Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 22 March 2016

செயற்கைக்கோள் வழிக்கல்வி இன்னும் நடைமுறைக்கு வராமல்கனவு திட்டங்களாகவே உள்ளன.

மாணவ, மாணவியர், தங்களின் பாட புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு, பல குறிப்புகளையும், தகவல்களையும் அறிந்து கொள்ள, கணினி வழி கற்பித்தல் முறை முக்கியம். இதை உணர்ந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2பயிலும் மாணவ, மாணவியருக்கு, இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது.இதைத் தொடர்ந்து, 'அனைத்து வகுப்புகளிலும் படிக்கும் மாணவ, மாணவியர் பயன்பெறும் விதமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர், ஆசிரியைகளின் வகுப்பறை கற்றல் மேம்படுத்தப்படும்.

தினம் ஒரு புத்தகம் 'அறிவியல் களஞ்கியம் '


Teachers Talent Show- First Time In Tirupattur

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் 'மிளகுத்தூள் தரும் ஆரோக்கிய நன்மைகள்!"

மிளகுத்தூள், செரிமானம், தும்மல், சளி, கபம், பொடுகு, பல்வலி என உடல் முழுவதிலும் ஏற்படும் பலவகையான உடல்நல பிரச்சனைக்கு தீர்வளிக்கக் கூடியது. வயிறு நிறைய உணவு உண்ட பிறகு செரிமானம் ஆக கொஞ்சம் சிக்கல் ஏற்படும். அந்த வேளையில் மிளகுத்தூளை மோரில் கலந்து குடித்து வந்தால் செரிமானத்தை சீராக்கும்.

Results of Departmental Examinations - DECEMBER 2015 (Updated on 21 March 2016)


Results of Departmental Examinations - DECEMBER 2015
(Updated on 21 March 2016)
Enter Your Register Number :                                                         
 

Tamil University (DDE) May 2016 UG Examinations Time Table

Important Spelling Rules and Syllable Chart !!பிளஸ்-2 வேதியியல் தேர்வில் கருணை மதிப்பெண் 6 வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு

பிளஸ்-2 வேதியியல் தேர்வில் தவறாக கேட்கப்பட்ட 2 கேள்விகளுக்கு பதில் அளிக்க முயற்சி செய்திருந்தால் அந்த மாணவருக்கு கருணை மதிப்பெண் 6 கொடுக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

பெண் ஆசிரியர்கள் -2016 சட்ட மன்ற தேர்தல் பணி சார்பாக உயர் நீதிமன்றம் -மதுரை கிளை -வழக்கு காரணமாக -பல்வேறு சலுகைகள் வழங்கி ஆணை.

டாட்டா சங்கம் -ஆசிரியர்கள் -பெண் ஆசிரியர்கள் -2016 சட்ட மன்ற தேர்தல் பணி சார்பாக உயர் நீதிமன்றம் -மதுரை கிளை -வழக்கு காரணமாக -பல்வேறு சலுகைகள் வழங்கி அதற்கானஆணைகளை -தமிழக தலைமை தேர்தல் அலுவலர் திரு.ராஜேஷ் லக்கானி .இ .ஆ.ப. அவர்கள் அனுப்பி உள்ளார்கள் .இதை டாட்டா மாவட்ட பொறுப்பாளர்கள் பெற்று தங்கள் மாவட்ட ஆட்சியரிடம் சமர்பிக்க வேண்டுகிறேன்.-TATA KIPSON
1.பெண்களுக்கு பணி புரியும் ஒன்றியத்தில் அல்லது அதே சட்டமன்ற தொகுதியில் பணிவழங்கப்படும் .2. அனைத்து வாக்கு சாவடியிலும் ஒரு ஆண் வாக்கு சாவடி அலுவலர் நியமிக்க படுவார்கள் .3.கர்ப்பிணிகள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு வழங்கப்படுகிறது.

2016 ஜூன் இல் தேர்வு நிலை அடைய உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்காக கீழே உள்ள அரசாணை...


பட்டதாரிகளுக்கு 270 உதவி கமாண்டன்ட் பணி: யூபிஎஸ்சி அறிவிப்பு.

மத்திய ஆயுதப்படை போலீஸ் (சி.ஏ.பி.எப்.) பிரிவுகளில் காலியாக உள்ள 270 உதவி கமாண்டன்ட் பணியிடங்களை 'சென்ட்ரல் ஆர்ம்டு போலீஸ் போர்சஸ் (ஏ.சி.) எக்ஸாமினேசன்-2016' எனப்படும் இந்த தேர்வின் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை யூபிஎஸ்சி. வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி - காலியிடங்கள் விவரம்:

6,368 அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

மேற்கு வங்க அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல துறையில் நிரப்பப்பட உள்ள 6,368 Medical officer specialist பணியிடங்களுக்கான அறிவிப்பை மேற்கு வங்க சுகாதார பணியாளர் தேர்வாணையம்  (WBHRB) வெளியிட்டுள்ளது. இதற்கு  தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

200 செவிலியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின்கீழ் போபாலில் செயல்பட்டும் வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் மையத்தில் (எய்ம்ஸ்) காலியாக உள்ள 200 ஸ்டாப் நர்ஸ் (கிரேடு2) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கட்டாய உரிமையாக்கியும், 60 லட்சம் பேருக்கு கல்வி எட்டாக்கனி.

புதுடில்லி: அனைவருக்கும் கல்வி வழங்கும் வகையில், கல்வியை அடிப்படைஉரிமையாக அறிவித்து, ஆறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும்,நாடு முழுவதும், 60 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.நாட்டில், 6 - 14வயது வரைஉள்ள குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய,இலவச கல்வியை அளிக்கும் வகையில்,கல்வியை அடிப்படை உரிமையாக அறிவிக்கும்,கல்வி உரிமை சட்டம், 2010ல் அமல்படுத்தப்பட்டது.

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு வருமானவரித்துறை’நோட்டீஸ்’

சேலம்: பனமரத்துப்பட்டி யூனியனில் உள்ள அரசு தொடக்க,நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள்,வருமானவரி கணக்கை தாக்கல் செய்யும்படி,நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.சேலம்,பனமரத்துப்பட்டி யூனியனில், 50க்கும் மேற்பட்ட தொடக்க,நடுநிலைப் பள்ளிகளில், 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

மாணவி கண் பாதித்த விவகாரம்; ஆசிரியர்கள் மீது வழக்கு

வேலூர்: குடியாத்தம் அருகே,பள்ளி மாணவியின் கண் பாதிக்கப்பட்ட சம்பவத்தில்,அஜாக்கிரதையாக இருந்த தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் மீது,போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.வேலூர் மாவட்டம்,குடியாத்தம் அடுத்த நத்தத்தைச் சேர்ந்த பாலாஜி மகள் கோட்டீஸ்வரி, 11.இவர்,இந்திரா நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்,ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 9ம் தேதி பள்ளியில் செயல் முறை விளக்கம் நடந்தது.

அப்போது,கெமிக்கல் கலந்த கண்ணாடி குவளை கீழே விழுந்தது. அதிலிருந்து தெறித்த தண்ணீர் மாணவி கோட்டீஸ்வரியின் கண்ணில் பட்டதால்,வலது கண்ணில் பார்வை பாதிக்கப்பட்டது.இதனால் மாணவி,வேலூர் சி.எம்.சி.,மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு,சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாணவியின் தந்தை பாலாஜி,குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி,வேதியியல் ஆசிரியர் பரசுராமனை சஸ்பெண்ட் செய்தார்.இந்நிலையில்,பள்ளி தலைமை ஆசிரியை மார்க்ரெட்,வகுப்பு ஆசிரியர் காயத்ரி ஆகியோர் மீது,அஜாக்கிரதையாக இருத்தல்,கவனக்குறைவாக இருத்தல் ஆகிய பிரிவுகளில்,போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

+2 வேதியியல் வினாத்தாள் திருத்தம் வரும் 23ம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 4ம் தேதிக்கு தள்ளிவைப்பு.

​ 2 வேதியியல் தேர்வு விவகாரம்: கருணை மதிப்பெண் வழங்க முடிவு.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் வேதியியல் பாடத்திற்கான கேள்வித் தாளில் 2 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருந்த விவகாரத்தில், கருணை மதிப்பெண் வழங்கபள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

TNPSC DEPARTMENT EXAM DEC 2015 LIST OF PUBLISHED RESULT -PAPERS DETAILS AS ON 21/03/16


வேதியியல் விடைத்தாள் திருத்தும் பணி நிறுத்தம்.

பிளஸ் 2 வேதியியல் விடைத்தாள் திருத்தும் பணி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.கடந்த 14ம் தேதிவேதியியல் தேர்வு நடந்தது. தேர்வில்கடினமான வினாக்கள் இடம்பெற்றிருந்ததாக மாணவர்கள், ஆசிரியர்கள் தெரிவித்தனர். வினாத்தாள் கடினமாக இருந்ததால் விடைத்தாள் திருத்தும் பணியை தள்ளி வைக்கவேண்டும். மறு தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில் மாற்றம் செய்யப்பட்ட '15 நிமிடங்கள்'.

பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில் இந்தாண்டு ஒரு மதிப்பெண் பகுதிக்கும், தியரி பகுதிக்கும் நேரம் ஒதுக்கீட்டில் 15 நிமிடங்கள் மாற்றம் செய்யப்பட்டது.கடந்தாண்டு காலை 10.15 மணிக்கு தேர்வு துவங்கி, 75மதிப்பெண்ணிற்கான ஒரு மதிப்பெண் வினா பகுதி காலை 11.30 மணி வரை, தியரி பகுதி 11.30 முதல் 1.15 மணி வரை எழுத அனுமதிக்கப்பட்டது.

மின் வாரிய வேலை தேதியை நீட்டிக்க கோரிக்கை.

'தமிழ்நாடு மின் வாரிய தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாததால், கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும்' என, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மின் வாரியம், உதவியாளர் உட்பட, 2,175 பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கு, விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள். ஒரே நேரத்தில், பலரும் விண்ணப்பித்ததால், இணையதளத்தின் வேகம் குறைந்தது.

ஏ.டி.எம்., மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்!

ஏ.டி.எம்., என்ற தானியங்கி பணம் எடுக்கும் மையத்தில், மின் கட்டணம் செலுத்தும் சேவையை துவக்க, தமிழ்நாடு மின் வாரியம் முடிவு செய்துஉள்ளது.தமிழ்நாடு மின் வாரியம், வீடுகளில், மின் பயன்பாடு கணக்கு எடுத்ததில் இருந்து, 20 நாட்களுக்குள், கட்டணத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால், மின் இணைப்பு துண்டிக்கப்படும். அபராதத்துடன் கட்டணம் செலுத்தியதும், மின் இணைப்பு வழங்கப்படும்.

மும்மொழி கல்வித் திட்டம் தேவை:தனியார் பள்ளிகள் சங்கம் தீர்மானம்.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் சங்க பொதுகுழுக் கூட்டம், மாநில தலைவர் கனகராஜ் தலைமையில், பொதுச் செயலர் நந்தகுமார் முன்னிலையில், சென்னையில் நடந்தது.இதில், தனியார் பள்ளிகளின் பல்வேறு பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின், 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு பிளஸ் 2 'ரிசல்ட்' தாமதமாகும் அபாயம்.

விடைத்தாள் திருத்தும் பணிக்கு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் வர மறுப்பதால், 'ரிசல்ட்' வெளியாவதில் தாமதம் ஏற்படும் என, தெரிகிறது.பிளஸ் 2 பொதுத்தேர்வில், மொழி பாடங்கள் மற்றும் இரண்டு வகை முக்கிய பாடங்களுக்கு தேர்வுகளும் முடிந்துள்ளன. முதல் கட்ட மாக, 8.5 லட்சம் மாணவர்கள் எழுதிய மொழி பாடங்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி துவங்கி உள்ளது.

Tamilnadu Revised Scales of Pay Rules,2009- Grant of one additional increment of 3% of basic pay to employees on award of Selection Grade/Special Grade in the revised scales of pay - Orders - Issued on GO.237 ( Finance Dept) Dt.22.07.2013 GO.237 ( Finance Dept) Dt.22.07.2013


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!