Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 26 March 2016

அங்கீகாரம் முடியும் தனியார் பள்ளிகள் எவை:பட்டியல் வெளியிட கோரிக்கை:

வரும் மே மாதத்துடன் அங்கீகாரம் முடியும், 746 பள்ளிகள் எவை என தெரியாமல், பெற்றோர் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.இந்த பள்ளிகளின் பட்டியலை, இணையதளத்தில் வெளியிடகோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், போதிய நிலம் இல்லாத, 746 பள்ளிகளுக்கு, ஐந்து ஆண்டுகளாக தற்காலிக அங்கீகார நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த பள்ளிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்க, தமிழக பள்ளிக் கல்வித் துறை அரசாணை பிறப்பித்தது.இதை எதிர்த்து, சமூக ஆர்வலர், 'பாடம்' நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, 'மே, 31ம் தேதியுடன் இந்த பள்ளிகளுக்கு, அங்கீகாரம் முடிகிறது; இனி, அங்கீகாரம் நீட்டிக்கப்படாது' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.வரும் கல்வி ஆண்டில், ஜூன் முதல், 746 பள்ளிகளின்அங்கீகாரம் ரத்தாவதால், மாணவர்களை சேர்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போது படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த வகையில், ஐந்து லட்சம் மாணவர்; 25 ஆயிரம் ஆசிரியர்களின் கதி என்ன என தெரியாமல் பள்ளிகள் தவிக்கின்றன.இதே போல், மாணவர்களின் பெற்றோரும் கூடுதல் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஜூன் முதல், 746 பள்ளிகள் மூடப்படுமா; அவை எந்த பள்ளிகள்; நம் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளா; பள்ளிகளை மூடினால் மாற்று ஏற்பாடு என்ன? என, தெரியாமல் தவிக்கின்றனர்.

பெற்றோர் சிலர் கூறும்போது, 'குழப்பத்தை தீர்க்க, தமிழக பள்ளிக் கல்வித் துறை, அரசு இணையதளத்தில், அங்கீகாரம் இழந்த பள்ளிகளின் பட்டியலை, முகவரியுடன் வெளியிட வேண்டும். அங்கீகாரம் முடியும் பள்ளிகளின் மாணவர்களை, மற்ற பள்ளிகளில்சேர்க்க, அரசே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து, தெளிவான அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை வெளியிட வேண்டும்' என்றனர்

தினம் ஒரு புத்தகம் "தமிழ் இலக்கிய வரலாறு "


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "மருத்துவப் பயன்கள் நிறைந்த ரோஜா குல்கந்து"

ரோஜா இதயத்திற்கு மிகவும் நல்லது. ரோஜா வைத்து செய்யப்படும் குல்கந்தும் இதய நோயாளிகளுக்கு நல்ல இதமான மருந்து.

இதய நோயாளிகள் மட்டுமல்ல வயிறு கோளாறுகள் உள்ளவர்களும் குல்கந்தை சாப்பிடலாம்.

மேலும், குல்கந்து முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும்.

Model Public Exam for SSLC English II Paper

English II Paper - Selected Questions Test

G.O (2D). No. 6 Dt: February 19, 2016அறிவிப்புகள் - சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை - வளரிளம் பருவத்திலுள்ள மாணாக்கரிடையே தற்கொலை எண்ணத்தினைˆ தவிர்க்க ஆலோசனை வழங்கும் திட்டம் .15.04 இலட்சம் ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.


ஒரு ரூபாய் இருந்தால் லேப்டாப் வாங்கலாம்.! டெல் நிறுவனம் அதிரடி!

டெல் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 'பேக் டூ ஸ்கூல்' எனும் திட்டத்தை துவக்கி மாணவர்களுக்கு புதிய லேப்டாப் கருவிகளை வெறும் 1 ரூபாய்க்கு வழங்குகின்றது. மீதி தொகையை தவனை முறையில் செலுத்தினால் போதும் என தெரிவித்துள்ளது. இந்த சலுகை மே மாதம் நிறைவடைகின்றது.
டெல் நிறுவனம் அறிவித்திருக்கும் பேக் டூ ஸ்கூல் திட்டம் மார்ச் 22 ஆம் தேதி முதல் மே மாதம் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும். அனைத்து டெல் லேப்டாப் கருவிகளும் பேக் டூ ஸ்கூல் திட்டத்தில் கிடைக்கின்றது.

தமிழ்நாடு திருத்திய ஊதிய விகிதம் 2009 - இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்கள் /தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெருவோருக்கு பதவிஉயர்வில் ஊதிய நிர்ணயம் செய்தல் -தெளிவுரைகள்


15169 பகுதிநேர பயிற்றுநர்களுக்கு நிரந்தர வேலை வழங்குவதற்காக ஆண்டுக்கு 1000 கோடி அரசு செலவிட கோரிக்கை!!!!!.

பகுதிநேர பயிற்றுநர் பணி  நியமனங்கள், இந்தியா முழுவதும் திட்டத்தின்அடிப்படையிலான பணியாக, மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிதிபங்களிப்புடன்(65%:35%, 60%:40%, 50%:50%) அனைவருக்கும் கல்விஇயக்கம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தமிழக அரசு இவ்வேலையை ஓராண்டு சாதனை வேலையாக 2012ம் ஆண்டு அறிவித்து வழங்கியது. பள்ளிக்கல்வித்துறை அரசாணைஎண் School Education(C2) Department G.O.(MS) No.177Dated:11.11.2011ன்படி 16549 பகுதி நேர பயிற்றுநர்களை தேர்வு செய்ய,முறைப்படி விளம்பரங்களை வேலைவாய்ப்பு அலுவலகம்  மூலமும், தினசரிநாளிதழ்கள் மூலமும் செய்தது.

10ம் வகுப்பு விடை திருத்தம் ஏப். 15ல் துவக்கம்:கருணை மதிப்பெண் எதிர்பார்ப்பு.

தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், ஏப்., 15 முதல்துவங்குகிறது. 'தமிழ் தேர்வில் இடம்பெற்ற குழப்பமான வினாக்களுக்கு, கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், முக்கிய பாடங்களின் தேர்வுகள், ஏப்., 11ல் முடிகின்றன.

மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்களிக்க முன்னுரிமை: தேர்தல் ஆணையம் உத்தரவு.

மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நிற்க வைக்காமல், வாக்களிக்க முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் மாற்றுத் திறனாளிகளுக்கு என்னென்ன வசதிகளைச் செய்து தர வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு:-

7 வயது அரசு பள்ளி மாணவி தேர்தல் தூதுவராக அறிவிப்பு.


தமிழகத்திலுள்ள, 234 தொகுதி பெயர்களை, மனப்பாடமாக சரளமாக ஒப்பித்து, 7 வயது அரசு பள்ளி மாணவி அசத்தினார். அவருக்கு, பணமுடிப்பு வழங்கிய சப் - கலெக்டர், தேர்தல் துாதுவராகவும் அறிவித்தார்.சட்டசபைதேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, ஓட்டளிக்க வாருங்கள் என்ற தலைப்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு கலைக் கல்லுாரியில், நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.

மதிய உணவு திட்டம் கண்காணிக்க மாவட்டத்தில் இருவர் குழு.

மதிய உணவு திட்டத்தை கண்காணிக்கும் பொருட்டு,மாவட்ட அளவில் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் பட்டியல் சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இக்கண்காணிப்பு பணியில் ஈடுபட, மாவட்டத்தில் ஒரு தலைமையாசிரியர், ஒரு ஆசிரியர் அடங்கிய, இருவர் குழுவை தேர்வு செய்து விபரங்களை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செவிலிய பட்டயப்படிப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 7 கடைசி.

செவிலிய பட்டயப் படிப்புக்கான பருவத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 7-ஆம் தேதி கடைசித் தேதியாகும்.செவிலியப் பட்டயப் படிப்புக்கான ஜூலை-ஆகஸ்ட் 2016 பருவத் தேர்வுகளை எழுதும் மாணவர்களின் விண்ணப்பம், தேர்வுகளை நடத்தும் தகுதியுள்ள ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் ஆகியவற்றை அந்த பயிற்சிப் பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக்காக ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 100 தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

G.O (2D). No. 6 Dt: February 19, 2016அறிவிப்புகள் - சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை - வளரிளம் பருவத்திலுள்ள மாணாக்கரிடையே தற்கொலை எண்ணத்தினைˆ தவிர்க்க ஆலோசனை வழங்கும் திட்டம் .15.04 இலட்சம் ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேர்தல் பிரசாரத்துக்கு பள்ளி மைதானத்தை பயன்படுத்தலாமா?: தேர்தல் ஆணையம் நிபந்தனை

தேர்தல் பிரசாரத்துக்காக பள்ளி மைதானத்தை பயன்படுத்தலாமா? என்பதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகளில் கூறப்பட்டிருப்பதாவது:-

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!