Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 29 March 2016

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம்: ஏப்ரல் 15 முதல் பதிவுசெய்யலாம்

இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. எனவே, விண்ணப்ப படிவங்கள் எங்கேயும் விற்பனை செய்யப்படாது. ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 15 முதல் பதிவு செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு ஏப்ரல் 14-ம் தேதி அன்று வெளியிடப்படும். இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு ஆன்லைன் விண்ணப்ப முறை நடைமுறையில் இருந்தாலும் ஆன்லைனில் விண்ணப்பிப்பது மாணவர்களின் விருப்பமாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஏப்ரல் 15-ம் தேதி முதல் பதிவுசெய்து கொள்ளலாம். இதற்கு கடைசி நாள் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகி 7 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு பதிவாளர் கணேசன் கூறினார்.

புதுச்சேரியில் அடுத்த கல்வி ஆண்டு (2016-17) முதல் அரசு பள்ளிகளின் இயங்கும் நேரம் மாற்றம். கல்வி துறை இயக்குனர் அறிவிப்பு.

பள்ளிக்கல்வி கடிதம் மற்றும் தொடக்கக்கல்வி செயல்முறைகள்-தேர்தல் - அரசியல் தலைவர்கள்,கட்சி சின்னங்கள் , விளம்பரங்கள் ஆகியவைகள் அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து நீக்கவது சார்பான உத்தரவு-

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் தீ தடுப்பான் அமைத்தல் சார்பான இயக்குனரின் அறிவுரைகள்

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் 'மூல நோய் முற்றிலும் குணமாக"

பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. மூல நோய் என்றால் என்ன? அதில் எத்தனை வகைகள் உள்ளன? அது எந்தெந்த காரணங்களால் வருகிறது? இதைச் சரி செய்ய என்னென்ன மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை இக்கட்டுரையின் மூலம் காண்போம்.

தினம் ஒரு புத்தகம் 'களவு போகும் கல்வி '


SBI RECRUITMENT 2016

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 152 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு . கடைசி தேதி : 31.3.2016.

மெட்ரோ ரயில்வேயில் பொறியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

பெங்களூர் மெட்ரோ ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 65 இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு: ஆங்கிலம் 2-ம் தாளில் விடைத்தாள் மாற்றி அளித்ததால் மாணவர்கள் குழப்பம்

அரக்கோணம்: பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் விடைத்தாள்களில் ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு தேவைப்பட்ட வெள்ளைதாள்களை வைக்காமல் அனைத்தையும் கோடிட்ட தாள்களாக வைத்திருந்ததால் 5 மதிப்பெண் கேள்விக்கு விடை எழுத முடியாமல் மாணவ மாணவிகள் திணறினர்.

அரசு ஊழியர் விடுப்புகள் பற்றிய சில விவரங்கள்அகஇ - வீடு கட்ட நிலம் வாங்கியதற்கு, துறை முன்னனுமதி வாங்கியிருந்தால் தான், IT -யில் Housing loan காட்ட முடியும் -மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்


Annamalai University December 2015 results published.

பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோக தேதிவெளியீடு

சென்னை: 2016-ம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் ஏப்ரல் 15-ம் தேதி முதல் தொடங்கும் என உயர்கல்வித்துறை செயலாளர் ஆபூர்வா கூறியுள்ளார்.60 மையங்களில் வழங்கப்படும் விண்ணப்பங்களைப் பெற்று மாணவர்கள் சமர்ப்பிக்கலாம்

CPS கணக்கில் தங்கள் NOMINEE பெயர் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என்பதை எவ்வாறு அறியலாம்

*.CLICK HERE TO KNOW YOUR CPS NOMINEE CONFORMATION LETTER, CPS STATEMENT & MISSING CREDITS

நண்பர்களே :
இணையதள முகவரிக்கு சென்று தங்கள் cps no மற்றும் date of birth பதிவு செய்து login செய்யவும்.

பின் இடதுபுறம் Allotment letter என்ற options click செய்தால் ஒரு pdf file பதிவிறக்கம் ஆகும்.அதில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட cps no மற்றும் nominee பெயர் போன்றவை  இருக்கும்.

வாட்ஸ் அப்பில் இருந்து டெலிபோன்களுக்கு பேசும் வசதி விரைவில் அறிமுகம்.

தகவல் தொடர்பு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்துவருகிறது. உலகம் உள்ளங்கையில் சுருங்கி விட்டது. உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் செல்போன், இணையதளம், வாட்ஸ் அப், சாட்டிங், வீடியோ அழைப்பு போன்றவற்றால் ஒரு நொடியில் தொடர்பு கொண்டு பேசும் வசதி உள்ளது.ஆரம்பத்தில் கம்ப்யூட்டர், லேப்–டாப் போன்றவற்றின் மூலம் பேசுபவர்களின் உருவத்தை பார்த்து கொண்டே பேசும் வசதி இருந்தது.

மதுரை காமராஜர் பல்கலை.யில் ஆன்லைன் தேர்வு முறை ரத்து.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த 2014 -ல் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.மதுரை காமராஜர் பல்கலைக்கழக 2016 ஆம் ஆண்டுக்கான கல்விப் பேரவைக் கூட்டம் (academic council) பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் முதல் மாதம் சம்பளமின்றி ஏமாற்றம்.

கல்வித்துறையில் புதிதாக பணியில் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு முதல் மாதமே சம்பளம் வழங்காததால், ஏமாற்றம் அடைந்தனர்.புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்கம் சார்பில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட 393 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும், 186 பாலசேவிகா பதவியில் நிரந்தரம் செய்யப்பட்ட முன்மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கும் கடந்த பிப்ரவரி 3ம் தேதி, பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

கிராம சுகாதார நர்ஸ் பணி பட்டியல் உயர்நீதிமன்றம் உத்தரவு

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி தனம் தாக்கல் செய்த மனு:

'பயாலஜி'யில் 'சென்டம்' கடினமே :மாணவர்கள் கருத்து.

பிளஸ் 2 'பயாலஜி' தேர்வு நேற்று நடந்தது. இதில் 200 மார்க் கிடைப்பது சற்று கடினம் என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.மாணவர்கள் கருத்து:

விலங்கியலில் புதிய வினாக்கள் 'சென்டம்' குறைய வாய்ப்பு.

பிளஸ் 2 பொதுத் தேர்வில், நேற்று நடந்த உயிரியல் தேர்வில், விலங்கியல் பிரிவு வினாத்தாளில், புதிய வினாக்கள் இடம் பெற்றதால், மாணவர்கள் பதில் எழுத திணறினர்; தாவரவியல் தேர்வு எளிமையாக இருந்தது. பிளஸ் 2 பொதுத் தேர்வில், நேற்று உயிரியல் தேர்வு நடந்தது. தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்கு தலா, 75 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் அமைக்கப்பட்டிருந்தது.

அமலுக்கு வந்தது 'ஆதார்' சட்டம்

புதுடில்லி:'ஆதார்' சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.சமையல், 'காஸ்' மானியம், ஆதார் எண்கள் மூலம் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது.

உத்தரகாண்டில் உள்ள ராணுவ குடியிருப்பில் ஆசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு.

உத்தரகாண்டில் உள்ள ராணுவ குடியிருப்பு அலுவலகத்தில் காலியாக பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏப்ரல் மாத உத்தேச கால அட்டவணை

APRIL DIARY- Tentative

*.1-fri -  April fool day,  
*.2- sat-Grievance day,
*.8- fri-Telugu new year holiday,
*.14- thurs- Tamil new year,
*.Dr.Ambedkar birthday holiday,
*.19- tue- Mahaaveer Jayanthi - holiday,
*.21- thurs- R.L- Chitra Pournami,

III TERM EXAM TIME TABLE(1 to 5th std)

*.22- fri-  Tamil,  World Earth Day,
*.25- mon - English,
*.26- tue- Maths,
*.27- wed- Science,
*.28- thurs- Social Science,
*.29- fri- Physical Education,
*.30- Last working day for this academic year.

பள்ளித் தேர்வுகளை இனி பிப்ரவரியிலேயே நடத்தலாமே?

மார்ச் தொடக்கமே வெளுத்து வாங்கும் வெயில் காலமாக மாறிவிட்டதால்,அடுத்த கல்வியாண்டிலிருந்து பள்ளித் தேர்வுகளை ஒரு மாதத்துக்கு முன்பாக பிப்ரவரி மாதத்திலேயே நடத்தினால் என்ன என்ற கேள்வி கல்வியாளர்களால் முன்வைக்கப்படுகிறது.பருவநிலை மாற்றம் என்றழைக்கப்படும் மாறுபட்ட காலநிலைச் சூழலில் மழைக் காலம் சுருங்கிப் போய், பரவலாக- சராசரியாக ஆண்டுக்கு 50 நாள்கள்தான் மழை பெய்கிறது. ஆனால், பல நாள்கள்பெய்ய வேண்டிய மழையின் அளவு, ஓரிரு நாள்களில் கொட்டித் தீர்க்கத் தொடங்கிவிட்டது.

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு தாமதம்!

தேர்தலையொட்டி, பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகளும் தாமதமாக நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது; இம்மாத இறுதியில் வர வேண்டிய சுற்றறிக்கை இதுவரை வராததால் ஆசிரியர் பயிற்றுனர்கள் குழப்பமடைந்துள்ளனர்.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஒவ்வொரு கல்வியாண்டிலும், ஏப்., மற்றும் மே மாதத்தில் பள்ளி  செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு நடக்கிறது.

ஏப். 1ம் தேதி முதல் அமல் 18 சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.

மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதம், கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.   தமிழகத்தில் 44 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில், 29 சுங்கச் சாவடிகளில் தனியாரும், 12 சுங்கச் சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் கட்டணம் வசூலிக்கின்றன.

100,101,108 இனி கிடையாது : அவசர உதவிக்கு 112 விரைவில் அமலாகிறது.

நாடு முழுவதும் அனைத்து அவசர அழைப்புகளுக்கும் எண் 112ஐ அறிமுகம் செய்யலாம் என தொலை தொடர்பு  ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரையை தொலைத்தொடர்பு கமிஷன் ஏற்றுள்ளது. இது. ஒருசில மாதங்களில் நடைமுறைக்கு வர உள்ளது. இந்தியாவில் தற்போது காவல்துறை உதவிக்கு 100, மருத்துவ உதவிக்கு 108, மேலும் 101, 102 என  பல்வேறு எண்கள் அவசர கால அழைப்புகளுக்காக செயல்பட்டு வருகிறது.

கர்நாடக எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது: 8.49 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.

கர்நாடக எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 30-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் மொத்தம் 8.49 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.இது குறித்து பெங்களூருவில் திங்கள்கிழமை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சத்தியமூர்த்தி, செய்தியாளர்களிடம் கூறியது: 2016-17-ஆம் கல்வியாண்டுக்கான கர்நாடக எஸ்எஸ்எல். பொதுத்தேர்வு மார்ச் 30-ஆம் தேதி தொடங்கி, ஏப்.13-ஆம் தேதி வரை நடக்கிறது.

பிளஸ் 2 தேர்வில் முறைகேடு

பிளஸ் 2 தேர்வில் முறைகேடு செய்ததாக, 39 பேர் சிக்கி உள்ளனர்.பிளஸ் 2 பொதுத் தேர்வில், நேற்று தமிழகம் முழுவதும், 39 பேர் முறைகேடு மற்றும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக சிக்கினர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!