வியாழக்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி.சி. 32 ராக்கெட். இந்த ராக்கெட் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 எஃப் செயற்கைகோளை சுமந்துச் செல்லும்.

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு: ஆந்திரப் பேரவையில் தீர்மானம்

 மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை, மத்திய அரசு சட்டமாக பிரகடனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேறியது.

G.O. of School Education Department on concession given to Differently Abled Students G.O. (Ms)No.54 Date.29.02.2016 School Education- Directorate of Government Examinations, Chennai- Higher Secondary/SSLC Public Examinations Framing of Guidelines to be adopted for Scribe appointment as per the directions of the Hon'ble High Court of Madras - Orders Issued.


மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு கிடைக்குமா?

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. தேர்தல் பணிக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதால், உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டுமென மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மே 16-ம் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன. வழக்கமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மூலம் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மின் வாரிய ஊழியர் தேர்வு:இணையதள சேவை துவக்கம்.

தமிழ்நாடு மின் வாரியத்தில் புதிய ஊழியர்களை தேர்வு செய்ய, தனி இணைய தள சேவை துவங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், இளநிலை உதவியாளர், தணிக்கையாளர் உட்பட, 2,175 பணியியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது.இதற்கு, அண்ணா பல்கலை மூலம் நடத்தப்படும், எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க, தனி இணையதள முகவரி துவங்கப்பட்டு உள்ளது.

10ம் வகுப்பு முகப்பு தாளில் பிழை:திருத்தம் செய்ய வழிமுறை வெளியீடு

.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளில், தைக்கப்பட்டுள்ள முகப்பு சீட்டில், ஒரு சில மாணவர்களின் விவரங்களில் பிழை இருந்ததால், தலைமை ஆசிரியர்கள் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில், அவற்றைதிருத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் மார்ச் 14ல் துவக்கம்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், மார்ச், 14ல் துவங்க உள்ளது. சிறப்பு குறியீடு கள் இருந்தால், அந்த விடைத்தாள்களை தனியாக பிரித்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 4ல் துவங்கியது. தமிழ் பாடத்துக்கான, இரண்டு தாள்களுக்கு தேர்வு முடிந்துள்ளது. இன்றும், நாளையும், ஆங்கில பாட தேர்வுகள் நடக்கின்றன.

8ம் வகுப்பு தேர்வு 'தத்கல்' விண்ணப்ப தேதி அறிவிப்பு.

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள்,'தத்கல்' திட்டத்தின் கீழ், மார்ச், 11, 12ல் விண்ணப்பிக்கலாம்.தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஏப்ரலில் நடக்க உள்ள, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், மார்ச், 11, 12ல், 'ஆன்லைன்' மூலம் சிறப்பு அனுமதி தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் மேல் தளத்தில் தேர்வெழுத தடை.

பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரை, மேல் தளம் மற்றும் திறந்த வெளியில் தேர்வெழுத அனுமதிக்கக்கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் பொதுத்தேர்வுகளில் பங்கேற்போரில், கண் பார்வையற்ற, காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாதோர், டிஸ்லெக்சியா குறைபாடு, மனநலம் குறைபாடு, உடல் ஊனமுற்றோர் உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

தமிழகத்தை வென்ற பீகார் ,போட்டி தேர்வில் பின்னடைவு.

தமிழகம், பல துறைகளில் இந்திய அளவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. வேளாண்மை, சாலைப் போக்குவரத்து, மருத்துவ வசதி, கல்வி வளர்ச்சி, பெண்களுக்கான வளர்ச்சிதிட்டங்கள் என்று தமிழகம் முன்னெடுத்துச் செல்லும் திட்டங்கள், இந்திய அளவில் பல மாநிலங்களில் முன்னோடி திட்டங்களாகவே உள்ளன.ஆனால்,

அரசு பள்ளிகளில் SLAS ல் பின் தங்கிய திருவாரூர் மாவட்டம்

தமிழக அரசு பள்ளிகளில் நடத்திய ஆய்வில், 8ம் வகுப்பில், தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும், திருவாரூர் மாவட்டம் பின் தங்கி உள்ளது.மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ், செயல்முறை வழி கல்வி திட்டத்தை, தமிழக பள்ளிக் கல்வித்துறை நடைமுறை படுத்தியுள்ளது. இதற்காக பள்ளிக்கல்வி துறையில், தனியாக திட்ட இயக்குனராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா குல்கர்னி பணியாற்றுகிறார்.

பட்டம் பெற பல ஆண்டுகள் படித்தோரும் பேராசிரியர்கள்..!அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அவலம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்ட பேராசிரியர்களின் தகுதி குறித்து பல்வேறுபுகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. 3 ஆண்டு இளநிலைப் படிப்பை 8 ஆண்டுகள் வரை படித்தோரும், ஒவ்வொரு பாடமாக எழுதித் தேர்ச்சி பெற்று, ஏறக்குறைய 15 மதிப்பெண் சான்றிதழ்கள் வரை வைத்துள்ளோரும் கூட பேராசிரியர்களாகப் பணிபுரிந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!