Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 21 March 2016

தேர்தல் நாளன்று சம்பளத்துடன் விடுமுறை: தவறாமல் வாக்களிக்கும்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வேண்டுகோள்

தமிழ்நாட்டில் தேர்தல் நாளான 16.05.2016 அன்று அனைத்து தனியார் நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்தும் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கவேண்டும். தேர்தல் நாளில் விடுமுறை வழங்கப்படுவதால் நிறுவன பணியாளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க உறுதி கொள்ள வேண்டும். 

வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படுவது தொடங்கப்பட்டு இக்குறுகிய நாட்களில் இதுவரை 38 ஆயிரம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தொலைக்காட்சிகளில் வரும் தேர்தல் செய்திகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சாதாரண மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தேர்தல் பணியாற்ற தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் பேசினார்.

தினம் ஒரு புத்தகம் யுரேகா யுரேகா "


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் 'பிஸ்தா பருப்பின் பயன்கள்"

1. நோய் எதிர்ப்பு சக்தி

பிஸ்தாவில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளது. இது, இரத்ததில் ஹீமோகுளோபின்உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. அதோடு மட்டுமில்லாது செல்களுக்கு ஆக்ஸிஜனைகொடுக்கிறது.

வைட்டமின் “பி6” ஆனது, மனிதனுக்கு நோய் எதிர்ப்புத்திறனை தருவதோடு மட்டுமில்லாமல்வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரைபராமரிப்பவதிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் ஒரு மனிதனுக்கு வைட்டமின் பி6குறைவாக இருந்தால் கண்டிப்பாக நோய் எதிர்ப்பு திறன் குறைந்து எளிதில் நோய் தொற்றுஏற்படுகிறது.

தமிழகம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் ஏப். 15 முதல் கணினி வழி எஃப்ஐஆர்- எழுத்தர், கணினி இயக்குபவருக்கு பயிற்சி

காவல் நிலையங்களில் போலீஸார் கையால் எஃப்ஐஆர் எழுதுவதற்கு விடை கொடுக்கும் வகையில், இனிமேல் கணினி எஃப்ஐஆர் வழங்கும் திட்டம் ஏப்ரல் 15-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் நடைமுறைக்கு வர உள்ளது. இதற்காக அந்தந்த காவல் நிலைய தலைமை எழுத்தர், கணினி இயக்குபவருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

பி.எப்., பணத்தை எடுக்க புதிய நெறிமுறைகள்.

பி.எப்., எனப்­படும் தொழி­லாளர் வருங்கால வைப்பு நிதி­யி­லி­ருந்து பணத்தை எடுக்க, புதிய நெறி­மு­றைகள் கொண்டு வரப்­பட்­டுள்­ளன. இதன் படி, பணியில் இருந்து வில­கி­ய­வர்கள் தங்கள் முழுத்­தொ­கை­யையும் எடுத்துக் கொள்ள முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.ஓய்வு கால திட்­ட­மான பி.எப்.,ல் ஊழியர்கள் தங்கள் ஊதி­யத்தில், 12 சத­வீதம் மாதந்­தோறும் செலுத்த வேண்டும். அதே அளவு தொகை, நிறு­வனம் சார்பில் செலுத்­தப்­படும். 

அரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக அதிகரிக்கப்படும்: தேர்தல் அறிக்கையில் தேமுதிக உறுதி.

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக அதிகரிக்கப்படும் என்று தேமுதிகவின் 2-ம் கட்ட தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப் பட்டுள்ளது.காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் நடந்த தேமுதிக மாநில மாநாட்டில், அக்கட்சியின் முதல்கட்ட தேர்தல் அறிக்கை

பாலிடெக்னிக் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்: வரும் கல்வி ஆண்டிலிருந்து அமல்.

வேலைவாய்ப்புத்திறனை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் அறிமுகம்இன்றைய உலகச்சூழலுக்கு ஏற்ப வேலைவாய்ப்புத்திறனை அதிகரிக்கும் வகையில் பாலிடெக்னிக் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. புதிய பாடத்திட்டத்தை வரும் கல்வி ஆண்டிலிருந்து அமல்படுத்த தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் முடிவுசெய்துள்ளது.

746 மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் நீட்டிக்கப்படுமா? - நிபுணர் குழு தலைமையில் ஆய்வு நடத்த முடிவு.

746 மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு விவகாரம் குறித்து நிபுணர் குழு தலைமையில் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெட்ரிகுலேஷன் தனி யார் பள்ளிகள் இயங்கி வரு கின்றன. இவற்றில் லட்சக்க ணக்கான மாணவ-மாணவிகள் கல்வி பயில்கின்றனர். மெட்ரிக் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீ காரம் வழங்கப்பட்டு, ஆண்டுதோ றும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவு வங்கியில் 441 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

பீகார் மாநில கூட்டுறவு வங்கியில் (BSCB) நிரப்பப்பட உள்ள 441 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நாளை 22.3.16 அன்று ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.

நாளை 22.3.16 அன்று  ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.
பவானி அம்மன் திருவிழா காரணமாக நாளை 22.3.16 அன்று  ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.
ஈடு செய்ய வேண்டிய வேலை நாள் : 23-04-16

வாக்குப்பதிவு தினத்தன்று விடுமுறை அளிக்காவிட்டால் மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கலாம்: ராஜேஷ் லக்கானி

வாக்குப் பதிவின் போது, விடுமுறை அளிக்காத தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது மின்னஞ்சலில் புகார் தெரிவிக்கலாம்.இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,தேர்தல் தொடர்பாக தெரிவிக்கப்படும் புகார்களை ஒரு நாளில் இருந்து அதிகபட்சம் மூன்று நாள்களுக்குள் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரியலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சுருக்கெழுத்து தட்டச்சர் பணி.

அரியலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதிஅமைச்சுப் பணியில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கான நேர்முகத் தேர்வு அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இடஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் செய்யப்படாது:மோடி உறுதி.

தலித்களுக்கான இடஒதுக்கீட்டில் எந்த விதமான மாற்றமும் செய்யப்படாது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.தலித்களுக்கான உரிமையில் தலையிட யாருக்குமே அதிகாரம் இல்லை. இதுபோன்ற பொய்யான தகவல்களை எதிர்க்கட்சிகள் பரப்பி வருவதாகவும் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.பி.ஆர். அம்பேத்கரின் தேசிய நினைவு மண்டபத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துப் பேசிய பிரதமர் இவ்வாறு கூறினார்.

பிளஸ் 2: வேதியியல் விடைத்தாள் திருத்தும் பணி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு

பிளஸ் 2 வேதியியல் பாட விடைத்தாள் திருத்தும் பணி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்ட்டுள்ளது.கடந்த மார்ச் 14-ம் தேதி பிளஸ் 2 வேதியியல் படிப்புக்கான தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் கடினமான வினாக்கள் இடம் பெற்றிருந்ததாகத் தேர்வு எழுதிய மாணவர்கள், வேதியியல் பாட ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

EMIS - 17.03.2016 முடிய மாவட்ட வாரியாக"ONLINE" இல் EMIS பதிவு செய்த பள்ளிகளின் எண்ணிக்கை விபரம்

கல்வித்தரம் குறைந்து வருவதற்கு அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு: பாராளுமன்ற குழு அறிக்கை

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் ஒரு பாராளுமன்ற குழு செயல்பட்டு வருகிறது. பாரதீய ஜனதா எம்.பி., சத்திய நாராயண ஜாத்தியா தலைமையிலான இந்த குழு தனது 274-வது அறிக்கையில், நாட்டின் கல்வித்தரம் குறைந்து போனது குறித்து குறிப்பிட்டுள்ளது.

அதில், கல்வித்தரம் குறைந்து வருவதற்கு அரசு கல்வி நிறுவனங்களும், தனியார் கல்வி நிறுவனங்களும் பொறுப்பு என கூறப்பட்டுள்ளது.

அத்துடன், ‘பல்கலைக்கழக மானிய குழுவின் மீதும், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் மீதும் சமீபத்தில் புகார்கள் வந்துள்ளன. அவை தீவிரமான புகார்கள் ஆகும். அவை தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நேர்மையும், வெளிப்படையான தன்மையும் இந்த கணத்தில் தேவை. அவர்கள் பொறுப்பு கூற வைக்கப்படுவதோடு, வெளிப்படையானவையாகவும் இருக்க வேண்டும்’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. ஆனால் அந்த பதிலில் பாராளுமன்ற குழு திருப்தி அடையவில்லை என தெரிய வந்துள்ளது.

தொலைதூர கல்வியை (அஞ்சல் வழி கல்வி) பொறுத்தமட்டில், பாரதீய தொலைதூர கல்வி மசோதா கொண்டு வரவேண்டும் என்று பாராளுமன்ற குழு அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதும் 908 ஐ.பி.எஸ். அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன: மத்திய உள்துறை அமைச்சகம்

இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்குமான அனுமதிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணியிடங்கள் 4 ஆயிரத்து 802. அதில் தற்போது 3 ஆயிரத்து 894 பணி இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான 908 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 114 பணி இடங்கள் காலியாக உள்ளன. அந்த மாநிலத்தில் அனுமதிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான பணியிடங்கள் 517 ஆகும். மேற்கு வங்காளத்தில் அனுமதிக்கப்பட்ட 347 பணியிடங்களில் 88 பணி இடங்கள் காலியாக உள்ளன.

கர்நாடக மாநிலத்தில் 215 பணியிடங்களில் 143 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். ஒடிசா மாநிலத்தை பொறுத்தமட்டில் 188 பணியிடங்களில் 109 பணியிடங்கள் நிரப்பப்பட்டு இருக்கின்றன. இதே போல் மராட்டியம், மத்திய பிரதேசம், காஷ்மீர், மற்றும் யூனியன் பிரேதங்களிலும் கணிசமான ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

இந்த தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. 

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!