Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 27 March 2016

அமெரிக்க பள்ளிகளில் வணக்கம் சொல்வதற்கு தடை

அமெரிக்க பள்ளிகளில் இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.       பெற்றோர்களின் எதிர்ப்பால் யோகா கற்றுத் தருவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், யோகா கிறிஸ்துவ மத கலாச்சாரத்திற்கு எதிராக உள்ளதாகவும், வணக்கம் சொல்லும் முறை மத உணர்வுகளை பாதிப்பதாக உள்ளதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது அமெரிக்க பள்ளிகளில் வணக்கம் சொல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியக்குழு உயர்வு எப்போது!

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியக்குழு உயர்வு எப்போது!
மிக அருகில் வந்துவிட்டது, அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஏழாவது ஊதியக்குழு.
'நடப்பு நிதியாண்டிலேயே (2016-17) ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமலாக்கம் செய்திட 1.02 லட்சம் கோடி தேவை என கணக்கிடப்பட்டு, ரூ.70,000-யை கோடி பொது பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துவிட்டார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்' என்ற அறிவித்துவிட்டார்.

Manonmaniam Sundaranar University Application Form for obtaining Degree Certificate- Special Convocation Form for all UG/PG Courses & Instructions to Candidates Spl.Convocation Fee Rs.1000/-

குழந்தைகளை பாதுகாக்க ரோட்டோ வைரஸ் தடுப்பூசி திட்டம்

குழந்தைகளுக்கான ரோட்டோ வைரஸ் தடுப்பூசி திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா புவனேஸ்வரத்தில் நேற்று தொடங்கிவைத்தார்.

இந்தியாவில் வயிற்றுப்போக்கினால் 1 முதல் 5 வயதுக்கு உட்பட்ட 80 ஆயிரம் குழந்தைகள் ஆண்டுதோறும் பலியாகின்றனர். இதை கட்டுப்படுத்த ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் ரோட்டோ வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசிய அளவிலான ரோட்டோ வைரஸ் தடுப்பூசி திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் நேற்று தொடங்கிவைத்தார். இத்திட்டத்தில் நாடு முழுவதும் 2.7 கோடி குழந்தை களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.-பிடிஐ

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "வாய் ருசிக்கோ வயிற்றுப் பசிக்கோ சாப்பிடக் கூடாது மருத்துவர் கு. சிவராமன்'

வாய் ருசிக்கோ வயிற்றுப் பசிக்கோ சாப்பிடக் கூடாது, நாம் சாப்பிடும் உணவு நோயைத் தடுக்க வேண்டும், வந்த நோயை விரட்ட வேண்டும் என்றார் சித்த மருத்துவர் ஆறாம் திணை கு. சிவராமன்.

தினம் ஒரு புத்தகம் "நூறு சிறந்த சிறுகதைகள் '


தற்காலிகப் பணிநீக்கக் (Suspension) காலத்தில் வழங்கப்படும் ஊதியம்.தனித்தேர்வர்களூக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 2016- தேர்விற்கான கால அட்டவணைகடித.எண். 20506/ஏ2/2015-1 Dt: June 05, 2015 அலுவலக நடைமுறை - கோப்புகளை முழுமையாக கூர்ந்தாய்வு செய்து தேவைப்படும் விவரங்கள் முதல்முறையிலேயே கோரப்பட வேண்டும் - அறிவுறுத்தங்கள் - வெளியிடப்படுகின்றன.


Ministry of Human Resource Development (MHRD)- Setting up of Empowered Committee for Mid Day Meal Scheme


"ஓய்வு பெறும் ஆசிரியர்கள் தொடர்ந்து கல்விப்பணி ஆற்றுங்கள்'

அரசுப் பணியில் ஓய்வு பெற்றாலும் உடல்நலம் அனுமதிக்கும் பட்சத்தில் தங்களைச் சுற்றியுள்ள பகுதியில் தொடர்ந்து கல்விப் பணியாற்றுங்கள் என அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமத் தலைவர் டி.ஆர்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.அரக்கோணம் வட்டாரத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் சார்பில் பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பணி நிறைவுப் பாராட்டு விழா அரக்கோணத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஒழுங்கு நடவடிக்கை 17(a) மற்றும் 17(b) முறைகள்.


பாடம் நடத்தாமல் ஓய்வறையில் அரட்டை: அரசு பள்ளி ஆசிரியர்கள் கூண்டோடு சஸ்பெண்ட்

மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டிய நேரத்தில் பாடம் நடத்தாமல் ஓய்வறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தர்மபுரி விடைத்தாள் திருத்தும் மையத்தில் உடைந்து விழுந்த சீலிங்: தப்பிய ஆசிரியர்கள்

தர்மபுரி அவ்வையார் அரசு மேல்நிலைப்பள்ளியில், விடைத்தாள் திருத்தும் மைய கட்டடத்தின் சீலிங் திடீர் என இடிந்து விழுந்தது. அப்போது ஆசிரியர்கள் அங்கு இல்லாததால் அதிர்ஷ்ட வசமாக உயர் தப்பினர்.

தேசிய கீதத்தில் திருத்தம் இல்லை:மத்திய அரசு திட்டவட்டம்:

தேசிய கீதத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென்ற, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியின் கோரிக்கையை, மத்திய அரசு நிராகரித்து ள்ளது. 

BE எது முன்னணி படிப்பு?

பிளஸ் 2 படித்து முடிக்கும் மாணவர்களுக்கு பொறியியல்படிப்பில் எந்தத் துறையில் சேருவது என்ற குழப்பம் ஏற்படுவதுவழக்கம். எது முன்னணி படிப்பு, எதில் சேர்ந்தால் எதிர்காலத்தில்வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்ற குழப்பம் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்கும் ஏற்படும்.இதுகுறித்து தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் முதன்மையர் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ்.வைத்திய சுப்பிரமணியம் தெரிவித்தது:

ஏப்.3-இல் மத்திய ஆயுத காவல்படைப்பணி தகுதித்தேர்வு.

மத்திய ஆயுத காவல் படையில்(இதடஊ) உதவி காவல் ஆய்வாளர்(ஸ்டெனோ)பணிக்கான தகுதித்தேர்வு ஏப்.3-ஆம் தேதிநடக்கவிருக்கிறது.இது குறித்து மத்திய ஆயுத காவல்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

பூத் சிலிப்' விவகாரத்தில் தேர்தல் கமிஷன்கண்டிப்பு: கட்சிகள் வழங்குவது செல்லாது என அறிவிப்பு

தேர்தல் கமிஷன் சார்பில், ஓட்டுச்சாவடி அலுவலர், வீடு வீடாகச் சென்று, பூத் சிலிப் வழங்குவார். இப்பணியானது, தேர்தல் பார்வையாளர் மேற்பார்வையில் நடைபெறும். இதில் தவறு எதுவும் நடந்தால், பார்வையாளரிடம் புகார் அளிக்கலாம்.

ஐ.நா-வின் மனித உரிமைகள், தொழில்களுக்கான ஆலோசகராக இந்தியர் நியமனம்

இந்தியாவை சேர்ந்த சூர்ய தேவ் என்பவரை ஜெனீவாவை மையமாக கொண்டு இயங்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் முக்கிய ஆலோசகராக நியமித்துள்ளது. 

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!