Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 17 March 2016

பெங்களூரு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா: 6 தங்கப் பதக்கங்களை வாங்கி குவித்த மாணவி


பெங்களூர் மருத்துவக் கல்லூரி மாணவி விஷ்வபாரதி 6 தங்கப் பதக்கங்களை வாங்கி குவித்துள்ளார்.

பெங்களூரு மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழா பெங்களூருவில் உள்ள கன்டீரவா உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை அடையார் புற்றுநோய் மருத்துமவனை தலைவர் டாக்டர் வி.சாந்தா கலந்துக் கொண்டு மருத்துவ படிப்பை முடித்துள்ள மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். இதில் அதிக மதிப்பெண்களை பெற்ற கார்வாரை சேர்ந்த விஷ்வபாரதி என்ற மாணவி 6 தங்கப்பதக்கங்களை வாங்கி குவித்தார்.

கற்பித்தலில் புதுமையை கையாளும் 40 ஆசிரியர்களின் திறமையை காண வேண்டுமா?வாருங்கள் திருப்பத்தூருக்கு


TET லிருந்து முழுவதும் விலக்கு கேட்டு கடைசி முயற்சியாக முதன்மைக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற வேண்டுதல்.

TET லிருந்து முழுவதும் விலக்கு கேட்டு கடைசி முயற்சியாக முதன்மைக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற வேண்டுதல்கள் வைக்கும் பணியில் உள்ள TET (23/08/2010) நிபந்தனை பட்டதாரி ஆசிரியர்கள்.தினம் ஒரு புத்தகம் "நாளும் நாளும் நல்லாசிரியர் '


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "மஞ்சள் காமாலை உருவாகக் காரணம் மற்றும் தீர்வு"

பொதுவாக மஞ்சள் காமாலை நோய் பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. பித்தமானது பல காரணங்களால் மிகுதியாகி ரத்தத்தில் கலந்து விடுவதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது.

14 ஆயிரம் கோடி! 'மட்டம்' போடும் ஆசிரியர்களால் அரசுக்கு இழப்பு... 25 சதவீதம் பேரின் மோசடி தோலுரிப்பு.

கல்வித் துறையில் உள்ள பல்வேறு ஊழல்களால், கல்வித் தரம் பாதிக்கப்படுவதுடன், மக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்படுகிறது. இந்தியாவில், 25 சதவீத ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்காமல், 'மட்டம்' போடுவதால், ஆண்டுக்கு, 14 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.உலக அளவில் பல்வேறு துறைகளில் உள்ள ஊழல்கள் குறித்த ஆண்டு அறிக்கையை, ஜெர்மனியை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'டிரான்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அரசு சாரா அமைப்பு வெளியிட்டு வருகிறது.

பிளஸ் 2 வேதியியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகவில்லை: பள்ளிக் கல்வித் துறை மறுப்பு

பிளஸ் 2 வேதியியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகவில்லையென பள்ளிக் கல்வித்துறை மறுப்புத் தெரிவித்துள்ளது.  இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நெடுந்தூர ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் பணி வழங்கக்கூடாது ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.

"அதிக தூரமுள்ள ஓட்டுச்சாவடிகளில் தேர்தல்பணி வழங்க கூடாது,' என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது. மாவட்டத் தலைவர் மஸ்அமலநாதன், செயலாளர் முத்துப்பாண்டியன், பொருளாளர் குமரேசன்தேர்தல் ஆணையத்திற்கு னுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஓட்டு உள்ள ஓட்டுச்சாவடிகளில் தவிர்த்து, அருகில் உள்ள மையங்களில் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி வழங்க வேண்டும்.

தற்காலிகப் பணிநீக்கம் - விளக்கம்


ஒழுங்கு நடவடிக்கை விதிமுறைகள் (தமிழில்)


தொடக்க கல்வி டிப்ளமோ தேர்வு: மறுகூட்டலுக்கு மார்ச் 20 வரை விண்ணப்பிக்கலாம்.

தொடக்க கல்வி டிப்ளமோ தேர்வு எழுதியவர்கள் மறு கூட்டல் மற்றும், மறு மதிப்பீட்டுக்கு 20ம் தேதி வரைவிண்ணப்பிக்கலாம். மே 2015 தொடக்க கல்வி பட்டய தேர்வு விடைத்தாள் நகல் பெற கடந்த பிப்ரவரி 16 முதல்20ம் தேதி வரை விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டது.

மத்திய கல்வி மையத்தில் பேராசியர் பணி

டிமெட் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி ராஷ்ரிய சான்ஸ்கிரிட் வித்யா பீடம் அமைப்பில் காலியாக உள்ள பேராசியர், உதவி பேராசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கிளை அஞ்சலக அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

கோவை அஞ்சல் கோட்டம் மீனாட்சிபுரத்தில் காலியாக உள்ள கிளை அஞ்சலக அதிகாரி பணிக்கு ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் அலெக்சின் ஜார்ஜ் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல்கள் அளிக்க மறுத்த முதன்மை கல்வி அலுவலர் (CEO) மீது ஒழுங்கு நடவடிக்கை தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடி உத்திரவு:-


பொறியியல் படிப்புக்கு முன்கூட்டியே விண்ணப்ப விநியோகம் - அண்ணா பல்கலைக்கழகம் திட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக, இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான விண் ணப்பங்களைமுன்கூட்டியே அதாவது ஏப்ரல் இறுதி வாரத் திலேயே வழங்க என்று அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் 575-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி கள் உள்ளன.

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 431 பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு: மாவட்ட ஆட்சியரிடம் புகார்

தேனி மாவட்டம், கூடலூரில் உள்ள அரசு சுயஉதவி பெறும் பள்ளியில் படிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் 10 பேரை பொதுத் தேர்வு எழுதுவதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதிக்க மறுப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டது.

உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 118-வது இடம்: முதலிடத்தில் டென்மார்க்

உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடு டென்மார்க் என 158 நாடுகளின் தர வரிசை பட்டியலில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசத்தை விட இந்தியா பின்தங்கி 118-வது இடத்தை பிடித்துள்ளது.

தனிநபர் வருமானம், மனிதர்களின் ஆரோக்கியமான ஆயுட்காலம், சமூக ஆதரவு, ஊழல் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை தேர்வு செய்வதில் சுதந்திரம் ஆகியவை மகிழ்ச்சிக்கான அடிப்படை அம்சங்களாக கருதப்படுகின்றன.

இந்த அம்சங்களையும், ‘கால்லப் வேர்ல்ட் போல்’ என்ற சர்வேயையும் அடிப்படையாக கொண்டு, உலக அளவில் 158 நாடுகளின் நிலையை கவனத்தில் கொண்டு, மகிழ்ச்சிகரமான நாடுகளை ஐ.நா. சபையின் கீழ் இயங்குகிற ‘சஸ்டைனபிள் டெவலப்மென்ட் சொல்யூஷன்ஸ் நெட்வொர்க்’ வரிசைப்படுத்தி உள்ளது.

இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பது டென்மார்க் ஆகும். கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ஸ்சுவிட்சர்லாந்து தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஐஸ்லாந்து 3-வது இடத்திலும், நார்வே 4-வது இடத்திலும், பின்லாந்து 5-வது இடத்திலும் உள்ளன. ஆஸ்திரேலியா(9), இஸ்ரேல்(11), அமெரிக்கா(13) இடங்களை பிடித்துள்ளன.

இந்த பட்டியலில் சோமாலியா(76), சீனா(83), பாகிஸ்தான்(92), ஈரான்(105), பாலஸ்தீனம்(108) மற்றும் வங்காளதேசம்(110) உள்ளிட்ட நாடுகளைவிட இந்தியா பின்தங்கி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

அதாவது இந்திய மக்களை விட தீவிரவாதத்தாலும், அரசியல் குழப்பத்தாலும், உள்நாட்டு போராலும் இன்னும் பல வகையிலும் ஸ்திரமற்ற நிலையில் உள்ள பாகிஸ்தான், வங்காளதேசம், உக்ரைன், பாலஸ்தீனம், ஈராக் மக்கள் மகிழ்ச்சிகரமாக வாழ்வதாக இந்த பட்டியல் காட்டுகிறது.

உலகிலேயே மகிழ்ச்சி குறைந்த 5 நாடுகள் பட்டியலில் டோகோ, புரூண்டி, சிரியா, பெனின், ருவாண்டா இடம் பெற்றிருக்கின்றன.

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு: கணக்கு வினாத்தாள், வாட்ஸ் அப்பில் வெளியானது குறித்து விசாரணை-மத்திய அரசு முடிவு

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வுக்கான கணக்கு வினாத்தாள், வாட்ஸ்அப்பில் வெளியான விவகாரம் குறித்து விசாரணை

நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு மண்டலங்களில்

இருந்து லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதி வருகின்றனர். கடந்த 15-ந்தேதி கணக்கு தேர்வு நடந்தது.

இந்த வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதில் கேட்கப்பட்டிருந்த 80 சதவீத கேள்விகள் பாடத்திட்டத்தின் வெளியில் இருந்து கேட்கப்பட்டதாகவும், நன்றாக படிக்கும்

மாணவ-மாணவிகளால் கூட இந்த கேள்விகளுக்கு விடையளிக்க இயலவில்லை எனவும் செய்திகள் வெளியானது.

வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் அனைத்தையும் குறித்த நேரத்தில் எழுதி முடிக்க இயலவில்லை என மாணவர்கள்

கண்ணீருடன் தெரிவித்தனர்.

இதற்கிடையே இந்த வினாத்தாளில் இடம் பெற்றிருந்த சில கேள்விகள் பாட்னா மண்டலத்தின் சில பகுதிகளில் கடந்த 14

-ந்தேதியே வாட்ஸ்அப்பில் வெளியானதாக கூறப்படுகிறது. தேர்வுக் கூடத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித்தாளும்,

ஏற்கனவே வாட்ஸ்அப்பில் வந்திருந்த கேள்வித்தாளும் ஒரே மாதிரி இருந்தது கண்டு மாணவ-மாணவிகள் அதிர்ச்சி

அடைந்தனர்.

கடினமான வினாத்தாள் மற்றும் அது வாட்ஸ் அப்பில் வெளியானது போன்ற காரணங்களால், கணக்கு பாடத்துக்கு மறுதேர்வு

நடத்த வேண்டும் என நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளும், பெற்றோரும் கண்ணீர் மல்க கூறி

வருகின்றனர். இது தொடர்பாக ஊடகங்களிலும் செய்தி வெளியாகி உள்ளது.

இந்த விவகாரம் நேற்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பூஜ்ஜிய நேரத்தில்

இந்த பிரச்சினையை எழுப்பினர். இது குறித்து புரட்சி கர சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த என்.கே.பிரேமச்சந்திரன் கூறுகையில்,

நடந்து முடிந்த கணக்கு தேர்வை ரத்து செய்து விட்டு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் மறுதேர்வு நடத்த

உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் மற்றும் பா.ஜனதா உறுப்பினர் ரமேஷ் பிதுரி ஆகியோர், இந்த விவகாரம் குறித்து

விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இதற்கு பதிலளித்து பேசிய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையா நாயுடு, ‘இந்த விவகாரத்தில் 2 பிரச்சினைகள்

உள்ளன. ஒன்று, சில கேள்விகள் கடினமானதாக இருந்தன. நன்றாக படிக்கக்கூடிய மாணவர்களால் கூட அதற்கு விடை எழுத

முடியவில்லை என்பது. மற்றொன்று இந்த வினாத்தாளில் இடம் பெற்றிருந்த சில கேள்விகள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

இந்த விவகாரம் விசாரணைக்கு ஏற்றதுதான்’ என்று கூறினார்.

இது மாணவர்கள் மற்றும் அவர்களின் எதிர்காலம் பற்றிய விவகாரம் என்று கூறிய வெங்கையா நாயுடு, இது குறித்து

விசாரணை நடத்தப்படும் என்றும், இந்த பிரச்சினையை மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரியின் கவனத்துக்கு கொண்டு

செல்வேன் என்றும் தெரிவித்தார்.

12-ம் வகுப்பு கணிதத்தேர்வு பிரச்சினைக்கு நிபுணர் குழு தீர்வு காணும்: சி.பி.எஸ்.இ. நிறுவனம் அறிவிப்பு

12-ம் வகுப்பு கணிதத்தேர்வு கடினமாக இருந்ததற்கு நிபுணர் குழு தீர்வு காணும் என்று சி.பி.எஸ்.இ. நிறுவனம் அறிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு கணிதத்தேர்வு கடந்த 14-ந்தேதி நடந்தது. அந்த தேர்வில் மிகக்கடினமாக கேள்விகள் கேட்கப்பட்டு

இருந்தன. இதனால் பெரும்பாலான மாணவ-மாணவிகள் பல கேள்விகளுக்கு விடைகளை எழுதாமல் கண்ணீர் வடித்தனர்.

எப்படியும் மறு தேர்வு நடத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் கருணை மதிப்பெண் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு வழங்க

வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இதையொட்டி சி.பி.எஸ்.இ. நிறுவனம் தனது இணையதளத்தில் அனைவரும் அறியும் வண்ணம் ஒரு தகவலை

வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. கணித பாடத்திற்கு கடந்த 14-ந்தேதி தேர்வு நடைபெற்றது. இது தொடர்பாக மாணவர்கள், கணித

பாடத்தை கற்பித்த ஆசிரியர்கள், தேர்வுத்துறை அதிகாரிகள் போன்றவர்களிடம் கருத்து கேட்டு அந்த பாடத்திற்கான நிபுணர்

குழுவிடம் அனுப்பப்படும்.

விடைத்தாள் மதிப்பீடு செய்வதற்கு முன்பாக மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நிபுணர்குழு மூலம் தீர்வு காண

நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் திறமையை அரங்கேற்றும் விழா - ஆசிரியர் வைபவம் 2016


100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இசையமைத்து பாடல் இயற்றிய அரசுப் பள்ளி மாற்றுத்திறனாளி ஆசிரியர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. ‘மாற்றுத்திறனாளிகள் அழைக்கிறோம் நாங்க... தேர்தலிலே வாக்களிக்க வாங்க... அதை அன்போடு சொல்லுறோம் நாங்க... இதை கனிவோடு ஏத்துக்கணும் நீங்க....’ என்ற வரிகளில் நேர்த்தியான உச்சரிப்பில் பின்னணி இசையுடன் அந்தப் பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!