Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 24 March 2016

வங்கி பணிக்காக காத்திருப்போர் விரைந்து விண்ணப்பித்திடுங்கள்!

அனைவராலும் நபார்டு வங்கி என அழைக்கப்படும் வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு தேசிய வங்கியில் கிரேடு 'ஏ' மற்றும் 'பி' பணியிடங்களான உதவி மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "ஆரோக்கியமான பற்கள் வேண்டுமா?"

ஆரோக்கியமான பற்களே ஆரோக்கியமான வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன என்கின்றது மருத்துவ உலகம். பண்டைய காலத்தில் பல் போனால் சொல் போச்சு என்ற பழமொழி உண்டு. இன்றைக்கு பற்கள் பாதிக்கப்பட்டால் இதயம், பக்கவாதம் போன்ற நோய்களும் எட்டிப்பார்க்கும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே பற்களை ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டியது அவசியம்.

தினம் ஒரு புத்தகம் "ஈஸியா பேசலாம் இங்கிலீஷ் "


தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி கழகத்தில் பணி

தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி கழக நிறுவனத்தில் (டுபிட்கோ) நிரப்பப்பட உள்ள பொது மேலாளர், மேலாளர், இளநிலை மேலாளர், கம்ப்யூட்டர் புரோகிராமர், ஸ்டெனோ உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காரைக்குடி மின்வேதியியல் ஆய்வு மையத்தில் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணி

தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி மையம்த்தில் நிரப்பப்பட உள்ள 24 ஆராய்ச்சியாளர், முதுநிலை ஆராய்ச்சியாளர், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் போன்றபணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

+2 க்குபிறகு படிக்க டாப் 10 படிப்புகள்

டாப் 10 படிப்புகள் , கல்வி ஆலோசகர் மற்றும் திறனாய்வாள​ரான ஜெயபிரகாஷ் காந்தி
காலேஜ் கேம்பஸ்
டாப் 10 படிப்புகள்
உங்களுக்கு உதவத்தான் முக்கியமான கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள்.. என்று ஒரு குழுவே இணைந்து, ஆராய்ந்து, முத்தான இந்தப் பத்து படிப்புகளையும் வரிசைப்-படுத்தியுள்ளது.

வேளாண் செயல்முறைகள் தேர்வு எளிது கால்நடை மருத்துவ 'கட் ஆப்' உயரும்:

வேளாண் செயல்முறைகள் தேர்வு எளிதாக இருந்ததால், கால்நடை மருத்துவப் படிப்புக்கான, 'கட் ஆப்' மதிப்பெண் உயர வாய்ப்புள்ளது.பிளஸ் 2 தேர்வில், நேற்று, 'இண்டஸ்ட்ரியல் இன்ஜி.,'வேளாண் செயல்முறைகள் உட்பட, 12 தொழிற்கல்வி பாடங்களுக்கு தேர்வுகள் நடந்தன.

மாணவர்களின் ஆதார் எண் விவரம்: சேகரித்து தர தலைமை ஆசிரியர்கள் தயக்கம்.

பள்ளி மாணவர்களின் ஆதார் எண் விவரங்களை சேகரித்து தர, பல முறை உத்தரவிட்டும், பெரும்பாலான பள்ளி தலைமைஆசிரியர்கள் அலட்சியப்போக்குடன் உள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்துள்ள கல்வித்துறை நிர்வாகம், உடனடியாக விவரங்களை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தேர்வு நேரத்தில் ஆர்.எம்.எஸ்.ஏ.,பயிற்சி; ஆசிரியர்கள் புலம்பல்.

தேர்வு நேரத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.பத்தாம் வகுப்பு தேர்வு ஏப்.,13வரை நடக்கிறது. ஆறு முதல்9ம் வகுப்பு களுக்கு ஏப்ரலில் தேர்வு துவங்குகிறது. தேர்வு சமயத்தில் சமூக அறிவியல் பட்டதாரிஆசிரியர்களுக்கு அனை வருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் மூலம் மார்ச்18முதல் ஏப்., 6வரை10நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.

செவிலியர் பள்ளி அங்கீகாரம் ரத்து; மாணவர்களுக்கு பிரச்னையில்லை.

திண்டுக்கல் மாவட்டத்தில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட5ஆயிரம் மாணவ,மாணவிகளுக்கு படிப்பில் பிரச்னை ஏற்படாதுஎன,தமிழ்நாடு அனைத்து தனியார் தொழிற் கல்வி பயிற்சி மைய நலச்சங்கம் தெரிவித்துள்ளது.இதன் தலைவர் ஜோதிமுருகன்,செயலாளர் சபரி இந்திரகோபால்,பொருளாளர் சக்திவேல் கூறியதாவது:உதவி செவிலியர்,செவிலியர் பயிற்சி பள்ளிகள் அங்கீகாரம் பெற்றது தொடர்பாக மருத்துவ இணை இயக்குனர் ரவிக்கலா நடவடிக்கை எடுத்து வருகிறார்.

ஆதார் எண் விவரம் சேகரிக்காத ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

மாணவர்களின் ஆதார் எண் விவரம் சேகரிக்காத, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின், ஆதார் எண் விவரங்களை சேகரிக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.

புதிய வண்ணத்தில் பிளஸ் 2 சான்றிதழ்

இந்த ஆண்டுக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நவீன, '2 டி பார்கோடு' மற்றும், 'வாட்டர் மார்க்' என்ற, ரகசிய குறியீடுடன் பளிச்சிடும் வண்ணத்தில் தயாராக உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தேர்வு முடிவுகளை, சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியிட, பள்ளிக்கல்வித் துறையும் மற்றும் தேர்வுத் துறையும் திட்டமிட்டு உள்ளன.

வருமான வரி கட்டவில்லை என நோட்டீஸ் வருகிறதா???

வருமான வரி கட்டவில்லை என நோட்டீஸ் வருகிறதா ??? உடனடியாக TDS பைல் செய்ய வேண்டும் !14/9/14 நாளிட்ட அரசு ஊழியர், ஆசிரியர்கள் வருமான வரி பிடித்தம்தொடர்பாக தமிழக அரசின் அறிவுரை....

சென்னை ஐ.ஐ.டி., 'ஜாம் ரிசல்ட்' வெளியீடு.

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி.,நடத்திய, முதுகலை பட்டப்படிப்புக்கான, 'ஜாம்' நுழைவுத்தேர்வு முடிவு, நேற்று வெளியிடப்பட்டது.பி.இ., - பி.டெக்., - பி.எஸ்சி., போன்ற அறிவியல் தொடர்பான, இளநிலை முடித்தவர்கள், ஐ.ஐ.டி., நிறுவனங்களில், எம்.எஸ்சி., முதுகலை மற்றும் பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வான, 'ஜாம்' தேர்வை எழுத வேண்டும்.

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஏப்.4-இல் கலந்தாய்வு:

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னையில் ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!